Tuesday, March 17, 2009

தமிழ் நாட்டு தமிழர்களும், தமிழீழ தமிழர்களும் .......



தொப்புள் கொடி உறவுதான் நாங்கள்!

ஒருதாய் வயிற்றில் பிறக்கவில்லை!

ஆனால்!

தமிழ் தாய் வயிற்றில் பிறந்தோம்!!!


மதுக்கூர் க.ஆனந்தன்.



....................................






24 comments:

  1. வேதனைகளை அள்ளித் தெளிக்கின்றது.. ஒவ்வொரு எழுத்தும்.

    ReplyDelete
  2. நாலே வரியில்
    நச்

    இப்போவாவது இந்த தமிழ்பேசும் அரசியல்வாதிகள் திருந்துவார்களா

    ReplyDelete
  3. \\தொப்புள் கொடி உறவுதான் நாங்கள்!
    ஒருதாய் வயிற்றில் பிறக்கவில்லை!
    ஆனால்!
    தமிழ் தாய் வயிற்றில் பிறந்தோம்!!! \\

    அண்ணா மிகச்சிறப்பு

    நல்ல பகிர்வு

    ReplyDelete
  4. டெம்ப்ளேட் தூள் அண்ணாத்தே!

    ReplyDelete
  5. உண்மைதான். ஆனால் உணர்ச்சிகளைத் தூண்ட சில தீக்குளிப்புகளும் தேவைப்படுகின்றன...

    ReplyDelete
  6. //
    தொப்புள் கொடி உறவுதான் நாங்கள்!
    ஒருதாய் வயிற்றில் பிறக்கவில்லை!
    ஆனால்!
    தமிழ் தாய் வயிற்றில் பிறந்தோம்!!! //

    நிஜம் கூட வரிகளில் சொல்லும்போது மனதுக்கு வலிக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அண்ணா..புது டெம்ப்ளட் எல்லாம் போட்டுடீங்க..சூப்பர்.அதுவும் header ல மூணு பறவைகள் பறக்குறது சூப்பர் ..மாலை நேர சூரியனும் சூப்பர்.

    ReplyDelete
  8. //தொப்புள் கொடி உறவுதான் நாங்கள்!
    ஒருதாய் வயிற்றில் பிறக்கவில்லை!
    ஆனால்!
    தமிழ் தாய் வயிற்றில் பிறந்தோம்!!! //

    நாலே வரிகளில் கவிதை உணர்வுப் பூர்வமாக இருக்கு...நல்ல பகிர்வு...

    புது டெம்ப்லேட் அழகா இருக்கு ஜீவன் அண்ணா...

    ReplyDelete
  9. =புது டெம்ப்ளேட்

    நல்ல கவிதை பகிர்தல் பதிவு

    கலக்கறீங்கண்ணே


    (டெம்ப்ளேட் மாத்துனதுக்கு ட்ரீட் எங்க)

    ReplyDelete
  10. சூப்பர் கவுஜ...

    வீட்டிற்கு புதுவண்ணம் எல்லாம் அடிச்சி டெகரேட் பண்ணியிருக்கீங்க போல..

    ReplyDelete
  11. //குடந்தைஅன்புமணி said...
    உண்மைதான். ஆனால் உணர்ச்சிகளைத் தூண்ட சில தீக்குளிப்புகளும் தேவைப்படுகின்றன...
    //

    அதென்னவோ வாஸ்தவம் தாங்க..

    ReplyDelete
  12. கை கோர்த்தீர்கள்.நன்றி என்கிற வார்த்தைக்கு அப்பால் தேடுகிறேன்,
    ஏதாவது கிடைக்குமா என்று.இல்லவே இல்லை.

    ReplyDelete
  13. தெளிவான வார்த்தைகள் அத்தனையும் வலி தாங்கியவை!

    ReplyDelete
  14. தினசரிகளை நாங்கள் நம்புவதை விட்டு நாட்கள் ஆகி விட்டது! தினம் தினம் வேதனை! இறைவா! ஏன் இந்த சோதனை!தமிழனுக்கு பிறந்தவர்கள், அடுக்குமொழி பேசி, தலைவனான பின்பு, பதவி சுகத்திலே திளைத்து.....! இன்று இருக்கும் நிலையோ "மனைவி' என்று நம்பி பல ஆண்டுகள் வாழ்ந்த பின், அவள் தினம் கணவனை ஏமாற்றி வேசித் தொழில் தான் செய்து வந்தாள்" எனத் தெரியவரும், போது வரும் அதிர்ச்சியை விட அதிகம்!

