Thursday, September 17, 2009

தேவதையின் வரங்கள்


பொதுவா எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கிடையாது ..! கடவுள் உண்டா இல்லையான்னு குழப்பம் ..! அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டும் ..!இல்லாட்டியும் பரவாயில்ல ...!அத பத்தி பெரிய ஆராய்ச்சி பண்ணுறது இல்ல ..!



இப்போ இந்த தேவதைய என்கிட்ட அனுப்பி பத்து வரம் கொடுக்க சொல்லி இருக்காங்க ..! அனுப்பி வைச்சது நம்ம ''பாஸ்'' நவாசுதீனும் ,சகோதரி ஜெஸ்வந்தியும் . வரம் அப்படி இல்லாம என் ஆசைகள சொல்லி இருக்கேன்..!

முதல் வரம்


கவிஞர்களையும்,கலைஞர்களையும் அல்ப ஆயுசுல அழைச்சுக்க கூடாது..!
அவங்கள எல்லாம் தீர்காயுசா வாழ விடனும்...!

இரண்டாம் வரம்


பாரதி,கண்ணதாசன்,பட்டுக்கோட்டை இவங்கள எல்லாம் எந்த ரூபத்திலயாவது திருப்பி கொடுக்கணும்..!

மூன்றாம் வரம்


ஊர்ல இருக்குற பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் போய் பாரு அங்க குழந்தைகள் முதல் பெரியவங்க எவ்ளோ பேர் நோய் வாய்ப்பட்டு அவதி படுறாங்க..!அவங்க நோய் எல்லாம் தீர்த்து வை..! முடியாட்டி நீ செத்துடு....!

நாலாம் வரம்


கடவுளை அதிகம் நம்புகிறவர்களிடமும்,அடுத்தவர்களை நம்புகிறவர்களிடமும்
ஒன்றை உணர்த்து ...! தனித்து நின்று போராடுதலே பலம் ,அதுவே உன்னை உனக்கு உணர்த்தும் என்று சொல் ..!

ஐந்தாம் வரம்


இயற்கை சீற்றங்கள் ,விபத்துகள் போன்றவற்றில் இருந்து மக்களை காக்க முடியாத உன் கையாலாகாத நிலையை அவர்களுக்கு உணர்த்து..!


தனி பட்ட முறையில சில பர்சனல் வரங்கள்....


முதல் வரம்


அடர்ந்த காட்டுக்குள் மிருகங்களோடு மிருகங்களாக சில நாள்கள் இருக்க வேண்டும்..!

இரண்டாம் வரம்

மீனவர்களுடன் சென்று ஓர் இரவை நடுக்கடலில் கழிக்க வேண்டும் ..!

மூன்றாம் வரம்


சரக்கு போதையாவும் இருக்கணும் அதேசமயம் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் போல ஆரோக்கிய பானமாகவும் இருக்கணும்!

போதும் இதுக்கு மேல ஒன்னும் தோணல ..............!

கிட்ட தட்ட எல்லோருமே சொல்லிட்டாங்க யார அழைக்க ..?



................................................................................

15 comments:

  1. கவிஞர்களையும்,கலைஞர்களையும் அல்ப ஆயுசுல அழைச்சுக்க கூடாது..! - அருமை
    ------------------
    குழந்தைகள் முதல் பெரியவங்க எவ்ளோ பேர் நோய் வாய்ப்பட்டு அவதி படுறாங்க..!அவங்க நோய் எல்லாம் தீர்த்து வை..! முடியாட்டி நீ செத்துடு....! - இதான், இதேதான், இதான் எங்க “தல”.
    -------------------
    அடர்ந்த காட்டுக்குள் மிருகங்களோடு மிருகங்களாக சில நாள்கள் இருக்க வேண்டும்..!
    மீனவர்களுடன் சென்று ஓர் இரவை நடுக்கடலில் கழிக்க வேண்டும் ..! - ஒஹ் செமையா இருக்குமே. வாய்ப்பு கிடைத்தால் துணைக்கு என்னையும் கூட்டிகிட்டு போங்க தல
    --------------------
    சரக்கு போதையாவும் இருக்கணும் அதேசமயம் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் போல ஆரோக்கிய பானமாகவும் இருக்கணும்! - ஹா ஹா ஹா ஹா ஹா - கூ...ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  2. /சரக்கு போதையாவும் இருக்கணும் அதேசமயம் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் போல ஆரோக்கிய பானமாகவும் இருக்கணும்!//

