Friday, December 5, 2008

தெய்வம், இறைவன்

சபரி மலைக்கு மாலை போட்டு இருக்குறதால
தெய்வம்,இறைவன் இதெல்லாம் பத்தி பெரியவங்க
சொன்னதுல எனக்கு புடிச்ச சிலத சொல்லுறேன்
கேளுங்க..........


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

(கவிஞர் வாலியின் பாபு திரைப்பட வரிகள்)

எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்
அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு
இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்
ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்
தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே
இறைவன் பெரிதும் விரும்புகிறார்.
(சுவாமி விவேகானந்தர்)



எனக்கு புடிச்ச குறள் ஒன்னு

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலிதரும்












37 comments:

  1. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலிதரும்


    அப்படி இருக்க மாலை எதுக்கு..

    இருந்தாலும் சாமி குத்தம் ஆகிற போகுது..

    அதான்... சாமி சரணம்...

    ReplyDelete
  2. நல்ல படியா மலைக்கு போய்ட்டு வாங்க. சுவாமியே சரணம் ஐயப்பா!!!

    ReplyDelete
  3. //சபரி மலைக்கு மாலை போட்டு இருக்குறதால//

    அப்ப நீங்க சாமியாயிட்டிங்களா?

    ReplyDelete
  4. மாலையையும் போட்டுகிட்டு நாத்திகம் பேசுரிங்க,
    என்னை மாதிரி நாத்திகர்கள் கடவுள் வேண்டாம்னா சொன்னோம்.
    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்னு தான் சொல்றோம்

    ReplyDelete
  5. சாமியேய் சரணம் ஐயப்பா.
    சபரி மலை யாத்திரை இனிதாய் அமைய ஐயப்பன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

    ReplyDelete
  6. மூன்றும் நன்று. விவேகானந்தர் சொன்னதைத்தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்றும் சொல்கிறார்கள். சரிதானே?

    ReplyDelete
  7. கொண்டிருக்கும் நம்பிக்கை எதுவாகினும் - தெளிவாயிருக்கனும் - உறுதியோட இருக்கனும்.

    அண்ணா நீங்கள்ளாம் பெரியவா உங்களுக்கு சொல்ல தேவையில்லை.

    இருந்தாலும் மனதில் தோன்றியதை சொல்லனும்ல.

    பயனம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்
    அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு
    இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்
    ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்
    தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே
    இறைவன் பெரிதும் விரும்புகிறார்.
    (சுவாமி விவேகானந்தர்)

    இதுதான் சரி "கடமை" தனக்கானதாக இருந்தால் கூட போதும்.

    ReplyDelete
  9. அப்புறம் இந்த சமயத்திலேயே.தஞ்சை பதிவ போட்டுருங்க.

    ReplyDelete
  10. நல்லபடியா கோயிலுக்கு போயிட்டு வாங்க ஜீவன்.

    ReplyDelete
  11. //
    பல நூல் படித்து நீ அறியும் கல்வி
    பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
    //


    அர்த்த முள்ள வரிகள், இந்த வரிகளை மனதில் இருத்தி,
    நம் செயல்கள் இருக்குமேயானால்
    துன்பம் ஏது? இன்பம் தான் நமக்கு.
    நல்லபடியாக சபரிமலைக்கு சென்று வாருங்கள்.

    சுவாமியே சரணம் ஐயப்பா!!!

    ReplyDelete
  12. //எனக்கு புடிச்ச குறள் ஒன்னு

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலிதரும் //

    இந்தக் குறள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...
    பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. சாமியேய் சரணம் ஐயப்பா.
    சபரி மலை யாத்திரை இனிதாய் அமைய ஐயப்பன் உங்களுக்கு அருள் புரியட்டும்.நல்லபடியா கோயிலுக்கு போயிட்டு வாங்க ஜீவன்.
    சாமி சரணம்.

    ReplyDelete
  14. இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்! கடவுளின் கிருபையும் அருளும் உங்களோடே இருக்கட்டும்!

