Monday, May 25, 2009

மயிலு ..மயிலு ..

ஞாயித்து கிழமை வீட்டுல பசங்கள கூட்டிகிட்டு வெளிய போகலாம்னு தங்கமணி தொல்லை தாங்க முடியல! ஞாயித்து கிழமைனா ஒரு கட்டிங் உட்டுட்டு நிம்மதியா ஒரு தூக்கம் போடுறதுதான் நமக்கு புடிக்கும் , சரி போகட்டும்னு கிண்டி பாம்பு பண்ணை , சிறுவர் பூங்கா போகலாம்னு முடிவு பண்ணி கிளம்பினோம்.



நாங்க போன நேரம் மழை வர்றது போல இருந்தது ! மழை வரும்போது மயில் தோகை விரிச்சு ஆடுமாமே? உண்மைதான் நாங்க போன நேரத்துல மயில் தோகை விரிச்சு ரொம்பநேரம் பார்வையாளர்களுக்கு போஸ் கொடுத்து நின்னது செம அழகு! இந்த பதிவ போடுற காரணமே இந்த மயில் தான்.











எல்லாம் செல் போன்ல எடுத்த படங்கள் வேற கேமராவில எடுத்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும்!

அங்க ஒரு நாலைஞ்சு மயில்கள் இருந்தது ஆனா ஒரு மயில் மட்டும்தான்
தோகை விரிச்சு நின்னது ! மத்த மயிலுங்களுக்கு மழை வர்ற ''பீலிங்'' வரல போல!



இந்த பறவை பேரு தெரியல நல்லா நல்ல உயரமா கம்பீரமா இருந்தது!


இவங்க எங்க வீட்டு மயிலுங்க!


25 comments:

  1. ஒங்க வீட்டு மயிலுங்கதான் அழகு

    :)

    ReplyDelete
  2. \\ஞாயித்து கிழமைனா ஒரு கட்டிங் உட்டுட்டு நிம்மதியா ஒரு தூக்கம் போடுறதுதான் நமக்கு புடிக்கும்\\


    அண்ணே சிகரெட் விடுவது தான் ரொம்ப கஷ்ட்டமுன்னு நிறைய பேர் சொல்ல கேட்டுருக்கேன்

    நீங்க இத எப்ப அண்ணா விடப்போறீங்க

    உங்க வீட்டு மயிலுங்கல நினைச்சி பாருங்க அண்ணா

    வேண்டாம் அண்ணா விட்டுடுங்க

    உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்க வேண்டாம்

    அன்பில் சொல்கிறேன் ...

    ReplyDelete
  3. எம்.எம்.அப்துல்லா said...

    ஒங்க வீட்டு மயிலுங்கதான் அழகு

    :)
    //

    ஆண் மயிலுமா?
    -குடுகுடுப்பை

    ReplyDelete
  4. மயில் பார்க்க நீங்கள் பார்க் போய் அழகாக படம் எடுத்தீர்கள். என் வீட்டு வாசலிலேயே வந்த மயிலை பாருங்கள் என் ப்ளாக்கில்
    சகாதேவன்

    ReplyDelete
  5. // ஞாயித்து கிழமை வீட்டுல பசங்கள கூட்டிகிட்டு வெளிய போகலாம்னு தங்கமணி தொல்லை தாங்க முடியல! //

    ஹை உங்க வீட்டிலுமா...

    ReplyDelete
  6. // நாங்க போன நேரம் மழை வர்றது போல இருந்தது !//

    கோடை மழை?

    ReplyDelete
  7. ஆடும் மயிலும் அழகு விளையாடும் சின்ன மயில்களும் அழகு

    ReplyDelete
  8. அடடா..இரண்டு மயில்களுமே அழகு...அப்படியெ அவங்க அத்தை மாதிரி(ஹி ஹி நான்தான் அவங்க அத்தை)

    ReplyDelete
  9. நட்புடன் ஜமால் said...

