Tuesday, November 17, 2009

ஜோதிடம் எந்த அளவுக்கு.??

எனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும்..! கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான்..!ஜோதிடம் பத்தி ஒரு பிளாக் கூட எழுதினேன் ஆனா வலையுலகத்துல சிலர் ஜோதிடம் பத்தி எழுதுறத பார்த்து பிரம்மிச்சு போய் நமக்கு ஜோதிடம் பத்தி எழுத தகுதி இல்லன்னு முடிவு பண்ணி நிறுத்திகிட்டேன் .

நான் ஜோசியம் கத்துக்கணும்னு நினைக்க ஒரு காரணம் இருக்கு..!என் நண்பர்கள் மற்றும் சிலர் பயங்கரமான ஜோதிட பிரியர்கள் தொட்டதுக்கெல்லாம் ஜோசியம் ,ஜோசியம்னு இருப்பாங்க அன்றாடம் நம்ம நிகழ்வுகள கிரகங்களோட சம்பந்த படுத்தி பேசுறத கேட்டா மண்ட காயும்.

ஜோதிடத்த நம்பி சிலர் பண்ணின சொல்லுறேன் ..!

தெரிஞ்ச ஒருத்தர் தீவிர ஜோதிட நம்பிக்கை உள்ளவர். அவருக்கு கல்யாணமாகி ஒரு அவங்க மனைவி கர்பமாகவே ,இவர்நேரா அவங்க குடும்ப ஜோசியர்கிட்ட போய் இப்போ இந்த குழந்தை பெத்துக்கலாமா கேக்க அந்த மேதாவி ஜோசியரும் இப்போ வேணாம்.! இந்த குழந்தைபெத்துகிட்டா பெரிய கஷ்டம் வரும்னு சொல்ல, இவரும் அவர் மனைவிய கட்டாய படுத்தி அபார்சன் பண்ணிட்டாரு.
அதுக்கப்புறம் அவங்களுக்கு சில வருடங்கள் குழந்தை பிறக்கல அஞ்சு வருஷம் கழிச்சுதான் பிறந்தது.

எனக்கு அந்த ஜோசியர பார்த்தா கொலைகாரனை பாக்குறதுபோல பாக்குறதுபோல இருக்கும் . அப்படியென்னகருவை கொல்லுற அளவுக்கு என்ன ..? ஜோசியம்..?

Justify Full
இன்னொரு சம்பவம் என் நண்பன் ஒருத்தன் ஒரு பொண்ண லவ் பண்ணினான். கல்யாணம் பண்ண ரெண்டு பக்கமும் செம எதிர்ப்பு..! ஒரு வழியா கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் சம்மதிக்க பையனோட அம்மா மட்டும் சம்மதிகல..! அவங்க சம்மதத்த வாங்க பெரிய கஷ்டமாயிடுச்சி கடசியா அவங்க சொன்னது ஜாதகம் பொருத்தம் இருந்தா ஒத்துகிறேன் அப்படின்னு சொல்ல,பையனுக்கு லேசா பயம் வந்துட்டு...! ஜாதகம் சரியா இல்லாட்டி என்ன பண்ணுறதுன்னு ..? ஒடனே அவன் அந்த பொண்ணுகிட்ட யாருக்கும் தெரியாம ஜாதகத்த கொண்டுவரசொல்லி பொருத்தம் பார்த்தா ..?பொண்ணுக்கு மூல நட்சத்ரம்...! மூல நட்சத்ரம் இருந்தா மாமனாருக்கு ஆகாது...! வீட்டுல கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க..! ஒடனே இவன் அந்த பொண்ணு ஜாதகத்தயே பொருத்தம் இருக்குதுபோல மாத்திட்டான் . கல்யாணமும் ஆச்சு பையனோட அப்பா நல்லா தீர்கயுசா இருந்துதான் காலமானார்....! அப்படின்னா ? மூல நட்சத்ரம் ...? என்ன ஜோசியம் ..? ஜாதகம் ...?

ஜோதிட நம்பிக்கை உள்ளவங்க கிட்ட இதையெல்லாம் எடுத்துசொல்லி ஜாதகம் பொய்ன்னு சொன்னா பெரிய வாக்குவாதம்தான் வந்தது. ஜாதகம் பொய் அப்படின்னு ஆதாரத்தோட சொல்லனும்னுதான் ஜோசியம் பத்தின புத்தகங்கள படிக்க ஆரம்பிச்சேன்..!



