Thursday, November 5, 2009

கள்ளுக்கடையின் அவசியமும் அதன் அரசியலும்...


கள்ளுக்கடை திறப்பதால் உண்டாகும் பலன்கள்..!

நம் நாட்டில் மது அருந்தும் பழக்கம் பெரும்பாலும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கே அதிகம் உள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. கட்டிட வேலை செய்பவர்,தச்சு வேலை செய்பவர்,சுமை தூக்குபவர், விவசாய வேலை செய்பவர்,சாக்கடை சுத்தம் செய்பவர் இப்படி நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் அடிப்படை தொழிலாளர்களே அதிகம் மது அருந்துகின்றனர்.

லட்சகணக்கான தென்னை,மற்றும் பனை மரங்களை கொண்ட வளமான பூமிநம் தமிழகம். கள் இயற்கை அளித்த கெடுதல் குறைந்த போதை பானம்.காலங்காலமாக போதையை விரும்புபவர்களுக்கு கள் ஒரு வரப்பிரசாதம்.கள்ளுக்கடையை திறப்பதால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். தென்னை மரத்திலிருந்து கள் இறக்குவதால் தேங்காய் உற்பத்தி சற்று குறையும் அதனால் தேவை அதிகரித்து விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும்.


கள் -டாஸ் மார்க் ஒரு பொருளாதார ஒப்பீடு...



ஒரு நாளைக்கு ஒரு குவாட்டர் அடிப்பவருக்கு ஆகும் செலவினை பார்ப்போம் ஒரு குவாட்டர் 80 ரூபாய் என வைத்து கொண்டால், சைடு டிஷ் செலவு 10 ரூபாய் மொத்தம் 90 ரூபாய் ஆகிறது .

ஒரு குவாட்டருக்கு உண்டான போதையை 1 1/2 முதல் 2 லிட்டர் கள் கொடுத்து விடும்.

2 லிட்டர் கள் (லிட்டர் 15 ரூபாய் எனில்) 30 ரூபாய் ஆகிறது சைடு டிஷ் 10 ரூபாய் என்று வைத்து கொண்டால் கூட 40 ரூபாயில் மேட்டர் முடிந்து விடுகிறது.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு குவாட்டர் அடிப்பவர் கள்ளுக்கு மாறினால் ஒரு நாளில் அவருக்கு மிச்சப்படும் தொகை 90-40= 50

ஒரு நாளில் ஐம்பது ரூபாய் மிச்ச படுவதோடு உடல்நலமும் காக்க படுகிறது. ஒரு சராசரியான தொழிலாளியின் வீட்டுக்கு ஐம்பத்து ரூபாய் கூடுதலாக சென்றால் அந்த குடும்பம் கண்டிப்பாக பலனடையும்.
அது மட்டும் இல்லாமல் கிராம புறங்கள் வளர்ச்சி அடையும், பலருக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத்தரும்.

இப்படி எல்லா வகையிலும் நன்மை தருகிற கள்ளுக்கடையை திறக்க அரசு ஏன் மறுக்கிறது????

ஒரே ஒரு காரணம் தான் மதுபான விற்பனை (டாஸ் மார்க்) மூலம் அரசுக்கு கிடைக்கும்.!
வருமானம்.! வருமானம்..!! வருமானம்...!!!

மதுபானம் விற்று அரசு கோடிகணக்கில் வருமானம் பார்க்கிறது. அல்லது மதுபானம் விற்று அரசு தன் பிழைப்பை ஓட்டுகிறது.

தன் நாட்டு மக்கள் குடித்து குட்டிசுவரானால் பரவாயில்லை ..!அவன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை..! தனக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்து விட கூடாது இதுதான் அரசின் நிலைப்பாடு..!

கள்ளுக்கடையை திறந்து விட்டால் அரசின் மதுபான வியாபாரத்தில் மண் விழுந்து விடும் அதனால் தான் அரசு கள்ளுக்கடையை திறக்க மறுக்கிறது.


