Friday, February 5, 2010

பித்தளை குவளை




பித்தளை
குடத்துக்கு இருவத்தி அஞ்சு ரூவாதான் தருவாங்களாம்
பெரிய குவளை க்குத்தான் அம்பது ரூவாயாம்..!

வாட்டத்துடன் பிள்ளை சொல்ல...!

புளிபோட்டு விளக்கி அடுக்களையில் கவிழ்த்து வைக்க பட்டிருந்த
குவளையை அம்மா தயார் செய்ய...!

தண்ணீர் பிடித்து வைப்பதை விட அடகு வைக்கவே அதிகம்
பயன்பட்ட பித்தளை குவளையும்
எதோ ஒரு கஷ்டத்தில் காணாமல் போனது...!



.

15 comments:

  1. தண்ணீர் பிடித்து வைப்பதை விட அடகு வைக்கவே அதிகம்
    பயன்பட்ட பித்தளை குவளையும் //

    என்னத்த சொல்ல :(

    ReplyDelete
  2. நெஞ்சைத்தொட்டது.

    "கஷ்டத்தில் காணாமல் போனது...!"
    :(
    காலம் மாறி பித்தளை இல்லாது போனால் மிக்ஸி,....

    ReplyDelete
  3. ஹிஹி.. என்னதிது? கவிதையா? லேபிள் போடத்தேவலையா..

    ReplyDelete
  4. பித்தளைக் குடம்; பித்தளைக் குவளை என்பன ஈழத்தில் முறையே நீர் பிடித்துவைப்பதற்கும்; பானங்களைக் குடிப்பதற்கும் உபயோகிக்கும் உலோகப் பாத்திரங்கள்.
    உங்கள் கவிதையில் குவளை என்பதும் நீர் பிடித்துவைக்கும் பாத்திரம் போல் உள்ளது. தமிழகத்தில் குவளை என்பது நீர் சேகரித்து வைக்கும் பாத்திரமா?
    கவிதையின் படி குவளை, குடத்தை விட பெறுமதி அதிகமாக உள்ளது. அதனால் அது குடத்தை
    விடப் பெரிதாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.
    ஆனால் ஈழத்தில் சுமார் 100 குவளை நீர் ஊற்றியே ஒரு குடத்தை நிரப்பலாம்.அந்த அளவு குவளை சிறிது.
    எனவே... நீங்கள் குவளை என்பது எதை என படமூலம் விளக்கமுடியுமா?
    நாம் குவளை எனக் குறிப்பிடுவது.. இப்போ கிளாஸ்; ரம்ளர் என புழக்கத்தில் உள்ளது.
    கவிதை வறுமையைச் சிறப்பாக விளக்கிறது.

    ReplyDelete
  5. பித்தளைக் குவளை கஸ்டத்தாலும் காணாமல் போயிருக்கும்.
    காலம் மாறினதாலயும் காணாம போயிருக்கும்.

    ReplyDelete
  6. வறுமையை சொன்ன காட்டமான வரிகள்...

    ReplyDelete
  7. ஹ்ம்ம். எதார்த்தம். வேறு என்ன சொல்றது தல

    ReplyDelete
  8. ஹ்ம்ம். எதார்த்தம். வேறு என்ன சொல்றது தல

    ReplyDelete
  9. எளிமையாக சொல்லப்பட்டிருக்கும்
    ஏழ்மை

    ReplyDelete
  10. ஹ்ம்ம்ம், So sad...

    ReplyDelete
  11. வறுமை..அதை திருடியவனுக்கும்

    ReplyDelete
  12. நன்றி பப்பு அம்மா

    நன்றி அமி த்து அம்மா

    நன்றி மாதேவி

    நன்றி பாலா சார்

    //ஆதிமூலகிருஷ்ணன் said...

    ஹிஹி.. என்னதிது? கவிதையா? லேபிள் போடத்தேவலையா..//
    லேபிள்ள கவிதைன்னு போட்டு இருக்கலாம் அதுக்கும்

    ஹிஹி.. என்னதிது? கவிதையா? அப்படின்னு கேட்டுட்டா ?;;)

    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    நன்றி யோகன் பாரிஸ் அவர்களே

    தஞ்சை மாவட்ட கிராமங்களில் அண்டாவை குவளை என சொல்லுவது உண்டு ..!
    சிறிய குவளைகளை யானைக்கால் குவளை என்றும் சொல்லுவார்கள்
    படங்கள் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை..!


    நன்றி ஹேமா

    நன்றி தமிழ்

    நன்றி நவாஸ்

    நன்றி ஜமால்

    நன்றி சபி

    நன்றி புலவன் புலிகேசி

    ReplyDelete
  13. சிரிக்க வைக்கிற உங்க பதிவுகள்ல இது கனமா உணர வைக்குது.

    ReplyDelete

123