Wednesday, October 5, 2011

வலையுலக நட்புகளின் வாழ்த்துகளையும், ஆசிகளையும் வேண்டி ..!


சொன்னவுடன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மதுக்கூர் பெரிய ஊரில்லை. தஞ்சை மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்று. அங்கே நகைத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாத மிகச் சாதாரண குடும்பம்.

+2 முடித்து கோவையில் 3 மாதம் மெஷின் கட்டிங் டிரைனிங் பிறகு அங்கேயே 1500 ரூபாய் சம்பளத்தில் வேலை . காந்தி பார்க் - பொன்னையராஜபுரம் அருகில் ராசி பில்டிங் என்ற ஒரு மேன்ஷன் மாதம் 250 ரூபாய் வாடகையில் ஜாகை. நாஸ் தியேட்டர் அருகில் ஒரு மாடியில் நல்ல மெஸ் மாதம் 450 ரூபாய்க்கு மூணு வேளை சாப்பாடு போட்டார்கள் கிட்ட தட்ட இரண்டரை வருடம் கோவை வாசம்தான்.

அதன் பிறகு சொந்த ஊர்... கடுமையாக போராடி நகைக்கான கட்டிங் மெஷின் வாங்கி சொந்த கடை. ம்கூம் விளங்கவில்லை வேலை வாய்ப்பு இல்லை இருக்க இருக்க கடன்தான் அதிகரித்தது. மெஷினை ஊரிலேயே வைத்து விட்டு. சென்னை பட்டணம் விஜயம்.

அண்ணன் சின்ன வயதிலேயே சென்னையில் செட்டில். அவருடன் நகைக்கு கல்பதிக்கும் தொழில் பழகினேன். அண்ணன் புதிதாய் ஒரு தொழில் தொடங்க பலத்த நஷ்ட்டம். மீண்டும் கடன் போராட்டம். கடும் சோதனை.

ஊரில் இருக்கும் மெஷினை கொண்டுவந்தால் விற்று எதாவது ஒரு சிறிய கடனையாவது அடைக்கலாம் என்ற எண்ணத்தில் சென்னைக்கு மெஷினை கொண்டுவந்தாயிற்று. அதும் முடியவில்லை.அடிமாட்டு விலைக்கு கேட்க விற்க மனமில்லை.

அப்போது மிஷினை வீட்டிலேயே செட் செய்து சின்ன சின்ன வேலைகள் செய்து எளிய ஒரு வருமானம். அதன் பின்னர் மாத வாடகை 250 க்கு சிறிய கடை பிடித்து ஒரு பழைய சைக்கிளுடன் துவங்குகிறேன் என் பயணத்தை..1998 ல்.! மெல்ல மெல்ல பிக்கப் ஆனது . அதன் பிறகு வேலை வேலை வேலைதான்..! எதிர்பார்க்காத அளவுக்கு வேலை. காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி வெறித்தனமாக இரவு பகல் என வேலை பார்த்தேன்.! துணைக்கு யாருமில்லை நானே தொழிலாளி ,நானே முதலாளி..!

என்னை பொறுத்தவரை அதிஷ்ட்டம் என்பது யாதெனில் முழுக்க முழுக்க உழைக்க வாய்ப்பு கிடைப்பதுதான்.! ஒரு மெஷின் இரண்டு மெஷின் ஆனது வேலைக்கு ஆள் வைத்து கொண்டேன். நிழல்களின் நாடகம் எல்லாம் நிஜங்களின் தரிசனம் ஆனது.! பெரிய கடை பிடித்தேன் மேலும் சில மிஷின்கள்
வாங்கினேன் .ஆட்களும் வைத்து கொண்டேன் ..!

அதன் பிறகு கல்யாணம் 2002ல். 2003 ல் முதல் பெண்குழந்தை நான்காண்டு இடைவெளியில் அடுத்த பெண் குழந்தை .லோ கிளாஸ் பொருளாதார நிலையில் இருந்து கடை வாடகை,வீட்டு வாடகை,ஆட்கள் சம்பளம்,வீட்டு செலவு என மிடில் கிளாஸ் சராசரியில் வந்து நிற்கிறேன்.பொருளாதார பாதையில் கடந்த 2,3 ஆண்டுகளாக பெரிய ஏற்றம் எதுமில்லாமல் சமவெளி பயணம்தான்.


தற்போது..!

எனக்கு ஆரம்ப காலம் முதலே ரத்தினக்கல் வியாபாரத்தில் அனுபவம் உண்டு. மேலும் துளியூண்டு ஜோதிட அறிவும் உண்டு. அந்த அனுபவ அடிப்படையில் என் கடையிலேயே என் சின்ன மகள் அட்ஷயநந்தினி பெயரில் அட்சயா ஜெம்ஸ்&ஜுவல்ஸ் என்று உயர்தர ரத்தினகற்கள்,முத்துமாலை,பவழமாலை முதற்கொண்ட அனைத்து வகை ரத்தின மாலைகள், மற்றும் உப ரத்தின கற்களின் விற்பனையை துவங்குகிறேன்.



