Saturday, September 26, 2009

3D படம் பாருங்க...!!!!

சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடன் பின் அட்டையில் இதுபோன்ற படங்கள் வந்தன. அவற்றை முதலில் பார்த்தபோது அசந்து போகாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்! மானிட்டரில் பார்க்கும் போதும் அசத்துகிறது! சில படங்களில் தோன்றும் உருவங்கள் மானிட்டரின் வெளியே இருப்பது போலவும் சில உருவங்கள் மானிட்டரின் உள்ளே ஆழத்தில் தெரிவது போலவும் அழகாக காட்சி தருகிறது.

படங்களை பார்க்கும் முறை !!!

படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி கொள்ளுங்கள் மானிட்டரின் அருகே ஒரு அடி துரத்தில் சென்று இரண்டு கண்ணாலும் உங்கள் மூக்கின் நுனியை பாருங்கள் அப்படியே பார்வையை மாற்றாமல் திரையை பாருங்க அசந்து போவீங்க! சிலருக்கு முதல் முறை பார்க்க வராது மீண்டும் மீண்டும் முயற்சித்து பாருங்க மிஸ் பண்ணாதீங்க.....!




இந்த படத்துல குமிழ் குமிழா தெரியும் ! படத்தின் மேலே ரெண்டு கருப்பு புள்ளி இருக்கு பாருங்க அந்த ரெண்டு கருப்பு புள்ளியும் ஒன்னா சேருவதுபோல பாருங்க இப்போ மூனு புள்ளியா தெரியும் அப்படியே பார்வைய மாத்தாம படத்த பாருங்க .


படிப்படியா எதோ தெரியுது இதுல ..!


உள்ளே ஒரு உருவம் நாயா ? கரடியா ?



பிரமிடுக்குள்ள இருந்து அண்ணாந்து பார்த்தா போல இருக்கு ..!

மான் குட்டி ?

பள்ளம் பள்ளமா ...!



எதோ வி ஷேப்ல கூர்மையா ...!


உருவம் இல்லாட்டியும் அருமை ..!


உருண்டை எல்லாம் கையால தொடலாம் போல ?

18 comments:

  1. நீங்க சொன்ன மாதிரி பாத்து பாத்து கண்ணு வலிக்குது தலைவா.....அந்த கடைசி (உருண்டையா) படம் மட்டும் நீங்க சொன்னதுபோல தெரியுது...

    மத்ததெல்லாம் ம்கூம்.......

    ReplyDelete
  2. // க.பாலாஜி said...

    நீங்க சொன்ன மாதிரி பாத்து பாத்து கண்ணு வலிக்குது தலைவா.....அந்த கடைசி (உருண்டையா) படம் மட்டும் நீங்க சொன்னதுபோல தெரியுது...

    மத்ததெல்லாம் ம்கூம்.......///

    முயற்சி பண்ணுங்க பாலாஜி!!! நான் முதல்ல பார்த்த போது ஒன்னும் தெரியல ..!
    கடுப்பாகிபோயி விட்டுட்டேன். அப்புறம் மறுபடி முயற்சி பண்ணி பார்த்தேன் ஒருவாட்டி
    புடிச்சுட்டா போதும் அப்புறம் எல்லாத்தையும் சுலபமா பார்த்துடலாம்...!
    நீங்க கடைசி படத்தகூட பார்க்கும் விதத்துல பார்க்கல....!

    ReplyDelete
  3. கண்ணை இடுக்காமல் பார்க்கக்கூடிய முப்பரிமாணப்படங்கள் செய்யும் முறை இங்கே....

    ReplyDelete
  4. ம்ஹூம்.... கண்ணு வலிக்குது...

    ReplyDelete
  5. //க.பாலாஜி said...
    நீங்க சொன்ன மாதிரி பாத்து பாத்து கண்ணு வலிக்குது தலைவா.....அந்த கடைசி (உருண்டையா) படம் மட்டும் நீங்க சொன்னதுபோல தெரியுது...

    மத்ததெல்லாம் ம்கூம்.......
    //

    Repeataaiiii..

    மண்ட காயுது..!

    ReplyDelete
  6. WOWWWWWWWWWWWWW MARVALOUS WONDERFUL BEAUTIFUL இன்னும் இருக்கும் வார்த்தைகள் போதாது..

