Tuesday, November 4, 2008

''வீட்ட விட்டு ஓடிபோய்''

நான் எட்டாவது,ஒன்பதாவது படிக்கும் போது ஒழுங்கா
பள்ளிக்கூடம் போக மாட்டேன்.நம்ம குடும்பம் வந்து
பரம்பரையா நகை தொழில் செய்யிற குடும்பம் அதுல
வந்து பசங்கள அதிகமா படிக்க வைக்க மாட்டங்க.(அப்போ)
ஒரு எட்டாவது,ஒன்பதாவது முடிச்சோன எதாவது
ஒரு நகை பட்டறைல சேர்த்து விட்டுடுவாங்க
அதேபோல அந்த வயசு பசங்களுக்கும் வேலைல
ஒரு ஆர்வம் வந்துடும் பள்ளிக்கூடம் போக மனசு
வராது. எனக்கும் அப்படித்தான் வேலை கத்துக்க
ரொம்ப ஆர்வம். என் வயசு நண்பர்கள் எல்லாம்
மாயவரத்துல ஒருத்தன்,கும்பகோணத்துல ஒருத்தன்
ஒரத்த நாட்டுல ஒருத்தன்னு வேல கத்துக்க
போய்ட்டானுங்க தீபாவளி,பொங்கல்னா வருவாங்க
அவனுங்களே செம்பு , வெள்ளி இதுல எல்லாம் ஏதாவது
மோதிரம் போல நகை செய்ஞ்சு காட்டுவாங்க எனக்கு
வேலை கத்துக்க போய் ஆகனும்னு வீட்டுல ஒரே
பிரச்சனை பண்ணுறேன்.


அப்போ என் அப்பா பம்பாய் ல இருந்தார் அவரும்
நகை வேலைதான். அவர் கண்டிப்பா சொல்லிட்டார்
நகை தொழில் எல்லாம் வேணாம் படிச்சுதான்
ஆகணும் அப்படின்னு.எனக்கு படிக்க புடிக்கல!


அப்பாவும் ஊர்ல இல்ல அம்மா பேச்ச கேக்காம
பள்ளிக்கூடம் போகாம ஊர் சுத்திகிட்டு இருந்தேன்.
அப்போ எங்க வாத்தியார் சீனிவாசன் இருந்தார்.
அவர் வந்து நான் சும்மா சுத்திகிட்டு இருக்குறத
கேள்விப்பட்டு ரெண்டு மூணு பசங்கள அனுப்பி
கூட்டிகிட்டு வர சொல்லி அனுப்பினார்.நான்
போகல.வந்த பசங்க சொல்லுறாங்க டேய்!இப்போ
நீ வராட்டி சாரே இங்க வருவார் அப்படின்னு
பெரிய இவனுங்க மாதிரி சொல்லுறாங்க!

என் அம்மா வந்து தம்பிங்களா!அவன புடிச்சு
துக்கிக்கிட்டு போங்க அப்போதான் வருவான்
அப்படின்னு சொல்ல எனக்கு என் அம்மா மேல
செம கோவம் ! அந்த தடிமாட்டு கம்னாட்டிங்களும்!
என்னைய வலுகட்டாயமா கூட்டிகிட்டு போய்ட்டாங்க.


சீனிவாசன் சார்! சொல்லுறார் ஏன்டா!உன்னைய
கேக்க ஆளு இல்லன்னு ஊர் சுத்துரியா?
மரியாதயா ஸ்கூல் வராட்டி தொலைசுருவேன்
ராஸ்கல்! முதுகுல நாலு சாத்து சாத்தினார் !
நான் சொல்லுரவரைக்கும் கீழ எறங்க கூடாது
அப்படின்னு பெஞ்ச் மேல நிக்க சொல்லிட்டார் !
அவர் வெளில போகும் போது நான் கீழ எறங்காம
இருக்க ரெண்டு பசங்க காவல் வேற!


பெரிய அவமானம் எனக்கு சில பசங்க சிரிக்கிறாங்க!
என் அம்மா மேலயும் கோவம்!முடிவு பண்ணிட்டேன்
இனிமே வீட்டுக்கு போக கூடாது.எங்கயாவது
ஓடி போய்டனும்னு.

அந்த பெஞ்ச் மேல நின்னுகிட்டே கற்பனை பண்ணுறேன்
எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
வந்து எறங்கனும் அப்படின்னு .


