Monday, March 23, 2009

நான் ஹிந்து! நீ முஸ்லீம்! நாம் யார்?

நண்பர் புதுகை அப்துல்லா ஒரு பதிவு எழுதி இருக்கிறார்!
கிர்மினல்கள்
! கிர்மினல்களே! என்ற அந்த பதிவில் நேசமுடன் இஸ்லாம் என்ற பதிவரின் பதிவில் பெற்ற மகளை கற்பழித்த ஹிந்து தந்தை கைது. என்ற தலைப்பில் இடப்பட்டு இருந்த பதிவில் ''ஹிந்து தந்தை'' என்று மதத்தை குறிபிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முஸ்லிம் தீவிர வாதிகள் என பொதுவில் கூறபடுவதால் மன வேதனையை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய சிறந்த பதிவுகளில் ஒன்றான தீபாவளி நினைவுகள் பதிவினை மறுபதிவும் செய்து இருக்கிறார்! இதன் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். நீர்,நிலம்,காற்று என அனைத்தையும் வரும் சந்ததிகளுக்கு மாசுபடுத்திக் குடுத்து விட்டோம். அந்த வரிசையில் மதத்தைச் சேர்க்காமல் இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருப்பதை மறவோம்.
இந்த கருத்தில் மேலும் உயர்ந்து நிற்கிறார்


எங்கள் ஊர் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் கலந்து வாழும் பகுதி! அங்கே எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உண்டு.சிறுவயதுமுதல் ஒரே குடும்பமாக பழகிய பல நட்புகளும் அங்கே உண்டு.தீபாவளி ,ரம்ஜான் எல்லாம் ஒன்றாக கொண்டாடி இருக்கிறோம். ரம்ஜான் பண்டிகையின் போது பண்டிகை காரர்கள் வீட்டில் இருக்கும் பட்சனங்களைவிட எங்கள் வீட்டில் அதிகம் இருக்கும்.எல்லா நண்பர்கள் வீட்டிலிருந்தும் பலகாரங்கள் வந்துவிடும். தீபாவளி சமயங்களில் அவர்கள் வீட்டிலும் அப்டித்தான்.




டேய்! போன தீபாவளிக்கு உங்க வீட்டுல செய்ஞ்ச தேங்காப்பார ரொம்ப நல்லா இருந்துச்சி இந்தவாட்டியும் அம்மாகிட்ட சொல்லி செய்யசொல்லு!! என இஸ்லாமிய நண்பனுக்கு பிடித்த பட்சணங்கள் ஹிந்து வீட்டில் செய்த சம்பவங்களும் உண்டு .



நட்பிற்குள் மதம் நுழையுமா ?

நல்ல உறுதியான,புரிந்துணர்வு கொண்ட எந்த ஒரு நட்பிற்குள்ளும் மதம் நுழைய முடியாது! எனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான மிக நெருங்கிய நண்பன் இருக்கிறான் அவன் பெயர் இப்ராம்ஷா. இப்போது துபாயில் இருக்கிறான். என் எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்தவன் முக்கிய நேரங்களில் இடுக்கண் களைந்தவன்.


ஒரு சமயம் ஒரு நண்பனின் கட்டாய அழைப்பின் பேரில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன் அது ஒரு ஹிந்து மத அமைப்பின் கூட்டம். பழைய வரலாறுகள் பேசப்பட்டன, மன்னர்கால சம்பவங்கள் எடுத்துகூற பட்டன.முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்கள் முன்வைக்க பட்டன. இதுபோன்ற சம்பவங்களை மூளைசலவை என்று சொல்கிறார்கள்.சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்.



இவர்கள் சொல்லிய எந்த கருத்தும் என் இப்ராம்ஷா முன்னர் எடுபடவில்லை என் மூளையை அழுக்கடையாமல் சுத்தமாக சலவை செய்தது என் இப்ராம்ஷா வின் நட்புதான். இப்ராம்ஷா பற்றி இங்கு எழுதவே எனக்கு பெருமையாக இருக்கிறது.



இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஊருக்கு சென்று இருந்தேன் குடும்பத்துடன் .துபாயில் இருந்து இப்ராம்ஷாவும் வந்து இருந்தான்.எல்லோரும் குடும்பத்துடன் உற்சாகமாய் பேசி கொண்டுஇருந்தோம்.அப்போது பிரபல தொலைகாட்சியில் ஒரு செய்தி குண்டு வெடிப்பு பற்றி குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று செய்தி படிக்கிறார்கள்.இப்ராம்ஷா மனம் நொந்து போகிறான் வெளியில் காட்டி கொள்ளவில்லை.அவன் உற்சாகம் மறைந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுகிறான்.



எங்கோ யாரோ செய்கிற தவறிற்கு ஏன் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் என சொல்லவேண்டும். இதோ என் கண்முன்னே என் நண்பன் நொந்து போகிறான்!
இதே போல நல்ல நட்பு ஏதும் இல்லாத ஒரு தவறும் செய்யாத ஒரு இஸ்லாமியர் இதை பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றும் இந்துக்கள் மேல் வெறுப்பும் தன்மதத்தின் பற்றும் அதிகரிக்காதா? சும்மா இருக்கும் ஒருவனை மதவாதியாக மாற்றுவதுயார்?

இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடுதானே இப்படி ஹிந்து தீவிரவாதி,முஸ்லிம் தீவிரவாதி,கிறித்தவ தீவிரவாதி என்று சொன்னால் சராசரி மக்களும் மதவாதி ஆகிவிடமாட்டார்களா? அந்த வார்த்தை இந்திய இறையான்மையை பாதிக்காதா ? இப்போது ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய நபர் ஒருவரை யாராவது அவர் ஜாதியை குறிப்பிட்டு பேசினாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படி இருக்க! வெகு சாதாரணமாக ஒரு மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்.

நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!


.............................................................................................................................

...................................................................

47 comments:

  1. நாம் அனைவரும் மனிதர்கள் ! இதில் தான் பெருமை அடைகிறோம். சரி தானே அப்பு!

    ReplyDelete
  2. //மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்//
    வழி மொழிகிறேன்

    ReplyDelete
  3. எப்பு...! பிச்சிபுட்டப்பு....!

    ReplyDelete
  4. ஜீவா... மனதில் ஒரு சொல்லமுடியாத உற்சாகம் உங்க பதிவுபடித்து

    மதத்தையும் மீறி மனிதநேயம் பேசுகிறது

    ReplyDelete
  5. //டேய்! போன தீபாவளிக்கு உங்க வீட்டுல செய்ஞ்ச தேங்காப்பார ரொம்ப நல்லா இருந்துச்சி இந்தவாட்டியும் அம்மாகிட்ட சொல்லி செய்யசொல்லு!!//

    இந்த பாசத்துக்கிடையே எந்த மதவாதமும் உள்ளே நுழையா....

    ReplyDelete
  6. எங்களுக்கும் ஹிந்து(மன்னிக்கவும் இந்த வார்த்தை சொல்வதற்கே நா கூசுகிறது) குடும்பம் என் தகப்பனார் ஆசிரியர் வேலை செய்ததின் மூலம் பழக்கம்.. அவர்களுடைய எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் எங்கள் குடும்பம்தான் முதலில் நிற்கும், அவர்களுடைய மகன்/மகளுக்கு வரன் பார்க்கும்போது என் தகப்பனார் தாடி தொப்பியுடனும், என் அம்மா பர்தாவுடனும் அவர்களுடன் அமர்ந்திருப்பது (வரன்பார்க்கும்போது முக்கியமானவர்கள் மட்டும் செல்வார்கள் என்பதை கருத்தில்கொள்க) கண்டு அவர்கள் ஆச்சரியம்படும் அளவிற்கு ஒரே குடும்பமாய் என் தந்தை இறந்த பிறகும் (என் தந்தை இறந்தது கண்டு எங்களைவிட அதிகம் வருந்தியது அவர்களே) இன்றும் தொடர்கிறது.


    நல்ல பதிவு ஜீவாண்ணே.. இதை படித்தபிறகாவது திருந்தி ஒரே குடும்பமாக இருப்பார்களா?