ஆரம்பத்தில் ஜோதிடம் ஒட்டவில்லை ஆனால் ..!படிக்க படிக்க ஆர்வம் அதிகமானது. ஜோதிடத்தில் பல உண்மைகள் இருப்பதாக நினைத்தேன்.என் ஜாதகம்,மற்றும் எனக்கு தெரிந்தவர்கள் ஜாதகத்தை வைத்து கணிக்கும் போது கொஞ்சம் வியப்பு ஏற்பட்டது உண்மை..! இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும் .! இங்கே ஜோதிட கடலில் நீந்தி முத்தெடுத்த பல வல்லுனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கற்ற அந்த ஜோதிட கல்விக்காக அவர்களை வணங்க தோன்றியது...! என்னை பொறுத்தவரை ஜோதிட கடலில் நான் வெறும் கால் நனைத்தவன் அவ்வளவுதான் ..! ஜோதிடத்தில் உண்மை இருக்கிறது ஆனால் ..?சில ஜோதிடர்கள்தான் குழப்புகிறார்கள்..!!

ஒரு உதாரணம் அவர் பிரபலமான ஜோதிடர் அக்ஷய திரிதியை அன்று ஒரு பிளாட்டின நகை விற்பனை செய்யும் கடைக்கு விளம்பரம் செய்கிறார் எப்படி...? அக்ஷய திரிதியை அன்று வெள்ளை நிற உலோகம் தான் வாங்கவேண்டும் அது பிளாட்டினம் தான் என்ற ரீதியில் சொல்கிறார்..! ஏன் ? வெள்ளியும் வெள்ளை நிற உலோகம்தான் அதை ஏன் அவர் சொல்லவில்லை...???

இன்னொருவர் சனி பெயர்ச்சிக்கு பரிகார யாகம் நடத்துகிறார்...! இந்த சனி பெயர்ச்சியில் பாதிப்பு அடையும் கீழ்க்கண்ட ராசிக்காரர்களே...! உங்கள் கஷ்டங்கள் நீங்க பரிகார யகத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்து காசு பார்க்கிறார் ..!
சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக கிரகங்களை காட்டி பயமுறுத்துகின்றனர்..!

என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது ஒரு வானிலை அறிக்கை மாதிரி மழை பெய்யும்,அல்லது பலத்த காற்று வீசும் என்பதுபோல...!

அல்லது இப்படியும் சொல்லாம்..!

அதாவது ஆற்று வெள்ளத்தில் பயணம் செய்வதுபோல ஜோதிடத்தை நம்பி விதியே என பயணம் செய்தல் அதன் போக்கில் தான் போகும் ..!

ஜோதிடத்தை இப்படி கூட சொல்லலாம்..!

கிரிக்கெட்டில் வரும் பிட்ச் ரிப்போர்ட் போல இது பேட்டிங் செய்ய ஏதுவான பிட்ச் .அல்லது பந்து வீச ஏதுவான பிட்ச் என்பதுபோல ...!

ஜோதிட சக்தியா ..?மனித சக்தியா ..?

ஒருவர் தான் மாமன் மகளை திருமணம் செய்து கொண்டார் சொந்தம் என்பதால் ஜாதகம் பார்க்காமல் திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.அப்போதுதான் அவர்களுக்கு ஜாதகம் பார்க்க தோன்றியது .ஜாதகத்தில் இருவருக்குமே ஐந்தாம் இடத்தில் ராகு..! மேலும் புத்திர ஸ்தானத்தில் இருவருக்குமே குரு நீசம் .இவர்களுக்கு குழந்தையே பிறக்காது இருவரும் திருமணமே செய்திருக்க கூடாது என பல ஜோதிடர்கள் சொல்ல மிகவும் கவலை அடைந்தார்கள்.இவர்களில் இந்த நிலையை பயன்படுத்தி பரிகாரம் என்ற பெயரில் சில போலிகள் வருமானம் கண்டார்கள். பரிகாரம் செய்ததோடு இவர்கள் அதிநவீன மருத்துவத்தையும்
கையாண்டார்கள் மருத்துவம் கை கொடுக்க இவர்களுக்கு இப்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது ..?

