Friday, February 6, 2009

''ஒரு மனிதன் மணமகன் ஆவதற்குள்''

இங்கே நம் சமூகத்தில் பெண்களின் திருமண தடை
பற்றியே பெரும்பாலும் பேசப்படுகிறது.
உதாரணமாக வரதட்சணை பிரச்சனை,வறுமை,
படிப்பின்மை,அழகின்மை, இன்னும்
பல காரணங்கள்.இவை எல்லாம் உண்மைதான்.
ஆனால்! அதே வேளையில் ஆண்களுக்கும்
இதுபோல பிரச்சனைகள் ஏற்படுகிறது அதை
சொல்லத்தான் இந்த பதிவு.

ஒரு வீட்டில் தன் சகோதரிக்கு திருமணம் தள்ளி
போனால் அந்த வீட்டில் இருக்கும் அந்த
பெண்ணின் சகோதரனுக்கும் திருமண
தடை ஏற்படுகிறது.இந்த தடையை
அந்த சகோதரன் வெறுப்புடன் பார்ப்பதில்லை,
பொறுப்புடன் ஏற்றுகொள்கிறான்.

அடுத்து!!
தன் முன்னோர் சொத்து ஏதும் இல்லாமல்,
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன்
தானே சம்பாதித்து ஒரு குடும்பத்தை
நிர்வகிக்கும் அளவிற்கு தன்னை உருவாக்கி,
ஒருவர் தனக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு
தன்னை தகுதி படுத்தி, ஒரு சுய விலாசம் பெற
அவன் படும் பாடுகள் நெறயவே இருக்கின்றன.

ஒரு வசதி படைத்த குடும்பத்தினர் பெண் தேடும்போது,
பெண் வசதி இல்லாவிட்டலும் பரவாஇல்லை நல்ல
குணவதியாக இருக்கவேண்டும் என விரும்புவதை
பார்த்து இருக்கிறோம்.

ஆனால்!
மணமகனை தேடும்போது மட்டும் அவன் குணம்
பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவது இல்லை.
அவனது சம்பாத்யம் மட்டுமே கவனிக்க படுகிறது.

ஒரு ஆண் மகனின் திறமை,நேர்மை,கண்ணியம்,
நெறி தவறாமை, இவைஎல்லாம் வசதிக்கும்
வருமானத்திற்கும் முன் எடுபடுவதில்லை.


ஒருவன் படிக்கும்போது தன்னை கதா நாயகனாகத்தான்
நினைத்து கொள்வான் ஆனால்! படித்து முடித்து,
அல்லது ஒரு சுய தொழிலில் ஈடுபட்டு மாதம் சுமார்
5000 ரூபாய் சம்பாதிக்க கூட அவன் படும் பாடுகள் கொஞ்சமல்ல!
அப்போதுதான் தான் யார் என்பது அவனுக்கே புரியும்!


அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு நல்ல நிலைமை
அடைந்து கல்யாண சந்தைக்கு வரும்போது!
வெகு சுலபத்தில் ஒரு வசதி படைத்த குடும்பத்தை
சேர்ந்தவனிடம் அடிபட்டு போகிறான். இதற்கு இவன்
தரப்பு தவறு என்னவெனில் தன்னைவிட வசதி
படைத்த பெண்ணை திருமணம் செய்து
கொள்ள நினைப்பதுதான்.

ஒரு ஆண் கல்யாண சந்தையில் சங்கடங்களை
சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில்? முதலில்
தன்னை சாதாரணமானவனாக நினைத்துக்கொள்ள
வேண்டும். பெண் மிக மிக அழகாக இருக்கவேண்டும்
என நினைக்காமல் ஓரளவு இருந்தால் போதும்
என்ற எண்ணத்தை கொள்ளவேண்டும்.

மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
மனம் முடிக்க நினைக்க வேண்டும்.

இப்படியெலாம் நினைத்து பெண் தேடினால்!
அவன் வாழ்க்கை சொர்கம்தான்!!!






23 comments:

  1. // மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
    பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
    மனம் முடிக்க நினைக்க வேண்டும்.

