Thursday, February 26, 2009

என்னை கவர்ந்தவர்கள்

என்னை அழைத்த மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்களுக்கு நன்றி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கும் ஒரு முகம் உண்டு
சில நாட்டை சேர்ந்தவர்கள் உழைப்பாளிகள்.சில நாட்டை
சேர்ந்தவர்கள் சுறு சுறுப்பு மிகுந்தவர்கள் .

ஆனால்!!!

நம் இந்தியர்கள் முகம் எது ?
வேறு நாட்டு மன்னர்கள் நம் நாட்டின் மீது படைஎடுத்து வரும்போது!!!
இந்தியர்கள் அப்பாவிகள் !
ஆங்கிலேயர்கள் நம்நாட்டிற்கு வரும்போது!!!
இந்தியர்கள் கோழைகள்! எதிர்க்க துணிவு இல்லாதவர்கள் !
காந்தியடிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்து அறப்போராட்டம்
நடத்தியபோது!!
இந்தியர்கள் அகிம்சாவாதிகள் ! வன்முறை விரும்பாதவர்கள் !!!

ஆனால் !

இந்தியர்களுக்கு இன்னொரு முகம் உண்டு .
அதுதான் !!! உலக மக்களை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்த

''ஆங்கிலேயர்களை அலற வைத்த இந்தியர்களின்
வீரத்திருமுகம்''

அப்படிப்பட்ட வீரத்தையும் ,துணிவையும் ,இந்தியர்களுக்கு
வரவைத்து இந்தியர்களை வீறுகொண்டு எழ செய்தவர்
மாவீரர் ''தக தகக்கும் தங்க அம்பு '' என போற்றப்பட்ட
''நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் ''

இவரே என்னை மிகவும் கவர்ந்தவர்!


நேதாஜி படையில் நம் வீர பெண்கள்!!

நம் இந்திய பெண்களுக்கென சிறந்த மதிப்பும் மரியாதையும்
உண்டு. அவர்கள் பண்பு,மற்றும் அவர்களின் கலாசாரம்
ஆகிய காரணங்களுக்காக பெரிதும் போற்ற படுகின்றனர்.
நம் நாட்டு பெண்களில் என்னை கவர்ந்தது நம்நாட்டு
பெண்களின் வீரம்தான்.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நேதாஜி இராணுவம்
அமைக்கிறார்.பெரும் எண்ணிக்கையில் மக்கள்
நேதாஜியின் ராணுவத்தில் சேருகிறார்கள்.அதில்
பெண்களும் பெருமளவில் சேருகிறார்கள் .இராணுவத்தில்
சேர்க்கப்பட்ட பெண்கள் செவிலியர் பணியிலும் மற்ற
இதர பணிகளிலும் ஈடு படுத்த பட்டனர்.ஆனால்
இராணுவத்தில் சேர்ந்த பெண்களோ ஆயுதம் தாங்கி
போராட விரும்பினார்கள்.ஆனால்! நேதாஜி அவர்கள் ஆயுதம்
தாங்கி போரிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று
கொள்ளவில்லை. பின்னர் அந்த பெண்கள் தங்கள்
ஆயுதம் தாங்கி போராட விரும்புவதாக
இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி நேதாஜிக்கு அனுப்பி
வைத்தனர்.

அவர்கள் உறுதியையும் வீரத்தையும் மதித்த நேதாஜி
பெண்கள் படை ஒன்றினை அமைத்தார்.அந்த படைக்கு
கேப்டன் லட்சுமியை தலைமைதாங்க செய்தார்.
நேதாஜியின் படையில்ஆயுதம் தாங்கி போரிட விரும்பிய
நம்நாட்டு வீர பெண்கள்என்னை கவர்ந்தவர்கள்.


எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!




இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

ரம்யா
அமிர்த வர்ஷினி அம்மா
என்வானம் அமுதா
நட்புடன் ஜமால்
புதியவன்

ஆகியோர்.