அப்படியெனில் ஜோதிடம் ...?

விதி என்ற ஜோதிடம் அவர்களிடம் வேலையை காட்டியது ஆனால் ?மருத்துவம் என்ற மதி அதை வென்றுகாட்டியது ...!

ஜோதிட சக்தியா..? மனித சக்தியா..? என கேட்டால் கண்டிப்பாக மனித ஆற்றலுக்கு நிகரானது எதுவும் இல்லை என்றுதான் சொல்லுவேன்..!

ஜோதிடம் வானிலை அறிக்கை போல, மழை வரும் என்றால் அதில் நனையாமல் இருப்பது நம் சாமர்த்தியம் .

ஜோதிடம் ஆற்று வெள்ள பயணம் போல விதியே என பயணம் செய்யாமல் எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நமக்குதான்..!

ஜோதிடம் ஒரு பிட்ச் ரிப்போர்ட் பந்து வீச்சுக்கு சாதகமான பிச்சில் சதம் அடிப்பதும் ,பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் அதிக விக்கட்டுகள் எடுப்பதும் அவரவர் திறமை, முயற்சி, உழைப்பை பொறுத்தது.

ஜோதிடத்திலேய மனித சக்திதான் சிறந்தது என்பதற்கு நழுவலான ஒரு விதியை சொல்லி இருக்கிறார்கள். ஒருவனுக்கு எல்லா கிரககங்களும் பாதகமான நிலையில் இருந்து, துன்பம் அளிக்கும்போது அவன் அந்த துன்பங்களை எதிர்த்து கடினமாக உழைத்தால் துன்பம் அளித்த கிரகங்களே மனம் இளகி அவனுக்கு நன்மை செய்யுமாம்.


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்



34 comments:

  1. அன்புள்ள நண்பருக்கு,
    மீண்டும் அனைவர் வாழ்விலும் அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை உண்டாக்கும் ஒரு விடயத்தை கையில் எடுத்துள்ளீர்கள்!! உங்களிடம் உள்ள தனிச் சிறப்பே அது தான்!! பதிவு நன்றாக இருக்கிறது!! இருப்பினும் ஜோதிடம் தெரிந்தவர் என்ற முறையில் உங்களிடம் இன்னும் எதிர் பார்கின்றோம்!! எந்த அளவுக்கு இதை எடுத்துக் கொள்ளலாம் என்று வழி காட்டும் விதமாக!! இதனால் சிலர் மனது புண்படலாம்!! ஆனால் எழுத்தாளர் என்ற முறையில் நல்ல கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்களைச் சென்று சேர்ப்பது தங்கள் கடமை!! ஏனெனில், ஒரு மனிதன் நன்றாக இருக்கும் போது ஜோதிடரை அணுகுவதில்லை!! துன்பத்தில் இருக்கும் போது நாம் நமது யோசிக்கும் திறனை இழக்கிறோம்!! இது ஜோதிடர்களுக்கு ஆதரவாகப் போய்விடுகிறது. மேலும் எதிர்பார்கின்றோம்!! வாழ்த்துக்கள்!! நன்றி!!

    ReplyDelete
  2. எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் தனக்கு விரய தசை ஒரு மாதத்தில் நடக்கப் போவதாக தன் ஜாதகத்தையே கணித்து தெரிந்து கொண்டார்.

    பிறகு இவ்வளவு நாள் பரிகாரங்களால் சம்பாதித்த பணத்தையும் சொத்தையும் விரயமாகக்கூடாது என்று தன் சொத்து முழுவதும் தன் மனைவியின் பெயரில் எழுதி வைத்துவிட்டார். மனைவிக்கு விரய தசை இல்லை. இவருக்குதானே விரயம் இப்படி விரயம் செய்துவிட்டால் பிரச்சனை இல்லை என்று இம்முடிவுக்குவந்தார்.


    சொத்தை மாற்றி ஒருமாதம் ஆகி, விரய தசை ஆரம்பமாகிய பிறகுதான் ஒரு பேரிடி விழுந்தது.

