Wednesday, December 10, 2008

அம்மாவையும்,பிள்ளையையும் பிரிக்கலாமா?

சமீபத்தில் சகோதரி ஆகாயநதி ஒரு பதிவு எழுதி
இருந்தார்.அதாவது அவருக்கு பேறுகால விடுமுறை
முடிகிறது.கைகுழந்தையை யாரிடம் விட்டு செல்வது?
அவருக்கு குழந்தையை விட்டு பிரிய மனமில்லை
வேலையும் முக்கியம் என்ன செய்வது?

இது அவருக்கு மட்டும் நேர்கிற தனிப்பட்ட பிரச்சனையாக
எடுத்து கொள்ள முடியாது. வேலைக்கு செல்கிற அனைத்து
பெண்களுக்கும் நேர்கிற பிரச்சனைதான்.

ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு குறைந்த பட்சம்
மூன்று வயது வரையாவது தேவைப்படும். இந்த நிலையில்
என்ன செய்வது? இந்த சிக்கலுக்கு அரசு கண்டிப்பாய் பதில்
சொல்லி ஆக வேண்டும்!!

சரி ஒரு கற்பனை! ''மகளிர் மட்டும்'' அப்படிங்குற படத்துல
வருமே? பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அந்த இடத்தில்
குழந்தைகளை பார்த்துக்கொள்ள தனி இடம்.

அப்படி இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது பத்துக்கு
மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில்
குழந்தைகளை வைத்து கொள்ள ஒரு இடம்
குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு ஆயா!
எப்படி ? கேக்கவே நல்லா இருக்குல்ல!
தாய்மார்களும் குழந்தைகளை அடிக்கடி பார்த்து
கொள்ளலாம் வேலையும் நன்றாக நடக்கும் ..


சரி அது ஒரு கற்பனைதான் அந்த கற்பனையை
உண்மையாக்க முடியுமா?
உண்மையாக்க என்ன செய்யலாம்?அந்த கற்பனை
உண்மையாக அரசு சட்டம் பிறப்பிக்கவேண்டும்!
அரசு அலுவலகத்திலோ அல்லது தனியார்
நிறுவனங்களிலோ?பத்துக்கு மேற்பட்ட பெண்கள்
பணி புரிந்தால் அங்கே குழந்தை வைத்துக்கொள்ள
தனி இடமும் ஒரு ஆயாவும் இருக்க வேண்டும் என!


இது நடக்குமா? அரசினை இயக்குபவர்கள் யார் ?
அரசியல்வாதிகள், இன்னும் சொல்ல போனால்
கட்சிகாரர்கள் அவர்களுக்கு என்ன தேவை!
ஓட்டு!........................ஓட்டு!........................ஓட்டு!

இந்த ஓட்டு மட்டும்தான் அவர்கள் தேவை!
நமது கையில் இருக்கும் பெரிய ஆயுதமும் ஓட்டுதான்!

ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தமிழ்
நாட்டில் எத்தனை ஓட்டுக்கள் ஆட்சியை நிர்ணயம் செய்கிறது
தெரியுமா ?

வெறும் முப்பது லட்சம் ஓட்டுகள்தான்

கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற மொத்த ஓட்டுக்கள்
கூட்டணி எல்லாம் சேர்த்து ஒரு கோடியே முப்பது லட்சம்
(கிட்டதட்ட)
அதிமுக பெற்ற ஓட்டுக்கள் ஒரு கோடி
(கிட்டதட்ட)

வெறும் முப்பது லட்சம் ஓட்டுக்கள் மட்டும்தான் இந்த
ஆட்சியை நிறுவி இருக்கிறது.

மேலும் சில கட்சிகளின் வாக்கு பலம்...

வேகமாக வளர்ந்து வருவதாக கருதப்படும் விஜய காந்தின்
தேமுதிக தனியே நின்று பெற்ற ஓட்டுக்கள் இருபத்தி எட்டு
லட்சம்.