    இப்படியெலாம் நினைத்து பெண் தேடினால்!
    அவன் வாழ்க்கை சொர்கம்தான்!!!//

    பணத்தை பார்க்காமல், குணத்தைப் பார்த்து கல்யாணம் முடித்தால் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. ஒரு ஆண் மகனின் திறமை,நேர்மை,கண்ணியம்,
    நெறி தவறாமை, இவைஎல்லாம் வசதிக்கும்
    வருமானத்திற்கும் முன் எடுபடுவதில்லை.

    முற்றிலும் உண்மை ஜீவன் :(

    ReplyDelete
  3. \\ஒரு ஆண் மகனின் திறமை,நேர்மை,கண்ணியம்,
    நெறி தவறாமை, இவைஎல்லாம் வசதிக்கும்
    வருமானத்திற்கும் முன் எடுபடுவதில்லை.\\

    நல்லா சொன்னீங்க அண்ணேன்.

    ReplyDelete
  4. evlo than compromise seidalum ipodellam kalayanam seidhu kolla pen kidaipadhu rrromba kashtam!

    ReplyDelete
  5. ""இதற்கு இவன்
    தரப்பு தவறு என்னவெனில் தன்னைவிட வசதி
    படைத்த பெண்ணை திருமணம் செய்து
    கொள்ள நினைப்பதுதான்.

    ஒரு ஆண் கல்யாண சந்தையில் சங்கடங்களை
    சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில்? முதலில்
    தன்னை சாதாரணமானவனாக நினைத்துக்கொள்ள
    வேண்டும். பெண் மிக மிக அழகாக இருக்கவேண்டும்
    என நினைக்காமல் ஓரளவு இருந்தால் போதும்
    என்ற எண்ணத்தை கொள்ளவேண்டும்.

    மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
    பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
    மனம் முடிக்க நினைக்க வேண்டும்.""

    சபாஷ்... சரியாக சொன்னீர்கள் ஜீவன்.

    ReplyDelete
  6. எனக்குத் தெரிந்த ஒருவர் தன் தங்கைகளுக்கு திருமணம் முடித்துவிட்டு அவருக்கு திருணமத்திற்கு பெண் பார்த்து அலுத்துவிட்டார். இந்த உலகத்தில் பெண் கிடைக்கவில்லையா என்று அதிசயத்துடன் கேட்டேன். அதற்கு அவர் எங்க சாதியில் கிடைக்கல. என் எதிர்பார்பிற்கு இல்லை என்றார். அவருக்கு தற்போது வயது 40. இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்!

    ReplyDelete
  7. நல்லா இருக்கு அமுதன்... ஆண்களுக்கும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை..

    பணத்தை பார்ப்பது ரெண்டு பேரும் தான்...எதிர்பார்ப்பை பொறுத்தே வாழ்க்கை இருக்கும்... அது நம்ம கையில தான் இருக்கு..ம்ம்ம்

    ReplyDelete
  8. super annaaa,,, endha madiri erukara angal kum,, endha madiri erukanum nu ninaikara angalukum oru periyaaaa ooooooooooooooooooooo :-)

    ReplyDelete
  9. அருமையான படைப்பு , நல்ல கருத்துக்கள் இது போல நிறைய பதிப்புகளை நான் உங்களிடம் எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  10. மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
    பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
    மனம் முடிக்க நினைக்க வேண்டும்///

    நல்ல கருத்து ஜீவன்...

    உங்களுக்குப்பிடித்து நீண்ட நாள் அடையாளம் காட்டப்படாத வலை பதிவர்களோ அல்லது பிரபலங்கள் இருந்தால் எனக்குத்தெரிவிக்கவும்.
    விபரமாக சரத்தில் தொடுக்கிறேன்...
    உதாரணம்:கொரிய தமிழ் சங்கம்!!
    இப்படி...
    அன்பின்
    தேவா..

    ReplyDelete
  11. //
    ஒரு வீட்டில் தன் சகோதரிக்கு திருமணம் தள்ளி
    போனால் அந்த வீட்டில் இருக்கும் அந்த
    பெண்ணின் சகோதரனுக்கும் திருமண
    தடை ஏற்படுகிறது.இந்த தடையை
    அந்த சகோதரன் வெறுப்புடன் பார்ப்பதில்லை,
    பொறுப்புடன் ஏற்றுகொள்கிறான்.
    //

    இது மிகச் சரியான கருத்து ஜீவன்
    அந்த சகோதரின் நிலையும் சரி
    அந்த சகோதரனின் நிலையும் பரிதாபத்திற்கு உரியதே.