    அவர் மனைவி வேறுஒருவரை மணந்து சென்றுவிட்டார்.

    ஜோதிடர் எது விரயம் ஆகும் என சரியாக கணிக்க முடியவில்லை. :))

    ஜோதிடம் தவறா ஜோதிடர் தவறா?

    ReplyDelete
  3. கொஞ்சம் தல சுத்துது ...

    ReplyDelete
  4. ஜோதிடம் என்பது சைக்காலஜிக்கல் ட்ரீட்மெண்ட் மாதிரி!

    எல்லோருக்கும் பொருந்துவது போலவே இருக்கும்!
    பொருந்தும் ஆனா பொருந்தாது!

    ஜாதகம்னா என்னானே தெரியாம உலகத்துல பாதி ஜனத்தொகை இருக்கு தெரியுமா!?
    அவுங்கல்லாம் அல்ப ஆயுசுலயா மண்டைய போடுறாங்க!

    ReplyDelete
  5. நல்ல இடுகை ஜீவன். ஏதோ கேட்டோமா வந்தமான்னு வேலைய பார்த்தாதான் சரி. இவனுங்கள நம்பி நாசமா போறதுதான் யதார்த்தம்.

    ReplyDelete
  6. வானம்பாடிகள்,
    //ஏதோ கேட்டோமா வந்தமான்னு வேலைய பார்த்தாதான் சரி. இவனுங்கள நம்பி நாசமா போறதுதான் யதார்த்தம்//

    அப்புறம் எதுக்காக "கேட்டோமா வந்தமான்னு " இருக்கணும்???????

    ReplyDelete
  7. இது என்னவென்று தெரியாததாலும், ஜோதிடத்தில் அறவே நம்பிக்கை இல்லாததாலும் இது பற்றி கருத்து சொல்வது சரியல்ல. என்வே வெளியில் இருந்து வேடிக்கைமட்டும் பார்க்கிறேன் தல.

    ReplyDelete
  8. எனக்குள் பயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்த கூடிய வார்த்தை “ஜோதிடம்”. ஜோதிடத்தை நாம் நம்பினாலும் அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்பினாலும் அவதி நமக்குத்தான்..என்னுடைய கசப்பான அனுபவம் இது.

    ReplyDelete
  9. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்

    exactly

    எனக்கென்னமோ இந்த ஜோசியம் அப்படிங்கறது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை மாதிரின்னு தோணுது :)

    ReplyDelete
  10. இன்றைக்கு கவனத்தை திருப்ப எத்தனையோ அம்சங்கள் மலிந்து விட்ட நிலையில், அன்றைக்கு கோவிலும் தெய்வமும்தான் இருந்தன. மதிப்பு கூட்டிய சேவையை போல, தெய்வங்களை சுற்றி உருவாக்கப் பட்டவைகளே இந்த புராணங்கள்,சடங்குகள், விரதங்கள், சோதிடம்,பரிகாரம் எல்லாமே...

    இந்த சுவாரஸ்யங்கள் அன்றைய வாழ்வு முறைக்கு தேவைப்பட்டன...இதற்காய் இதை முற்றிலும் நிராகரித்து விடவும் முடியாது.பல ஆச்சர்யங்கள் சோதிடத்தில் இல்லாமலில்லை...

    எது எப்படியிருந்தாலும்...

    ”மந்திரம் கால்...மதி முக்கால்...”

    இது எங்க பாட்டி அடிக்கடி சொல்ற பழமொழி...

    ReplyDelete
  11. //எனக்கு அந்த ஜோசியர பார்த்தா கொலைகாரனை பாக்குறதுபோல பாக்குறதுபோல இருக்கும்//

    உங்களுக்கு மட்டுமா?

    //ஜோதிடம் வானிலை அறிக்கை போல, மழை வரும் என்றால் அதில் நனையாமல் இருப்பது நம் சாமர்த்தியம் .//

    இது கரைட்....

    ReplyDelete
  12. /*தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும்
    */
    உண்மை. நல்ல இடுகை. தெளிவாகக் கருத்துக்களை எடுத்துக் கூறி உள்ளீர்கள்.

    ReplyDelete
  13. //தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும்

    //

    இதுதான் உண்மை.