    ReplyDelete
  15. நான்கு வரிகளில் எவ்வளவு அர்த்தங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

    அவரவர்களின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது.

    ஒன்றும் இல்லாத வரிகள் என்றால் ஒன்றும் இல்லை.

    அடங்கியுள்ள அர்த்தங்களை ஆராய்ந்தால் அத்துணை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.

    ஜீவன் உங்களை என்னான்னு சொல்லறது, அருமையான ரசிகர்.

    ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத் தான் இவ்வளவு ஆழாமான கருத்தை
    நிதானமாகச் சொல்ல முடியும்.

    தமிழ்த் தாய்க்கு மகுடம் சூட்டி விட்டீர்கள்.

    உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கின்றேன்.

    மகுடம் சூட்ட தமிழ் அன்னைக்கு!!

    ReplyDelete
  16. விடியல் வரும். . .
    நம்புவோம். . .இந்த ஓட்டுப் பொறுக்கிகளை நம்பாமல். . .

    ReplyDelete
  17. அன்புள்ள ஜீவன் ,
    உங்கள் பெயர் உச்சரிக்கும் போதே ஜீவன் உடம்பில் ஓடுது .தங்கள் பெற்றோர் வாழ்க .கவிதை சூப்பர் .கவிதை எழுத்துகளாக மட்டும் இல்லாமல் நடைமுறையில் நாம் இருப்போம்

    ReplyDelete
  18. நன்றி! ராகவன் அண்ணே!

    நன்றி ! அபுஅஃப்ஸர்!

    நன்றி! ஜமால்!

    // ஜோதிபாரதி
    மதுக்கூர் ஆனந்தனா?///

    ஆமா அத்திவெட்டியாரே நம்ம மதுக்கூர் நண்பர்தான் அவர்!

    நன்றி! ராமலக்ஷ்மி அம்மா!!

    நன்றி! அன்புமணி !

    நன்றி!! VASAVAN !

    நன்றி! Rajeswari !

    நன்றி ! புதியவன்!


    வாங்க! அமிர்தவர்ஷினி அம்மா .

    //(டெம்ப்ளேட் மாத்துனதுக்கு ட்ரீட் எங்க)//

    அடுத்தடுத்து விகடன் குட் ப்ளாக்ல கலக்குறீங்க
    நீங்கதான் ட்ரீட் தரனும் ;;))

    நன்றி !! அ.மு.செய்யது!!

    வாங்க! ஹேமா!!

    நன்றி!! Poornima Saravana kumar

    /// greatlover said...

    தினசரிகளை நாங்கள் நம்புவதை விட்டு நாட்கள் ஆகி விட்டது! தினம் தினம் வேதனை! இறைவா! ஏன் இந்த சோதனை!தமிழனுக்கு பிறந்தவர்கள், அடுக்குமொழி பேசி, தலைவனான பின்பு, பதவி சுகத்திலே திளைத்து.....! இன்று இருக்கும் நிலையோ "மனைவி' என்று நம்பி பல ஆண்டுகள் வாழ்ந்த பின், அவள் தினம் கணவனை ஏமாற்றி வேசித் தொழில் தான் செய்து வந்தாள்" எனத் தெரியவரும், போது வரும் அதிர்ச்சியை விட அதிகம்!///

    வாங்க நண்பரே! ஒரு அப்பாவி தமிழன் இப்படி ஏமாற்றப்படுவது உண்மைதான்!
    தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அப்படிதான் நடந்து கொள்கிறார்கள்!

    ஆனால்? இங்கே அரசியல் இல்லை! இது உணர்வின் வெளிப்பாடு மட்டுமே!
    நடிப்பதற்கு நாம் ஒன்றும் ''கலைஞர்'' கள் அல்லவே!

    வாங்க ரம்யா நன்றி!!

    நன்றி செவ்வானம்!!!

    நன்றி கோவை சக்தி!!

    ReplyDelete
  19. தொப்புள் கொடி அறுந்ததும் உறவு அறுந்ததா?

    ReplyDelete
  20. அறுந்த கயிறு ஒட்டாது!

    ReplyDelete
  21. இராகவன் நைஜிரியா said...

    வேதனைகளை அள்ளித் தெளிக்கின்றது.. ஒவ்வொரு எழுத்தும்.//

    நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும்போது

    ReplyDelete

123