மதிமுக இருநூற்று பதிமூன்று தனியே நின்று மொத்தம்
பெற்ற ஓட்டுக்கள் சுமார் பதி மூன்று லட்சம்.

பாட்டாளி மக்கள் கட்சி யும் கிட்டத்தட்ட இந்த நிலைதான்
சற்று கூடலாம்.

அதுபோல காங்கிரஸ் எனக்கு தெரிந்த வரை தனியே நின்றது
இல்லை.சமீப காலம் வரை. அப்படி தனியே நின்றாலும்
பதினைந்து லட்சம் ஓட்டுக்கள் பெற்றால் பெரிய விஷயம்

இதைவிட சொற்பஅளவில் ஓட்டு எண்ணிக்கையை வைத்து
கொண்டு அரசியல் நடத்துகின்றன கட்சிகள்.

சரி இதெல்லாம் எதற்கு?
தமிழ் நாட்டில் அரசு வேலையில் இருப்பவர்கள் சங்கம்
அமைத்துள்ளனர். அவர்கள் ஓட்டு முழு அளவில்
ஒரு கட்சிக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
சரி தனியார் துறையில் தமிழகத்தில் எத்தனை
பேர் இருப்பார்கள்? எனக்கு சரியாக கணிக்க
தெரியவில்லை!குறைந்த பட்சம் ஒரு ஐந்து லட்சம் பேர்
இருப்பார்களா ?அப்படி இருந்தாலே போதும்
ஒவ்வொருவரும் நான்கு வாக்குகளுக்கு சமம்.
அவர்கள் குடும்பம் எல்லாம் சேர்த்து.

இந்த தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு தனி
அமைப்பு ஏற்பட வேண்டும்! இப்படி அமைப்பை ஏற்படுத்தி
கொடி பிடித்து போராட்டம் நடத்த வேண்டியது இல்லை

இவர்களிடம் இருபத்து லட்சம் ஓட்டு இருக்கிறது இவர்கள்
வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவர்கள்
ஓட்டு அப்படியே அவர்களுக்கு தான் என்ற நிலையை உருவாக்க
வேண்டும். அப்படி நிலை ஏற்ப்பட்டால் போதும்!

அரசியல்வாதிகள் சரணாகதி அடைந்து விடுவார்கள்.

அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்த கோரிக்கைகளை அரசு வேலையில் இருப்பவர்கள்
முன்னின்று வைத்தால் மிக நன்றாக இருக்கும் !

சரி இது வேலை செய்பவர்களை நிலையில் இருந்து யோசித்தது!

இப்போ நான் முதலமைச்சர் கனவில் இருக்கும் ஒரு கட்சி
தலைவர், சுமார் இருபது லட்சம் ஓட்டுகளை வைத்து இருக்கும்
ஒரு அமைப்பு! சில கோரிக்கைகளை வைக்கிறார்கள்,
அதாவது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும்
இடத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயாவும்
இடமும் வேண்டும் என்ற கோரிக்கை உட்பட,

இந்த கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு என்ன வலிக்க போகிறது
ஓட்டுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் எனக்கு
பிள்ளையையும், தாயையும் ஒன்றாக இருக்க செய்யும்
இந்த கோரிக்கையை சந்தோசமாய் நிறைவேற்ற போகிறேன் .

..................................

38 comments:

  1. \\இந்த கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு என்ன வலிக்க போகிறது
    ஓட்டுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் எனக்கு
    பிள்ளையையும், தாயையும் ஒன்றாக இருக்க செய்யும்
    இந்த கோரிக்கையை சந்தோசமாய் நிறைவேற்ற போகிறேன் .\\

    அண்ணன் ஜீவன் வாழ்க வாழ்க ...

    இது அரசியில் கூச்சல் அல்ல.