    அண்ணே சிகரெட் விடுவது தான் ரொம்ப கஷ்ட்டமுன்னு நிறைய பேர் சொல்ல கேட்டுருக்கேன்

    மாப்ள எங்கயோ இடிக்குது

    ReplyDelete
  10. உங்க வீட்டுங்க மயிலுங்க க்ஃயூட், ஆமா மயிலுக்கு நடுவுல இருக்குற குயிலு யாருன்னு சொல்லவேயில்லையே ஜீவன் :)-

    அங்க ஒரு நாலைஞ்சு மயில்கள் இருந்தது //

    = தங்கமணிய பக்கத்துல வெச்சுக்கிட்டே என்ன ஒரு சைட்
    சீன் நடந்துருக்கு, ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் பாஸ்.

    ReplyDelete
  11. மயில்களின் புகைப்படங்கள் அழகா இருக்கு,
    உங்க வீட்டு மயில்கள் ரொம்ப அழகு ஜீவன் அண்ணா...

    ReplyDelete
  12. /// எம்.எம்.அப்துல்லா said...

    ஒங்க வீட்டு மயிலுங்கதான் அழகு

    :)//

    நன்றி அப்பு !

    ReplyDelete
  13. /// நட்புடன் ஜமால் said...

    \\ஞாயித்து கிழமைனா ஒரு கட்டிங் உட்டுட்டு நிம்மதியா ஒரு தூக்கம் போடுறதுதான் நமக்கு புடிக்கும்\\


    அண்ணே சிகரெட் விடுவது தான் ரொம்ப கஷ்ட்டமுன்னு நிறைய பேர் சொல்ல கேட்டுருக்கேன்

    நீங்க இத எப்ப அண்ணா விடப்போறீங்க

    உங்க வீட்டு மயிலுங்கல நினைச்சி பாருங்க அண்ணா

    வேண்டாம் அண்ணா விட்டுடுங்க

    உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்க வேண்டாம்

    அன்பில் சொல்கிறேன் ...///


    உங்க அன்புக்கு நெம்ப நன்றி ஜமால்!
    இதுக்கே ஒரு கட்டிங் உடனும் போல இருக்கு!
    ;;)))

    ReplyDelete
  14. // குடுகுடுப்பை said...

    எம்.எம்.அப்துல்லா said...

    ஒங்க வீட்டு மயிலுங்கதான் அழகு

    :)
    //

    ஆண் மயிலுமா?
    -குடுகுடுப்பை////

    வாங்க குடுகுடுப்பை காரர் ! அதுல என்ன சந்தேகம்? அப்பு சொல்லுங்க!

    ReplyDelete
  15. // சகாதேவன் said...

    மயில் பார்க்க நீங்கள் பார்க் போய் அழகாக படம் எடுத்தீர்கள். என் வீட்டு வாசலிலேயே வந்த மயிலை பாருங்கள் என் ப்ளாக்கில்
    சகாதேவன்///

    பார்த்தேன் உங்க வீட்டு வாசல்ல எடுத்தீங்களா ? சூப்பர்!

    ReplyDelete
  16. /// இராகவன் நைஜிரியா said...

    // ஞாயித்து கிழமை வீட்டுல பசங்கள கூட்டிகிட்டு வெளிய போகலாம்னு தங்கமணி தொல்லை தாங்க முடியல! //

    ஹை உங்க வீட்டிலுமா...///

    ஆமாண்ணே ஞாயித்து கிழமை அதுவுமா நிம்மதியா ஒரு தூக்கம் போட முடியல!;;(


    ///// நாங்க போன நேரம் மழை வர்றது போல இருந்தது !//

    கோடை மழை?///

    மழை வரும் போல இருந்தது
    ஆனா வரல! ;))

    ReplyDelete
  17. // அமுதா said...

    ஆடும் மயிலும் அழகு விளையாடும் சின்ன மயில்களும் அழகு//

    நன்றி! அமுதா மேடம்!

