Friday, April 16, 2010

ராஜ ராஜ சோழன் கல்லறை -ஒரு ரிப்போர்ட் (படங்களுடன்)

ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் ஊருக்கு செல்வேன் இந்த தடவை ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு.அதாவது கும்பகோணத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் ராஜராஜ சோழன் கல்லறை இருப்பதாகவும் அதை ஒரு பெரியவர் பராமரித்து வருவதாகவும் அதை அவசியம் பார்க்கவேண்டும் என்று சொல்ல அப்போதே ஆர்வம் தொற்றி கொண்டது...!

எனக்கு அதுபுதிய தகவல்..!





சரி..! இந்த தடவை ஊருக்கு போகும்போது அவசியம் போய் பார்த்து அதை பதிவெழுத முடிவு செய்தாகிவிட்டது . எங்கள் ருக்கு கும்பகோணம் வழியேதான் செல்ல வேண்டும் ஊருக்கு போய்விட்டு திரும்ப கும்பகோணம் வரவேண்டுமெனில் அறுபது கிலோ மீட்டர் வரவேண்டும். எனக்கு அதுவரை பொறுமை இல்லை காலையில் கும்பகோணத்தில் றங்கியவுடன் குளிக்க கூட இல்லாமல் ஒரு ஆட்டோ பிடித்து அந்த இடம் நோக்கி புறப்பட்டுவிட்டேன் ஒரு நல்ல விவரமான ஆட்டோக்காரர் கிடைத்தார்.


உடையாளூர்



இந்த உடையாளூர் என்ற ஊரில்தான் அந்த நினைவிடம் இருக்கிறது .
கும்பகோணம் மகாமக குளம் தண்டி ஆட்டோ செல்கிறது. இதுபோன்ற ஒரு இடத்திற்கு நான் தனியே சென்றதில்லை மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு.



பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து முன் பிறவியில் ஒரு சோழமன்னர் என்ற நினைப்பு வேறு எனக்கு..! குறைந்த பட்சம் ஒரு சோழ படைவீரனாக இருந்திருப்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை..!




உடையாளூர் நெருங்க நெருங்க ஒரு அவசரம் ,ஆர்வம் எல்லாம் தொற்றிகொள்கிறது அந்த இடத்தை பற்றிய ஒருமாதிரியான கற்பனையுடன் செல்கிறேன்.



தனது கட்டிட கலையால் உலகையே திரும்பிபார்க்கவைத்த ஒரு மாமன்னனின் கல்லறையாக சொல்லப்படும் இடம் இதுதான்.!



மிகவும் சாதாரணமாக ஒரு சிறிய ஓலை கொட்டகையில் இருக்கிறது இந்த நினைவிடம் ...!


இந்த நினைவிடத்தை பராமரித்து வரும் பெரியவர்







பக்கிரி சாமி என்ற இந்த பெரியவர்தான் இந்த நினைவிடத்திற்கு பூஜை செய்து பராமரித்து வருகிறார் இந்த பெரியவர் சொன்ன சில முக்கிய தகவல்கள் ...!



இந்த இடம்தான் ராஜராஜனின் நினைவிடம் என்று ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது ..!

இந்த இடத்தில் முன்னர் ஒரு கோவில் இருந்ததாகவும் 1960 ஆம் வருடம் ஏற்பட்ட மிக பெரிய வெள்ளபெருக்கில் கோயில் புதையுண்டதாக சொன்னார்..!

இந்த இடத்தை பற்றி முதலில் கேள்விப்பட்டு வந்த அதிகாரிகள் ஒரு அமைச்சர் ,மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் ஒரு போக் லைன் எந்திரத்தின் மூலம் சுமார் ஒரு பதினைந்து அடி ஆழம் தோண்டி பார்த்தார்களாம் உள்ளே ஒரு கட்டிடம் போன்று இருந்து இருக்கிறது . இந்த இடத்தை தோண்டிய அதேவேளையில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் திருவாரூரில் வெட்டி கொலை செய்ய படுகிறார் உடனே இந்த இடத்தை தோண்டிய அதிகாரிகள் அப சகுனமாக கருதி அந்த இடத்தை மூடி சென்று விட்டதாக அந்த பெரியவர் சொன்னார் . தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஆட்சியில் இருபவர்கள் சென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒரு தகவல் உள்ளது சில சம்பவங்கள் அப்படி நடந்தும் உள்ளது இந்த காரணத்தால் இந்த இடத்தை தோண்டியவர்கள் கொலை சம்பவத்தை அப சகுனமாக நினைத்திருக்கலாம்..!

பல முக்கியஸ்தர்கள் இந்த இடத்திற்கு வந்து சென்று உள்ளனர் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் சீமான் வந்து போனாராம்..!

இங்கே ஒரு குறிப்பேடு வைத்து உள்ளனர் இங்கே வந்த பலர் தங்கள் கருத்துகளை இதில் எழுதி வைத்து உள்ளனர் ...!