    ஒரு தங்கமணியின் கஷ்டத்தை புரிந்துகொண்ட ஒரு தங்கமான ரங்கமணிக்கு நான் தெரிவிக்கும் சந்தோஷம்.

    ReplyDelete
  2. அண்ணன் ஏதாவது செய்யனும்.

    இந்த பிரட்சனைக்கு மட்டுமல்ல,

    நாம் ஒரு நல்ல தீர்வை சிந்தித்தால் அது செயலாக்கம் பெற என்ன செய்யலாம் எப்படி செய்யலாம்,

    எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரிதான், அவர்களை நம் பொது நலக்கோரிக்கையை எப்படி நிறைவேற்ற வைப்பது.

    எதாவது செய்யனும்னுண்ணே ...

    ReplyDelete
  3. அண்ணா நாளைக்கு கமெண்ட் போடுறேன்.

    ReplyDelete
  4. என் ஓட்டு உங்களுக்கு தான். மதுரையில் ஒரு பள்ளியில் ஆசிரியரின் குழந்தைகளைக் கவனிக்க ஆயாக்கள் உண்டு என கேள்விப்பட்டேன். மேலும் அவர்கள் குழந்தைகளை அப்பள்ளியில் இலவசமாகப் படிக்க வைப்பார்கள்.

    ReplyDelete
  5. இப்படி கூட ப்பிளாக் மெயில் பண்ணலாமா... :)))

    ReplyDelete
  6. ஒரு தொழில்முறையாக, முறையான ஒரு நிறுவணம் நடத்தினாலே போதுமானது.இருவரும் வேலைக்கும் செல்லுமிடங்களில்தான் இந்த பிரச்சினை.நம்பகமான நிறுவணக் குழந்தைகள் காப்பகமே தீர்வு.

    ReplyDelete
  7. //சரி ஒரு கற்பனை! ''மகளிர் மட்டும்'' அப்படிங்குற படத்துல
    வருமே? பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அந்த இடத்தில்
    குழந்தைகளை பார்த்துக்கொள்ள தனி இடம்.

    அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?//

    கற்பனை நிஜமானால் நன்றாகத்தான் இருக்கும்..

    //இந்த கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு என்ன வலிக்க போகிறது
    ஓட்டுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் எனக்கு
    பிள்ளையையும், தாயையும் ஒன்றாக இருக்க செய்யும்
    இந்த கோரிக்கையை சந்தோசமாய் நிறைவேற்ற போகிறேன் .//

    பெண்கள் ஓட்டு மொத்தமும் உங்களுக்குத்தான்...

    ReplyDelete
  8. போடுங்கம்மா ஓட்டு .....அலுகத்தில் குழந்தைகள் காப்பகம் பார்த்து/...

    தலைவா......நண்ணி நண்ணி நண்ணி.....இத சொல்லி சொல்லி தான் என் அலுவலக நிர்வாகத்தை தினமும் சாபம் குடுத்துட்டு இருக்கிறேன்.....
    இங்க நிறைய அலுவலகங்கள் மகளிர்க்கு பல வசதிகள் செஞ்சு தர்றாங்க.....துரதிர்ஷ்ட வசமா நான் அந்த மாதிரி அலுவலகத்தில வேலை பார்க்கல..

    உங்களோட பதிவுல அரசியல் பத்தி என்னமோ இருந்துச்சு.....முழுசா படிக்கல....மறுபடி வர்ர்ர்றேன்

    ReplyDelete
  9. எங்கள் அலுவலகத்தில் குழந்தைகளை வைத்துக் கொள்ள முடியும்... நான் ஒரு தகவல் தொழில் நுட்பத்துறையில் மென்பொறியாளராக பணியாற்றுகிறேன்... ஆனால் முக்கிய அலுவல்களுக்கிடையில் குழந்தையை அடிக்கடி பார்க்கத் தோன்றுவது தாயின் இயல்பு அதனால் என் பணி தாமதப் பட்டால் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு திட்டு தாமதமான பணி உயர்வு எல்லாமே கிடைக்கும் இது தேவையா குழந்தையுடனும் முழு நேரத்தை செலவிட இயலாமல் அலுவலகப் பணியிலும் முழு கவனம் இல்லாமல் அரைகுறை கடமை இரு தரப்பினருக்கும்.... செய்வன திருந்த செய் என்னும் பொன்மொழிக்கு இழுக்கு :( அதை விட பிறவிப் பயனான தாய் என்னும் கதாபாத்திரத்தை செவ்வனே செய்யலாம் :)