ஸ்கூல் முடியிற நேரம் சார் வந்து நெறைய
அறிவுரை சொல்லுறார் நாளைக்கு காலைல
என்ன வந்து பார்க்கனும்னுபாசமா சொல்லுறார் .
அந்த ஒரு நிமிஷம் எனக்கு அவர ரொம்பபுடிச்சது .

ஆனாலும் ஓடிபோற முடிவுல எந்த மாற்றமும் இல்ல
அன்னிகின்னு பார்த்து என்கிட்டே மூணு ரூவாயோ?
நாலு ரூவாயோ? இருந்துச்சி ஒரு போஸ்ட் கார்ட்
வாங்கினேன்.''நான் வீட்ட விட்டு போறேன் என்ன
தேட வேண்டாம் '' அப்படின்னு எழுதி போஸ்ட்
பண்ணிட்டேன்.

பஸ் டாண்ட் போய் மன்னார் குடி போற பஸ் ல ஏறினேன்
காச எடுத்து எண்ணி பார்க்குறேன்,ஒருவேள திரும்பி
வர்ற மாதிரி இருந்தா ? பார்த்தா காசு பத்தல என்ன
செய்கிறது? பஸ் ஸ்டார்ட் ஆச்சு பயம் வந்துடுச்சி
டக்குன்னு எறங்கி வீட்டுக்கே போயிட்டேன்!


மறுநாள் காலைல அந்த பசங்க மறுபடியும் வந்துட்டாங்க
ஸ்கூல் போயிட்டேன்.இப்போ எனக்கு என்ன பயம்னா
நான் போட்ட அந்த லெட்டர்! அது வீட்டுக்கு போறதுக்கு
முன்னாடி எப்படியாவது போஸ்ட் மேன் கிட்ட வாங்கிடனும் !

மத்தியானம் பெல் அடிச்சதும் வேக, வேகமா போய்
வீட்டுகிட்டநின்னுகிட்டேன் .பார்த்தா போஸ்ட் மேன்
வரவே இல்ல .

சாயங்காலம் வீட்டுக்கு போறேன் பயந்துகிட்டே!
எதிர் வீடு,பக்கத்து வீடு யாரும் பாக்கி இல்ல
எல்லார்கிட்டயும் லெட்டர காட்டி சிரிச்சுகிட்டு
எங்கம்மா! எனக்கு எப்படி இருக்கும்?எப்படி
இருந்துசின்னு சொல்லவே வரல!

வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாருங்கன்னு
எல்லாரும் ஒரே கிண்டல் ஐயோ! ஐயோ!

37 comments:

  1. வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாரு

    repeattu

    ReplyDelete
  2. அப்புறமா எத்தனாப்பு வரைக்கும் படிச்சீங்கப்பு.

    ReplyDelete
  3. செம கோவம் ! அந்த தடிமாட்டு கம்னாட்டிங்களும்!
    என்னைய வலுகட்டாயமா கூட்டிகிட்டு போய்ட்டாங்க.

    அவங்க அன்னிக்கு கூட்டிகிட்டு போலனா இப்படி பதிவெழுதி இருப்பீங்களா.

    ReplyDelete
  4. ஆனா சும்மா சொல்லக்கூடாது. படிக்காம போனாலும் சூப்பரா பதிவெழுதுறீங்க. நல்ல எழுத்து நடை. ஆரம்பித்த ஒரே மூச்சில் முழுவதும் படிக்க வைத்து விடுகிற எழுத்துத்திறன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
    நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
    எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
    வந்து எறங்கனும் அப்படின்னு . //

    இந்த கனவு எனக்கும் அப்போ அடிக்கடி வரும். அதனால ஏழாவது படிக்கும் போது ஒருதடவை எஸ்கேப்பு.
    ஆனா எப்படி தான் கண்டுபிடிக்கிறாங்கலோ தெரியல, நைட்டே புடிச்சுட்டாங்க

    ReplyDelete
  6. //எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
    நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
    எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
    வந்து எறங்கனும் அப்படின்னு . //

    எங்கே ஓடறது, நாங்க யாரு பிடிசிடுவோமில்லே.... என்ன படிச்சதுனாலே தான் எங்கள் அறிமுகம் கிடைச்சது. அது எப்படிங்க கையிலே காசு இல்லே, ஓடி போனுமா ? இருங்க, போயிருந்தா ஆளை வச்சு பிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி இருப்பாங்க இல்லே. யாரு தட்டுவாங்க --> பம்பாயில் இருந்து வந்த அப்பா.......... ஐயோ, ஐயோ

    ரம்யா

    ReplyDelete
  7. வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாரு

    அமிர்தவர்ஷிநியோட கூட்டு சேர்ந்து விட்டேன்

    repeattuuuuuuuuuuuuuuuu
    ramya

    ReplyDelete
  8. சொந்த அனுபவமா?
    நீங்க எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற ஊரையெல்லாம் சொல்றீங்க.
    நீங்கள் கும்பகோணமா?

