Wednesday, September 30, 2009

தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு ..!

சமீபத்தில் ஒரு நண்பருடன் உரையாடி கொண்டிருந்த போது பஞ்சாப்பின் தனிநாடு போராட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார் அதில் அவர் சொன்ன ஒருகருத்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது!

அதாவது பஞ்சாப் மாநிலம் நிறைவான நீர் வளத்தையும்,அதீதமான விவசாய உற்பத்தியையும் பெற்றுஇருந்த காரணத்தாலேயே அங்கே தனிநாடு கேட்டு போராட்டம் வெடித்ததாகவும், அதேபோல தமிழ் நாட்டில் நிறைவான நீர்வளம் இருந்தால் தமிழ்நாடும் விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கும் என்றும் அப்படி
ஆகிவிட்டால் தமிழ் நாட்டிலும் தனிநாடு கேட்டு போராட்டம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,ஏற்கனவே தமிழ் நாட்டில் தனிநாடு கோரும் சக்திகள் இருப்பதாலும், தமிழ் நாட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைக்க விடாமல் மத்திய அரசு சதி செய்வதாக கூறினார்.

அவர் சொன்னதை முழுமையாக ஏற்று கொள்ள முடியவில்லை ..!

ஆனால் ..? அவர் சொன்னது மத்திய அரசுமேல் சந்தேகத்தை ஏற்படுத்தியது உண்மை!

தமிழகத்தில் பாசன வசதிக்காக சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு புதிய முயற்சியையும் அரசு செய்ததாக தெரியவில்லை.

கல்லணை

கரிகால் சோழன் கட்டிய இந்த கல்லனையாலேயே தஞ்சை மாவட்டம் நெற் களஞ்சியம் ஆயிற்று.!

வீராணம் ஏரி

இதுவும் சோழ மன்னர் காலத்திலேயே உருவாக்க பட்டது. கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்திய பெருமையும் சோழ மன்னரையே சாரும் .

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வருடமும் கடலில் சென்று கலக்கும் மழை நீரின் அளவானது அந்த வருடத்திற்கு தேவைப்படும் விவசாய பாசன நீரின் அளவை விட அதிகம் என கணிப்புகள் கூறுகின்றன. அந்த மழை நீரை சேமித்து வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பொன் விளையும் தஞ்சை

நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் சில விசயங்களை கூற முடியும் .கடற்கரையில் நின்று பார்த்தால் அடுத்த கரை தெரியாதே அதேபோல பச்சை பசேல் என்ற அடுத்த கரையே தெரியாத அளவிற்கு வயல் வெளிகளை எங்கள் மாவட்டத்தில் பல இடங்களில் காணலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை ஆற்றில் நிறைவாக நீரும் வந்து மழையும் பொய்க்காமல் பெய்யவே ..! மிக மிக அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்தது. மன்னார்குடி,பெருக வாழ்ந்தான் போன்ற இடங்களில் விளைந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க இடமில்லாமல் ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் திண்ணைகளிலும் தெருக்களிலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
தெருக்களில் அடுக்கிவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாய் போனது . ஒரு போகம் விளைச்சலுக்கே இப்படி ..!
நீர் வளம் நிறைவாக இருந்து மூன்று போகம் விளைந்தால் விளைச்சலை நினைத்து பார்க்கவே முடியவில்லை.





மத்திய அரசு வேடிக்கை பார்க்க....! தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் !

பாலாறு

வட ஆற்காடு செங்கல்பட்டு மாவட்டங்களின் விவசாயிகளின் உரிமையான பாலாற்று நீரை தடுத்து, பல ஒப்பந்தங்களையும் மீறி செயல்பட்டது கர்நாடக அரசு. இதனால் பாலாற்று நீரினால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 3,75,000 ஏக்கரில் இருந்து 2,45,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது.

முல்லை பெரியாறு

இந்த அணை, மாநிலப் பிரிவினையின்போது கேரளாவின் வசம் போனது. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. இதற்குப் பிறகும் 1979ல் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. எனவே அணையின் மட்டம் 136 அடியாகக் குறைந்தது. இதனால் வருடத்திற்கு 13.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழந்தது. இதனால் மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்தன.

காவிரி பிரச்சனை

இன்று வரை காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் சட்டத்தை மீறியும் அனுமதியின்றியும் 19 நீர்த் தேக்கங்களை ரூ.156906 இலட்சங்களில் கர்நாடக அரசு கட்டியுள்ளது. இவைகளில் 175 ஆயிரம் மிலியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.

