Monday, August 24, 2009

ஜீவன் பிரியும் சுகமான தருணம்

ஒரு இளனி கொடுத்து பார்க்கலாமா?

இல்ல கொஞ்சம் நல்லெண்ணைய வாயில ஊத்தி விட்டா முடிஞ்சுடும்னு சொல்லுறாங்க !

ரெண்டு நாளா இப்படி இழுத்துகிட்டு இருக்கே? கெழத்துக்கு நெறைய ஆசைபோல அதான் இப்படி இழுத்துகிட்டு கெடக்கு!

ஈனஸ்வரத்தில் எனக்கு கேட்கத்தான் செய்தது! தலை அருகில் அமர்ந்து ஒரு ஜீவன் மட்டும் கவலையுடன் எனக்கு விசிறி விட்டு கொண்டு இருக்க ....!!!

இன்னிக்குள்ள முடிஞ்சுடும் முடிஞ்சுட்டா நைட்டு பார்ட்டிதான் ,கச்சேரிதான் என் பேரன் யாரிடமோ செல்போனில்........!!

டேய்..! எது பேசினாலும் வெளில போய் பேசு பாட்டி கேட்டா வருத்தப்படும் ....இது என் மகள்!!!

என்ன தான் சொல்லுறாரு தாத்தா போவாரா? போக மாட்டாரா ? குறும்புடன் யாரோ ஒரு உறவுக்கார இளைஞன்.........!!!---என் ''வயதில்'' நானும் இப்படி பேசி இருக்கிறேன்.

எல்லோர் முகத்திலேயும் ஒரு ஆர்வமும் சோர்வும்!

நேரம் செல்கிறது உள்ளே ஒரு மாற்றம்!

எழுந்து அமர்கிறேன் என்ன ?? இது ?? அசைய கூட முடியாத என்னால் எழுந்து அமர முடிகிறதே ?? இல்லை !!இல்லை !! நான்தான் எழுந்து அமர்கிறேன் என் உடல் அசையவில்லை புரிந்து விட்டது!! ''தருணம் வந்து விட்டது!'' ஆஹா...! என்ன ஒரு குளிர்ச்சி....!! என்ன ஒரு அற்புதமான உணர்வு........! அசைய கூட திராணியற்ற வயோதிக உடலிலிருந்து பறவை போன்ற சுறுசுறுப்புடன் எழ முடிகிறதே ...! அட... அற்புதமே .....!! ஆனந்தம் ...பேரானந்தம் ...! இப்போது ''அந்த'' உடலை பார்த்து முன்னர் சிரித்து கொண்டிருந்தவர்களும் கலங்கி நிற்க........ நான் சிரித்து கொள்கிறேன்..!

பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!

இதோ! இப்போது பால் வெளியில் சுகமாக நீந்திக்கொண்டு .............!!!



35 comments:

  1. migavum anubavithu solli irukireergal.
    Nanraaga irukiradhu.
    Geetha

    ReplyDelete
  2. //பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!

    இதோ! இப்போது பால் வெளியில் சுகமாக நீந்திக்கொண்டு .............!!!
    //

    அருமையாக இருக்கிறது, மரணம் என்பது எழ முடியாத ஆழ்ந்த உறக்கம். பயம் கொள்ளத் தேவையில்லை. மரணம் விடுதலை என்பதை மனிதன் புரிந்து கொள்ளும் போது மரணத்தை வென்றவன் ஆகிறான்

    ReplyDelete
  3. அண்ணா - மிக அருமை.

    அற்புதமா வெளிபடுத்தி இருக்கீங்க

    ReplyDelete
  4. அண்ணா ! இந்த பதிவ படிச்ச உடனே ''எம்டன் மகன்'' படம்தான் நினைவுக்கு வருது ..! சாகபோராருன்னு நினைச்சு பால் ஊத்தி சாக போறவர தெம்பா ஆக்கிடலாம் ;;)
    he he he he

    ReplyDelete
  5. ரைட்டு!
    இது அடுத்த இன்னிங்க்ஸா!?