--------------------------------------------

74 comments:

  1. உங்க பதிவு நல்லாயிருக்கு

    நினைவுகூர்ந்ததுக்கு நன்றி

    ReplyDelete
  2. இப்போ அப்பீட்டு

    அப்பாலிக்கா மீதி

    ReplyDelete
  3. நேதாஜியின் தொடரை விகடனில் படிக்கும் போது தான் காந்தி செய்த துரோகம் தெரிந்தது.

    ஒருவேளை நேதாஜி நமது அரசியல் தலைவராகிருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகிருக்கும்.

    ReplyDelete
  4. நான்தான் லேட்டா .. அட கடவுளே ,ஜீவன் சார் இப்படி சுறுசுறுப்பா இருப்பார்னு யாராவது சொல்லி இருக்கலாமுல

    ReplyDelete
  5. அண்ணா ரொம்ப சந்தோஷம்.

    ஏற்கனவே தேவன்மயம் அழைத்திட்டார்.

    முயற்சி செய்திடுவோம் ...

    ReplyDelete
  6. நேதாஜி எனக்கும் மிகவும் பிடித்தவர்

    ReplyDelete
  7. ஆனா என் பேரை யாரும் போட மாட்டங்கறாங்களே

    யாருக்கும் என்ன பிடிக்கலையோ ...

    ReplyDelete
  8. நேதாஜியை பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    எனக்கும் நேதாஜியை மிகவும் பிடிக்கும்.
    அவரது துணிவு , தன்னலம் இல்லாத போராட்டம் .....எல்லாமே தான்.

    ஆனால் அவரை நேரு, காந்தி போன்றோர் புறக்கணித்துவிட்டனர்.
    இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் விரட்டப்பட்டதுக்கு முக்கிய காரணமே சுபாஷ் தான்.



    காந்தி, நேரு என்று கொண்டாடுபவர்களுக்கு நேதாஜி பற்றி தெரியாமலா இருக்கும்.
    அவர்கள் இருவரும் சேர்ந்து நேதாஜிக்கு துரோகம் செய்து தாங்கள் பெயர் வாங்கிவிட்டார்கள்.

    ReplyDelete
  9. //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!//

    நச்.......அருமையான வரிகள் ஜீவன்.

    ReplyDelete
  10. நேதாஜி மறக்கப்பட்ட தேசப்பிதா

    ReplyDelete
  11. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...

    வீரத்தின் மறு பெயர். மிக அழகாக திட்டங்கள் வகுத்தவர்.

    // எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்! //

    சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  12. கேப்டன் லஷ்மி அவர்களுக்கு 1998 ஆம் ஆண்டு பதமவிபூஷண் பட்டம் வழங்கப்பட்டது.

    டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் கேப்டன் லஷ்மி.

    ReplyDelete
  13. கேப்டன் லஷ்மி அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு

    http://www.cpim.org/elections/president/lakshmi_sehagal_profile.htm

    ReplyDelete
  14. //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!

    /

    சரியான வரிகள் ஜீவன்

    ReplyDelete
  15. //''ஆங்கிலேயர்களை அலற வைத்த இந்தியர்களின் வீரத்திருமுகம்''//

    முற்றிலும் உண்மை...இந்தியர்களின் அஹிம்சை முகத்திற்குள் ஒரு வீரத்திருமுகம் இருப்பதை உலகிற்கு உணர்த்தியது நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களே...இவர் எனக்கும் பிடித்த தலைவரே...

    என்னையும் தொடர் பதிவில் இணைத்ததற்கு நன்றி ஜீவன் அண்ணா...

    ReplyDelete
  16. இவரைப் பற்றி அனேக வதந்தி போன்ற செய்திகளே கிடைக்க, உங்கள் பதிவும், அதற்கு வந்த சில பின்னூட்ட செய்திகளும் ஆறுதல்

    ஜெய்ஹிந்த்!

