Saturday, November 28, 2009

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் (மோதல்)

ஜெயலலிதாவை பிடிக்கிறதோ..? இல்லையோ...? திமுகவை பிடிக்காதவர்கள் அதிமுகவிற்கே வாக்களித்து வந்தனர். திமுக -- அதிமுக என ஒரு சம நிலையும் இருந்து வந்தது..! மதிமுக உருவானதால் ஏற்பட்ட பாதிப்பில் வெகு நேர்த்தியாக மீண்டு தன்னை வலிமையாக நிலை நிறுத்தி கொண்டது திமுக..!

இந்த நிலையில் விஜய காந்தின் தேமுதிக வின் தோற்றம் அதிமுகவையே பாதித்தது..! அது திமுகவை மேலும் வலிமையாக்கியது..! தேமுதிக வின் தோற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பினை அதிமுக சரிபடுத்தி கொள்ள முயலவேண்டிய இந்த வேளையில், அதிமுகவின் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு வருகிறது..!!

இந்த உட்கட்சி தேர்தலினால் பல இடங்களில் மோதலும்,உட்பூசலுமேஉண்டாகி உள்ளதாக தெரிகிறது..! இந்த மோதலினால் கண்டிப்பாகஅதிமுகவிற்கு பதிப்புதான்...!

விஜய காந்தின் வளர்ச்சி அதனால் உண்டான அதிமுகவின் பாதிப்பு எல்லாம் சேர்ந்து திமுகவை அசைக்க முடியாத சக்தியாக காட்டுகிறது..!
கலைஞருக்கு பிறகு என்ற கேள்வி வரும்போது..? கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக கருதப்படும் ஸ்டாலின் வெகு சுலபத்தில் முன் வந்து நிற்கிறார்..! அதிமுக -தேமுதிக உடன் கூட்டணி வைக்காமல் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை...!

அடுத்த தேர்தலில் பெற வேண்டிய வெற்றிக்கு காய் நகர்த்த வேண்டிய இந்த நேரத்தில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் தேவைதானா...????


சமநிலை அற்ற ஒருதலை பட்சமான திமுகவின் வளர்ச்சி ஒரு கவலை அளிக்கும் விசயம்தான்..!

16 comments:

  1. கலைஞருக்கு பின்னாடி தி.மு.கவின் நிலையை பொறுத்திருந்து பார்ப்போம். இதுவரை நியமன பதவிகளாகவே அதிமுகவில் இருந்துள்ளது. முதன் முறையாக எம்.ஜி. ஆருக்கு பின் தேர்தல் நடைபெறுவதை நல்ல மாறுதலாக நான் கருதுகிறேன். தேமுதிக பொறுத்த மட்டில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.

    விஜய்

    ReplyDelete
  2. நல்ல அரசியல் அலசல்.

    ReplyDelete
  3. சமநிலை அற்ற ஒருதலை பட்சமான திமுகவின் வளர்ச்சி ஒரு கவலை அளிக்கும் விசயம்தான்..! //

    திமுக வளர்கிறதோ இல்லையோ ,மக்களின் அன்றாட தேவைகளும் பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

    இதில், தேர்தலினால் ஏற்படுகின்ற மோதலும் பூசலும் நமக்கு பெரும் தலைவலியைத்தான் தருகின்றது...

    என்னமோ போங்க தேர்தல்னாலே ஒரே டெரராஇருக்கு சாமி....

    ReplyDelete
  4. /அடுத்த தேர்தலில் பெற வேண்டிய வெற்றிக்கு காய் நகர்த்த வேண்டிய இந்த நேரத்தில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் தேவைதானா...????/

    சரியான கேள்வி.

    ReplyDelete
  5. //இந்த நிலையில் விஜய காந்தின் தேமுதிக வின் தோற்றம் அதிமுகவையே பாதித்தது..!//

    தேமுதிக வின் எழுச்சி, அதிமுக விற்கு மட்டுமல்ல.திமுகவிற்கும் தான்.கடந்த தேர்தலில் வாக்குகளை அதிகம் ஸ்பிலிட் விஜயகாந்த் அன்றோ ?!?!?

    ReplyDelete
  6. அரசியல் கட்டுரையா...நைஸ்..

    தி.மு.க ஒரு நேர்த்தியான கார்ப்பரேட் மாதிரியான செயல்பாட்டிற்கு வந்து வெகு காலமாகிவிட்டது.

    அ.தி.மு.க சாமியார் மடம் மாதிரியான நிலையிலேயே இன்னமும் இருக்கிறது. அரசியல் பார்வை, தொலைநோக்கு....திட்டமிடல் இவற்றிற்கெல்லாம் அங்கே ஆட்கள் இருப்பதாய் தெரியவில்லை.

    விஜயகாந்த்...இன்னொரு வைக்கோவாய் போய்விடும் ஆபத்தினை நான் நிறையவே எதிர்பார்க்கிறேன். கலைஞரை கண்ணை மூடிக் கொண்டு விமர்சிப்பது மட்டுமே அரசியலாகி விட முடியாது.

    ReplyDelete
  7. எந்த கட்சியோடு கூட்டனி வைத்தாலும் விசயகாந்த் கட்சி கொள்கை(?)க்கு எதிரா போயிடுமே

    ReplyDelete
  8. தேர்தலாணைய விதிப்படி, உட்கட்சி தேர்தல் நடத்தப்படவேண்டும். வேறு வழியில்லை. இது எல்லாக் கட்சிக்குள் இருக்கிற பிரச்சினைதான். விடுங்க அரசியல்.

    ReplyDelete
  9. எங்க தான் பூசல் இல்லை....
    நாலு மனுஷன் இருந்தா அங்க கண்டிப்பா
    உள்குத்து வேலை எவனது பண்ணிட்டே இருப்பான்..
    அது கட்சிய இருந்தாலும் சரி வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி.....

    ReplyDelete
  10. நியாமான கவலை நண்பா....

    இதைத் தவிர வேறன்ன செய்ய இயலும் நம்மால்?

    பிரபாகர்.

    ReplyDelete
  11. நல்ல அரசியல் அலசல்

    ReplyDelete
  12. தெளிவாக....பார்வை நடுனிலையான சிந்தனை.... பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  13. அரசியல் அறியேன் அவை புரியும் அவலங்கள் மட்டும் அறிவேன்...

    ReplyDelete
  14. இது எல்லாத்துக்கும் நம்ம மக்களோட பங்கு என்னன்னுதான் எந்த தேர்தலிலும் புரியாத விஷயமா இருக்கு.

    ReplyDelete
  15. sir namitavai patti kelvium nanae badilum nanae yendru tappichitaru. iella na ienda ANNIYAN kittae vasama mattikitu ieruparu.Appadi ierandalum oru kelvi jeevan sir(namita vukku munnadi MAALAVIKA yendru solli ierukeenga appo ungaluku NAMITA vuku MUNNADI malavika dan pudichi ierundada?).

    ReplyDelete
  16. sir namitavai patti kelvium nanae badilum nanae yendru tappichitaru. iella na ienda ANNIYAN kittae vasama mattikitu ieruparu.Appadi ierandalum oru kelvi jeevan sir(namita vukku munnadi MAALAVIKA yendru solli ierukeenga appo ungaluku NAMITA vuku MUNNADI malavika dan pudichi ierundada?).

    ReplyDelete

123