மேலும் ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.! எனது இந்த புதிய முயற்சி செழிக்கவும் வெற்றி அடையவும் தங்களின் மேலான வாழ்த்துகளையும் ,ஆசிகளையும் வழங்குங்கள் நண்பர்களே...!



....................................................

74 comments:

  1. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை!, எல்லா வளமும், நலமும் பல்கிப் பெருகிட வாழ்த்துக்கள்.

    :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.ஜமாய்ங்க!

    ReplyDelete
  4. தொழில் செழிக்க வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  5. மனமார்ந்த வாழ்த்துகள்!

    மென்மேலும் வளர்க!

    ReplyDelete
  6. அன்புடையீர்,
    உங்கள் வாழ்க்கை பயணக் கதையையும், அழைப்பிதழையும் படித்தேன். மேலும் மேலும் வாழ்வில் முன்னேற வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. என்ன மதுக்கூர் தெரியாதா?

    தொண்ணூறுகளிலேயே மதுக்கூர் தெரியும் எனக்கு. மதுக்கூர் ரமேஷ் னு ஒருத்தர் நிறைய வாசகர் கடிதம், துணுக்குகள், கேள்விகள் எல்லாம் எழுதுவார்.

    ReplyDelete
  8. மேலே மேலே வளர எங்கள் மூவரின் வாழ்த்துக்கள் நண்பா!!

    அப்படியே அந்த ஒட்டியாணம்ம் ம் ம் ம் ம் ம் ம்............

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே!... மேன்மேலும் சிறப்புற்று எல்லா நலன்களும் கிடைக்கப்பெற இறையவனை வேண்டுகிறேன்.

    பிரபாகர்...

    ReplyDelete
  10. ரொம்ப பெருமையாய் இருக்கிறது அமுதன்....

    16 வயதில் பேட்டோடு கிரிக்கெட் கிரிக்கெட் என்று சுற்றி வந்த தமுழ் அமுதனா இது...? வியக்கிறேன்...! சிறு வயதிலிருந்தே உங்களைப் பார்த்து வருவதால் மனம் மிக மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ்.

    எல்லாம் வல்ல பேரிறையின் ஆசியோடு நீங்கள் எடுத்த எல்லா காரியமும் வெற்றியடையும்....எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் தமிழ்...!

    அட்சயம் - வளர்ந்து கொண்டே இருப்பது.....வாழ்க.... வளர்க..!

    ReplyDelete
  11. தங்களின் புதிய முயற்சி வெற்றியடைய குருவருளை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. உங்க தொழிலில் நீங்க மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  13. முதலில் வாழ்த்துக்கள் தமிழ்..

    கதைகளில் படிக்கும் போதும் கேட்கும் போதும் ம்ம்முன்னு மனசும் கேட்டும் கேளாமலும் காதும் அப்படியே கூடவே கொஞ்சம் பொறாமையும் வரும்.அப்புறம் கொஞ்சம் வியப்பு அத மறந்துடுவேன்..பத்து வருட உழைப்பையும் முன்னேற்றத்தையும் ஒரே பதிவில் உணர்த்தியவிதம் அழகு..அடுத்து மனசார மனமொன்றி படிக்கவும் வைச்சது நம்ம தமிழ் அமுதன் நம் நண்பர் அவர் வளர்ச்சி இப்படி நினைச்சி படிக்கும் போது இனம்புரியா சந்தோஷம் நட்புக்காக சில துளி ஆனந்த கண்ணீர்..உங்க உழைப்பு விடாமுயற்சி பொறுமை எல்லாம் தெரியுது.. நான் என்ற எண்ணம் எழாமல் எழுந்த முன்னேற்றம் என்றும் தங்கும் மேலும் செழிக்கும்..பெரிய கமெண்ட்டுன்னு திட்டவேணாம்..என்னுடைய சந்தோஷமாய் இதை உணர்கிறேன்.. நம் நட்புக்கு இது மட்டுமே என்னால் இயல்கிறது...என் மற்றும் நண்பர்களின் வாழ்த்தும் ஊக்குவிப்பும் என்றும் உங்களுக்கு உண்டு தமிழ்..மேலும் செழிக்க வாழ்த்துக்கள் மடியில் இருக்கும் விலைமதிப்பில்லா மாணிக்கங்களுக்கு அன்பின் முத்தங்கள்..