    ReplyDelete
  14. @ ஸ்வாமிஓம்கார்

    சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு சரி,தவறு தப்பா சொல்லிக்குடுக்குற வாத்தியார்களிடத்தில்...அப்படின்னா??

    :)

    ReplyDelete
  15. //@ ஸ்வாமிஓம்கார்

    சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு சரி,தவறு தப்பா சொல்லிக்குடுக்குற வாத்தியார்களிடத்தில்...அப்படின்னா??

    :)//

    நான் என்ன சொல்ல வரேன்னா :)..

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும் என்பது சரியே...

    ஒரு மனிதன் எப்போ, எப்படி எதில் முயற்சி செய்வான் என்பதை தெரிந்து கொள்ள மெய்வருத்தி ஜோதிடம் பார்க்கனும்னு சொல்லறேன். .......புரிஞ்சுதோ :)

    ReplyDelete
  16. //எனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும்..!//
    நிஜம்மாவா... பார்ப்போம் என்ன சொல்றீங்கன்னு...

    //வருக்கு கல்யாணமாகி ஒரு அவங்க மனைவி கர்பமாகவே ,இவர்நேரா அவங்க குடும்ப ஜோசியர்கிட்ட போய்//

    அட சை... இத முதல்ல பண்ணப்டாதா...

    //தீர்கயுசா இருந்துதான் காலமானார்....! அப்படின்னா ? மூல நட்சத்ரம் ...?//

    அப்டி போடுங்க...

    //ஜோதிடத்தில் உண்மை இருக்கிறது ஆனால் ..?சில ஜோதிடர்கள்தான் குழப்புகிறார்கள்..!!//

    இதுவும் உண்மை என்றே சொல்லத் தோன்றுகிறது..

    //விதி என்ற ஜோதிடம் அவர்களிடம் வேலையை காட்டியது ஆனால் ?மருத்துவம் என்ற மதி அதை வென்றுகாட்டியது ...!//

    ம்ம்... 'விதியை மதியால் வெல்லலாம் என்று விதி இருந்தால்... மதியை விதியால் வெல்லலாம்..'.. இது நம்ம நிலைப்பாடு.. =))

    //தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும்//

    இதுவும் வாஸ்தவம்தான்... ! (பாப்பையா வேலைய நான் எடுத்துக்கிட்டேனோ... மெதுவா ஓட்டப் போட்டு ஜூட்டுவோம்)

    ReplyDelete
  17. பலிச்சா ஜோசியம் உண்மை
    பலிக்காட்டி நம்ம நேரம் சரியில்லை..

    இப்படி சொல்லிட்டு போறவங்க எத்தனைப் பேர் இருக்காங்க...

    இதுலதாங்க பல பேர் பொழப்பே ஓடிகிட்டு இருக்கு. அதுல மண் அள்ளிப் போடப் பாக்கறீங்களே..

    ReplyDelete
  18. ஜீவன்,
    2 உணவகத்தில் இட்லி சாப்பிடுகிறீர்கள்;ஒன்றில் மிகுந்த சுவையாக இருக்கிறது.

    இன்னொன்றில் கல்போல வாயில் வைக்க இயலாமல் இருக்கிறது..

    நீங்கள் உணவகத்தில் சமையல் சரியில்லை என்ற முடிவுக்கு வருவீர்களா அல்லது

    அரிசியில் செய்யப்பட்ட எதுவுமே சாப்பிடத் தகுந்தவை அல்ல என்ற முடிவுக்கு வருவீர்களா?

    பார்க்க இந்தப் பதிவை.

    ReplyDelete
  19. "இவனுங்கள நம்பி நாசமா போறதுதான் யதார்த்தம். "

    same ..

    ReplyDelete
  20. With Him are the keys of the unseen, the treasures that none knoweth but He. He knoweth whatever there is on the earth and in the sea. Not a leaf doth fall but with His knowledge: there is not a grain in the darkness (or depths) of the earth, nor anything fresh or dry (green or withered), but is (inscribed) in a record clear (to those who can read).

    "மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன."

    "பூமியின் (ஆழ‌த்தில் அட‌ர்ந்த‌) இருள்க‌ளில் கிட‌க்கும் சிறு வித்தும், பசுமையான‌தும்,உல‌ர்ந்த‌தும் (எந்த‌ப் பொருளும்) தெளிவான‌ (அவ‌னுடைய‌) ப‌திவேட்டில் இல்லாம‌லில்லை."

