Friday, June 26, 2009

''குடித்ததில் பிடித்தது''

குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது!!

எனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும்.ஒருநாள் அப்படி கிளம்பியாச்சு அப்போ மழைக்காலம் தான் ! இங்க பெரம்பூர்ல நச நச ன்னு தூறல் போட்டுக்கிட்டு இருக்கு கிழக்கு பக்கமா வானத்த பார்த்தா நல்லா மழை அடிச்சிகிட்டு பெய்யும் போல இருந்தது! மதிய நேரம் அது!! சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு சீரணி அரங்கம் இருந்ததே அதுக்கு பின்னாடி கார் கொஞ்சதூரம் கடல் வரை போகும் அங்க போய் கார நிறுத்துறதா திட்டம்.

ஆனா ? யாரு கண்ணு வைச்சாங்களோ தெரியல பீச் நெருங்க ,நெருங்க மழை குறைந்து லேசா வெயில் அடிக்க ஆரம்பிச்சது! பீச் போனதும் பார்த்தா நல்லா சுள்ளுன்னு வெய்யில்! என்ன இது வீணாப்போன வானிலை?

வெறுப்பா போச்சு அப்புறம் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வண்டிய நிப்பாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்தோம்! அப்புறம் அதுபோல தண்ணி அடிக்க முயற்சி பண்ணல.


போன வருஷம் கொடைக்கானல் போனோம் அப்போ தண்ணி அடிச்ச சம்பவத்த
மறக்கவே முடியாது! வேன் எடுத்துகிட்டு போய் இருந்தோம் முணு ,நாலு குடும்பங்களா போய் இருந்தோம். ஒரு நாள் காலைல கிளம்பி வெளில சுத்தி பார்த்துட்டு மதிய சாப்பாட்டுக்கு தங்கி இருந்த எடத்துக்கு வந்துட்டோம் அங்க சமையல் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தோம்.எல்லாரையும் எறக்கி விட்டுட்டு தண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க ஒரு அஞ்சு பேரு வேன்ல கிளம்பிட்டோம்!

சரக்கு வாங்கிகிட்டு வேன ஒரு ஓரமா நிறுத்தினோம்!அப்போ
அடிச்சுது பாருங்க மழை!!! மழைனா ..மழை அப்படி ஒரு அடை மழை! சுத்தி உயர உயரமா மரங்கள்! மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குது ! ஒரு வேனுக்குள்ள இருந்துகிட்டு பெய்யென பெய்ஞ்சுகிட்டு இருக்குற அடை மழையை ரசிக்கிறதே
ஒரு போதைதான் கூடவே சரக்கும் இருந்தா அடடா சொல்லவே வேணாம்!

அப்போ எனக்கு பள்ளி கூடத்துல படிச்ச நெடுநல் வாடையில் நக்கீரர் கூறும் மழைக்கால வர்ணனையை எழுது அப்படிங்குற கொஸ்டீன் தான் நெனைப்பு
வந்தது! சமீபத்துல ஒரு பதிவர் இதை பத்தி எழுதி இருந்தாங்க!

அதுல!
மழையில் நனைந்த கமுக மரங்கள் காற்றின் வேகத்தில் அசைந்து உருண்டு ,திரண்டு அழகாக காட்சி அளித்தன, நீரின் வேகத்தை எதிர்த்து மீன்கள் நீந்திவர அதெற்கென காத்திருந்த கொக்குகள் அந்த மீன்களை பிடித்து உன்னலாயின, சிறு மழைக்கு அஞ்சாத கள்ளுண்ட மாந்தர்கள் சத்தமாக இரைந்த படி சென்றனர் இப்படியாக போகும் அந்த வர்ணனை !

மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது! நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்
வயிற்றில்
இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை.


.......................................................................................................

17 comments:

  1. அருமை!

    மழை நீரை பிடித்து அதை கலந்து அடிப்பது எனக்கு பிடித்த ஒன்று!
    நைட்டு ஒரு குவாட்டராவது போடணும் தல!

    நல்லா மூட கிளப்பீட்டிங்க!

    ReplyDelete
  2. ஜீவன் அண்ணா என்ன இது :(. நிறுத்துவிங்கன்னு பார்த்தா இப்படி ஆரம்பிச்சு வெச்சு இருக்கிங்க‌

    ReplyDelete
  3. ம்.. ம்..

    நடக்கட்டும் நடக்கட்டும்...

    ReplyDelete
  4. அண்ணே ஜூவன் அண்ணே... என்னாது இது... நெஜாமா சொல்றீங்களா... நான் நம்ப மாட்டேன்... இருக்காது... புனைவுதான் இது..

    ReplyDelete
  5. அட அட "அதை" பற்றி சொல்லும்போது கூட ஒரு போதையுடன் சொல்றீங்க தல

    லைஃபை நல்லா என் ஜாய் பண்ணுறீங்க..