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சகோதரரே. மேலும் பலரை வாழ்விக்கும் அளவுக்கு வளர்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சகோதரரே. மேலும் பலரை வாழ்விக்கும் அளவுக்கு வளர்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  16. மேன்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  17. தமிழ் சொல்ல மறந்துட்டேன் போட்டோவில் நிஜமே நல்லவன் மாதிரியே இருக்கீங்க திருனீரூ வ்ச்சிகிட்டு..

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  19. அன்பின் தமிழ் அமுதன் - துவங்கிய செயல் வெற்றிகரமாக நடைபெற இறைவனின் கருணை என்றுமிருக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அன்பின் தமிழ் அமுதன் - துவங்கிய செயல் வெற்றிகரமாக நடைபெற இறைவனின் கருணை என்றுமிருக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  21. எல்லாம் எங்க ஊர்ல பொண்ணு கட்டின அதிர்ஷ்டம்தான்ற வரலாற்றை மறைச்சுட்டு என்னா பில்டப்பு :-))) நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. அக்ஷய நந்தினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ( அக்டோபர் 2 தானே ). நட்புடன் சீனா

    ReplyDelete
  23. நல்வாழ்த்துக்கள் ஜீவன்!

    ReplyDelete
  24. Blogger cheena (சீனா) said...

    அக்ஷய நந்தினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ( அக்டோபர் 2 தானே ). நட்புடன் சீனா//

    21/11... seena saar..;;)))

    ReplyDelete
  25. கடந்த முறை சந்திக்க வந்தபோது வேலை நடைபெற்று கொண்டிருந்தது. இப்பொழுது வேலைகள் முடிவுற்று சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. சிறப்புற வாழ்த்துகள் அமுதன்.

    ReplyDelete
  27. அஷ்ட லெக்ஷ்மியின் அருள் கூடி மேலும் மேலும் அமோகமாய் வர அவளை பிரார்த்திக்கிறேன்!! வாழ்த்துக்கள் சார்!!

    ReplyDelete
  28. ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.! எனது இந்த புதிய முயற்சி செழிக்கவும் வெற்றி அடையவும் தங்களின் மேலான வாழ்த்துகளையும்


    sure anna ...

    ReplyDelete
  29. மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள் அமுதன்.

    அட்சயா - விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  30. தளைத்துக் கிடப்பீர்கள். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  31. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  32. தெய்வத்தால் ஆகாதெனினும் மெய் வருத்த கூலி தரும்-- இலக்கணம் நீங்கதான். குட்டிப்பசங்களுக்கும் சேர்த்து வாழ்த்துகள்!

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. மென்மேலும் வெற்றி பெற்றுச் சிறக்க வாழ்ததுக்கள்

    ReplyDelete
  35. அண்ணே வாழ்த்துக்கள் உழைப்புக்கும், உயர்வுக்கும்....

    ReplyDelete
  36. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.. ரொம்ப சந்தோசம் :)

    ReplyDelete
  37. மேலும் மேலும் வளர்ந்து உங்கள் ஸ்தாபனம் ஆலமரம் போல் செழிக்க வாழ்த்துக்கள் .

    மனமார்ந்த வாழ்த்துடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  38. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  39. இனிய வாழ்த்துகள் நண்பரே.

    நேர்மையான கடும் உழைப்பு நிச்சயம் ஒரு நாள் மிகப்பெரும் பலன் தரும். அதை நானும் அனுபவித்துள்ளேன். மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்

    ReplyDelete
  40. பழகுவதற்கு இனிய மனிதர் தமிழ் அமுதன்.வாழ்த்துக்கள் தமிழ்!

    ReplyDelete
  41. தங்களின் புது முயற்சி மிகப்பெரும் வெற்றியடையவும் தங்கள் வாழ்வில் மென்மேலும் சிறப்புடனும் மகிழ்வுடனும் வாழ வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் தொழிலில் நீங்கள் மென்மேலும் வளர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  43. வியாபாரம் மேன் மேலும் பெருக வாழ்த்துகள் தமிழ்.

    ReplyDelete
  44. அருமை.
    பதிவுலகை அருமையாக பயன்படுத்துகிறீர்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. மேலும் வளர வாழ்த்துக்கள் ,
    ஒன் கிராம் நகைகளும் இருக்கா உங்க கிட்ட ?

    ReplyDelete
  46. இதனை படிக்கவே சந்தோஷமாய் இருக்கிறது தமிழ். மேலும் மேலும் வளர்ந்து சிறப்புற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  47. தங்கள் வியாபாரம் செழித்தோங்கவும்
    தாங்களும் தங்கள் குடும்பத்தாரும்
    எல்லா நலமும் வளமும் பெற்று தொடர்ந்து சிறந்து வாழவும்
    எல்லாம் வலலவனை வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  48. கடும் உழைப்பு பலன் தராமல் போனதில்லை..மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள். மற்றவருக்கு முன்னுதாரணமாய் இருந்துள்ளீர்கள்..

