Wednesday, December 30, 2009

சபரிமலை ஒரு பயண அனுபவம் --படங்களுடன்

தொடர்ச்சியா ஏழு வருஷம் மலைக்கு போயிட்டு வந்தாச்சு . இந்த வருஷம் போயிட்டு சனி இரவு (26-12-2009) 2 மணிக்கு வந்தேன். பயண அனுபவத்தை கொஞ்சம் பகிர்ந்துகிறேன்..!

செல்லும் வழிகள்

பெரிய பாதை

எரிமேலியில் இறங்கி அங்கிருந்து பெரிய பாதை ழியே பம்பை சென்று செல்வது. மொத்தம் 40 கிலோ மீட்டர் என்று சொல்கிறார்கள் நான் அந்த பாதையில் சென்றதில்லை.
சிறிய பாதை

நேராக பம்பை சென்று மலை ஏறுவது 4-5 கிலோமீட்டர் இருக்கும்.

புல்மேட்டுபாதை

நேராக குமுளி சென்று அங்கிருந்து வண்டி பெரியார் என்ற இடம் சென்று அங்கே இருந்து புல்மேடு செல்ல வேண்டும் வண்டி பெரியாரில் இருந்து கரடு முரடான பாதையில் செல்ல வேண்டும் .மிகவும் மோசமான சாலை அது. குமுளியில் இருந்து பஸ் வசதியும் தனியார் ஜீப் போக்கு வரத்தும் உண்டு.

இந்த இடம் சபரி மலைக்கும் மேலே இருக்கிறது இங்கிருந்து சபரிமலை நோக்கி மலை இறங்க வேண்டும் 6-8 கிலோமீட்டர் இருக்கும்.

புல்மேடு ..! மலை உச்சியில் புற்கள் மண்டி கிடக்கிறது அந்த மலை பிரதேசத்தில் இந்த இடமே மிக உயரமாக தோன்றுகிறது..!
இந்த பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சகஜமாக யானைகள் உலவும் இடம்.அங்கங்கே யானை சாணம் கிடக்கிறது சில இடங்களில் பிரெஷாக சாணம் ...!

நாங்கள் இப்போது சென்று திரும்பியது இந்த வழியேதான்..!

புல் மேட்டு மலை




கீழ் நோக்கி இறங்கும் வழி

வன வழி இங்கிருந்து ஆரம்பம்

மலையில் இறங்கும்போது தலையில் இருமுடி,சன்னதியில் கூட்டம் பற்றிய சிந்தனைகள் அதிகம் இருப்பதால் கானகத்தை அனுபவிக்க முடியாது விறு விறு வென இறங்கிவிடுவோம். வரும்போதுதான் சுவாரஸ்யமே...!!!

காலை பத்து மணிக்கு இறங்க ஆரம்பித்தோம் இறங்க மூன்று மணிநேரம் ஆனது எங்களுக்கு...! சிலர் செம ஸ்பீடில் சென்றார்கள்.! சுவாமி தரிசனம் முடித்து இரவு தங்கி நெய் அபிஷேகம் எல்லாம் முடித்து மறுநாள் காலை ஆறு மணி அளவில் மலை ஏற ஆரம்பித்தோம் ...!

எந்த ஒரு இடத்திலுமே அதிகாலை மிக அழகாய் தோன்றும் அடர்ந்த வனத்திற்குள் சொல்ல வேண்டுமா ??? மெல்ல மெல் பொழுது புலர ஆரம்பித்தது ஓங்கி உயர்ந்த மரங்கள்...! சில்லென்ற காற்று...! ஈரமில்லாத குளிர்ந்த தரை பகுதி..! செருப்பில்லாத வெற்றுபாதங்களுடன் நடை...!

மலை ஏறுவது கண்டிப்பாக கடினம்தான் தூரத்தை நினைக்கும்போது மிகவும் மலைப்பாகத்தான் இருக்கும் . மெல்ல ரசித்து அனுபவித்து செல்ல வேண்டும் என முடிவு செய்த பிறகு மலை என்ன ? தூரம் என்ன ?
கட்டுக்குள் பறவைகளை காணமுடியவில்லை சில பூச்சிகள் ,வண்டுகள் சத்தம் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை..! எப்போவாவது சில குரங்குகள் கண்களில் தட்டுப்படும் இங்கேயும் சில இடங்களில் யானை சாணம் கா முடிந்தது.




வனத்திலிருந்து வானம்

காட்டுக்குள் ஒரு கம்பளி பூச்சி


வழியில் ஒரு நீர்க்கசிவு ஒரு அருவிபோல...!