    ReplyDelete
  6. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  7. வாவ்! கலக்கல் இமாஜினேசன்!

    ReplyDelete
  8. /*பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது */
    அருமை... மரணம் பற்றி நிறைய யோசிக்கிறீர்கள்...

    ReplyDelete
  9. // பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !! //

    அருமை ஜீவன் அண்ணே..

    ReplyDelete
  10. பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!

    இதோ! இப்போது பால் வெளியில் சுகமாக நீந்திக்கொண்டு .............!!!

    கிளாஸ் தல. சான்ஸே இல்ல. கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  11. ஏறக்குறைய இதேமாதிரி ஒரு காட்சி எம்டன் மகன் படத்துல கூட உண்டு. அத காமெடியா எடுத்திருப்பாங்க

    ReplyDelete
  12. உண்மைதான் ஜீவன்,

    பிரசவத்தில் மனிதன் ஜனிக்கின்றான்
    அப்போ எல்லாரும் சிரிக்கிறாங்க,

    மரணத்தில் அதே மனிதன்
    இப்பூ உலகை விட்டு போகுபோது அனைவரும் அழுகின்றனர்.

    அந்த அழுகையில் தான் எவ்வளவு மாற்றங்கள் இருக்கின்றன்.

    ஆமாம் உண்மையான அழுகையும் இருக்கிறது, ஒப்புக்கு அழுவதும் இருக்கின்றது.

    இறப்புக்கு முன் இவ்விரண்டும் சில சமயம் இறப்பவர்களுக்கு தெரிந்து விடுகிறது.

    அப்போது அவங்களுக்கு ஏற்படும் வேதனையான உணர்வு அதை ஏற்படுத்துவர்களுக்க்தான் தெரியுமா?? தெரிந்தாலும் மாற்றிக் கொள்ளவா போகிறார்கள்?

    ஆனால் அந்த கடைசி யாத்திரை உணரும் தருணம் இருக்கின்றதே! அது மிக அபூர்வமானது.

    நீங்க விவரித்துள்ள வரிகளில் நான் கூறும் அபூர்வம் காணப்படுகிறது ஜீவன்.

    மேலே செல்ல செல்ல அந்த குளிர்ச்சியும், இயலாமை அகலுதலும் ஆன்மாவிற்கு வெகு இன்பமே!

    இவ்வுலகை விட்டு பிரியும் தருணத்தை உணர்வது என்பது மிகவும் அற்புதமான் ஒரு உணர்வு ஜீவன்.

    உங்கள் இந்த பதிவு, உங்களின் பதிவுகளில் மிகச் சிறப்பான பதிவு என்று கூறினால் அது மிகையாகாது.

    அருமையான உணர்வு பூர்வமான பதிவு!!

    ReplyDelete
  13. மரணத்தின் கடைசி நொடி முதல் வைத்து ஜீவன் உடல் விட்டு பிரிந்தவரை சில வரிகளில் ஒரு தத்துவத்தை உள்ளடக்கி சொல்லிட்டீங்க....உடல் விட்டு நீங்கிய பிறகு தான் உண்மை உணர்வு புரிகிறது நன்கு நயம்பட சொல்லிடீங்க..

    ReplyDelete
  14. //பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!//

    ஜீவன் மனசு எதுவும் சரியில்லையா ??? சொல்லுங்க...!!

    எந்த மரத்தடியில உக்காந்தீங்க...தலை சுத்துது !!

    ReplyDelete
  15. மரணவேதனை கொஞ்சம் சிரமந்தான்.எண்ணெயிலிருந்து உருவப்படும் தலைமயிராக மென்மையாக மரணம்
    பிரிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  16. சித்தர் கதைகள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? ம்... கலக்குங்க...

    ReplyDelete
  17. miga arumaiyana pathivu tamil valthukal

    ReplyDelete
  18. Also read the below explanation given by Paramahansa yogananda (auto biography of an yogi) about death...