    நம் நாட்டு பெண்களில் என்னை கவர்ந்தது நம்நாட்டு
    பெண்களின் வீரம்தான்.
    ஒன்லி நாட்டு பெண்களின் வீரம் மட்டும்தானா, ஏன் சிங்கமணியை விட்டுட்டீங்கண்ணே

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ?
    ஆயுதத்தில் பூரிக்கட்டை, ஜல்லிக்கரண்டி, மத்து எல்லாம் அடங்குமா.
    இல்லை ஒன்லி ஏ.கே 47 தானா

    ReplyDelete
  17. //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!//

    நீங்க செய்யிற வேலையில பொடி பயன்படுத்துவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். எழுத்திலேயுமா? ம்! நடத்துங்க...

    ReplyDelete
  18. //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!//

    :)

    ReplyDelete
  19. /// அபுஅஃப்ஸர் said...

    உங்க பதிவு நல்லாயிருக்கு

    நினைவுகூர்ந்ததுக்கு நன்றி///

    நன்றி!! அபுஅஃப்ஸர்!!

    ReplyDelete
  20. /// அபுஅஃப்ஸர் said...

    இப்போ அப்பீட்டு

    அப்பாலிக்கா மீதி //

    ;;))

    ReplyDelete
  21. /// வால்பையன் said...

    நேதாஜியின் தொடரை விகடனில் படிக்கும் போது தான் காந்தி செய்த துரோகம் தெரிந்தது.

    ஒருவேளை நேதாஜி நமது அரசியல் தலைவராகிருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகிருக்கும்.///

    வாங்க அருண்! நிச்சயமாக!!!! நேதாஜியின் மறைவு இந்தியாவின் துரதிஷ்டம்!!!

    காந்தி மட்டுமல்ல!! இன்னும் சிலரும், நேதாஜிக்கு துரோகம் செய்துள்ளனர்!!!

    ReplyDelete
  22. //// Rajeswari said...

    நான்தான் லேட்டா .. அட கடவுளே ,ஜீவன் சார் இப்படி சுறுசுறுப்பா இருப்பார்னு யாராவது சொல்லி இருக்கலாம்ல ///

    என்னை சுறுசுறுப்புன்னு யாரும் சொல்ல மாட்டங்க!!!

    ReplyDelete
  23. /// வித்யா said...

    ஜெய்ஹிந்த:)//

    ;;;-)

    ReplyDelete
  24. //// நட்புடன் ஜமால் said...

    அண்ணா ரொம்ப சந்தோஷம்.

    ஏற்கனவே தேவன்மயம் அழைத்திட்டார்.

    முயற்சி செய்திடுவோம் ///

    செய்ங்க ஜமால்!!!

    ///நேதாஜி எனக்கும் மிகவும் பிடித்தவர்///

    ;;-)))

    ///ஆனா என் பேரை யாரும் போட மாட்டங்கறாங்களே

    யாருக்கும் என்ன பிடிக்கலையோ//

    என்ன ஜமால்!! உங்கள போய் யாரும் புடிக்கலன்னு சொல்லுவாங்களா?

    ReplyDelete
  25. /// என்.இனியவன் said...

    நேதாஜியை பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    எனக்கும் நேதாஜியை மிகவும் பிடிக்கும்.
    அவரது துணிவு , தன்னலம் இல்லாத போராட்டம் .....எல்லாமே தான்.

    ஆனால் அவரை நேரு, காந்தி போன்றோர் புறக்கணித்துவிட்டனர்.
    இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் விரட்டப்பட்டதுக்கு முக்கிய காரணமே சுபாஷ் தான்.



    காந்தி, நேரு என்று கொண்டாடுபவர்களுக்கு நேதாஜி பற்றி தெரியாமலா இருக்கும்.
    அவர்கள் இருவரும் சேர்ந்து நேதாஜிக்கு துரோகம் செய்து தாங்கள் பெயர் வாங்கிவிட்டார்கள்.////

    வாங்க!! இனியவன்!!! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை!!
    நேதாஜி இருந்திருந்தால் சிலர் பெயர் வரலாற்றில் இல்லாமல் போய் இருக்கும்!!!