    ReplyDelete
  15. /// சிம்பா said...

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலிதரும்




    இருந்தாலும் சாமி குத்தம் ஆகிற போகுது..

    அதான்... சாமி சரணம்...///

    வாங்க சிம்பா!

    /// அப்படி இருக்க மாலை எதுக்கு///..

    நல்ல கேள்வி இப்படியெல்லாம் நீங்க கேக்கணும்

    அதுக்குதான் அப்படி!

    ReplyDelete
  16. /// அமுதா said...

    நல்ல படியா மலைக்கு போய்ட்டு வாங்க. சுவாமியே சரணம் ஐயப்பா!!!///


    நன்றி மேடம்!

    ReplyDelete
  17. /// வால்பையன் said...

    //சபரி மலைக்கு மாலை போட்டு இருக்குறதால//

    அப்ப நீங்க சாமியாயிட்டிங்களா?///

    மாலை போட்டுட்டா சாமி ஆயிடுவாங்களா?

    கேள்விக்கு நன்றி அருண்!

    ReplyDelete
  18. /// வால்பையன் said...

    மாலையையும் போட்டுகிட்டு நாத்திகம் பேசுரிங்க,
    என்னை மாதிரி நாத்திகர்கள் கடவுள் வேண்டாம்னா சொன்னோம்.
    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்னு தான் சொல்றோம்///

    கல்வி,அன்பு,உழைப்பு,பிறருக்கு உதவுதல், இதெல்லாம் இறைவன்

    அப்படின்னு சொன்னா? நாத்திகமா?

    இறைவன் என்ற பெயரில் செய்யப்படும்

    அயோக்கியத்தனங்களை எதிர்ப்பதுதான்

    நாத்திகம்!

    நம்நாட்டு வளர்ச்சிக்கு நாத்திகம்

    அவசியம்!

    மிக்க நன்றி அருண்!

    ReplyDelete
  19. // வித்யா said...

    சாமியேய் சரணம் ஐயப்பா.
    சபரி மலை யாத்திரை இனிதாய் அமைய ஐயப்பன் உங்களுக்கு அருள் புரியட்டும்//


    மிக்க நன்றி வித்யா !

    ReplyDelete
  20. /// ராமலக்ஷ்மி said...

    மூன்றும் நன்று. விவேகானந்தர் சொன்னதைத்தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்றும் சொல்கிறார்கள். சரிதானே?///

    நீங்க சொன்னா சரிதான்!

    அம்மா சொன்னா ஆண்டவன் சொன்னா மாதிரி!

    ReplyDelete
  21. // அதிரை ஜமால் said...

    கொண்டிருக்கும் நம்பிக்கை எதுவாகினும் - தெளிவாயிருக்கனும் - உறுதியோட இருக்கனும்.

    அண்ணா நீங்கள்ளாம் பெரியவா உங்களுக்கு சொல்ல தேவையில்லை.

    இருந்தாலும் மனதில் தோன்றியதை சொல்லனும்ல.

    பயனம் இனிதே அமைய வாழ்த்துக்கள்//

    ரொம்ப நன்றி ஜமால்!

    ReplyDelete
  22. /// குடுகுடுப்பை said...

    எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்
    அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு
    இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்
    ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்
    தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே
    இறைவன் பெரிதும் விரும்புகிறார்.
    (சுவாமி விவேகானந்தர்)

    இதுதான் சரி "கடமை" தனக்கானதாக இருந்தால் கூட போதும்.//




    நீங்க சொல்லுறதும் சரிதான்

    நன்றி குடுகுடுப்பையாரே!

    ReplyDelete
  23. /// குடுகுடுப்பை said...

    அப்புறம் இந்த சமயத்திலேயே.தஞ்சை பதிவ போட்டுருங்க//

    மேட்டர ரெடி பண்ணி வைச்சு இருக்கேன்

    நம்ம நண்பர்கள் பதிவு போடட்டும் கொஞ்ச இடைவெளி

    கிடைக்கும் போது போடுறேன்.