    இது சூப்பர்... எனக்கும் இந்த வரம் வேண்டும்.ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  3. /*ஊர்ல இருக்குற பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் போய் பாரு அங்க குழந்தைகள் முதல் பெரியவங்க எவ்ளோ பேர் நோய் வாய்ப்பட்டு அவதி படுறாங்க..!அவங்க நோய் எல்லாம் தீர்த்து வை..! முடியாட்டி நீ செத்துடு....! */
    இன்று தான் தோழியரிடம் கூறிக் கொண்டிருந்தேன் , குழந்தைகளுக்காவது நோய் நொடியின்றி சந்தோஷமாக இருக்க கடவுள் விதி அமைத்தால் என்ன என்று.

    ReplyDelete
  4. குழந்தைகள் முதல் பெரியவங்க எவ்ளோ பேர் நோய் வாய்ப்பட்டு அவதி படுறாங்க..!அவங்க நோய் எல்லாம் தீர்த்து வை..! முடியாட்டி நீ செத்துடு....! //

    ஜீவன் நச்

    /சரக்கு போதையாவும் இருக்கணும் அதேசமயம் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் போல ஆரோக்கிய பானமாகவும் இருக்கணும்!//

    ஜீவன் டச்

    ReplyDelete
  5. தேவதை வரம் தருதோ இல்லையோ! நான் ஓட்டுப்போட்டுவிட்டேன்!!

    ReplyDelete
  6. வித்தியாசமான வரங்கள்...

    அந்த கடைசி வரமாவது கிடைக்க நானும் ரெகெமெண்ட் செய்கிறேன் ஜாலியா இருங்கோ

    ReplyDelete
  7. intro superpa...

    வரங்கள் எல்லாம் வழங்கப்பட வேண்டியவையே..

    முதல் வரம் ஒரு நொடி யோசிக்க வைத்தது உண்மை தான் இவர்கள் வாழ்ந்து சாதிக்க வேண்டியவர்கள்

    ரெண்டாவது என் பாரதியுமா? ஆஹா வரம் கொடேன் தேவதையே

    மூன்றாவது வரம் அக்கறை

    நாலாவது வரம் இது எனக்கு அட்வைஸா எடுத்துகிறேன்

    பர்சனல் வரங்கள் எல்லாம் ரொம்ப எடாகூடம் கிடைக்காது என்ற தைரியத்தில் கேட்டுடீங்கன்னு நினைக்கிறேன்..

    கடைசி வரம் பேராசைப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  8. //பாரதி,கண்ணதாசன்,பட்டுக்கோட்டை இவங்கள எல்லாம் எந்த ரூபத்திலயாவது திருப்பி கொடுக்கணும்..!
     
    இயற்கை சீற்றங்கள் ,விபத்துகள் போன்றவற்றில் இருந்து மக்களை காக்க முடியாத உன் கையாலாகாத நிலையை அவர்களுக்கு உணர்த்து..!
     
    சரக்கு போதையாவும் இருக்கணும் அதேசமயம் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் போல ஆரோக்கிய பானமாகவும் இருக்கணும்!
     
    அருமையான வரங்கள் :-)

    ReplyDelete
  9. வரங்கள் அத்தனையும் அருமை. கூடவே உங்க டச்சும்...

    ReplyDelete
  10. அந்த கடைசி வரம் கிடைக்க வழி உண்டு

    நிஜமாகவே!

    --------------------

    காட்டுக்கும் கடலுக்கும் என்னையும் அழைத்து போங்க.

    ReplyDelete
  11. "கிட்ட தட்ட எல்லோருமே சொல்லிட்டாங்க யார அழைக்க ..? "

    என்னை அழைக்கலாமே ......

    ReplyDelete
  12. //சரக்கு போதையாவும் இருக்கணும் அதேசமயம் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் போல ஆரோக்கிய பானமாகவும் இருக்கணும்! //


    இதுவல்லவோ வரம்!

    ReplyDelete
  13. இந்த உலகத்துல வாய்க்கு ருசியா இருக்குறது எல்லாம் உடம்புக்கு நல்லதில்லாததா இருக்கு பாருங்க..அத மாத்த சொல்லனும்.

    ReplyDelete
  14. அட இப்பிடில்லாம் தேவதை வரம் கொடுக்குமா??

    ReplyDelete

123