    ReplyDelete
  26. /// அ.மு.செய்யது said...

    //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!//

    நச்.......அருமையான வரிகள் ஜீவன்.///

    நன்றி!! அ.மு.செய்யது!

    ReplyDelete
  27. /// குடுகுடுப்பை said...

    நேதாஜி மறக்கப்பட்ட தேசப்பிதா///

    வாங்க!! குடுகுடுப்பையாரே!

    ReplyDelete
  28. ///இராகவன் நைஜிரியா said...

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...

    வீரத்தின் மறு பெயர். மிக அழகாக திட்டங்கள் வகுத்தவர்.

    // எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்! //

    சரியாகச் சொன்னீர்கள்.////

    நன்றி!! அண்ணே!!

    ///கேப்டன் லஷ்மி அவர்களுக்கு 1998 ஆம் ஆண்டு பதமவிபூஷண் பட்டம் வழங்கப்பட்டது.

    டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் கேப்டன் லஷ்மி.///


    ///கேப்டன் லஷ்மி அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு
    http://www.cpim.org/elections/president/lakshmi_sehagal_profile.தடம்////


    தகவலுக்கு நன்றி!!!

    ReplyDelete
  29. /// அபுஅஃப்ஸர் said...

    //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!

    /

    சரியான வரிகள் ஜீவன்///


    நன்றி !!அபுஅஃப்ஸர்!!!

    ReplyDelete
  30. ///புதியவன் said...

    //''ஆங்கிலேயர்களை அலற வைத்த இந்தியர்களின் வீரத்திருமுகம்''//

    முற்றிலும் உண்மை...இந்தியர்களின் அஹிம்சை முகத்திற்குள் ஒரு வீரத்திருமுகம் இருப்பதை உலகிற்கு உணர்த்தியது நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களே...இவர் எனக்கும் பிடித்த தலைவரே...

    என்னையும் தொடர் பதிவில் இணைத்ததற்கு நன்றி ஜீவன் அண்ணா...////

    நன்றி!! புதியவன்!!

    ReplyDelete
  31. //// அமிர்தவர்ஷினி அம்மா said...

    இவரைப் பற்றி அனேக வதந்தி போன்ற செய்திகளே கிடைக்க, உங்கள் பதிவும், அதற்கு வந்த சில பின்னூட்ட செய்திகளும் ஆறுதல்

    ஜெய்ஹிந்த்!////

    நன்றி!!!

    //// நம் நாட்டு பெண்களில் என்னை கவர்ந்தது நம்நாட்டு
    பெண்களின் வீரம்தான்.
    ஒன்லி நாட்டு பெண்களின் வீரம் மட்டும்தானா, ஏன் சிங்கமணியை
    விட்டுடீங்கன்னே ?////

    /// எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ?
    ஆயுதத்தில் பூரிக்கட்டை, ஜல்லிக்கரண்டி, மத்து எல்லாம் அடங்குமா.
    இல்லை ஒன்லி ஏ.கே 47 தானா///

    சிங்க மணியோட வீரத்த பார்த்துதான் சிங்க மணின்னே பேரு வைச்சேன்!
    எந்த ஆயுதம் கிடைத்தாலும் சிங்க மணி கைக்கு போனா அது ஏ.கே 47 போலத்தான்
    பூரி கட்டை,மத்து எதுவானாலும்! அடி வாங்கினாகூட!! என் சிங்கமணி நேதாஜி படைல போராடினவங்க வழி வந்த ஆளுன்னு நெனைச்சுகிட்டு ஒரு பெருமையோட அடிவாங்குவேன் ஆமா ?

    ReplyDelete
  32. /// அன்புமணி said...

    //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!//

    நீங்க செய்யிற வேலையில பொடி பயன்படுத்துவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். எழுத்திலேயுமா? ம்! நடத்துங்க...///


    ஹா.. ஹா.. வாங்க அன்புமணி! பொடி வைச்சு சொல்லல அன்புமணி!!
    நேரடியா நம்ம தமிழ் பெண்களைத்தான் சொல்லுறேன்!!!