    ReplyDelete
  7. எங்களுக்கும் ஹிந்து(மன்னிக்கவும் இந்த வார்த்தை சொல்வதற்கே நா கூசுகிறது) குடும்பம் என் தகப்பனார் ஆசிரியர் வேலை செய்ததின் மூலம் பழக்கம்.. அவர்களுடைய எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் எங்கள் குடும்பம்தான் முதலில் நிற்கும், அவர்களுடைய மகன்/மகளுக்கு வரன் பார்க்கும்போது என் தகப்பனார் தாடி தொப்பியுடனும், என் அம்மா பர்தாவுடனும் அவர்களுடன் அமர்ந்திருப்பது (வரன்பார்க்கும்போது முக்கியமானவர்கள் மட்டும் செல்வார்கள் என்பதை கருத்தில்கொள்க) கண்டு அவர்கள் ஆச்சரியம்படும் அளவிற்கு ஒரே குடும்பமாய் என் தந்தை இறந்த பிறகும் (என் தந்தை இறந்தது கண்டு எங்களைவிட அதிகம் வருந்தியது அவர்களே) இன்றும் தொடர்கிறது.


    நல்ல பதிவு ஜீவாண்ணே.. இதை படித்தபிறகாவது திருந்தி ஒரே குடும்பமாக இருப்பார்களா?

    ReplyDelete
  8. எங்களுக்கும் ஹிந்து(மன்னிக்கவும் இந்த வார்த்தை சொல்வதற்கே நா கூசுகிறது) குடும்பம் என் தகப்பனார் ஆசிரியர் வேலை செய்ததின் மூலம் பழக்கம்.. அவர்களுடைய எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் எங்கள் குடும்பம்தான் முதலில் நிற்கும், அவர்களுடைய மகன்/மகளுக்கு வரன் பார்க்கும்போது என் தகப்பனார் தாடி தொப்பியுடனும், என் அம்மா பர்தாவுடனும் அவர்களுடன் அமர்ந்திருப்பது (வரன்பார்க்கும்போது முக்கியமானவர்கள் மட்டும் செல்வார்கள் என்பதை கருத்தில்கொள்க) கண்டு அவர்கள் ஆச்சரியம்படும் அளவிற்கு ஒரே குடும்பமாய் என் தந்தை இறந்த பிறகும் (என் தந்தை இறந்தது கண்டு எங்களைவிட அதிகம் வருந்தியது அவர்களே) இன்றும் தொடர்கிறது.


    நல்ல பதிவு ஜீவாண்ணே.. இதை படித்தபிறகாவது திருந்தி ஒரே குடும்பமாக இருப்பார்களா?

    ReplyDelete
  9. // நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!//

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..

    நட்பு என்பது இனம், மதம், மொழி, பால் எல்லாம் கடந்தது.

    ReplyDelete
  10. நெகிழ வைத்த பதிவு ஜீவன்.

    பதிவுன் மதிப்பு பல சிகரங்களை தாண்டி உயர்ந்து விட்டது.

    ReplyDelete
  11. ஜீவன்,அப்துல்லா போன்ற அண்ணன்கள் இருக்கும் வரை பதிவுலக நட்பை யாராலும் அசைத்து விட முடியாது.

    நன்றி ஜீவன் !!!!

    ReplyDelete
  12. //நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!
    //

    இந்த கருத்தில் நீங்களும் உயர்ந்து நிற்கிறீர்கள் ஜீவன் அண்ணா...

    ReplyDelete
  13. மிகவும் நல்ல பதிவு.நல்ல நண்பர்களுக்கிடையில் எந்த மத தீவிரவாதமும் தடைக்கல்லாக இருக்காது.நட்பைப் போற்றுவோம்.மனிதநேயம் காப்போம்.

    ReplyDelete
  14. hai

    We are INDIANs. No More..... No one can spoil our spritual.

    chelladhurai

    ReplyDelete
  15. கருத்துள்ள ப்திவு...உஙகள் உயர்ந்த நட்பு வாழ்க ...