    ReplyDelete
  9. சொந்த அனுபவமா?
    நீங்க எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற ஊரையெல்லாம் சொல்றீங்க.
    நீங்கள் கும்பகோணமா?

    ReplyDelete
  10. என்ன தான் வயசு சிறிசா இருந்தாலும், தன்மானத்த விட்டுகொடுக்க முடியுமா.. அதுக்காக மூணு ரூவாயை வச்சு பஸ் ஏறின உங்க தன்மானத்த பாராட்டுற அதே சமயத்துல, ஒரு வேலை திரும்பி வர்ற மாதிரி இருந்தா, அந்த மூணு ரூவாயை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாதுன்னு நெனச்சு கீழ இறங்கின உங்க அறிவை பாராட்டுறேன்...

    ReplyDelete
  11. /*வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாருங்க..*/
    :-)

    ReplyDelete
  12. அந்த பெஞ்ச் மேல நின்னுகிட்டே கற்பனை பண்ணுறேன்
    எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
    நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
    எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
    வந்து எறங்கனும் அப்படின்னு .
    //


    அண்ணே! எனக்கு இப்பவும் அந்தக் கற்பனை வருதுன்ணே. அப்புறம் டக்குனு முழுச்சுருவேன் :)))

    ReplyDelete
  13. Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

    வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாரு


    இத்தன வருஷம் கழிச்சு
    அதே வார்த்தை!

    இது நானே சொன்னது!
    வேற சொல்லுங்க!


    அப்புறமா எத்தனாப்பு வரைக்கும் படிச்சீங்கப்பு.

    அப்படியே தத்தி,தத்தி
    பன்னெண்டாப்பு வரைதான்
    படிச்சேன்!

    ReplyDelete
  14. அமிர்தவர்ஷினி அம்மா said...

    செம கோவம் ! அந்த தடிமாட்டு கம்னாட்டிங்களும்!
    என்னைய வலுகட்டாயமா கூட்டிகிட்டு போய்ட்டாங்க.

    அவங்க அன்னிக்கு கூட்டிகிட்டு போலனா இப்படி பதிவெழுதி இருப்பீங்களா



    இல்ல இது சும்மா அன்னிக்கு
    இருந்த கோவத்துல சொன்னது
    மத்தபடி அவங்களுக்கு உண்மையிலேயே
    என் நன்றிகள்!

    ReplyDelete
  15. அமிர்தவர்ஷினி அம்மா said...

    ஆனா சும்மா சொல்லக்கூடாது. படிக்காம போனாலும் சூப்பரா பதிவெழுதுறீங்க. நல்ல எழுத்து நடை. ஆரம்பித்த ஒரே மூச்சில் முழுவதும் படிக்க வைத்து விடுகிற எழுத்துத்திறன்.
    வாழ்த்துக்கள்.



    இந்த மாதிரி சொல்லுறத
    கேக்கும் போது நிஜமா
    சந்தோஷமும்,நீங்க சொல்லுறது
    உண்மைதானா அப்படின்னு ஒரு
    சந்தேகமும் வருது!ஏன்னா?
    எனக்கு இதுக்கு முன்னாடி ஏதும்
    எழுதி பழக்கம் இல்ல!பன்னெண்டாவது
    பரீட்சை எழுதின பிறகு அதிகமா
    எழுதினது இங்கதான்!எதோ எனக்கு
    தோணுறத அப்படியே கொட்டுறேன்
    அவ்ளோதான். நன்றி !

    ReplyDelete
  16. வால்பையன் said...

    //எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
    நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
    எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
    வந்து எறங்கனும் அப்படின்னு . //

    இந்த கனவு எனக்கும் அப்போ அடிக்கடி வரும். அதனால ஏழாவது படிக்கும் போது ஒருதடவை எஸ்கேப்பு.
    ஆனா எப்படி தான் கண்டுபிடிக்கிறாங்கலோ தெரியல, நைட்டே புடிச்சுட்டாங்க




    ஒன்னு என்னைய மாதிரி
    பாதில திரும்பிடணும்
    இல்லாட்டி ''கார்'' ல தான்
    வந்து எறங்கனும் இந்த மாதிரி
    பாதில மாட்டிக்க கூடாது

    ReplyDelete
  17. RAMYA said...