    ReplyDelete
  33. /// Thooya said...

    //எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!//

    :)///

    வாங்க சகோதரி!!!

    ReplyDelete
  34. எப்பவும் போல கலக்கிட்டீங்க.. அழைப்புக்கு நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்

    ReplyDelete
  35. /// அமுதா said...

    எப்பவும் போல கலக்கிட்டீங்க.. அழைப்புக்கு நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்///

    வாங்க அமுதா மேடம்!! எழுதுங்க!! விரைவில் எதிர் பார்கிறேன்!!!

    ReplyDelete
  36. வெள்ளையர்கள் விடுதலை குடுக்க முடிவெடுத்தது இந்த வீரமகனின் எழுச்சிக்குப் பின்தான்.

    ஜெய்ஹிந்த்.

    ReplyDelete
  37. எனக்கும் நேதாஜியை மிகவும் பிடிக்கும்

    ReplyDelete
  38. நல்ல தேர்வு. சுபாஷ் சந்திர போஸ் குறித்து நான் கேள்வி பட்டு உள்ளேன். அவரை பற்றி ஒரு பதிவாக எழுத முடிந்தால் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  39. //// எம்.எம்.அப்துல்லா said...

    வெள்ளையர்கள் விடுதலை குடுக்க முடிவெடுத்தது இந்த வீரமகனின் எழுச்சிக்குப் பின்தான்.

    ஜெய்ஹிந்த்.////

    உண்மை! அப்பு வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  40. /// தாரணி பிரியா said...

    எனக்கும் நேதாஜியை மிகவும் பிடிக்கும்//

    ;;-)) வருகைக்கு நன்றி! தாரணி பிரியா!!

    ReplyDelete
  41. //// SK said...

    நல்ல தேர்வு. சுபாஷ் சந்திர போஸ் குறித்து நான் கேள்வி பட்டு உள்ளேன். அவரை பற்றி ஒரு பதிவாக எழுத முடிந்தால் மிக்க மகிழ்ச்சி.///

    வாங்க sk!! நேதாஜியின் வீரத்தையும் அவர் நிகழ்த்திய சாகசங்களையும், ஒரு பதிவில்,
    அல்லது சிலபதிவுகளில் முழுமையாக எடுத்துரைக்க முடியும் என தோன்றவில்லை!
    நேதாஜிக்கென தனி வலைத்தளம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் உள்ளது!

    நன்றி! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

    ReplyDelete
  42. ஜீவன் அருமை,

    அப்பப்பா உங்களின் எழுத்துக்கள்
    எப்பவுமே எனக்கு பிரமிப்பை கொடுக்கும் அதே வரிசையில் இன்றும் ஒரு அருமையான celebrity பற்றி கூறி அசத்திட்டீங்க போங்க

    நம் தேசத்திற்காக பாடுபட்டவர்கள்
    எவ்வளவோ பேரை நினைத்து நினைத்து பூரித்துப் போகினோம்.

    ஆனால நேதாஜி அவர்களின் தன்னலமில்லா போராட்டங்கள், அந்த போராட்டத்திற்கு அவர் எடுத்த துணிச்சலான முடிவுகள்.

    நெஞ்சம் நெகிழ்ந்து யோசிக்க வைத்த மாமனிதர்.

    அவரை இங்கு கூறி மறுபடியும் அவரை பற்றிய நினைவுகளை அசை போடவைத்த ஜீவன் உங்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது.

    ReplyDelete
  43. என்னை அழைத்து உள்ளீர்கள் !!

    நன்றி ஜீவன் கண்டிப்பாக எழுதுகின்றேன்.

    ReplyDelete
  44. உங்களைக் கவர்ந்தவர்களைக் கூறிய விதம் அருமை ஜீவன். அது விகடனையும் கவர்ந்து ‘Good Blogs' பரிந்துரையிலும் இருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  45. அண்ணா உங்களுக்கு வாழ்த்துகள்

    யூத் விகடன்ல இந்த பதிவு ...