கள்ளுக்கடையை திறக்காததற்கு அரசு வேறு வகையில் காரணம் சொல்லி சப்பை கட்டு கட்டலாம். ஆனால்? பக்கத்து மாநிலங்களான ஆந்திரா,கேரளா
பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கள்ளுக்கடை திறக்கபட்டுதான் உள்ளது.

லாட்டரி ஒழிப்பும் கடை திறப்பும்

கடந்த ஆட்சியில் லாட்டரி ஒழிக்கப்பட்டது அதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது அதனை சரிகட்டவே அரசு மதுபான வியாபாரத்தில்நேரடியாக இறங்கியது. இந்த அரசும் அதயே தொடர்கிறது.அதனால் தான் அரசின் மதுபான வியாபாரத்துக்கு பங்கம் வரும் எந்த செயலையும் செய்ய அரசு தயாரில்லை..! எப்படி பார்த்தாலும் அடிப்படை ஏழை மக்களின் ரத்தமே உறிஞ்சப்படுகிறது..!


இப்படி பாரம்பரியம் மிக்க இயற்கை தரும், கெடுதல் இல்லாத கள்ளை நிராகரித்துவிட்டு, வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு கெடுதல் தரும் மதுபானத்தை விற்பனை செய்கிறதே இந்த அரசு..!

இது நியாயமா...!!!!

24 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்...

    அப்பாடி எத்தனை நாளாச்சு இபப்டி போட்டு...ஹா..ஹா....

    ReplyDelete
  2. ஆஹா ! என்னடா மேட்டர் இல்லாமல் ரொம்ப நாள் போகுதேன்னு நினைச்சேன். வந்துடுச்சு... :)

    ReplyDelete
  3. டாஸ்மாக் மூலமாய் அடித்தட்டு மக்களை கோடி கோடியாய் சுரண்டிக் குவிக்கும் அரசு...எலும்புத் துண்டுகளாய் கலர் டிவியும், கேஸ் அடுப்பும் தருவதை மக்கள் புரிந்து கொண்டு இவர்களை புறக்கணிக்காத வரையில், அரசும் ,மதுபான முதலாளிகளும் கொழிக்கத்தான் செய்வர்.

    நல்ல பதிவு...விவாதத்திற்குறியது.

    ReplyDelete
  4. நல்லாவே கணக்கு போட்டிருக்கீங்க..........ஆனா கள் தான் உடம்புக்கு கொஞ்சம் நல்லதாச்சே.அத எப்படி அரசாங்கம் விக்கும்...........

    ReplyDelete
  5. கள் இறக்குவதை நானும் ஆதரிக்கிறேன்!

    ReplyDelete
  6. ஜனங்க உழைச்சி பிழைச்சி நல்லா இருந்துடப்படாது. அப்புறம் அரசாங்கம் இலவசமா என்ன தருதுன்னு ஏங்க மாட்டோமில்ல. எவ்வளவு பேரு சொல்றாங்க டாஸ்மாக் சாமி கேக்கமாட்டங்குதே.

    ReplyDelete
  7. ஜி எனக்கு கூட கள்ளு குடிக்கனும்னு ஆசை...
    பாண்டிதான் போகணும் போல....
    ஒரு டவுட் கோபபட கூடாது
    நம்ம ஒரு குவாட்டர் போதைக்கு
    எவ்ளோ கள்ளு குடிக்கணும்??
    எல்லாம் ஒரு போது அறிவு தான் ஜி...