    //எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
    நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
    எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
    வந்து எறங்கனும் அப்படின்னு . //

    எங்கே ஓடறது, நாங்க யாரு பிடிசிடுவோமில்லே.... என்ன படிச்சதுனாலே தான் எங்கள் அறிமுகம் கிடைச்சது. அது எப்படிங்க கையிலே காசு இல்லே, ஓடி போனுமா ? இருங்க, போயிருந்தா ஆளை வச்சு பிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி இருப்பாங்க இல்லே. யாரு தட்டுவாங்க --> பம்பாயில் இருந்து வந்த அப்பா.......... ஐயோ, ஐயோ

    ரம்யா


    ஏங்க இப்படி? போலீஸ் வேலைல
    ஏதும் இருக்கீங்களா? இதுக்கெல்லாம்
    முட்டிக்கு முட்டியா? பாவமா
    இல்லையா? உங்களுக்கு?

    ReplyDelete
  18. Blogger RAMYA said...

    வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாரு

    அமிர்தவர்ஷிநியோட கூட்டு சேர்ந்து விட்டேன்



    ஒரு அஞ்சாறு பேரு நேரடியா
    இந்த மாதிரி கேட்டப்போவே
    நான் கல்லு மாதிரி இருந்தேன்
    இதல்லாம் நமக்கு சகஜம்

    ReplyDelete
  19. Blogger ஜோதிபாரதி said...

    சொந்த அனுபவமா?
    நீங்க எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற ஊரையெல்லாம் சொல்றீங்க.
    நீங்கள் கும்பகோணமா?



    வணக்கம் திரு ..ஜோதி பாரதி
    சொந்த அனுபவம்தான்!

    ஏன் கும்பகோணம் எல்லாம்
    போறீங்க நான் உங்க பக்கத்து
    ஊருதான்.

    மதுக்கூர் தான் நம்ம ஊரு
    அத்தி வெட்டில எனக்கு நெறைய
    பேர தெரியும் அங்க வந்து
    நான் நெறைய கிரிக்கெட்
    மேட்ச் வெளயாடி இருக்கேன்
    உங்க முகம் கூட பார்த்த மாதிரிதான்
    இருக்கு! நான் இப்போ சென்னைல
    இருக்கேன்.என் நிஜ பேரு
    தமிழ் அமுதன்

    ReplyDelete
  20. Blogger சிம்பா said...

    என்ன தான் வயசு சிறிசா இருந்தாலும், தன்மானத்த விட்டுகொடுக்க முடியுமா.. அதுக்காக மூணு ரூவாயை வச்சு பஸ் ஏறின உங்க தன்மானத்த பாராட்டுற அதே சமயத்துல, ஒரு வேலை திரும்பி வர்ற மாதிரி இருந்தா, அந்த மூணு ரூவாயை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாதுன்னு நெனச்சு கீழ இறங்கின உங்க அறிவை பாராட்டுறேன்..



    வாங்க சிம்பா! நீங்க எப்போவுமே
    நம்ப ஆளுதான்! எல்லோரும்
    கிண்டல் பண்ணுறப்போ
    நீங்க மட்டுதான் பாராட்டுறீங்க
    நன்றி ! நன்றி !

    ReplyDelete
  21. Blogger அமுதா said...

    /*வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாருங்க..*/
    :-)
    கேட்டு கேட்டு பழகி போச்சு
    வந்து திட்டுனதுக்கு நன்றி !

    ReplyDelete
  22. புதுகை.அப்துல்லா said...

    அந்த பெஞ்ச் மேல நின்னுகிட்டே கற்பனை பண்ணுறேன்
    எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
    நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
    எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
    வந்து எறங்கனும் அப்படின்னு .
    //


    அண்ணே! எனக்கு இப்பவும் அந்தக் கற்பனை வருதுன்ணே. அப்புறம் டக்குனு முழுச்சுருவேன் :)))


    வாங்க அப்பு! தூங்கும் போது
    கனவுதான் வரும்! கற்பனையும்
    வருமா? நன்றி அப்பு!

    ReplyDelete
  23. நல்ல ஓடுனீங்க போங்க :)

    ReplyDelete
  24. Blogger என் பதிவுகள்/En Pathivugal said...

    நல்ல ஓடுனீங்க போங்க :


    நன்றி! வந்ததுக்கு!