கர்நாடகம் 1968இல் இருந்தே தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட மறுத்து வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களிலும் பலன் கிட்டாது கர்நாடகம் தொடர்ந்து சண்டித்தனம் செய்யவே, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, அதன் ஆணைப்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது 1991 ஜூன் 25இல் தன் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. இந்த இடைக்காலத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு மாதவாரியாகக் கணக்கிட்டு ஆண்டுதோறும் 205 ஆ.மி.க. அடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகம் அதைத் திறந்து விடாததோடு, தில்லி அரசும் அதைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதும் இதன் பின் 15 ஆண்டுகள் கழித்து 05-02-07 அன்றுவெளிவந்த இறுதித் தீர்ப்பும் தமிழகத்திற்கு நயவஞ்சகம் செய்து விட்டது என்பதும் பலரும் அறிந்த ஒன்று.

(தகவல்கள் திண்ணை ,கீற்று இணைய தளங்களில் சுடப்பட்டது )

முழுமையாக நீர் வளம் பெற்றுவிட்டால் தமிழ் நாட்டில் உற்பத்தி பெருகி தனிநாடு போராட்டம் வெடிக்குமோ என்ற பயத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் சதி செய்கிறதா ...???




25 comments:

  1. நியாயமான கேள்வி. சரியான வாதங்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. //தமிழ் நாட்டில் உற்பத்தி பெருகி தனிநாடு போராட்டம் வெடிக்குமோ என்ற பயத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் சதி செய்கிறதா //

    இப்படி இருக்குமா என்று தோன்றவில்லை,

    ஆனாலும் நாம் மிகவும் அஜாக்கிரதியாக இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது

    மிக நல்ல பகிர்வு ஜீவன்

    ReplyDelete
  3. நிறைய தகவல்கள்...

    அணைகள் கட்டுவது மாநிலங்களின் அதிகாரத்தில் தானே உள்ளது?

    ReplyDelete
  4. வித்தியாசமான ஆனால் சிந்திக்க வேண்டிய அருமையான பதிவு. மத்திய அரசு ஒன்றும் தமிழனின் முழு நம்பிக்கையை பெற்றுவிடவில்லை .. அவர்களின் லக்ஷணத்தை அல்லது துரோகத்தை தமிழனை அழிக்க அவர்கள் செய்த கூட்டு சதியை நாம் ஈழ விடயத்தில் நன்றாய் கண்டோம்.

    உங்களின் பதிவை நாங்கள் எண்களின் இணையத்தில் எங்களது தோழர்களின் பார்வைக்காக வைத்துள்ளோம்.

    Tholar
    www.mdmkonline.com

    ReplyDelete
  5. // கல்லணை //

    கரிகாலச் சோழனுக்கு அப்புறம் அத எந்த அரசும் கண்டுகொண்டதாக தெரியவில்லை...!! அங்க இருக்குற சோழன் சிலைக்கு கூட அவரோட காலத்துல அவர் பெயின்ட் அடுக்க்துதான்... அதுக்கு அபுஉரம் இன்னும் அடிக்களைனு நெனைக்குறேன்.!




    // பொன் விளையும் தஞ்சை //


    அதெல்லாம் அப்போ... இப்போ தஞ்சை வேற ஒன்னுக்கு பேமஸ்... ஒரு ப்ளேட் எலி கறி வெறும் ரூ.10 மட்டுமே .......!! இதுலையும்... பெப்பர் ப்ரை... செட்டிநாடு ன்னு வெரைட்டி வேற.....



    தமிழ்நாட்டோட நெலமைய நெனச்சா ரொம்ப கஷ்ட்டமா இருக்கு.....

    ReplyDelete
  6. //தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு ..! //
    டவுட்டே இல்லைணே....
    உண்மை....

    ReplyDelete
  7. ஜீவனின் கண்ணாடி, தமிழக மக்களின் பொருளாதார (தொழில்துறை,விவசாயத்துறை)வளர்ச்சிக்கு தடங்கலாக இருக்கும் ஆற்று நீர் சிக்கலை ஆழமாக சிந்த்திக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள்... விவாதம் தொடரட்டும்.......

    ReplyDelete
  8. உங்கள் பதிவில் ஒரு சின்ன திருத்தம் !
    "முல்லைப் பெரியாறு அணை
    தமிழக அரசால் இந்த அணை கட்டப்பட்டது"
    இந்த செய்தி தவறானது முல்லைப் பெரியாறு அணை பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது அதாவது இந்திய 'விடுதலை'க்கு! முன்னாள். முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதில் இந்திய அரசிற்கோ, தமிழக அரசிற்கோ எவ்வித பங்கும் கிடையாது.

    ReplyDelete
  9. மிக அருமையான பதிவு ஜீவன்,

    இந்த உங்கள் பதிவு எல்லா இடத்திற்கும் கண்டிப்பாக செல்லும் வாய்ப்பு உள்ளது

    பாருங்க M.D.M.K. முதல் செய்தியாக வெளி இட்டுள்ளார்கள். மிகவும் சந்தோஷமா இருந்தது. இதை படிக்க.