    ReplyDelete
  8. அற்புதமான் பார்வை பொருளாதாரம் தெரியும் என்று நினைக்கிறன்

    ReplyDelete
  9. நீங்க சொல்ற மாதிரி கள் இறக்க அனுமதி கொடுத்தால்...அப்புறம் நாங்க எப்பூடி இலவச கலர் டிவி கொடுக்குறது...?
    வயசாய்டிச்சுன்னு பாக்குறேன்....இல்ல இன்னும் நாலு புள்ள பெத்து அமைச்சர் ஆக்கிடுவேன் ஆமா.....:-))))

    ReplyDelete
  10. உண்மையா இப்படி அப்பட்டமா போட்டு உடைச்சி அரசாங்கத்தின் வெறுப்பை வாங்கிக்காதீங்க..டாஸ்மார்க்கின் அதி முக்கிய நோக்கம் இந்தியாவின் மக்கள் தொகையை குறைப்பதாக கூட இருக்கலாம் இல்லையா?.......ஹைய்யோ ஹைய்யோ...

    ReplyDelete
  11. தன் நாட்டு மக்கள் குடித்து குட்டிசுவரானால் பரவாயில்லை ..!

    குடிச்சா நம்ம உடம்பு கெட்டுப்போகும்னு குடிமகனுக்கு அக்க்றை இலலாத போது, அரசுக்கு எப்படி அவன் மீது அக்கறை வரும் ?

    அவன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை..! தனக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்து விட கூடாது இதுதான் அரசின் நிலைப்பாடு..! //

    எவ்ளோ விலை ஏத்துனாலும் குடிமக்கள் குடிக்கத் தயாரா இருக்கறதால தானே பாஸ் அவன் காலைலியே கடைய திறந்து வெச்சுட்டு உக்காந்துக்கிட்டுருக்கான்.

    கள்ளுக்கடை திறப்பின் அவசியம் புரிகிறது, ஆனாலும் கெடுதல் என்றால் எல்லாமே கெடுதல் தானே ?

    சமீபமா வந்த ஒரு படத்துல ஒரு குத்துப்பாட்டில் வந்த வரிகள்

    ரோட்டுக்கடையில மனுஷன் ஜாலியப் பாரு, சேட்டுக்கடையில பொண்டாட்டித் தாலியப் பாரு //

    ஆக பொழைப்பது அரசும், மார்வாடியும். :((((

    ReplyDelete
  12. ///தன் நாட்டு மக்கள் குடித்து குட்டிசுவரானால் பரவாயில்லை..! அவன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை..! தனக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்து விட கூடாது இதுதான் அரசின் நிலைப்பாடு..!///

    ஏன் கள் குடித்தால் மட்டும் நாட்டு மக்கள் குட்டிச்சுவராக மாட்டார்களா..?

    ஒரே கட்டுரையில் ஏன் இப்படி முரண்பாட்டு மொக்கைகள்..!

    இரண்டுமே இருக்கக் கூடாது என்று வாதிடுங்கள்.. அதுதான் நியாயம்..

    லாட்டரிச் சீட்டு ஒரு விதமான போதையைக் காட்டியது என்றால் கள்ளும், டாஸ்மாக்கும் இன்னுமொரு போதைதான்..!

    அறவே நீக்கப்பட வேண்டியவைகள்..! தயவு செய்து எதற்காககவும் வக்காலத்து வாங்காதீர்கள்..!

    ReplyDelete
  13. நல்லாதான் எழுதியிருக்கீங்க.

    ஆனா,
    //ஒரே ஒரு காரணம் தான் மதுபான விற்பனை (டாஸ் மார்க்) மூலம் அரசுக்கு கிடைக்கும்.!
    வருமானம்.!//
    இங்கதான் சரியில்ல. அரசோட வருமானத்தப் பத்தி கவலப்படுற ஆளுங்களா நம்ம ஆளுங்க? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு. மேட்டர் இன்னான்னா... சரி விடுங்க. நமக்கு அந்த அளவுக்கு தைரியம் கிடையாது.

    ReplyDelete
  14. நல்ல பதிவு

    விவசாயிகள் யாரும் முன்னேறக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். கள் ஒரு நல்ல மாற்று. அதை ஆதரித்தால் தென்னை/பனை மரங்கள் வளர்க்க ஆர்வம் கொண்டு மரங்கள் பெருகும். பனை மரங்கள் பசுமைக்குடையாகும். எனவே பல்வேறு பயன்கள் உண்டாகும். எனவே நான் அதை ஆதரிக்கிறேன்.