    தங்கள் உயரிய எண்ணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல :) சில தாய்மார்களுக்குக் குடும்ப சூழ்நிலை காரணமாக பணியை விடமுடியாது அவர்களுக்கு அரசாங்கம் நீங்கள் கூறியது போல் செய்யலாம் :)

    எங்கள் TECHNOLOGIES போன்று பல தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள் அலுவலகத்திலேயே குழந்தைகளைப் பராமரிக்கும் இடம் வைத்துள்ளது ஆனால் நான் கூறிய காரணம் தான் அதில் உள்ள சிக்கல்...

    ReplyDelete
  10. நல்ல யோசனைதான்,
    கற்பனையே சுகமா இருக்கே

    இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிக்கே என் ஓட்டு.

    நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற
    இந்த நாட்டிலுள்ள குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சி வர..

    வாங்கய்யா வாத்யாரய்யா
    வந்து தேர்தலிலே நில்லுங்கய்யா.

    ReplyDelete
  11. அண்ணா நான் இப்போதான் இதை பத்தி பேசிட்டு வந்தேன். வந்து பார்த்தா நீங்களும் அதை பத்தியே பதிவு போட்டு இருக்கிங்க.

    நான் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில வேலை பாக்கிறேன்.எங்க கல்லூரியில‌ வேலை பாக்கிற பெண்கள் நிறைய பேர் அவங்க குழந்தைகளை பெரும்பாலும் காப்பகத்தில் விட்டுட்டு வந்து இங்க ஒரு வித சங்கடத்தோடத்தான் வேலை பாக்கிறாங்க.

    இப்ப‌ எங்க‌ க‌ல்லூரிக்கு சிற‌ப்பு அங்கீகார‌ம் த‌ர‌துக்கான‌ ஒரு க‌மிட்டி வ‌ந்து இருக்காங்க‌. அவ‌ங்க‌ எங்க‌ள‌க்கு ஏதாவ‌து குறைக‌ள் இருக்கான்னு தனிப்ப‌ட்ட‌ முறையில‌ ( மேனேஜ்மெண்ட் ஆளுங்க‌ இல்லாம Non-Teaching staffs – க்கு ம‌ட்டும் மீட்டிங் போடுவாங்க‌) விசாரிச்சாங்க‌. அப்ப‌தான் இந்த மாதிரி குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌ம் இருந்தா ப‌ர‌வாயில்லைன்னு சொன்னோம். உட‌னே அவ‌ங்க‌ மேனேஜ்மெண்டை கூப்பிட்டு கட்டாயம் குழந்தை காப்பகம் இருக்கணுமுன்னு சொல்லிட்டாங்க. ஏறக்குறைய 70 முதல் 80 பேர் வரைக்கும் இதனால பயனடைய போறாங்கன்னு தான் நினைக்கிறேன். ஏன்னா அம்மாகிட்ட இல்லையின்னா மாமியார்கிட்ட குழந்தைகளை விட்டுட்டு வரவங்க சதவீதம் ரொம்பவே குறைவுதான்.

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் குடுக்கிறவங்களா இருந்தா இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் பதினைந்து நிமிடம் அனுமதி தரணுமின்னும் சொல்லியிருக்காங்க. இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செஞ்சாலே அந்த இடத்தில கட்டாயம் காப்பகம் இருக்கணுமாம்.