    நீங்களும் இந்த லிங்கை படிக்கவும்:

    http://www.mdmkonline.com/news

    ReplyDelete
  10. மிகவும் நியாயமான சந்தேகம்!!
    நம் தமிழ் நாடு வளமான மாநிலமாகிவிட்டால் பிரச்சினை மத்திய அரசுக்கு மட்டுமல்ல,
    மாநில அரசியல்வாதிகளுக்கும் தான்!! (காசுக்கு ஓட்டு கிடைக்காதே அல்லது விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்?!). எனவே இது ஒரு கூட்டு சதியாகக் கூட இருக்கலாம்!!

    ReplyDelete
  11. //
    தமிழ் நாட்டில் நிறைவான நீர்வளம் இருந்தால் தமிழ்நாடும் விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கும் என்றும் அப்படி ஆகிவிட்டால் தமிழ் நாட்டிலும் தனிநாடு கேட்டு போராட்டம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,ஏற்கனவே தமிழ் நாட்டில் தனிநாடு கோரும் சக்திகள் இருப்பதாலும், தமிழ் நாட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைக்க விடாமல் மத்திய அரசு சதி செய்வதாக கூறினார்.
    //

    இதை படிக்கவே மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இது உண்மையா இருந்தால் வேதனைத் தரக்கூடிய விஷயம்தான். தண்ணீர் வசதி இல்லாமல் விவசாயம் கெட்டு விளைநிலம் வீட்டு நிலமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது நமக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    உங்கள் நண்பர் சொன்னது எனக்கு மிகவும் வருத்தத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது. தமிழ் நாட்டு மக்கள் கஷ்டப்படுவது வேதனைக்குரிய விஷயம் இல்லையா? இது பல நிலைகளுக்கும் தெரிந்த விஷயம்தானே! ஏன்! ஏன்! என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருந்தது இருந்து கொண்டிருக்கிறது. இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது. சரியான விபரம்தான் இன்று வரை தெரியவில்லை.

    சினிமாத் துறையில் இருப்பவர்கள் நதி நீர் இணைப்பிற்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

    இவர்கள் போல் பலரும் பாடுபட்டிருக்கிரார்களே! அவைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போனதா?

    சூப்பர் ஸ்டார் ரஜனி ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்த அறிவிப்பும் எல்லாருக்கும் பயன் உள்ள அறிவிப்பாக இருந்ததே!

    இது போல் உதவியை பலரும் செய்திருப்பார்களே!

    ஏன்? தமிழர்கள் வீட்டுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட ஒரு பெரும் தொகை திரண்டிருக்குமே!

    ஆர்பாட்டம் எல்லாம் தமிழனுக்கு தெரியாதே! எல்லா நிலைகளிலும் தமிழன் ஏமாந்து போய் கொண்டிருக்கின்றானோ என்று பயம் எல்லார் மனதிலும் வரும் தருணம் வந்து விட்டதா??

    எது எப்படி இருந்தாலும் ஏமாறும் நிலை மாறி தமிழ் நாட்டை பொன் விளையும் பூமியாக கொண்டு வருவது ஒவ்வொரு தமிழனின் கனவாக இருக்க வேண்டும்.

    விழித்தெழு! வீறு கொண்டு எழு! என்று வீர வசனம் பேச வரவில்லை. நம் அனைவரின் நோக்கமும் ஒன்றாக இணைந்து அந்த இணைந்த சங்கிலியால் சுபிட்சம் என்ற வெற்றிக் கனியை அடைய எல்லா முயற்சியும் எடுப்போம் வாருங்கள் தோழர்களே!

    தமிழ்நாடு செழிப்புடன் தோன்ற விரைவில் மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் உங்கள் சகோதரி :((

    வாழ்க தமிழ்! வளர்க தமிழனின் வளர்ச்சி!

    ReplyDelete
  12. //
    தமிழ் நாட்டில் உற்பத்தி பெருகி தனிநாடு போராட்டம் வெடிக்குமோ என்ற பயத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் சதி செய்கிறதா
    //

    ஆகாயம், நீர், மின்சாரம் ஆகியவை எவருடைய தனிச்சொத்தும் ஆகாது. இதில் அண்டை மாநிலங்களினின் மனப்போக்கு ஏற்கனவே மன உளைச்சலை தந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் தங்களினின் நண்பரின் ஊகம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    முதலில், தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆதாரங்களை வீட்டுமனை ஆக்குவதை தடை செய்யவேண்டும்; நில உச்ச வரம்பு சட்டம் கொண்டுவந்ததைப்போல் வீடு
    வைத்திருப்பவர்களுக்கும் வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும். நீர்நிலை ஆதாரங்களைப் பெருக்குவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.