நவ யுகத்தின் பாதிப்பு சிறிதும் இல்லாத கானகம்..! பலநூறு வருடங்களுக்கு முன்னரும் இந்த இடம் இப்படித்தான் இருந்திருக்கும் இன்னும் பல நூறு வருடங்களுக்கு பிறகும் இந்த இடம் இப்படிதான் இருக்கும் ????? இந்தஇடத்தை காண்பதே ஒரு இறை தரிசனம்தான் ...!


இந்த வழியில் நான்கு இடங்களில் உணவகங்கள் உள்ளது.பிரத்யோக உணவு மரவள்ளி கிழங்கும் ,கஞ்சி சாதமும் ..! சுட சுட பரோட்டாவும் கிடைகிறது. வடை பஜ்ஜி எல்லாம் கிடைகிறது . எல்லா கடைகளிலும் நாரங்கி வெள்ளம் (எலுமிச்சை உப்பு தண்ணீர்) கிடைகிது .


காட்டு ஹோட்டல்

சற்று சமமான இடத்தில் கொஞ்சம் ஓய்வு

மீண்டும் புல்மேடு வந்து அங்கிருந்து வண்டிபெரியார்வரை ஜீப்பில் பயணம். அங்கே எங்கள் வண்டியை அடைந்து குமுளி வந்து கொஞ்சம் ஷாப்பிங் (மிளகு,கிராம்பு ,தைலம்,போன்றவை)

குமுளியில் இருந்து வண்டி பெரியார் செல்லும் சாலை

குமுளியில் புறப்பட்டு நேராக சுருளி அருவியில் ஒரு குளியல்....!
சுருளி செல்லும் வழியில் நிறைய திராட்சை தோட்டங்கள்...! (போட்டோ எடுக்கவில்லை )

அடுத்து பழனி


என்னதான் ஊரெல்லாம் சுத்தினாலும் நம்ம பழனிக்கு வந்தவுடன் என்னமோ சொந்த ஊருக்கு வந்ததுபோல ஒரு உணர்வு. பழனியில் இரவு தங்கி அதிகாலையில் எழுந்து மலை றி முருகப்பெருமான் தரிசனம்.


மலை மேலிருந்து ...!


படியேற ஆரம்பிக்கும் இடத்தில் தொப்பி விற்கும் ஒருகடையில்

பழனியிலும் கொஞ்சம் ஷாப்பிங் பஞ்சாமிர்தம் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் முதலியன...!

சும்மா வெளையாட்டுக்கு....!


திருச்சி காவிரி ஆற்று பாலம்.
(வரும்போது காருக்குள்ளிருந்து ஒரு கிளிக்)

வரும்போது சமயபுரம் சென்று அம்மனை தரிசித்துவிட்டு வந்தோம்


ம்ம்ம்... நல்ல படியா போயிட்டு வந்தாச்சு...! விரதமெல்லாம் முடிஞ்சாச்சு...! நியூ இயர் வருது...! இனி கொண்டாட்டங்கள் ஆரம்பம்...! ஸ்டார்ட் கவுன் டவுன் 1..2..3..4...


...

26 comments:

  1. போட்டோக்கள் அருமை அண்ணே

    அதிலும் அந்த தொப்பி ஹீரோ ;) ஜூப்பரூ.

    விரதமிருப்பதே அதை பழக்கத்தான் நீங்க ‘அதை’ துவங்கிடாதீங்க மறுக்கா

    ReplyDelete
  2. போட்டொஸ் எல்லாம் ரொம்ப க்ளியரா இருக்கு.

    தொப்பி படமும், கையில் துப்பாக்கியோடும் கலக்கலா இருக்கீங்களே தல

    ReplyDelete
  3. படங்கள் சூப்பர்....

    ReplyDelete
  4. நீங்க போட்டோவோட எழுதி இருக்கது சுவாரஸ்யமா இருக்கு அன்னே..

    வல்லரசு விசயகாந்த் மாதிரி ஒரு போட்டோ கையில கன்னோட - நல்லா இருக்குனா..

    ReplyDelete
  5. படங்களுடன் கூடிய பயணக்கட்டுரை சூப்பரு, அண்ணே 'கவுண்ட்' மட்டும் பண்ணுங்க 'டவுன்' ஆகிடாதிங்க!!

    ReplyDelete
  6. அந்த தொப்பி, கண்ணாடி கெட்டப் கலக்கல் அண்ணே!!

    ReplyDelete
  7. படங்கள் அழகு...
    /*...இன்னும் பல நூறு வருடங்களுக்கு பிறகும் இந்த இடம் இப்படிதான் இருக்கும் ????? இந்தஇடத்தை காண்பதே ஒரு இறை தரிசனம்தான் ...!*/
    அப்படியே இருந்தால் நல்லது தான்.