    இதனால தங்கமணி வேலை செய்யற இடத்துல இந்த வசதியில்லாத‌ சில ரங்கமணிகளும் பயன் பெற போறாங்க அப்படின்றது இன்னும் ஒரு சந்தோஷம்

    ReplyDelete
  12. மிக நல்ல யோசனையை முன் மொழிந்திருக்கிறீர்கள். வருபவர் யாவரும் வழி மொழிகிறோம். ஓட்டுக்குக் கேட்கணுமா:)?

    ReplyDelete
  13. நல்ல யோசனை..நல்ல பதிவு!!

    ReplyDelete
  14. தாரணி பிரியா said...
    அண்ணா நான் இப்போதான் இதை பத்தி பேசிட்டு வந்தேன். வந்து பார்த்தா நீங்களும் அதை பத்தியே பதிவு போட்டு இருக்கிங்க.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு படிக்கும்போதே,

    ஜீவன் என்ன உங்களுக்கு உள்ளுணர்வு சொல்லுச்சா.

    ReplyDelete
  15. \\ஏறக்குறைய 70 முதல் 80 பேர் வரைக்கும் இதனால பயனடைய போறாங்கன்னு தான் நினைக்கிறேன்\\

    ம்ம்ம் ... வாழ்த்துக்கள் தாரணிபிரியா.

    நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கும் போது சந்தோஷம் தானே!

    ReplyDelete
  16. //அதிரை ஜமால் said...

    அண்ணன் ஏதாவது செய்யனும்.

    இந்த பிரட்சனைக்கு மட்டுமல்ல,

    நாம் ஒரு நல்ல தீர்வை சிந்தித்தால் அது செயலாக்கம் பெற என்ன செய்யலாம் எப்படி செய்யலாம்,

    எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரிதான், அவர்களை நம் பொது நலக்கோரிக்கையை எப்படி நிறைவேற்ற வைப்பது.

    எதாவது செய்யனும்னுண்ணே .///

    வாங்க ஜமால்! செய்யலாம் ஜமால்! எந்த ஒரு
    அரசியல்வாதியும் அடிபணிவது ஓட்டுக்கு
    மட்டும்தான்! மக்கள் ஒன்று பட்டாலே போதும்!
    குறைந்த பட்சம் ஒரு தெருவில் வசிக்கும்
    மக்கள் எங்களுக்கு இந்த வசதி செய்தால் உங்களுக்குத்தான்
    ஓட்டு! என்ற ரீதியில் இறங்கிவிட்டால் சாதிக்கலாம்!
    ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும்!!!

    ReplyDelete
  17. ///அமிர்தவர்ஷினி அம்மா said...

    அண்ணா நாளைக்கு கமெண்ட் போடுறேன்
    .////;;;;;)))))

    ReplyDelete
  18. /// ஸ்ரீமதி said...

    :))Great anna.. :))///



    தங்களது நீண்ட கருத்துக்கு
    நன்றி தங்கச்சி!

    ReplyDelete
  19. /// அமுதா said...

    என் ஓட்டு உங்களுக்கு தான். மதுரையில் ஒரு பள்ளியில் ஆசிரியரின் குழந்தைகளைக் கவனிக்க ஆயாக்கள் உண்டு என கேள்விப்பட்டேன். மேலும் அவர்கள் குழந்தைகளை அப்பள்ளியில் இலவசமாகப் படிக்க வைப்பார்கள்.////


    நன்றி! அமுதா மேடம் வருகைக்கும்! தகவல் தந்தமைக்கும்!

    ReplyDelete
  20. /// சிம்பா said...

    இப்படி கூட ப்பிளாக் மெயில் பண்ணலாமா... :)))///



    எஸ்! சிம்பா! பிளாக் மெயில் தான்!

    நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா?
    எதுவுமே! ;;;;;;;))))))

    ReplyDelete
  21. //// குடுகுடுப்பை said...