    ReplyDelete
  46. இளமை விகடனின் குட் ப்ளாக்கில் இந்தப் பதிவு.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. ”எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!”...


    உண்மைதான் பெண்கள் பொறுமை இழந்துவிட்டார்கள் என்றால் அநியாயம் அக்கிரமம் தலை எடுத்து ஆடுகிறது என்று அர்த்தம் .எல்லாம் சுமுகமாக இருக்கும் வரைதான் பெண்கள் பூ போன்றவர்கள்,நியாயம் நிலைக்கும் வரைதான் அவர்கள்,அடக்கத்தின் சின்னங்கள்.

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் ஜீவன்

    உங்க பதிவு விகடன்ல வந்திருக்காமே
    இங்க பின்னூட்டத்தில் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்,.

    ReplyDelete
  49. அடியேனும் நேதாஜியின் அன்பன்..

    ReplyDelete
  50. நம்ம ரம்யா டீச்சர் மூலமா விடயம் கேள்விப்பட்டேன்! 'யூத் விகடன்' வலையில் தங்கள் பதிவு வெளிவந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! தொடரட்டும் பல வெற்றிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. என்னைக் கவர்ந்த போஸ், தங்களையும் கவர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி!
    வாழ்த்துகள் ஜீவன்!

    ReplyDelete
  52. சூப்பர் செலக்ஷன்...
    விகடன் குட்ப்ளாக்கில் வந்தது அறிந்தேன்...
    வாழ்த்துகள்...

    ReplyDelete
  53. /// RAMYA said...

    ஜீவன் அருமை,

    அப்பப்பா உங்களின் எழுத்துக்கள்
    எப்பவுமே எனக்கு பிரமிப்பை கொடுக்கும் அதே வரிசையில் இன்றும் ஒரு அருமையான celebrity பற்றி கூறி அசத்திட்டீங்க போங்க

    நம் தேசத்திற்காக பாடுபட்டவர்கள்
    எவ்வளவோ பேரை நினைத்து நினைத்து பூரித்துப் போகினோம்.

    ஆனால நேதாஜி அவர்களின் தன்னலமில்லா போராட்டங்கள், அந்த போராட்டத்திற்கு அவர் எடுத்த துணிச்சலான முடிவுகள்.

    நெஞ்சம் நெகிழ்ந்து யோசிக்க வைத்த மாமனிதர்.

    அவரை இங்கு கூறி மறுபடியும் அவரை பற்றிய நினைவுகளை அசை போடவைத்த ஜீவன் உங்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது.////

    நன்றி ரம்யா! வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  54. /// RAMYA said...

    என்னை அழைத்து உள்ளீர்கள் !!

    நன்றி ஜீவன் கண்டிப்பாக எழுதுகின்றேன்.///

    ரம்யா ஒரு வீரம் நிறைந்தபெண்! வீரமான பதிவை
    எதிர்பார்க்கிறேன்!!

    ReplyDelete
  55. /// ராமலக்ஷ்மி said...

    உங்களைக் கவர்ந்தவர்களைக் கூறிய விதம் அருமை ஜீவன். அது விகடனையும் கவர்ந்து ‘Good Blogs' பரிந்துரையிலும் இருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!///


    தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மா!!

    ReplyDelete
  56. /// நட்புடன் ஜமால் said...

    அண்ணா உங்களுக்கு வாழ்த்துகள்

    யூத் விகடன்ல இந்த பதிவு ...///

    நன்றி ஜமால்!!!

    ReplyDelete
  57. /// புதுகைத் தென்றல் said...

    இளமை விகடனின் குட் ப்ளாக்கில் இந்தப் பதிவு.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.////

    தென்றலின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !!

    ReplyDelete
  58. /// goma said...

    ”எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

    எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!”...