    ReplyDelete
  6. // எனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும். //


    மழை அடுச்சு ஊத்தும்போது ... சென்னையில ஏதுங்க தலைவரே மணல் வெளி ... சிட்டியே வங்காள விரிகுடா மாதிரி தண்ணியில மெதக்கும்.....!!



    /// சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு //


    ஆஹா... ஒரு மினி மொபைல் பார் வித் ரெஸ்டாரன்ட் ......!!!!! மஜாதான் ..... !!!




    // மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது! நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்
    வயிற்றில் இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை. //


    அட... !! எப்புடியோ... உங்க ஆசை பூர்த்தி ஆயிருச்சு ...!! வாழ்த்துக்கள்...!!!!!

    ReplyDelete
  7. //வால்பையன் said...
    அருமை!

    மழை நீரை பிடித்து அதை கலந்து அடிப்பது எனக்கு பிடித்த ஒன்று!
    நைட்டு ஒரு குவாட்டராவது போடணும் தல!

    நல்லா மூட கிளப்பீட்டிங்க!

    //

    சரக்குனவுடனே மீ த ஃபர்ஷ்டா வந்துருக்குற ஆளப்பாரு :)))

    ReplyDelete
  8. குடிப்பதில் கூட இத்தனை இருக்கா?

    ரசனையா குடிப்பீக போலியே..

    ReplyDelete
  9. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள்...

    ReplyDelete
  10. ரசனையான மனிதர் ஜீவன் நீங்க.

    32 கேள்விகளில் சிவப்பு பூக்களாய் பூக்கும் மரமாய் மாறுதலில் இருந்து இதோ இந்த ரசனையா மாமழை பதிவு வரை .............

    நம்மை தொலைக்கும் இல்லற இயல்புகளில் கூட இப்படி ரசனையோடு வாழக் கொடுத்து வைக்கவேண்டும் (பழக்க தோஷத்துல குடித்து வைக்கவேண்டும் நு
    படிச்சுடாதீங்க :)-

    பி.கு (அட்வைஸ்: குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது)

    ReplyDelete
  11. //(பழக்க தோஷத்துல குடித்து வைக்கவேண்டும் நு
    படிச்சுடாதீங்க :)-
    //

    ஹா..ஹா...

    க‌ல‌ க‌ல‌ ப‌திவு ஜீவ‌ன்.

    ReplyDelete
  12. நல்ல ரசனை!

    எனக்கு மழைக்கால தூறல் விழும் இரவும், சில்லென்ற காற்றும், உடன் உரையாட மிகவும் விரும்பும் ஒரு நண்பனும் வேண்டும்!

    (இதனை +1, +2 படிக்கும்போது டியூஷன் முடிந்து நண்பன் வீடு வரை சைக்கிளில் சென்று வருவேன்! சில்லென்ற தூறல்களுக்கிடையில் அவனுடனான பயணமும், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில் மண்டபத்திலமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணங்களும்...இப்ப நினைச்சாலும் சுகம்! )

    ஆனா இந்த மாதிரி நேரத்துல மதுவால் என்னை இழந்தால், சூழ்நிலையை எப்படி ரசிக்கிறதாம்?

    (ஜீவன் உங்களைப் பார்த்தா தண்ணி அடிக்கிற ஆளு போல கூட தெரியலையே, முதல் இம்ப்ரஷன் தப்போ)

    ReplyDelete
  13. //(பழக்க தோஷத்துல குடித்து வைக்கவேண்டும் நு
    படிச்சுடாதீங்க :)-//


    கிகிகி!

    ReplyDelete
  14. suthi suthi nega idhe matter la ye irukenga,,, follow panren irunga,,,,,
    thanni adikarde thappu,, idula ungaluku situational song potu climatic condition lam pathu than adipingalaaaa X-(

    ReplyDelete
  15. தண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க..

    நானும் நல்ல புள்ளை அண்ணே..

    ReplyDelete
  16. சரி சரி கொஞ்சமா நிறுத்துங்க நண்பரே
    புள்ளேங்கே வழங்துடுச்சுங்க.

    புள்ளேங்க வந்து கேள்வி எல்லாம் கேட்பாங்க அதுனாலே வேண்டாம்.

    சரக்கு அடிக்கறதுலேயும் இவ்வளவு விஷயம் இருக்கா? :-)

    ReplyDelete
  17. வால்பையன் said...

    அருமை!

    மழை நீரை பிடித்து அதை கலந்து அடிப்பது எனக்கு பிடித்த ஒன்று!
    நைட்டு ஒரு குவாட்டராவது போடணும் தல!

    நல்லா மூட கிளப்பீட்டிங்க!//

    எனக்கு வயிறு எரியுது....

    ReplyDelete

123