    ஒரு தொழில்முறையாக, முறையான ஒரு நிறுவணம் நடத்தினாலே போதுமானது.இருவரும் வேலைக்கும் செல்லுமிடங்களில்தான் இந்த பிரச்சினை.நம்பகமான நிறுவணக் குழந்தைகள் காப்பகமே தீர்வு.///


    நன்றி குடுகுடுப்பையாரே!

    ReplyDelete
  22. // புதியவன் said...

    //சரி ஒரு கற்பனை! ''மகளிர் மட்டும்'' அப்படிங்குற படத்துல
    வருமே? பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அந்த இடத்தில்
    குழந்தைகளை பார்த்துக்கொள்ள தனி இடம்.

    அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?//

    கற்பனை நிஜமானால் நன்றாகத்தான் இருக்கும்..

    //இந்த கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு என்ன வலிக்க போகிறது
    ஓட்டுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் எனக்கு
    பிள்ளையையும், தாயையும் ஒன்றாக இருக்க செய்யும்
    இந்த கோரிக்கையை சந்தோசமாய் நிறைவேற்ற போகிறேன் .//

    பெண்கள் ஓட்டு மொத்தமும் உங்களுக்குத்தான்.///


    நன்றி புதியவன்!!! .

    ReplyDelete
  23. /// Nilavum Ammavum said...

    போடுங்கம்மா ஓட்டு .....அலுகத்தில் குழந்தைகள் காப்பகம் பார்த்து/...

    தலைவா......நண்ணி நண்ணி நண்ணி.....இத சொல்லி சொல்லி தான் என் அலுவலக நிர்வாகத்தை தினமும் சாபம் குடுத்துட்டு இருக்கிறேன்.....
    இங்க நிறைய அலுவலகங்கள் மகளிர்க்கு பல வசதிகள் செஞ்சு தர்றாங்க.....துரதிர்ஷ்ட வசமா நான் அந்த மாதிரி அலுவலகத்தில வேலை பார்க்கல..

    உங்களோட பதிவுல அரசியல் பத்தி என்னமோ இருந்துச்சு.....முழுசா படிக்கல....மறுபடி வர்ர்ர்றேன்///

    நன்றிங்க ''நிலவும் அம்மாவும்'' நன்றி!

    ReplyDelete
  24. ///ஆகாய நதி //
    ///( அதை விட பிறவிப் பயனான தாய் என்னும் கதாபாத்திரத்தை செவ்வனே
    செய்யாலாம் :)///

    நிம்மதியான வேலை!
    ஆனா வேலைய விட முடியாதவங்க
    என்ன செய்வாங்க அவங்களுக்குத்தான்
    இந்த பதிவு!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  25. /// அமிர்தவர்ஷினி அம்மா said...

    நல்ல யோசனைதான்,
    கற்பனையே சுகமா இருக்கே

    இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிக்கே என் ஓட்டு.

    நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற
    இந்த நாட்டிலுள்ள குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சி வர..

    வாங்கய்யா வாத்யாரய்யா
    வந்து தேர்தலிலே நில்லுங்கய்யா//

    பாருங்க ஒருநாள் நெஜமாவே
    தேர்தல்ல நிக்கத்தான் போறேன்!

    ஆனா நான் நிக்கிற தொகுதில உங்களுக்கு
    ஓட்டு இருக்கனுமே?

    ReplyDelete
  26. /// தாரணி பிரியா said...

    அண்ணா நான் இப்போதான் இதை பத்தி பேசிட்டு வந்தேன். வந்து பார்த்தா நீங்களும் அதை பத்தியே பதிவு போட்டு இருக்கிங்க. ///



    அட! பாருங்க எப்படி எனக்கும் தோணி இருக்கு?
    பத்துக்கும் மேற்ப்பட்ட பெண்கள் வேலை செய்யுற
    இடத்துல குழந்தை காப்பகம் இருக்கணும்னு
    சட்டம் வந்தா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  27. /// ராமலக்ஷ்மி said...

