Friday, January 13, 2012

என் உயிரினும் மேலான மரணத்திற்கு ...!


மரணம் நேரும் அந்த கடைசி நொடி எப்படி இருக்கும் ..? உயிர் பிரியும்போது வலிக்குமா ..? முச்சு திணறுமா .? சாக போகின்றோமே என்ற பயம் ,வேதனை ஏற்படுமா..? உடலை விட்டு உயிர் பிரியும்போது ஒரு மாபெரும் சுகம் உண்டாகும் என்றே தோன்றுகின்றது ..! மரணத்துக்கு பின் வயோதிகமில்லா அற்புத ஆனந்த பெருவாழ்வு ஒன்று இருக்கும் என்பது உண்மையா ..? பால் வெளியில் சுதந்திரமாய் சுற்றி திரியலாமாமே..! மரணம் நம் அனுமதியுடன் வரவேண்டும் மெல்ல மெல்ல சுகமாய் நம்மை மரணம் தழுவ வேண்டும் ..! இதமாய் உயிர் பிரிய வேண்டும் ..! மரணத்தை அனுபவித்து களிக்க ஆசை ஆர்வம் பிறக்கும் அதே நேரத்தில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதே என்ற கவலையும் பிறக்கின்றது ..!