    //அபுஅஃப்ஸர் said...
    ஜீவா... மனதில் ஒரு சொல்லமுடியாத உற்சாகம் உங்க பதிவுபடித்து

    மதத்தையும் மீறி மனிதநேயம் பேசுகிறது//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  16. மனிதம் கொண்ட மணமே

    நீவீர் வாழி.

    ReplyDelete
  17. \\புதியவன் said...

    //நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!
    //

    இந்த கருத்தில் நீங்களும் உயர்ந்து நிற்கிறீர்கள் ஜீவன் அண்ணா...\\

    நானும் சொல்லிக்கிறேன்

    ReplyDelete
  18. நல்ல பதிவு ஜீவன். மதம் துறப்போம்! மனிதம் வளர்ப்போம்!

    ReplyDelete
  19. நல்ல பதிவு ஜீவன்.

    /*நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!! */
    அருமை

    ReplyDelete
  20. நல்ல புரிதலோடு எழுதப்பட்ட நல்லதொரு பதிவு.

    சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள் :)-

    நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!
    well said jeevan. உங்கள் நட்பு நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நல்ல பதிவு. இன்றைய காலகட்டத்தில் இது அவசியமான பதிவும் கூட.

    ஒவ்வொருவருடைய வாழ்வில் இப்படியான ஒரு நிகழ்வு இருக்கத்தான் செய்யும்.

    ஹூம்... அது ஒரு கானாக் காலம்.

    ReplyDelete
  22. //நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? //

    நான் ஒரு மனிதன் அதில் எந்த மாற்றமும் இல்லை! நீங்கள் எல்லோரும் எனது நண்பர்கள் அதிலும் எந்த மாற்றமும் இல்லை!

    ReplyDelete
  23. ஜீவன் அண்ணா ,தங்கலுடைய ”மதிப்பிற்குரிய பெண்மணிகள் (பகத் சிங்கின் தாயார்” என்ற பதிவை எஙகே கானோம்

    ReplyDelete
  24. நல்லதொரு பதிவு அண்ணா..

    ReplyDelete
  25. தங்கள் ஆதங்கம் சரிதான்!

    ReplyDelete
  26. Super. Oru nalla pathivu. Politics than namakkul privinai undakki vittathu. Mainly, Babar Masjid demolition.

    ReplyDelete
  27. ஜீவன், நண்பன் ஜமாலின் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்ததில் அளவில்லா மகிழ்ச்சி. பதிவு படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன்.

    இன்றைய இந்தியாவில் மதம் என்பது ஓட்டு வாங்குவதற்கும் ஒற்றுமையை குலைப்பதற்கும் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படும் ஒரு கருவிதானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை

    ஏற்றத்தாழ்வுள்ள இந்திய மக்களில், பணிகளில், கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு இருந்தால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள் பொருளாதார வளர்ச்சியடையும் என்ற கொள்கைகள் கொண்டு துவக்கப்பட்ட கட்சிகள் தான் நீதிக்கட்சி, தி.க., தி.மு.க, சமாஜ்வாடிக்கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் போன்றவைகள். ஆனால் இன்று அரசியல் இலாபத்திற்காக மதத்தை கையில் எடுக்கிறார்களே ஏன்? அதை மீடியாக்கள் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் ஊதி அணைக்கவேண்டிய பிரச்சனைகளை ஊதி ஊதி பெரிதாக்குவது யார் குற்றம்?

    சென்ற ஆண்டு மத்திய பட்ஜெட்டில், காட்டில் வாழும் சிறுத்தைகள் பாதுகாப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்வானி ஒன்றும் சொல்லவில்லை.

    ஆசாத் கல்வி அறக் கட்டளைக்கு 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றவுடன் இது ரியாகத் அரிகான் பட்ஜெட் பிரிவினையைத் தூண்டும் என்கிறார். அத்வானி. மிருகத்திடம் காட்டும் பரிவுக்கூட முஸ்லிம்களிடம் காட்டுவதில்லை.