    மிக நல்ல யோசனையை முன் மொழிந்திருக்கிறீர்கள். வருபவர் யாவரும் வழி மொழிகிறோம்.

    ///ஓட்டுக்குக் கேட்கணுமா:)//

    வேற என்னங்கம்மா பண்ணுறது
    ஆட்சி பண்ணுறவங்கள ஆட்டி வைக்க
    ஓட்டு ஒன்னுதானே நம்ம அஸ்திரம்!

    நன்றி அம்மா வருகைக்கு!

    ReplyDelete
  28. /// சந்தனமுல்லை said...

    நல்ல யோசனை..நல்ல பதிவு!//

    நன்றி பப்பு அம்மா!

    ReplyDelete
  29. /// அமிர்தவர்ஷினி அம்மா said...

    தாரணி பிரியா said...
    அண்ணா நான் இப்போதான் இதை பத்தி பேசிட்டு வந்தேன். வந்து பார்த்தா நீங்களும் அதை பத்தியே பதிவு போட்டு இருக்கிங்க.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு படிக்கும்போதே,

    ஜீவன் என்ன உங்களுக்கு உள்ளுணர்வு சொல்லுச்சா.///

    தெரியல அமிர்த வர்ஷினி அம்மா!
    ஆனா இது சம்பந்தமா எதோ ஒரு சட்டம்
    வர போகுதுன்னு இப்போ என் உள் உணர்வு
    சொல்லுது!

    ReplyDelete
  30. /// அதிரை ஜமால் said...

    \\ஏறக்குறைய 70 முதல் 80 பேர் வரைக்கும் இதனால பயனடைய போறாங்கன்னு தான் நினைக்கிறேன்\\

    ம்ம்ம் ... வாழ்த்துக்கள் தாரணிபிரியா.

    நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கும் போது சந்தோஷம் தானே!///

    ;;;))))

    ReplyDelete
  31. என் குழந்தைக்காகவே TCS ல் கிடைத்த வேலையை விட்டவள் நான்.அதுக்காக நான் வ்ருத்தப்படலைங்க.வருமானத்திற்கு வேறு வழி ஏற்பாடு செய்திட்டேன்.என்னைப்போல நிறைய பேர் இருக்காங்க ஜீவன் சார்

    ReplyDelete
  32. ///priya said...

    என் குழந்தைக்காகவே TCS ல் கிடைத்த வேலையை விட்டவள் நான்.அதுக்காக நான் வ்ருத்தப்படலைங்க.வருமானத்திற்கு வேறு வழி ஏற்பாடு செய்திட்டேன்.என்னைப்போல நிறைய பேர் இருக்காங்க ஜீவன் சார்///

    குட்! வருமானத்துக்கு வேற வழி? கொஞ்சம் சொன்னா
    மத்தவங்களுக்கு உதவியாக இருக்க கூடும்!

    ReplyDelete
  33. முக்கால்வாசி குடும்பத்தலைவிகள் ஏற்படுத்திக்கொள்ளும் சுயவேலை தான் ஜீவன் சார்..பங்குச்சந்தை.....:)

    ReplyDelete
  34. ///ப்ரியா said...

    முக்கால்வாசி குடும்பத்தலைவிகள் ஏற்படுத்திக்கொள்ளும் சுயவேலை தான் ஜீவன் சார்..பங்குச்சந்தை.....://

    ஓஹோ! நாங்களும் முழுநேரமா
    அதுல தான் கெடக்குறோம்!

    ReplyDelete
  35. அப்படியா ஜீவன் சார்..கேக்கவே சந்தோஷமா இருக்கு.வாழ்க,வளர்க

    ReplyDelete
  36. அப்படியா ஜீவன் சார்..கேக்கவே சந்தோஷமா இருக்கு.வாழ்க,வளர்க

    ReplyDelete

123