    பாராட்டுகளும்..

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள்.மேலும் வாழ்வில் முன்னேற வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. மனமார்ந்த வாழ்த்துக்கள்ணே... மென்மேலும் உங்களின் அனைத்து முயற்சிகளும் செழித்தோங்கட்டும்..

    ReplyDelete
  51. மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. தங்களது நிறுவனம் பெரிய அளவில் அனைத்து நகரங்களிலும் பிரம்மாண்டமாய் தொடங்கிட ....அனைவருக்கும் பொதுவான
    இறைவனையும் குருவையும் வேண்டி வணங்குகிறேன் ..........வாழ்த்துக்கள் அமுதன் .

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் சகோதரரே தாங்கள் எடுத்த இந்த முயற்சி எக்குறையும் இன்றி
    சிறப்பான நல்ல இலாபத்தையும் நன் மதிப்பையும் பெற்று மென்மேலும்
    வளம்பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .தங்களிற்கு என்றுமே அம்பாள் அனுக்கிரகம் கிட்டட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  56. நல்ல மனிதனுக்கு அடையாளமாய் இத்தனை பேரோட அன்பையும் மதிப்பையும் ஆசிர்வாததையும் வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறீர்கள் கண்டிப்பா செழிப்பாய் வருவீர்கள் என்பதற்கு இது முதல் அடையாளம்.மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.இந்த பக்கம் வந்தேன் அப்படியே எட்டிப்பார்த்திட்டு போலாமுன்னு...

    ReplyDelete
  57. எப்படியோ இந்த இடுகை என் கண்ணில் படாமல் போய்விட்டது.,

    தொழில் ஸ்தாபனமான அட்சயா ஜெம்ஸ்&ஜுவல்ஸ் உங்களது உழைப்புக்கு நிச்சயம் தகுந்த களமாக இருந்து, மென்மேலும் வளர்ந்து உங்கள் குடும்பத்தினருக்கு பயனாவதாக..


    என வாழ்த்துகிறேன்

    நிகழ்காலத்தில் சிவா

    ReplyDelete
  58. மனமார்ந்த வாழ்த்துகள்!!! வாழ்க வளமுடன்!!!

    //சொன்னவுடன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மதுக்கூர் பெரிய ஊரில்லை. தஞ்சை மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்று//

    மதுக்கூர் எப்போதும் என் மனதில் இருக்கும் ஊர். காரணம்... ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் மதுக்கூரில் வசித்த அக்கா வீட்டிற்கு சென்ற முதல் வெளியூர் பயணம். இன்று உலகம் முழுவதும் சுற்றினாலும் அந்த இரண்டு வார நினைவுகளை என்றும் மறக்க முடியாது. என் மாமா தெட்சினாமூர்த்தி வாண்டையார் கிட்டத்தட்ட 20 வருடங்கள் மதுக்கூரில் போலிசாக வேலை பார்த்தார். அவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் !!!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  59. ஜீவன்...நாளானானாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.உங்கள் மனம் போல எல்லாம் சந்தோஷமாய் அமைய நானும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் !

    ReplyDelete
  60. ஸலாம் சகோ.தமிழ் அமுதன்,
    உங்கள் எண்ணம் போலவே இவ்வணிகத்தில் எவர் இடையூறும் இன்றி, மென்மேலும் உழைத்து இன்னும் இலாபம் பெற்று, சீரும் சிறப்பொடு இன்பமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு நன்றி மதுக்கூராரே.

    ReplyDelete
  61. உங்கள் வலைதளத்திற்கு முதல் தடவையாக வருகிறேன். வந்ததும் கடின உழைப்பால் உயர்ந்து கொண்டிருக்கின்ற உங்கள் பதிவை படித்தேன். மிக சந்தோஷம். உங்கள் வியாபாரம் நன்கு செழித்தோங்கவும் நீங்களும் உங்கள் குடும்பத்தார் அனைவரும்
    எல்லா நலமும், வளமும் பெற்று தொடர்ந்து சிறந்து வாழவும் நான் எல்லாம் வலல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  62. அதிஷ்ட்டம் என்பது யாதெனில் முழுக்க முழுக்க உழைக்க வாய்ப்பு கிடைப்பதுதான்.!

    உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ !

    வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  63. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  64. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
    May God Bless ur efforts and help u to come up more in the further days..
    regards/ Anitha

    ReplyDelete
  65. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
    May god Bless you and help to come up more in your further days.

    Regards/ Anitha

    ReplyDelete

123