    தமிழன் எப்போதும் வந்தோரை வாழ வைப்பவன்; அவன் என்றும் தன்னலம் கருதமாட்டன்.

    ReplyDelete
  13. கண்ணாடியில் பட்டாவது எடிரொளிக்கிறதா பார்ப்போம்..

    தெளிவான கருத்துக்கள் தெள்ளத்தெளிவாய் தெரிகின்றன... எனக்கு..பட் அந்த தண்ணீருக்கு...

    ReplyDelete
  14. enaku apdi ellam thondravillai....

    yennenil mathiya arasu indru varai endha oru manilathin prechaniyilum olungaaga nadanthu kondathu illai..

    melum namathu arasiyal nilamai patri than theriyume... rendu katchiyum thani thaniya than manu kodupanga...

    ithu pothaatha case ah izhuthadika...

    ReplyDelete
  15. தனிநாடு போராட்டம் என்ற ஒரு கருத்தியலை தவிர‌
    மற்ற வடநாட்டவர்களுக்கு தமிழ் நாடு என்றாலே
    அதை ஒரு தனிநாடாகத்தான் கருதுகின்றனர்.

    மத்திய அரசின் பாரபட்ச போக்கு என்பது நீர்வளத்திற்காக
    மட்டுமின்றி,பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும்
    பொருந்துகிறது.

    அது மத்திய,மாநில அரசுகளின் இணக்கத்தை பொறுத்தது.

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு.. மத்திய அரசு சதி செய்கிறதென்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல..
    நாம் மிகவும் மந்தமாக செயல்படுகிறோம் என்பதே உண்மை..

    ReplyDelete
  17. இதைக்குறித்த விவாதம் இன்னும் சற்று சுவாரஸ்யமாக இருந்தால் மேலும் பல விஷயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

    ReplyDelete
  18. சிந்திக்கத்தூண்டும் பொதுநல பதிவு

    விவரங்களோடு வெளியிட்டமைக்கு நன்றி ஜீவன்

    ReplyDelete
  19. நல்ல அலசல் தல. அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல மத்திய அரசும் எப்போதும் தண்ணி விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீ காட்டிகிட்டுதான் இருக்கு.

    ReplyDelete
  20. மத்திய அரசுக்கு இந்த அளவுக்கு யோசிக்கத் தெரியுமா ? நேரமிருக்கிறதான்னு தெரியலை.

    தொலைநோக்கு பார்வை கிடையாது. அடுத்த தேர்தலில் ஜெயிப்பது மட்டுமே ஒரே குறிக்கோள்.

    ReplyDelete
  21. புதிய கோணத்தில் எழுதப்பட்ட பதிவு!

    மாற்றம் இல்லாத இந்தியாவின் கொள்கையே இந்தியாவை வளரவிடாது.

    இப்படியே போனால் 2020 -ல் இந்தியா ஈ சாணி மூலையில தான் இருக்கும்.

    வல்லரசு எல்லாம் நம் சொல்லரசுகளுக்குதான் துணையிருக்கும்

    ReplyDelete
  22. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் முன் நம்மிடம் எல்லா வளங்களும் இருந்தது!

    தனி நாடு கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை!

    ReplyDelete
  23. அதுல சந்தேகம் வேறயா ஜீவன்?சத்தியம்

    ReplyDelete
  24. இன்னமும் தமிழ்நாட்டை தனிநாடாகத்தான் வடநாட்டுக்காரர்கள் பார்க்கிறார்கள் பேசும் மொழியிலிருந்து வளர்ச்சி வரை, கேபினெட் அந்தஸ்த் பெற்ற அமைச்சர்கள் கூட தன் நாட்டை மறந்து மற்ற மாநிலத்திற்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள்

    தஞ்சை இப்போது புஞ்சை களஞ்சியமாக மாறிவருவது மறுக்கமுடியாத உண்மை. இப்போ கரை தெளிவாக தெரிகிறது, எலிகளை வேட்டையாடும் நிலமை....

    சிந்திக்க வேண்டிய பதிவு, உங்க நண்பர் சொன்னது உண்மையாகவே இருக்கலாம், நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கனும்

    ReplyDelete
  25. உண்மைகள் உரைத்தென்ன பலன்...உணரவேண்டியவர்கள் உணர்வதில்லையே.... நாமும் ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டால் என்ன என்பது மாதிரி இருக்க வேண்டியது தான்...சட்டமன்றத்தில் எழுப்படும் கேள்விகளுக்கே பதில் கிடைப்பதில்லை நம் வேள்விகளுக்கு எங்கே?

    ReplyDelete

123