    அல்குர்ஆன் 6:59 ஸூர‌த்துல் அன்ஆம்.
    ************************************************

    அல்குர் ஆன் 6:59

    ReplyDelete
  21. நிறைய மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன.

    வலைச்சரம் பாருங்கள்.நீங்களும் இருக்கிறீர்கள் இன்று.

    ReplyDelete
  22. jothidar ungaluku thevayanathai sonnnal manam kulirum. ungaluku ethiraga sonnal jothidar ungal ethiri agi viduvar.illai endral parikaram endru neengala vayai vittu neengalum ketu jothidaraiyum ........

    jothidarai parkumpoluthu thirantha manathudan yetrukollum thanmayudan sellungal.

    ennaiporuthavarai jothidam oru vali gattiey.

    arputhamana jothidargal nam naatil ullanar.

    poly doctor, poly samiyar, innum ellathurayilum poligal undu.

    ungal arivalum anubavathalum nalla jothidarai neengaley ariya vendum.

    ReplyDelete
  23. ஜோதிடம் எல்லாம் மக்களை சோம்பிரிகளாக்குற வேலைகள். உழைப்பை நம்புபவன் நிச்சயம் உயர்வான்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் ஜீவன்

    நானும் ஜோதிட கலையை பல வருடங்களாக பயின்று வருபவன். ஜோதிடம் தவறே இல்லை. ஜோதிடர்கள்தான் தவறு செய்கிறார்கள். ஜோதிடத்தையே வாழ்க்கையாக எண்ணக்கூடாது. மழை பெய்யும்போது குடை பிடிப்பது போல கெட்ட காலங்களில் நமது புது முயற்ச்சிகளை விடுதல் நல்லது. கைரேகை ஒரு அற்புதமான சாஸ்திரம். ஒருவரின் ரேகை மற்றவருக்கு அமைவதே இல்லை. மேலும் ஜாதகத்தோடு விஞ்ஞானத்தையும் பொருத்தி பார்த்தல் நலம். உதாரணமாக செவ்வாய் தோஷம். என்னுடைய அனுபவத்தில் நெகடிவ் ரத்த வகையை சார்ந்தவர்களுக்கு தோஷ பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

    நன்றி ஜீவன்

    ReplyDelete
  25. நல்ல பதிவு ஜீவன்.ஜோதிடத்தைப் பார்த்திட்டு புலம்புறதை விட நாலு பேருக்கு நல்லதைச் செய்திட்டு சந்தோஷமா என்ன வருதோ அதை அனுபவிச்சிட்டுப் போகலாம்.

    ReplyDelete
  26. ஜீவன் எந்த தலைப்பையும் விட்டுவைக்கமாட்டார் போல!

    "ஜோதிடம் எந்த அளவுக்கு.??" கேள்விக்குறி எல்லாம் போட்டிருக்காரு!

    அவரவர்கள் அவரவர்களின் எண்ணங்களையும் உள்ளது உள்ளபடி சொல்லி இருக்காங்க.....

    அரசியல், ஆன்மிகம், எழுத்துலகம், மக்கள் சேவை இப்படி பல அவதாரம் எடுப்பவர்தான் ஜீவன்.

    எது எழுதினாலும் ஒரு தனித்தன்மை ஏற்படுத்துவது ஜீவனின் ஸ்பெசாலிட்டி. அதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் இன்று ஜீவன் எழுதி இருக்கும் இந்த ஜோதிட அலசலும் ஒரு ரகம்.

    ம்ம்ம்.... இன்னும் என்னென்ன ஜீவனுக்குள் ஒளிந்திருக்கிறதோ பார்க்கலாம்...

    ReplyDelete
  27. எடுத்த விஷயம் சிக்கலானது எனினும்... இரண்டு பக்கமும் பாதகம் இல்லாமல் சிறப்பாக நடுநிலையை கையாண்டிர்கள் பாராட்டுகள்...