மேலும் இந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்ட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக சொன்னார் இந்த பெரியவர்..!


பிற் சேர்க்கை;- இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்த நண்பர்கள் ஆதாரம் ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் ஆதாரத்துடன் பதித்து இருக்கலாம் என சொல்லி இருந்தனர் . இந்தபதிவை பொறுத்தவரை என் பயண அனுபவத்தையும், தேடலையுமே பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான். மேலும் தகவலுக்காக வலையில் தேடியபோது ஒரு நண்பரின் பதிவு சிக்கியது அதில் ராஜராஜ சோழன் கல்லறை பற்றிய சில ஆதார தகவல்கள் உள்ளன. அந்த நண்பருக்கு நன்றி ..!


http://heilderfuhrer.blogspot.com/2008/11/blog-post.html





.


38 comments:

  1. IDHAI YERKKANAVE MAKKAL TVLA PAYANAM PROGRAMMELA POTTUTANGALE!!

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம். பகிர்வுக்கு நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு!!

    ReplyDelete
  4. தகவல் வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிறது உங்கள் இடுகை.

    சமீப காலத்தில் சுனாமி,தனுஷ்கோடி போன்ற கடல் ஆர்ப்பரிப்புக்களில் மூழ்கிய இடங்கள் தவிர தகவல்கள் எதுவும் எனக்குத் தெரிந்து இல்லை.

    அகழ்வாராய்ச்சிக்கு அரசியலுக்கும்,மூடநம்பிக்கைகளுக்கும் அப்பாறபட்ட சில துணைக்கு சேர்த்துக் கொண்டால் கோயில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து விடுவார்கள்.

    ஒரு வேளை உங்கள் இடுகையில் உண்மையிருக்கும் பட்சத்தில் இன்னும் விரிவு படுத்தியிருக்கலாம் என்பது எனது கருத்து.நன்றி.

    ReplyDelete
  5. ஆபூர்வத் தகவல்...

    இவ்விடம் பலரும் அறியாமலிருப்பது வேதனைக்குரியது...

    பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  6. இப்படி தான் கடவுள்கள் உருவானார்கள்!

    ReplyDelete
  7. எப்படியோ போயிட்டு வந்தாச்சு.. க்ரேட்.. நல்ல தகவல் அமுதன்....சொன்ன மாதிரி ஏதாவது ஆதாரம் இருக்கா அங்க... இத்தனை நாள் எப்பிடி வெளிய தெரியாம இருக்கு

    ReplyDelete
  8. எப்படியோ போயிட்டு வந்தாச்சு.. க்ரேட்.. நல்ல தகவல் அமுதன்....சொன்ன மாதிரி ஏதாவது ஆதாரம் இருக்கா அங்க... இத்தனை நாள் எப்பிடி வெளிய தெரியாம இருக்கு007

    ReplyDelete
  9. அது ராஜராஜனில் கல்லறையாக இருக்க வேண்டிய அவசியமில்லைதான்..

    ஆனால் மகத்தான எனது மூதாதையன் ஒருவனின் நினைவைச் சுட்டிட்ட ஓர் இடம் என்கிற நினைப்பு தரும் கிளர்ச்சியுடன் கூடிய பெருமிதம் விலை மதிப்பில்லாதது.

    தங்களின் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்தும்...

    ReplyDelete
  10. தேர்ந்த பகிர்வு இல்லையெனினும், வித்தியாசமான தகவல்.

    ReplyDelete
  11. நண்பரே மிகவும் நன்றி. எனது நண்பர்கள் குழு சென்ற ஆண்டு தஞ்சை மட்டும் அதை சுற்றி உள்ள இடங்களுக்கு சுற்று பயணம் சென்றனர். நோக்கம் ராஜராஜன் ஆட்சி புரிந்த இடங்கள் மற்றும் கோவில்களை பார்க்கவே. நீங்கள் குறிப்பிட்ட இந்த கல்லறைக்கும் சென்றனர். ஆனால் குறிபிடத்தக்க ஆதாரம் சிக்கவில்லை. தாங்கள் விரும்பினால் www.varalaaru.com என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கவும். அவர்கள் கல்வெட்டுக்கள் மற்றும் சோழ மன்னர்கள் பற்றிய அரிசியில் ஈடுபட்டுள்ளனர்.

    ReplyDelete
  12. உங்களை மாதிரியே ஆர்வத்தோடு வந்தேன் பதிவில் கல்லறையை காண...
    இருப்பினும் உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது...பகிர்வுக்கு நன்றி தமிழ்

    ReplyDelete
    Replies
    1. Mela our namper kuduttha WWW.varalaru.com LA cheek pannunga melum pala visayam thrium thanks

      Delete
  13. நல்ல பதிவு தமிழ்.
    உங்க கூட பயணித்த அனுபவம் அருமை

    ReplyDelete
  14. வரலாறு என்பது பழங்கதை அல்ல. அது நமது வழிகாட்டி. தமிழினம் தன்மானத்தோடு வழவேண்டுமென்றால் வரலாற்றுத்தேடல்கள் தொடரவேண்டும். தங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் இந்த இடம் பற்றி விரிவாக காட்டப்பட்டது.