    ReplyDelete
  24. // தாரணி பிரியா said...

    நல்லபடியா கோயிலுக்கு போயிட்டு வாங்க ஜீவன்.///


    மிகுந்த நன்றிகள்!

    ReplyDelete
  25. // RAMYA said...

    //
    பல நூல் படித்து நீ அறியும் கல்வி
    பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
    //


    அர்த்த முள்ள வரிகள், இந்த வரிகளை மனதில் இருத்தி,
    நம் செயல்கள் இருக்குமேயானால்
    துன்பம் ஏது? இன்பம் தான் நமக்கு.
    நல்லபடியாக சபரிமலைக்கு சென்று வாருங்கள்.

    சுவாமியே சரணம் ஐயப்பா///


    நல்லது ரம்யா மிக்க நன்றி!

    ReplyDelete
  26. // புதியவன் said...

    //எனக்கு புடிச்ச குறள் ஒன்னு

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலிதரும் //

    இந்தக் குறள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...
    பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...///


    நன்றி புதியவன்!

    ReplyDelete
  27. /// வைகரைதென்றல் said...

    சாமியேய் சரணம் ஐயப்பா.
    சபரி மலை யாத்திரை இனிதாய் அமைய ஐயப்பன் உங்களுக்கு அருள் புரியட்டும்.நல்லபடியா கோயிலுக்கு போயிட்டு வாங்க ஜீவன்.
    சாமி சரணம்.///

    நன்றி முருகன்!

    ReplyDelete
  28. // சந்தனமுல்லை said...

    இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்! கடவுளின் கிருபையும் அருளும் உங்களோடே இருக்கட்டும்!//

    நன்றி பப்பு அம்மா!

    ReplyDelete
  29. தாமதமாக வந்துட்டேன்..
    சாமி சரணம்..

    ReplyDelete
  30. //எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்
    அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு
    இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்
    ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்
    தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே
    இறைவன் பெரிதும் விரும்புகிறார்.
    (சுவாமி விவேகானந்தர்)
    //

    நல்ல கருத்தை நினைவு கூர்ந்த சாமிக்கு நன்றி..

    ReplyDelete
  31. வாழ்த்துகிறோம் பயணம் நன்றாக அமைய..

    ReplyDelete
  32. நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,

    ம், அறிந்தும் அறியாமலும்,
    தெரிந்தும் தெரியாமலும்
    செய்த சகல குற்றங்கள் (ப்லாகில் மொக்கை போட்டது உட்பட)அனைத்துயும்
    பொறுத்து காத்து ரக்‌ஷிக்க வேண்டும்
    ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம்படி வாழும் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணமய்யப்பா.

    ReplyDelete
  33. இறைபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களும், ப்ரார்த்தனைகளும்.

    ReplyDelete
  34. /// PoornimaSaran said...

    வாழ்த்துகிறோம் பயணம் நன்றாக அமைய..///

    மிக்க நன்றி பூர்ணிமா!

    ReplyDelete
  35. // அமிர்தவர்ஷினி அம்மா said...

    நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,///

    எப்படிங்க?

    ///இறைபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களும், ப்ரார்த்தனைகளும்.//

    நன்றி! நன்றி!!நன்றி!!!

    ReplyDelete
  36. ஜீவன் said...
    // அமிர்தவர்ஷினி அம்மா said...

    நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,///

    எப்படிங்க?
    ம், ஒருதடவை நீங்க வில் டு லிவ் ரம்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க, அதை வெச்சுதான்.

    ReplyDelete
  37. // அமிர்தவர்ஷினி அம்மா said...

    நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,///

    எப்படிங்க?
    ம், ஒருதடவை நீங்க வில் டு லிவ் ரம்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க, அதை வெச்சுதான்.///

    ஓஹோ! நல்ல நியாபக சக்தி உங்களுக்கு!

    ReplyDelete

123