    ReplyDelete
  25. //வணக்கம் திரு ..ஜோதி பாரதி
    சொந்த அனுபவம்தான்!

    ஏன் கும்பகோணம் எல்லாம்
    போறீங்க நான் உங்க பக்கத்து
    ஊருதான்.

    மதுக்கூர் தான் நம்ம ஊரு
    அத்தி வெட்டில எனக்கு நெறைய
    பேர தெரியும் அங்க வந்து
    நான் நெறைய கிரிக்கெட்
    மேட்ச் வெளயாடி இருக்கேன்
    உங்க முகம் கூட பார்த்த மாதிரிதான்
    இருக்கு! நான் இப்போ சென்னைல
    இருக்கேன்.என் நிஜ பேரு
    தமிழ் அமுதன்//

    அப்படியா மிக்க மகிழ்ச்சி!
    தங்கள் பெயரே இனிமையானது.
    நானும் உங்களைப் பார்த்திருக்கக் கூடும்.
    வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!

    ReplyDelete
  26. நல்லா ஒடி போனீங்க போங்க‌

    ReplyDelete
  27. Blogger தாரணி பிரியா said...

    நல்லா ஒடி போனீங்க போங்க‌

    வாங்க! நான் எங்கங்க ஓடி போனேன்!

    வந்ததுக்கு நன்றி!

    ReplyDelete
  28. இயல்பான நடை.

    கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வீட்ட விட்டி ஓடனும்னு எனக்கு தோணவேயில்லங்க.

    ReplyDelete
  29. உங்களுக்கு பட்டுக்கோட்டை செந்தில தெரியுமா? இப்போ சென்னைலதான் நகைத்தொழில் பண்றான்

    ReplyDelete
  30. Blogger குடுகுடுப்பை said...

    இயல்பான நடை.

    கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வீட்ட விட்டி ஓடனும்னு எனக்கு தோணவேயில்லங்க.


    வாங்கண்ணே! கல்யாணத்துக்கு
    அப்புறம் ஒரு பெரிய இரும்பு
    குண்ட கால்ல கட்டுனது போல
    இருக்கு, ஓட நெனைச்சாலும்
    முடியாது போல!

    ReplyDelete
  31. Blogger குடுகுடுப்பை said...

    உங்களுக்கு பட்டுக்கோட்டை செந்தில தெரியுமா? இப்போ சென்னைலதான் நகைத்தொழில் பண்றான்.

    சென்னைல நான் இருக்குறது
    பெரம்பூர்,இங்க நம்ம ஊர்காரங்க
    நெறைய பேர் இருக்காங்க,நீங்க
    சொல்லுறது போல செந்தில்னு நம்ம
    நண்பர் பட்டுக்கோட்டை காரர்
    இருக்கார்.அவங்க அண்ணன் பேரு
    சரவணன் அவங்க அப்பா பட்டுக்கோட்டைல
    ஊரக விரிவாக்க பணி அலுவலகத்துல
    வேலை பார்த்தவராம்,ஒருவேள நீங்க
    சொல்லுறது அவரா?

    ReplyDelete
  32. கலக்கலான எழுத்து நடை........ரொம்ப ரசிச்சு.....சிரிச்சுட்டே படிச்சேன்:)))

    ReplyDelete
  33. Blogger Divya said...

    கலக்கலான எழுத்து நடை........ரொம்ப ரசிச்சு.....சிரிச்சுட்டே படிச்சேன்:)))

    வந்ததுக்கு நன்றி! divya

    ReplyDelete
  34. செம போஸ்ட்! நல்ல எழுத்துநடை!
    ஜாலியா இருந்துச்சு படிக்க!

    ReplyDelete
  35. இந்த மாதிரி ஒரு சம்பவத்தை வெச்சு ஜெயகாந்தனோட சிறுகதை ஒண்ணு இருக்கு - “துறவு”

    ReplyDelete
  36. Blogger சந்தனமுல்லை said...

    செம போஸ்ட்! நல்ல எழுத்துநடை!
    ஜாலியா இருந்துச்சு படிக்க!


    நன்றிங்க வந்ததுக்கு!

    ReplyDelete
  37. Anonymous Anonymous said...

    // இந்த மாதிரி ஒரு சம்பவத்தை வெச்சு ஜெயகாந்தனோட சிறுகதை ஒண்ணு இருக்கு - “துறவு”//

    அப்படியா! நன்றி!
    வந்ததுக்கும், சொன்னதுக்கும்!

    ReplyDelete

123