    ReplyDelete
  18. /// Rajeswari said...

    அடடா..இரண்டு மயில்களுமே அழகு...அப்படியெ அவங்க அத்தை மாதிரி(ஹி ஹி நான்தான் அவங்க அத்தை)///

    வாங்க தங்கச்சி! ஆமா அவங்க அத்தை போலத்தான்! நீங்கதான் அவங்க அத்தை அதில
    ஒன்னும் சந்தேகம் வேண்டாம்!

    ஆனா!!! என் பொண்ணுங்களுக்கு இந்த சீர் வரிசை, அது ,இதுன்னு செய்ய வேண்டிய நேரம் வரும்போது வண்டி வண்டியா வந்து இறங்கிடனும் ஆமா சொல்லிட்டேன்!

    ReplyDelete
  19. // S.A. நவாஸுதீன் said...

    அழகு மயில்கள்.//

    நன்றி அப்பு!

    //அண்ணே சிகரெட் விடுவது தான் ரொம்ப கஷ்ட்டமுன்னு நிறைய பேர் சொல்ல கேட்டுருக்கேன்

    மாப்ள எங்கயோ இடிக்குது //

    ????

    ReplyDelete
  20. // அமிர்தவர்ஷினி அம்மா said...

    ///உங்க வீட்டுங்க மயிலுங்க க்ஃயூட், ஆமா மயிலுக்கு நடுவுல இருக்குற குயிலு யாருன்னு சொல்லவேயில்லையே ஜீவன் :)-////

    மயிலுக்கு நடுவில குயில் ? ? குயிலுன்னா? மனசுல நினைச்சிங்க? நீங்க என்ன நெனைச்சு இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்!

    ////அங்க ஒரு நாலைஞ்சு மயில்கள் இருந்தது //

    = தங்கமணிய பக்கத்துல வெச்சுக்கிட்டே என்ன ஒரு சைட்
    சீன் நடந்துருக்கு, ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் பாஸ்.///

    ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி தோனுது? தங்க மணிய போன் பண்ண சொல்லுறேன்
    நீங்களே கேட்டுபாருங்க நான் எவ்ளோ .........நல்லவன்னு ...............;;))

    ReplyDelete
  21. ///புதியவன் said...

    மயில்களின் புகைப்படங்கள் அழகா இருக்கு,
    உங்க வீட்டு மயில்கள் ரொம்ப அழகு ஜீவன் அண்ணா...////

    நன்றி புதியவன்!!

    ReplyDelete
  22. ஜீவன் said...

    // S.A. நவாஸுதீன் said...

    அழகு மயில்கள்.//

    நன்றி அப்பு!

    //அண்ணே சிகரெட் விடுவது தான் ரொம்ப கஷ்ட்டமுன்னு நிறைய பேர் சொல்ல கேட்டுருக்கேன்

    மாப்ள எங்கயோ இடிக்குது //

    ????

    ஒன்னும் இல்லே அண்ணே. ஜமால் என்னைத்தான் சொன்னானான்னு கேட்டேன்.

    ReplyDelete
  23. Abdullah anna sonna madiri,,, mayil la vida unga kulandaiga than superr,,,,amaithiyana azhagu :-)

    ReplyDelete
  24. உங்கள் வீட்டுக் குட்டி மகாராணிகள் கொள்ளை அழகு.

    நீங்கள் மயிலை படம் பிடித்ததோ அதைவிட அழகு.

    இது போல் செல்வது மிகவும் அவசியம் ஜீவன்.

    குழந்தைகளுக்கும் ஒரு மாற்றம், உங்களுக்கும் வேலைகளை மறந்து குழந்தைகளுடன் சந்தோஷமா இருக்கும் தருணம் இல்லையா??

    அடிக்கடி இது போல் செல்லுங்கள்.

    நான் அப்படித்தான் வார இறுதியில் சென்றுவிடுவேன்.

    ReplyDelete

123