Monday, October 19, 2009

எப்படி இருந்த நான் ???

அதை ஒரு நந்தவனமாக நினைத்தேன்! ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது!அதன் வாயில் கதவு அடைக்கப்பட்ட பிறகுதான் அது என்ன என்று புரிந்தது!இங்கே ஆனந்தமும் இருந்தது! ஆனால், இதன் எல்லைதான் பிடிக்கவில்லை! எல்லையற்று இருந்த என்னை எல்லைக்குள் கட்டுப்படுத்தியது வெறுப்பை தந்தது! முப்பதும்,அறுபதும் முடிந்துபோக ஐயோ என்றிருந்தது ..! வெளியே உள்ள நட்புகளும்,உறவுகளும் அன்னியப்பட்டு விடுமே என் கவலை வந்தது !

என்னைவிட உனக்கு யாரும் முக்கியமில்லை! உடனிருந்த ''அது'' தர்க்கம் செய்தது! கோபம் வந்தது! ச்சே!! இதையா விரும்பினோம்? இந்த கட்டுப்பாடு பிடிக்கவில்லை! வெறுப்பிலும்,இறுக்கத்திலும் நாட்கள் கழிந்தது!

பிறகு...! எனக்கும் அதற்கும் பரிசாக வந்த அந் ஒன்றுதான் என்னை முற்றிலும் மாற்றியது. ஆனந்தம் அள்ளியது .
எனக்கு சிறையாய் பட்ட இந்த இடம் வந்த ஒன்றிற்கு பேருலகமாய் இருந்தது.தன் உலகை அந்த ''ஒன்று'' என் கையை பிடித்து சுற்றி காட்டியது.நானும் அந்த ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிபோனேன்.

எனக்கும் இப்போது இதுவே உலகமானது...
!

இதையெல்லாம் கண்ட என்னுடன் தர்க்கம் செய்த ''அது'' மவுனமாக புன்னகைத்து கொண்டது. கால போக்கில் அந்த ஒ
ன்றுடன் இன்னொன்றும் கூடி போக குதூகலத்தில் துள்ள வைத்தது. இந்த பேருலகம் இப்போது எனக்கு பிரபஞ்சமானது. சந்தோஷமும் , உற்சாகமுமாய் நாள்கள் கழிகிறது. இப்போது எனக்கு எந்த தடைகளுமில்லை..! ஆனால் நான் இந்த உலகை விட்டு எங்கும் செல்வதில்லை...!










நிறைவடைகிறது 21-10-2009 அன்றுடன் ஏழு வருடங்கள்....!!!!!!!

28 comments:

  1. நீங்கள் நீடுடி என்றும் எல்லா இன்பமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் திரு அருளால் இன்புற்று இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் .வாழ்த்துக்கள் தமிழ்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஜீவன்

    கடைசியாய் போட்டிருக்கும் போட்டோ மனதை நிறைவடையச் செய்கிறது.

    நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்..வாழ்க எல்லா வளமுடன்.

    (நான் என்னமோன்னு நினைச்சுகிட்டே படிச்சேன்)

    ReplyDelete
  4. அந்த ஒன்னை 'அது இது' ன்னு சொன்னது தெரிஞ்சா 'இதை' என்ன பண்ணும்னு யாருக்கும் தெரியாது...

    எதுக்கும் இனிமேல் அப்படி இருந்த நான் இப்ப எப்படி ஆயிட்டேன்னு போட்டு...ஒரு ஸ்மைலி போடுங்க...

    ReplyDelete
  5. :)). வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஜீவன்
    அது
    அதற்கும்..

    எல்லோருக்கும்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. :) பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. super

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்க வலி புரியுது தல!

    ஏன்னா நான் சிக்கியும் ஏழு வருசம் ஆச்சு!

    ReplyDelete
  10. இன்று போல் என்றும் வாழ இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. ஜீவன்,என்றென்றும் நிறைவாய் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    உங்கள் படம் எனக்கு என் அப்பாவோடான நினைவுகளை இழுத்து வருகிறது.நன்றி ஜீவன்.

    ReplyDelete
  12. அண்ணே ஜீவன் அண்ணே மண நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. அவன்
    அது
    பரிசுகள்
    சந்தோஷங்கள்
    நீடிக்கட்டும்....

    வாழ்த்துகள்

    :)

    ReplyDelete
  14. CLASS PA.............

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..இன்று போல் என்றும் இதே நிறைவோடும் சந்தோஷத்தோடும் வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இதைவிட அழகாக சொல்லிவிட முடியாது.

    வாழ்த்துக்கள் உங்கள் உலகத்திற்கு

    விஜய்

    ReplyDelete
  16. தல திருமணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கல்யாண‌ நாளா ?? வாழ்த்துக‌ள் ஜீவ‌ன்.

    ( ஏம்ப்பா இப்ப‌டி குழ‌ப்பி வைக்க‌றீங்க‌ ?? )

    ReplyDelete
  18. எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

    ReplyDelete
  19. மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவன். :)

    ReplyDelete
  20. மனமுவந்த மண நாள் வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete
  21. ///பிறகு...! எனக்கும் அதற்கும் பரிசாக வந்த அந்த ஒன்றுதான் என்னை முற்றிலும் மாற்றியது. ஆனந்தம் அள்ளியது .
    எனக்கு சிறையாய் பட்ட இந்த இடம் வந்த ஒன்றிற்கு பேருலகமாய் இருந்தது.தன் உலகை அந்த ''ஒன்று'' என் கையை பிடித்து சுற்றி காட்டியது.நானும் அந்த ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிபோனேன்.///

    ரொம்ப சந்தோசமாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு தல. இந்த விஷயத்தில் நம்ம ரெண்டு பேர் உணர்வுகளும் ஒன்றே.

    நெஞ்சம் நிறைந்த, மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  22. தல, உங்க தல தீபாவளி ரொம்ப லேட்டால்ல வந்திருக்கும்.

    ReplyDelete
  23. மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவன்!!

    ReplyDelete
  24. //இங்கே ஆனந்தமும் இருந்தது! ஆனால், இதன் எல்லைதான் பிடிக்கவில்லை! எல்லையற்று இருந்த என்னை எல்லைக்குள் கட்டுப்படுத்தியது வெறுப்பை தந்தது!//

    கட்டுப்பாடுகள்தானே ஒழுக்கங்களை கற்றுதருகிறது அன்பரே....இதை தாங்கள் விரும்பவில்லையோ?

    மூன்றாம் விதை எப்போதும் ஒரு இனிமையை கொடுக்கும். அது உங்களுக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே.

    எல்லா நலமும் வலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    இந்த இடுகையில் வார்த்தைகளின் வடிப்புகள் அழகாய் இருக்கின்றன.

    ReplyDelete
  25. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் ஜீவன் அண்ணா :).

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் ஜீவன்....

    ReplyDelete
  27. எல்லா நலனும் வளமும் பெற்று
    வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete

123