    ReplyDelete
  28. negative positive என இரண்டும் உங்களால் சொல்லப்பட்டுள்ளது இங்கு ஆமாம் தீர்கமானது என்று எதையும் சொல்ல இயலவில்லை

    எனக்கு நம்பிக்கையில்லை இதில் அதே சமயம் இருப்பவர்களையும் குறை சொல்ல விரும்பவில்லை பிறந்தோம் வாழ்கின்றோம் எது வந்தாலும் சந்திக்கபோறோம் என்பது தான் என் வாதம்... நண்பர்கள் சொன்ன மாதிரி எல்லா தலைப்பையும் ஆராய்ந்து வருகிறீர்கள் தமிழ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. ஸ்வாமி ஓம்கார் said...
    எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் தனக்கு விரய தசை ஒரு மாதத்தில் நடக்கப் போவதாக தன் ஜாதகத்தையே கணித்து தெரிந்து கொண்டார்.

    பிறகு இவ்வளவு நாள் பரிகாரங்களால் சம்பாதித்த பணத்தையும் சொத்தையும் விரயமாகக்கூடாது என்று தன் சொத்து முழுவதும் தன் மனைவியின் பெயரில் எழுதி வைத்துவிட்டார். மனைவிக்கு விரய தசை இல்லை. இவருக்குதானே விரயம் இப்படி விரயம் செய்துவிட்டால் பிரச்சனை இல்லை என்று இம்முடிவுக்குவந்தார்.


    சொத்தை மாற்றி ஒருமாதம் ஆகி, விரய தசை ஆரம்பமாகிய பிறகுதான் ஒரு பேரிடி விழுந்தது.

    அவர் மனைவி வேறுஒருவரை மணந்து சென்றுவிட்டார்.

    ஜோதிடர் எது விரயம் ஆகும் என சரியாக கணிக்க முடியவில்லை. :))

    ஜோதிடம் தவறா ஜோதிடர் தவறா?

    இது சரியோ தவறோ நல்லாச் சிரிச்சேன்...

    ReplyDelete
  30. ஸ்வாமி ஓம்கார் said...
    //@ ஸ்வாமிஓம்கார்

    சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு சரி,தவறு தப்பா சொல்லிக்குடுக்குற வாத்தியார்களிடத்தில்...அப்படின்னா??

    :)//

    நான் என்ன சொல்ல வரேன்னா :)..

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும் என்பது சரியே...

    ஒரு மனிதன் எப்போ, எப்படி எதில் முயற்சி செய்வான் என்பதை தெரிந்து கொள்ள மெய்வருத்தி ஜோதிடம் பார்க்கனும்னு சொல்லறேன். .......புரிஞ்சுதோ :)

    ஸ்வாமிவாள் நல்லா காமெடி பண்றார் என்று புரிந்தது...

    ReplyDelete
  31. //தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும்//

    i accept this and go with this option...

    ReplyDelete
  32. நல்ல பதிவு ஜீவன். துன்பம் வரும் போது மட்டும் ஜோசியம் பார்க்கும் பழக்கம் எனக்கு :). இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம். அப்புறம் சரியாகிடும்னு ஜோசியம் சொல்லாதான்ற நப்பாசைதான் அதற்கு காரணம். மத்த படி அக்‌ஷயதிரிதி..மத்தது எல்லாம் வியாபாரம். பிளாட்டினம்னு ஒரு உலோகம் இருக்குறதே கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தான் மக்களுக்கு தெரியும். இதுல அத விக்க இவ்வளவு விளம்பரம்.

    ReplyDelete
  33. நிறைய சொல்லலாம்

    நம்ம சொல்ற பதில்ல இங்கே புது பிரச்சனை வேண்டாம் ...

    ReplyDelete
  34. நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன்....
    கடவுளே... என்னை நல்லவிதமாக வழி நடத்து. எனக்குந‌ல்லது செய்..என....கடவுளிடம் வேண்டி விட்டு பிறகு சோதிடரிடம் செல்வது,
    கடவுளை அவமதிக்கும் செயல்தானே!


    சோதிடம் எதையும் மாற்றிவிடாது என்பதுதான் உண்மை.

    நல்ல பதிவு ... நன்றிங்க ஜீவன்.

    (ஏற்கனவே பின்னூட்டம் எழுதினேன்... காணலை!!!)

    ReplyDelete

123