    எனக்கும் முதல்ல ரொம்ப கஷ்டமாத்தான் இருந்தது...முதல்ல மானிடர்கிட்ட நம்ம ரெண்டு கண்ணையும் வச்சி அந்த இரண்டு புள்ளிகளையே பார்த்தால் அது மூணாக மாறி இந்த படத்தின் உட்பரிமானம் நம்மை வாய் பிளக்கச் செய்யும்....அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் பின்னோக்கி வந்து பார்த்தால் இந்த அழகிய அதிசயம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது தவறாமல் முயலுங்கள்.. நன்றி ஜீவா நல்லதொரு பதிவு...

    ReplyDelete
  7. Cubes, பள்ளம், வீ வடிவம் சூப்பரா இருக்கு தல. மானிட்டர்ல தூசு படிஞ்சமாதிரி அதுக்குள்ளே பிம்பம் தெரியுது. ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  8. வாவ்!! எல்லா படங்களும் சூப்பர்ப்!! அந்த கடைசி படம் செம எஃப்க்ட்!!

    ReplyDelete
  9. //சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடன் பின் அட்டையில் இதுபோன்ற படங்கள் வந்தன. //

    ஆமாம் இதுக்காகவே எங்களூர் கடையில் விகடன் சொல்லி வச்சு வாங்கியதுண்டு, அவ்ளோ கிராக்கி அப்போ!!

    ReplyDelete
  10. என் டோரிக் கண்ணுக்கு ஒன்னுமே தெரியல ஜீவன்

    தமிழ் உங்களுக்கு மட்டும் எப்படி!!!???

    ReplyDelete
  11. நன்றாக இருந்தது. (எனக்குத் தெரியலைன்னு சொன்னா ஒரு மாதிரி பார்ப்பாங்க..:-) )

    ReplyDelete
  12. கேப்டன்ஜி ... நீங்க சொன்ன மாதிரி ரெண்டு கண்ணையும் சேத்து வெச்சு பாத்தேன் உத்து பாத்துகிட்டே இருந்தேன் , தல சுத்தி குப்புற உளுந்ததுதான் மிச்சம்...!! அர மணி நேரமா மப்பு போட்ட மாதிரி அப்புடியே கெடந்தேன் ....!!

    ReplyDelete
  13. ஜீவன்,

    எல்லா 3D படங்களும் அசத்தல்... கொஞ்சம் பின்னுக்கு இழுத்து அமர்ந்து பார்த்தால் ஒன்றுக்கு பின் ஒன்றாக தூரமாக அமைவது போல கிடைக்கும் பொழுது உண்மையான பரிணாமம் இன்னும் கிட்டும் பொழுது க்ளாஸ் போங்க...

    புதிதாக பார்க்க முயற்சிக்கிறங்களுக்கு இன்னொரு முறை காட்ச் பண்ண, படத்தை பார்த்திட்டே இருக்கும் பொழுது கண்ணை கொஞ்சம் பார்த்தும் பார்க்காதா மாதிரி அவுட் ஆஃப் ஃபோகஸ் பண்ணுங்க டக்கின்னு கிடைச்சவுடன் கூர்மை படுத்தாதீங்க... ட்ரை கீப் ஆன் ட்ரை :)

    நன்றி, ஜீவா!

    ReplyDelete
  14. oops, 3D பார்த்த ச்சூடுல கண்ணு கட்டிப் போச்சுப் போல... :))

    என்னோடதில பிழைகள்:-

    *பரிணாமம் = பரிமாணம்

    *முயற்சிக்கிறங்களுக்கு = முயற்சிக்கிறவங்களுக்கு

    ReplyDelete
  15. எல்லாமே இது வரை பார்த்திராத புதிய படங்கள். நன்றி.
    நிதானமா வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. கண்ணு மட்டுமில்லீங்க, தலையும் சேர்த்து வலிக்குது எனக்கு, அந்த மூக்கு நுனி படத்துகே :)

    ReplyDelete
  17. கடைசி படம் மட்டும் தான் தெரிஞ்சது!
    மத்தது எதுவும் புரியல!

    ReplyDelete
  18. நல்ல படம் தான் போட்டீங்க. கண் கேட்டுப் போகப் போகுது. எவ்வளவு நேரம் தான் பார்ப்பது?

    ReplyDelete

123