    திரு.உண்மைத்தமிழன் அவர்களே யோசித்து பாருங்கள்.

    வாதிடலாம்

    விஜய்

    ReplyDelete
  15. பதிவு ஆக்கப்பூர்வமானதா இல்லையா என்று விவாதங்களின் முடிவில் வந்து பார்க்கிறேன்.

    எனக்கு தெரிஞ்சதெல்லாம் பதநீர்னு தான்..சென்னையில 5 ரூவா..இனிப்பா இருக்கும்.அது தான் கள்ளுன்னு
    இத்தன நாளா நினைச்சிட்ருக்கேன்.

    ReplyDelete
  16. நல்லாய்த்தான் கணக்கு எல்லாம் போட்டுச் சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  17. //மதுபானம் விற்று அரசு கோடிகணக்கில் வருமானம் பார்க்கிறது//

    அரசுக்கு மட்டுமில்லீங்க...

    சரக்கு தயாரிக்கற கம்பெனியும்தான்

    ReplyDelete
  18. மேலும் ஒரு சிறிய தகவல் ஜீவன். என்னதான் டிமாண்ட் கூடினாலும், இளநீர் மற்றும் தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் விலையில் (மூன்று ருபாய்) எந்தவித மாற்றமும் வருவதில்லை.

    கிராமப்புறங்களில் (எனது கிராமம் உட்பட) எந்த ஒரு வியசாயிக்கும் சராசரியாக பத்து முதல் ஐம்பது தென்னைகள் உள்ளன. கள் இறக்குவதன் மூலம் , மரம் ஒன்றுக்கு சராசரியாக மாதன் 300 ருபாய் வருமானம் வரும்.

    ஒரு விவசாயி மகன் என்கிற முறையில் சொல்கிறேன், கள் இறக்குவது கண்டிப்பாக அடித்தட்டு மக்களின் பொருளாதரத்தை உயர்த்தும்.

    (மேலும் ஒரு சிறிய தகவல்: கோவை மாவட்டத்தில் இந்த கடைசீ மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட விற்பனை இலக்கான 66 கோடி ருபாய் ஒரே மாதத்தில் முடித்து சாதனை செய்யப்பட்டுள்ளது )

    ReplyDelete
  19. விற்பனை இலக்கு என்று நான் குறிப்பிட்டது அம்மாவட்டதில்லுள்ள TASMAC கடைகளில் சரக்கு விற்பனை தான்.

    ReplyDelete
  20. குடிச்சி நாசமா போனாலும் விவசாய்களுக்கு (அரசாங்கத்துக்கு அல்ல) ஏதாவது நல்லது செய்யுங்கடானு சொல்ல வாரீங்க‌


    நிறைய கோரிக்கைகள், மறியல் நடக்கும் நம் அரசியல் வாதிகள் மூலம், அந்த கேள்விக்கு தெளிவான விளக்கம் ஜீவன்..

    ReplyDelete
  21. இரண்டுமே வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். கணக்குப் பிறகாரம் 90-ம் அவன் குடும்பத்திற்கு செலவு செய்வதில் மட்டுமே எனக்கு உடன்பாடு.

    ReplyDelete
  22. "சரி மற்றும் தவறு என்று இரண்டு நிலைகள் மற்றுமே உலகில் உள்ளது " என்பதில் உடன்பாடு இல்லை (உண்மைதமிழன் சொன்னது போல). there is gradient between good and bad too. so this is practically possible. i agree. but govt-business may loose income to people!

    ReplyDelete
  23. கள் இறக்கி விற்பதை நானும் ஆதரிக்கிறேன். இது பற்றிய என் பதிவுக்கு உங்கள் ஆதரவுக்கு நன்றி!!

    ReplyDelete

123