    ஏனெனில் தாமதமாக சகோதரியின் திருமணம்
    என்று வைத்துக் கொள்ளுங்கள்
    சகோதரனுக்கும் தாமதம்தான் ஆகிறது.

    ஆனா சகோதரிகளின் பிரச்சனைகள் விட
    சகோதரனின் பிரச்சனைகள் அதிக மாகி விடுகிறது
    தாமத திருமணத்தால் அந்த சகோதரன்
    வாழ்வில் செட்டில் ஆவது மிகவும் கடினமான ஒன்று
    குழந்தைகள் படிப்பு முடியும் முன்னே
    ஓய்வு பெற்று விடுவார்,
    அதன் பிறகு போராட்டம்தான்

    இது போல் ஒருவருக்கும் வரக்கூடாது
    என்று நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ஜீவன்!!!

    ReplyDelete
  12. \\ஒரு ஆண் மகனின் திறமை,நேர்மை,கண்ணியம்,
    நெறி தவறாமை, இவைஎல்லாம் வசதிக்கும்
    வருமானத்திற்கும் முன் எடுபடுவதில்லை.\\

    அதெல்லாம் ஏற்றுக் கொள்ள நல்ல
    விசாலமான மனது வேண்டும் ஜீவன்
    அருமையா சொல்லி இருக்கீங்க!!

    ReplyDelete
  13. //
    ஒரு வசதி படைத்த குடும்பத்தினர் பெண் தேடும்போது,
    பெண் வசதி இல்லாவிட்டலும் பரவாஇல்லை நல்ல
    குணவதியாக இருக்கவேண்டும் என விரும்புவதை
    பார்த்து இருக்கிறோம்.

    ஆனால்!
    மணமகனை தேடும்போது மட்டும் அவன் குணம்
    பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவது இல்லை.
    அவனது சம்பாத்யம் மட்டுமே கவனிக்க படுகிறது.

    ஒரு ஆண் மகனின் திறமை,நேர்மை,கண்ணியம்,
    நெறி தவறாமை, இவைஎல்லாம் வசதிக்கும்
    வருமானத்திற்கும் முன் எடுபடுவதில்லை.
    //

    அருமை அருமை அருமை
    சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்!!!

    ReplyDelete
  14. //
    ஒரு ஆண் கல்யாண சந்தையில் சங்கடங்களை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில்? முதலில்
    தன்னை சாதாரணமானவனாக நினைத்துக்கொள்ள வேண்டும்.

    பெண் மிக மிக அழகாக இருக்கவேண்டும் என நினைக்காமல் ஓரளவு இருந்தால் போதும்
    என்ற எண்ணத்தை கொள்ளவேண்டும்.
    //


    இது கொஞ்சம் கஷ்டம் இவ்வாறு
    நினைப்பவர்கள் மிகவும் சொற்பம்.

    ஒரு ஐம்பத்து சதவிகிதம் இவ்வாறு நினைத்தால் கூட போதும்.

    நீங்கள் கூறி இருக்கும் வகை பெண்களும் மகிழ்ச்சியுடன் மனமேடை ஏறுவார்கள்!!!

    ReplyDelete
  15. /
    மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
    பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
    மனம் முடிக்க நினைக்க வேண்டும்.
    //

    இதுவும் அருமையான யோசனை
    ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க
    உங்கள் எழுத்துக்களின் உண்மை
    பலரை யோசிக்க வைக்கும் ஜீவன்
    வாழ்த்துக்கள் ஜீவன்!!!

    ReplyDelete
  16. என்ன பாஸ் ஆச்சு

    ஒரு வீட்டில் தன் சகோதரிக்கு திருமணம் தள்ளி
    போனால் அந்த வீட்டில் இருக்கும் அந்த
    பெண்ணின் சகோதரனுக்கும் திருமண
    தடை ஏற்படுகிறது.இந்த தடையை
    அந்த சகோதரன் வெறுப்புடன் பார்ப்பதில்லை,
    பொறுப்புடன் ஏற்றுகொள்கிறான்.
    ம், ஒத்துக்க வேண்டியதுதான்

    மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
    பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
    மனம் முடிக்க நினைக்க வேண்டும் //
    எத்தனை பேரு இப்படி யோசிக்கறாங்க
    சொல்லுங்க
    அட நம்மதான் வசதியாயில்லையே, வரப் போறவ வீடாவது வசதியா இருந்தா நாள பின்ன கொடுக்கல் வாங்கலுக்கு ஒதவியா இருக்குமேன்னு பார்த்து பார்த்து பொண்ணு எடுக்கறவங்கதான் இங்க நெறைய பேரு.