    Though the ordinary man looks upon death with dread and sadness, those who have gone before know it as a wondrous experience of peace and freedom.
    At death, you forget all the limitations of the physical body and realize how free you are. For the first few seconds there is a sense of fear -- fear of the unknown, of something unfamiliar to the consciousness. But after that comes a great realization: the soul feels a joyous sense of relief and freedom. You know that you exist apart from the mortal body.
    The consciousness of the dying man finds itself suddenly relieved of the weight of the body, of the necessity to breathe, and of any physical pain. A sense of soaring through a tunnel of very peaceful, hazy, dim light is experienced by the soul. Then the soul drifts into a state of oblivious sleep, a million times deeper and more enjoyable than the deepest sleep experienced in the physical body.... The after-death state is variously experienced by different people in accordance with their modes of living while on earth. Just as different people vary in the duration and depth of their sleep, so do they vary in their experiences after death.
    Every one of us is going to die someday, so there is no use in being afraid of death. You don't feel miserable at the prospect of losing consciousness of your body in sleep; you accept sleep as a state of freedom to look forward to. So is death; it is a state of rest, a pension from this life. There is nothing to fear. When death comes, laugh at it. Death is only an experience through which you are meant to learn a great lesson: you cannot die.
    Our real self, the soul, is immortal. We may sleep for a little while in that change called death, but we can never be destroyed. We exist, and that existence is eternal. The wave comes to the shore, and then goes back to the sea; it is not lost. It becomes one with the ocean, or returns again in the form of another wave. This body has come, and it will vanish; but the soul essence within it will never cease to exist. Nothing can terminate that eternal consciousness.

    ReplyDelete
  19. பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!

    அற்புதமான வரிகள் ஜீவன் அண்ணா

    ReplyDelete
  20. இப்போது ''அந்த'' உடலை பார்த்து முன்னர் சிரித்து கொண்டிருந்தவர்களும் கலங்கி நிற்க........ நான் சிரித்து கொள்கிறேன்..!

    ஒரு நாள் எல்லோரும் சிரிக்க தானே போகின்றோம்

    ReplyDelete
  21. மரணம் என்பது கட்டாயம் உண்டு பட் உயிர் அது பிரியும் போது இலகுவாக இருக்கவேண்டும்

    அதை அருமையா சொல்லிட்டீங்க‌

    ReplyDelete
  22. மரணம் என்கிற அவஸ்தை-அந்த நேர உணர்வின் யதார்த்தம்.எல்லோர் மனதிலும் இப்படி ஒரு அவஸ்தை வருமோ !

    ReplyDelete
  23. உயிர் அதன் அடுத்தகட்டத்திற்குச் செல்லுமா என்று எனக்குத் தெரியாது.ஆனால் நீங்க அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிட்டீங்க.பிரமாதம்.

    :)

    ReplyDelete
  24. //இதோ! இப்போது பால் வெளியில் சுகமாக நீந்திக்கொண்டு .............!!!


    அதுதானே அனைவரும் தேடும் முக்தி......
    ரசித்து உணர்வு பூர்வமாக எழுதியிருக்கீங்க ஜீவன்....

    ReplyDelete
  25. நான் யார் என்ற கேள்விக்கு விடைகிடைக்கும் தருணம் இப்பொழுதுதான்...

    ReplyDelete
  26. கேப்டன்சி .....


    ரொம்ப அருமையான கதை.... நல்ல உணர்வு....!!

    ReplyDelete
  27. "பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது '!!

    அற்புதமான வரிகள் ஜீவன்...

    ReplyDelete
  28. பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!


    அனுபவிச்சு எழுதினா மாதிரி இருக்குது. உங்கள நீங்களே ரொம்ப கண்காணிச்சுப்பீங்களோ.

    ReplyDelete
  29. அர்ப்புதமான் வரிகள்
    நல்ல பகிர்வுக்கு நன்றி
    -தியா-

    ReplyDelete
  30. வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

    ReplyDelete
  31. அருமையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு :))

    ReplyDelete
  32. பிரம்மாதம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

123