    இப்படி இவர்கள்தான் சூனியம் பிடித்து அலைகின்றனரே தவிர நண்பர்கள் இறுதிவரை நண்பர்களாகத் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  28. சார் அருமை...
    மத வெறியர்களுக்கு இது ஒரு சாட்டையடி பதிவு...
    கலக்கல்...

    ReplyDelete
  29. கண்டனம் செய்கிற மாதிரியான வசன நடை அருமை...
    வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  30. தங்கள் பதிவை அப்படியே வழிமொழிகிறேன்!
    உங்கள் ஊரும், எங்கள் ஊரும்
    நம்ம ஊருதான்
    மதுக்கூரில் இந்து மற்றும் இஸ்லாம் மதைத்தைச் சார்ந்தவர்கள் எப்படிப் பழகுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
    மற்ற பகுதியினர் பின் பற்றலாமே!
    பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  31. ஒரு வார்த்தைல கமெண்ட் - நெத்தியடி

    ReplyDelete
  32. thambi dont try or think that u can cheat this generation...
    we have given them one land they should go,y they r staying here...saying LAW given them right.

    ReplyDelete
  33. அருமை..அருமை..

    உங்களின் சேவை நாட்டுக்குத் தேவை !

    ReplyDelete
  34. ஹலோ ஜீவன் சார் . உங்கள் பதிவு மிக நன்றாக உளளது.

    உங்கள் உணர்வுகள் - நட்புக்கு நீங்கள் தரும் மரியாதை - இவற்றை நன்றாக உணரமுடிகின்றது.

    முஸ்லீம் தீவிரவாதி - கிறிஸ்டியன் தீவிரவாதி - ஹிந்து தீவிரவாதி என்பது ஒரு அடையாளமே !


    அதாவது, யார் தீவிரவாதத்தில் கலந்துகொண்டார்கள் என உலகிற்கு அடையாளம் காட்டவே! தனி மனிதன் எனில் அவன் பெயர் வெளியிடப்படும்!

    கூட்டமாக இருந்தால் மெஜாரிட்டி பெயரால்தான் அடையாளம் காட்டப்படும். இதில் நண்பர் இப்ராம்ஷா வருத்தப்பட ஏதும் இல்லை.

    //
    நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா
    ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள். நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!
    //

    அமெரிக்காவில் பிறந்தால் அமரிக்கன்! ஜப்பானில் பிறந்தால் ஜப்பானியன்! இந்தியாவில் பிறந்தால் இந்தியன்! அவ்வளவே!!!

    ஆனால், நாம் அனைவரும் மனிதர்கள்!!!

    பாசத்தையும் நேசத்தையும் காட்ட தெரிந்த பிறவிகள்!!!

    நண்பர் இப்ராம்ஷா வருத்தப்பட தேவையே இல்லை !

    ReplyDelete
  35. யார் தப்பு செய்தாலும் கண்டிப்பாக தண்டனை அனுபவித்து அக வேண்டும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் சிலரின் சுயநலம் எந்த அளவு சராசரி மனிதனின் வாழ்கையை பாதிக்கிறது ...... இதை படித்தாவது திருந்துவார்களா? நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் பயணத்தை ஜீவா .!!!!!!!

    ReplyDelete
  36. ஜீவன்,மதங்கள் நல்வழிக்காக மட்டுமே.மதம் கொண்டு ஊரை அழிக்க அல்ல.நல்ல மனிதர்களைத்தான் எல்லா மதங்களும் தந்திருக்கிறது.நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  37. அப்பு, என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  38. ஜீவன் உங்களுக்குள்ளே இன்னும் எத்தனை பரிமாணங்கள் இருக்கின்றன??

    கொஞ்சம் கொச்ஞ்சமாக எங்களுக்கு விருந்து படைக்கின்றீர்கள்!!

    இந்த காலக்கட்டத்தில் இந்த விருந்து மிகவும் தேவையான, அவசியமான ஒன்று தான்.

    அருமை அருமை ரொம்ப நல்லா சொல்லி இருக்கின்றீர்கள்.

    நமக்கு முன்னால் எம்மதமும் சம்மதமே.