    ReplyDelete
  15. நல்ல தகவல்

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  16. இது மாதிரி நிறைய வரலாற்றுத்தளங்கள் கண்டுகொள்ளாமலே விடப்பட்டிருக்கிறது. அகல்வாராய்ச்சிகள் மூடநம்பிக்கைக்கும், அபசகுனத்திர்கும் அப்பார்பட்டு இது மாதிரி தடயங்களை வெளிக்கொணரவேண்டும் என்பது நம் அனைவரின் ஆவல், செய்வார்களா

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் அமுதன்..... தனி ஒரு நபராக ஆராய்ச்சி நோக்கத்துடன் நீங்கள் சென்று வந்து அனைவருக்கும் இந்த செய்தி சென்று சேர ஒரு பாலமாக இருந்துள்ளீர்கள். அது ராஜ ராஜனுடைய.... கல்லறை என்று ஆராய்ச்சிப் பூர்வமாக விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அமுதனுக்கு கிடையாது.... அமுதன் தான் கண்டதை பொதுவில் வைக்கிறார் சம்பந்தப்பட்ட துறையினர் ஆராய்ச்சி செய்து அதை அறிவிக்க வேண்டும்!

    அமுதன் போன்ற சிலர் வராலாற்று உண்மைகள் வெளிவர காரணமாயிருக்கிறார்கள்! இன்னும் சொல்லப்போனால் நிறைய அமுதன்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள்! சபாஸ் அமுதன்.....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. ஜீவன்,

    நல்லதொரு பகிர்வு. நண்பர்களின் கூற்று படி, இன்னும் தகவல்களைச் சேகரித்து பதிவிட்டிருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  19. Arumaiyana seithi.Tamizarkalil silarukkuththan theriyum. iruppinum RajaRajanin ninaividaththai patria seithikalukku nandri, Parattukkal

    ReplyDelete
  20. வித்தியாசமான பதிவு.
    நல்ல தகவல்.

    ReplyDelete
  21. nalla thagavel ithu unmaiyaka paithchatil sokam than

    ReplyDelete
  22. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    தனது கட்டிட கலையால் உலகையே திரும்பிபார்க்கவைத்த ஒரு மாமன்னனின் கல்லறையாக சொல்லப்படும் இடம் இதுதான்.! //

    :((((

    ராஜராஜசோழன் அரசியல்வாதியாக இருந்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு மணிமண்டபமாவது கிடைத்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Sila unmaya veliya solla mudiyathu ana ninga sonnathu sari than intha alavkku puplic support iruntha periya visayam

      Delete
  23. thagavalukku nandri, miikka magizchi

    ReplyDelete
  24. naan pirantha mannai patri enakkey theriyatha oru vishayam,vetkapadukiraen.
    hats off to you.

    ReplyDelete
  25. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  26. நல்ல முயற்சி நண்பரே. எப்பேற்பட்ட ஒரு மனிதனின் நினைவிடம்... எவருக்கும் தெரியாமலே போய்விட்டது... வேதனையாக இருக்கிறது!

    ReplyDelete
  27. பொன்னியின் செல்வனில் வரும் நிறைய சம்பவஸ்தலங்கள் கும்பகோணத்தை சுற்றி அமைந்ததுள்ளது நண்பரே.கதையில் வரும் ”பள்ளிபடை கோவில்”கும்பகோணத்திலிருந்து 10 கி,மீ தொலைவில் திருப்புறம்பியம் என்ற ஊரில் இன்றும் வயல் நடுவே நல்ல நிலையில் உள்ளது.சோழர்களின் பிற்கால ராஜராஜனின் முன்னோர்கள் தலையெடுத்து எழுச்சிக்கு காரணமாக அமைந்த திருப்புறம்பியப் போர் நடைபெற்ற உதிரம்பட்டிதோப்பு(போரில் ரத்தம் ஆறாக ஒடியதாம்) என்ற நிலப்பகுதி இன்றும் இவ்வூரில் அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.போரில் மாண்ட தளபதிகள் இவ்வூரைச்சுற்றி குலதெய்வங்களாக இந்த பகுதி மக்களில் பலருக்கு விளங்கி வருகிறார்கள்.

    ReplyDelete
  28. Hi Amuthen,

    I am from thanjavur though i don't know this information...Thanks for the effort..this is great information about the great king.

    ReplyDelete
  29. Thank you my dear friend for sharing this info

    ReplyDelete
  30. நன்றி நண்பர்களே

    ReplyDelete
  31. நண்பர்களே நல்ல

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  32. nantri arpudhamana thagaval
    eano nenju kanakirathu...

    ReplyDelete
  33. raja raja choolan valndthikana proof ennum thevai

    ReplyDelete

123