என்னை கவர்ந்தவர்கள்

என்னை அழைத்த மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்களுக்கு நன்றி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கும் ஒரு முகம் உண்டு
சில நாட்டை சேர்ந்தவர்கள் உழைப்பாளிகள்.சில நாட்டை
சேர்ந்தவர்கள் சுறு சுறுப்பு மிகுந்தவர்கள் .

ஆனால்!!!

நம் இந்தியர்கள் முகம் எது ?
வேறு நாட்டு மன்னர்கள் நம் நாட்டின் மீது படைஎடுத்து வரும்போது!!!
இந்தியர்கள் அப்பாவிகள் !
ஆங்கிலேயர்கள் நம்நாட்டிற்கு வரும்போது!!!
இந்தியர்கள் கோழைகள்! எதிர்க்க துணிவு இல்லாதவர்கள் !
காந்தியடிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்து அறப்போராட்டம்
நடத்தியபோது!!
இந்தியர்கள் அகிம்சாவாதிகள் ! வன்முறை விரும்பாதவர்கள் !!!

ஆனால் !

இந்தியர்களுக்கு இன்னொரு முகம் உண்டு .
அதுதான் !!! உலக மக்களை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்த

''ஆங்கிலேயர்களை அலற வைத்த இந்தியர்களின்
வீரத்திருமுகம்''

அப்படிப்பட்ட வீரத்தையும் ,துணிவையும் ,இந்தியர்களுக்கு
வரவைத்து இந்தியர்களை வீறுகொண்டு எழ செய்தவர்
மாவீரர் ''தக தகக்கும் தங்க அம்பு '' என போற்றப்பட்ட
''நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் ''

இவரே என்னை மிகவும் கவர்ந்தவர்!


நேதாஜி படையில் நம் வீர பெண்கள்!!

நம் இந்திய பெண்களுக்கென சிறந்த மதிப்பும் மரியாதையும்
உண்டு. அவர்கள் பண்பு,மற்றும் அவர்களின் கலாசாரம்
ஆகிய காரணங்களுக்காக பெரிதும் போற்ற படுகின்றனர்.
நம் நாட்டு பெண்களில் என்னை கவர்ந்தது நம்நாட்டு
பெண்களின் வீரம்தான்.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நேதாஜி இராணுவம்
அமைக்கிறார்.பெரும் எண்ணிக்கையில் மக்கள்
நேதாஜியின் ராணுவத்தில் சேருகிறார்கள்.அதில்
பெண்களும் பெருமளவில் சேருகிறார்கள் .இராணுவத்தில்
சேர்க்கப்பட்ட பெண்கள் செவிலியர் பணியிலும் மற்ற
இதர பணிகளிலும் ஈடு படுத்த பட்டனர்.ஆனால்
இராணுவத்தில் சேர்ந்த பெண்களோ ஆயுதம் தாங்கி
போராட விரும்பினார்கள்.ஆனால்! நேதாஜி அவர்கள் ஆயுதம்
தாங்கி போரிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று
கொள்ளவில்லை. பின்னர் அந்த பெண்கள் தங்கள்
ஆயுதம் தாங்கி போராட விரும்புவதாக
இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி நேதாஜிக்கு அனுப்பி
வைத்தனர்.

அவர்கள் உறுதியையும் வீரத்தையும் மதித்த நேதாஜி
பெண்கள் படை ஒன்றினை அமைத்தார்.அந்த படைக்கு
கேப்டன் லட்சுமியை தலைமைதாங்க செய்தார்.
நேதாஜியின் படையில்ஆயுதம் தாங்கி போரிட விரும்பிய
நம்நாட்டு வீர பெண்கள்என்னை கவர்ந்தவர்கள்.


எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ ? அங்கெல்லாம் ஒரு உறுதி இருக்கும்!

எங்கெல்லாம் பெண்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்களோ? அங்கெல்லாம் ஒரு தர்மம் இருக்கும்!




இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

ரம்யா
அமிர்த வர்ஷினி அம்மா
என்வானம் அமுதா
நட்புடன் ஜமால்
புதியவன்

ஆகியோர்.


--------------------------------------------
>

சோழ நாட்டு இளவரசன்

துயில் எழுந்து காலை கடன் முடித்து,அடுத்து நீராடல்
இரண்டு தாதி பெண்கள் அழைத்து செல்ல
வெது வெதுப்பான வெந்நீரில் தாதியர் நீராட்டிவிட
நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி,
முத்துமாலை,முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து,
அறுசுவையுடன் கூடிய
காலை உணவு.

அரசவை!

இளவரசர் வாழ்க!!! இளவரசர் வாழ்க!!!

என்ற கோஷங்கள் முழங்க! அரசவை விஜயம்!!
மக்கள் குறை கேட்டல்,புலவர் பாடி செல்லல்
எல்லாம் முடிகிறது.

நண்பகல்!

அரண்மனையின் மேல்தளம் !!
குளிர்ந்த வெயில்!! வயல் வெளியால் நெய்யப்பட்ட
என் சோழ தேசம். நிறைந்த எங்கள் காவிரித்தாய்!!
தூரத்தில் மக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன்
விவசாய பணிகளில்! ஆங்காங்கே குதிரை வீரர்கள்!
இரண்டு வீரர்கள் புழுதியை கிளப்பியபடி குதிரையில்
வேகமாக சென்றுகொண்டு இருக்க! மன நிறைவுடன்
என் தேசத்தை ரசிகின்றேன் !! போரடிக்கும் வேலைக்கு
சேர நாட்டில் இருந்து பதினைந்து யானைகள்
வாங்க பட்டு உள்ளன.அவை இன்னும் வந்து
சேரவில்லை இன்னும் இரண்டு தினங்களில்
அவை வந்துவிடும் அவற்றை பழக்க கூடவே
பாகன்களும் வருகிறார்கள்.

கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர்,
நம் இளவரசருக்கு பெண் தேட துவங்கியது
முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.

மதிய உணவு மெல்லிய போதை தரும் சுவையான
பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன்.
தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..








ஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,
ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும்
தூங்க வேண்டியது? எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!

என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன்
என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல
அப்புறம் என்ன இலக்கண தமிழு )

ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!


.................................................
>