    உண்மைதான் பெண்கள் பொறுமை இழந்துவிட்டார்கள் என்றால் அநியாயம் அக்கிரமம் தலை எடுத்து ஆடுகிறது என்று அர்த்தம் .எல்லாம் சுமுகமாக இருக்கும் வரைதான் பெண்கள் பூ போன்றவர்கள்,நியாயம் நிலைக்கும் வரைதான் அவர்கள்,அடக்கத்தின் சின்னங்கள்.////


    உங்கள் கருத்துக்கள் முற்றிலும் சரி! நன்றி வருகைக்கு!!

    ReplyDelete
  59. ///அமிர்தவர்ஷினி அம்மா said...

    வாழ்த்துக்கள் ஜீவன்

    உங்க பதிவு விகடன்ல வந்திருக்காமே
    இங்க பின்னூட்டத்தில் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்,.////

    நன்றி!! அமித்து அம்மா!!!

    ReplyDelete
  60. /// பட்டிக்காட்டான்.. said...

    அடியேனும் நேதாஜியின் அன்பன்..///

    வாங்க பட்டிக்காட்டான்! மிக்க மகிழ்ச்சி!

    நிஜத்தில் நானும் ஒரு பட்டிக்காட்டான்தான்!!

    ReplyDelete
  61. /// அன்புமணி said...

    நம்ம ரம்யா டீச்சர் மூலமா விடயம் கேள்விப்பட்டேன்! 'யூத் விகடன்' வலையில் தங்கள் பதிவு வெளிவந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! தொடரட்டும் பல வெற்றிகள்! வாழ்த்துக்கள்!///


    வாங்க அன்புமணி! நன்றி மகிழ்ச்சி!

    ReplyDelete
  62. // ஜோதிபாரதி said...

    என்னைக் கவர்ந்த போஸ், தங்களையும் கவர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி!
    வாழ்த்துகள் ஜீவன்!///

    வாங்க அத்திவெட்டியாரே! தங்களை போஸ் கவர்ந்தவர் என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை! ஏனெனில் அத்திவெட்டியை சேர்ந்த நண்பர்கள் நிஜத்தில் நேதாஜி குணம் படைத்தவர்கள் என்பது ஊரறிந்த விஷயம்! வருகைக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  63. /// வேத்தியன் said...

    சூப்பர் செலக்ஷன்...
    விகடன் குட்ப்ளாக்கில் வந்தது அறிந்தேன்...
    வாழ்த்துகள்..//

    வாங்க வேத்தியன்! மிக்க மகிழ்ச்சி!! நன்றி!!

    ReplyDelete
  64. அப்பு வாழ்த்துகள்...விகடனில் வந்ததற்கு :)

    ReplyDelete
  65. யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்கில் உங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள் ஜீவன் அண்ணா...

    ReplyDelete
  66. யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்கில் உங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  67. விகடன் குட் ப்ளாக்கில் 'கண்ணாடி'
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  68. /// எம்.எம்.அப்துல்லா said...

    அப்பு வாழ்த்துகள்...விகடனில் வந்ததற்கு :)///

    மிக்க நன்றி அப்பு!! ;;;)))

    ReplyDelete
  69. /// புதியவன் said...

    யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்கில் உங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள் ஜீவன் அண்ணா...////

    நன்றி!! புதியவன்!!

    ReplyDelete
  70. ///அமுதா said...

    யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்கில் உங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்///

    நன்றி!! அமுதா மேடம்!!

    ReplyDelete
  71. // வாழவந்தான் said...

    விகடன் குட் ப்ளாக்கில் 'கண்ணாடி'
    வாழ்த்துக்கள்!!//

    நன்றி!! வாழவந்தான்!!

    ReplyDelete
  72. வாழ்துக்கள் அண்ணா:))

    ReplyDelete
  73. /// Poornima Saravana kumar said...

    வாழ்துக்கள் அண்ணா:))///

    நன்றி பூர்ணிமா!!!

    ReplyDelete

123