    /*ம்ம்ம்... நல்ல படியா போயிட்டு வந்தாச்சு...! விரதமெல்லாம் முடிஞ்சாச்சு...! நியூ இயர் வருது...! இனி கொண்டாட்டங்கள் ஆரம்பம்...! ஸ்டார்ட் கவுன் டவுன் 1..2..3..4...*/
    விரதமெல்லாம் முடிஞ்சாச்சா? விரதம் என்பதே மனதைக்கட்டுப்படுத்த... ஒரு மண்டலம் மட்டும் இருப்பது விரதம் ஆகாது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. புகைப்படங்கள் அனைத்தும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கு...

    ReplyDelete
  9. நீங்கள் சபரிமலைக்கு போன நேரத்தில் நான் பழனியில் தண்டாயுதபாணியை சுற்றிக் கொண்டிருந்தேன்....

    தொப்பியில் நடிகர் பார்த்திபன் மாதிரி ஆஜானுபாகுவாய் தெரிகிறீர்கள்.

    எதிர்வரும் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  10. புகைப்படங்கள் அருமை ஜீவன்.நான் ஒரே ஒரு முறை என் அப்பாவுடன் சின்னப் பாதையில் சென்று வந்ததோடு சரி .அதற்க்கப்புறம் போகவே இல்லை. ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் .கொஞ்சம் கவனியுங்கள்.

    ReplyDelete
  11. எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஜீவன்.அழகான படங்கள்.

    ReplyDelete
  12. பயணக்கட்டுரையை இன்னும் சுவராஸ்யமா சொல்லிருக்கலாம், தெரிந்துக்கொள்ள ஆர்வம்

    தொப்பியில் பார்த்திபன் சாயல் தெரிகிறது

    இனிவரும் கொண்டாடங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமையான படங்கள். :)

    ReplyDelete
  14. நட்புடன் ஜமால் said...
    போட்டோக்கள் அருமை அண்ணே

    அதிலும் அந்த தொப்பி ஹீரோ ;) ஜூப்பரூ.

    விரதமிருப்பதே அதை பழக்கத்தான் நீங்க ‘அதை’ துவங்கிடாதீங்க மறுக்கா//
    அமுதா said...
    படங்கள் அழகு...
    /*...இன்னும் பல நூறு வருடங்களுக்கு பிறகும் இந்த இடம் இப்படிதான் இருக்கும் ????? இந்தஇடத்தை காண்பதே ஒரு இறை தரிசனம்தான் ...!*/
    அப்படியே இருந்தால் நல்லது தான்.

    /*ம்ம்ம்... நல்ல படியா போயிட்டு வந்தாச்சு...! விரதமெல்லாம் முடிஞ்சாச்சு...! நியூ இயர் வருது...! இனி கொண்டாட்டங்கள் ஆரம்பம்...! ஸ்டார்ட் கவுன் டவுன் 1..2..3..4...*/
    விரதமெல்லாம் முடிஞ்சாச்சா? விரதம் என்பதே மனதைக்கட்டுப்படுத்த... ஒரு மண்டலம் மட்டும் இருப்பது விரதம் ஆகாது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    i repeat the same..::))

    Nice photos & writing.
    wish you all a very happy new year.

    ReplyDelete
  15. நல்லா எழுதியிருக்கீங்க தல.
    ஃபோட்டோஸும் சூப்பர்.

    ReplyDelete
  16. நானும் சென்ற வாரம் சபரிமலை சென்றுவந்தேன் நண்பரே. நான் இருமுறை சென்றுள்ளேன் (சிறு வழிப்பாதை ). தங்கள் பயணங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

    ReplyDelete
  18. போட்டோக்கள் ச்சில் !!!

    பகிர்வுக்கு நன்றி !!! ஜீவன் !!!

    ReplyDelete
  19. கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்..ம்ம்ம்ம்ம்ம்

    போன இடத்தில் துப்பாக்கிய ஏன் தூக்கினீங்க....

    ReplyDelete
  20. சபரிமலைக்கு நேரில் உங்க கூட போயிட்டு வந்துட்டேன் அப்பாடா,என்னோட தொப்பி குடுக்க மறந்துடிகளா ,பயணம் அருமை தமிழ்

    ReplyDelete
  21. வனத்திலிருந்து வானம்

    அருமை.

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. சாமியே சரணம் ஐயப்பா....

    ReplyDelete
  24. அருமை
    நல்ல பதிவு
    வாழ்த்துகள்

    ReplyDelete
  25. போட்டோக்கள் அருமை நன்றாகவும் தெளிவாகவும் இருக்கு...

    ReplyDelete

123