    ReplyDelete
  17. http://tamilamudam.blogspot.com/2008/09/blog-post_2625.html

    இந்தச் சுட்டியிலிருக்கும் எனது ‘மகுடம் சரிந்தது’ கவிதையை நேரம் இருக்கும் போது பாருங்கள்.

    //ஒருவன் படிக்கும்போது தன்னை கதா நாயகனாகத்தான்
    நினைத்து கொள்வான் //

    அதே போலத்தான் பெண்ணும் தன்னை ஒரு மகராணியாக நினைத்துக் கொள்கிறாள். திருமணச் சந்தையில் பிரச்சனையைச் சந்திக்கும் போதுதான் நிதர்சனம் புரிகிறது.

    //
    மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
    பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
    மனம் முடிக்க நினைக்க வேண்டும்.//

    ஆணோ பெண்ணோ இருவருமே தங்களுக்கு என்று வருகையில் தம்மை விட வசதியான துணை வேண்டுமென்றுதான் நினைக்கிறார்களே தவிர குணத்தைப் பார்ப்பவர்கள் வெகு குறைவு. சிந்திக்க வைக்கும் பதிவு ஜீவன்.

    ReplyDelete
  18. உன் அப்பா ஏழை என்றால் அது உன் தலைவிதி

    உன் மாமனாரும் ஏழை என்றால் அது உன் முட்டாள் தனம்!


    நான் சொல்லலப்பா
    யாரோ பெரிய அறிஞர் சொல்லியிருக்கார்

    ReplyDelete
  19. நல்ல பதிவு.

    /*முதலில்
    தன்னை சாதாரணமானவனாக நினைத்துக்கொள்ள
    வேண்டும். பெண் மிக மிக அழகாக இருக்கவேண்டும்
    என நினைக்காமல் ஓரளவு இருந்தால் போதும்
    என்ற எண்ணத்தை கொள்ளவேண்டும்*/
    ஆண்/பெண் எவருக்குமே எதிர்பார்ப்புகள் அளவாக இருந்தாலே ஏமாற்றங்கள் இல்லாது இனிமையாக வாழ்வு அமையும். பல பிரச்னைகளின் மூலமே அதிக எதிர்பார்ப்பினால் உருவாகும் ஏமாற்றங்களும் அதனால் வரும் புரிந்து கொள்ளாமையுமே!!

    ReplyDelete
  20. நல்லாயிருக்கு.

    வாழ்த்துகள்.

    நீங்கள் திருமணமானவர்தானே..??

    ReplyDelete
  21. // மிக முக்கியமாக தன்னைவிட வசதி அதிகம் படைத்த
    பெண்ணை தேடாமல் வசதி குறைந்த பெண்ணையே
    மனம் முடிக்க நினைக்க வேண்டும்.

    இந்த கருத்து மட்டும் ஆண்களுக்கு ஏன் தோன்றுகிறதென்றால் மனைவி தனக்கு அடங்கி நிற்பாள் என்பதும் ஒரு காரண்மாக இருக்கும்.
    வாழ்க்கை எப்பொழுது சந்தோஷமாக இருக்கிறது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தலில்
    அந்த விட்டுக் கொடுத்தல் என்பது பெண்களிடமிருந்தே எதிர்பார்க்கப் படுகிறது

    ReplyDelete
  22. ஆண்/பெண் எவருக்குமே எதிர்பார்ப்புகள் அளவாக இருந்தாலே ஏமாற்றங்கள் இல்லாது இனிமையாக வாழ்வு அமையும்.ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தலில்
    அந்த விட்டுக் கொடுத்தல் என்பது பெண்களிடமிருந்தே எதிர்பார்க்கப் படுகிறது
    பல பிரச்னைகளின் மூலமே அதிக எதிர்பார்ப்பினால் உருவாகும் ஏமாற்றங்களும் அதனால் வரும் புரிந்து கொள்ளாமையுமே

    ReplyDelete

123