    யாதும் ஊரே யாவரும் கேளீர், இதுதானே நம் மனதில் ஓடும் தாரக மந்திரம்.

    எனக்கும் எல்லா மதத்திலும் நண்பர்கள், தோழிகள் இருக்கின்றார்கள்.

    எங்களுக்குள் என்றுமே மதம் ஒரு வேற்றுமையை ஏற்படுத்தியது இல்லை

    நாங்கள் கோவிலுக்கு போனால் அவர்களும் வருவார்கள்.

    அவர்கள் மசூதிக்கு போனால் நாங்களும் அவர்களுடன் போவோம்.

    அவர்கள் சர்ச்சுக்கு போனால் நாங்களும் அங்கே அவர்களுடன் போவோம் இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்ற பாகுபாடு ஒருவரும் காட்டியது இல்லே

    அதேபோல் எங்களுக்கும் எந்த எண்ணங்களும் வந்தது இல்லே.

    எங்கள் வீட்டு பண்டிகைகள் அவர்கள் வந்துதான் கொண்டாடுவார்கள்.

    அவர்கள் வீட்டு பண்டிகைகள் நாங்கள் இல்லாமல் நடந்தது இல்லை.

    இதுவரை அனைவருமே ஒரே குடையின் கீழ் வாழும் நண்பர்கள், உறவினர்கள் அவ்வளவுதான்

    இதில் பிரிவினை என்பது எங்கே இருந்து வந்தது, அது தேவை இல்லாத ஒன்று தானே!!

    அருமையான பதிவு, அதை வெகு அருமையாக உணர்த்தி இருக்கின்றீர்கள்.

    உங்கள் நண்பரிடம் கூறுங்கள் யாரோ ஒருவர் செய்த தவற்றிற்கு, யாரோ செய்த விளம்பரத்திற்கு, நண்பர் கவலைப்பட தேவை இல்லை. இது இந்த அன்பு சகோதரியின் வேண்டுகோள் என்று கூறுங்கள்!!

    ReplyDelete
  39. உங்களின் இந்தப் பதிவு என்னை மிகவும் கவர்ந்துள்ளது...
    எனது ப்ளாக்கில் லிங்க் கொடுத்துள்ளேன்..
    வந்து பார்க்கவும்...
    (அனுமதி பெறாமலே தொடுப்பு கொடுத்ததிற்கு மன்னிக்கவும்...)
    :-)

    ReplyDelete
  40. அருமையான பதிவு. முதலில் வாழ்த்துக்கள்...
    எந்த மதமும் தீய வழிகளை போதிப்பதில்லை, போதித்ததில்லை.

    ReplyDelete
  41. //சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள் //

    நினைத்துப் பார்த்திராத கோணம்.

    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. கைதட்டலுடன் என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  43. //சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள் //

    நினைத்துப் பார்த்திராத கோணம்.

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  44. நல்ல பதிவு ஜீவன்.
    மதம் துறப்போம்! மனிதம் வளர்ப்போம்!
    /மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்//
    வழி மொழிகிறேன்
    நல்ல நண்பர்களுக்கிடையில் எந்த மத தீவிரவாதமும் தடைக்கல்லாக இருக்காது
    கலக்கல்..

    ReplyDelete
  45. மதுரை அழகர் கோவிலுக்கு அருகே உள்ள அ.வல்லாளபட்டியில் இன்றளவும் ஹிந்து திருமணங்களில் ஒரு தாய்மாமனாக உள்ளூர் முஸ்லீம் ஒருவர் பங்கேற்றுகொள்கிறாராம்.. ஊரில் இருந்திருந்தால், இதைபற்றி நன்கறிந்து ஒரு கட்டுரை போட்டிருப்பேன். :)

    அருமையான பதிவு ஜீவன். வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  46. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!

    ReplyDelete
  47. ///
    வெகு சாதாரணமாக ஒரு மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்.//
    ///


    சரியா சொன்னிங்க

    இன்னும் சாதி சான்றிதலை பள்ளியில் இருந்து தூக்க முடியலை
    இதெல்லாம் நடக்காது

    ReplyDelete

123