Tuesday, December 14, 2010

தினத்தந்தியின் ’’வரலாற்றுச்சுவடுகள்’’ ஓர் அரிய பொக்கிஷம்


தினத்தந்தி நாளிதழில் வரலாற்றுசுவடுகள் தொடர் வந்தபோது பல வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன். சில வரலாற்று நிகழ்வுகளை தொகுக்க விரும்பி பழைய செய்தித்தாள்களை சேமித்து வைத்து இருந்தேன் . ஆனால் செய்யவில்லை ..! தற்போது அந்த வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக புத்தகமாக வெளிவரும் என கனவிலும் நினைக்கவில்லை எனக்கு இது மாபெரும் இன்ப அதிர்ச்சி ..! அருமையாய் இருக்கிறது புத்தகம் . முழுக்க முழுக்க ஆர்ட் பேப்பர் 842 பக்கங்கள் அனைவரிடமும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய புத்தகம் இது ..!

இரண்டாம் உலக போர்
உலக முக்கிய நிகழ்சிகள்
இந்திய சுதந்திர போராட்டம்
இந்திய அரசியல்
இந்திய முக்கிய நிகழ்சிகள்
தமிழக அரசியல்
தமிழக முக்கிய நிகழ்சிகள்

ஆகிய தலைப்புகளில் தொகுப்பு உள்ளது.

விலை 300 ரூபாய்

11 comments:

  1. பல கடைகளில் இந்த புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்கிறார்கள்.தினதந்தி அலுவலகத்தில் கிடைப்பதாக கூறினார்கள்.

    நீங்கள் எங்கே வாங்கினீர்க்ள்?

    ReplyDelete
  2. // டுபாக்கூர் பதிவர் said...

    பல கடைகளில் இந்த புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்கிறார்கள்.தினதந்தி அலுவலகத்தில் கிடைப்பதாக கூறினார்கள்.

    நீங்கள் எங்கே வாங்கினீர்க்ள்?///

    எங்கள் பகுதி தினதந்தி முகவரிடம் முன்கூட்டியே பணம் கொடுத்து இரண்டுநாள் கழித்து புத்தகம் வாங்கினேன் சார்..!

    ReplyDelete
  3. நல்ல தகவல்

    உங்களுக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகமோ?...:)

    ReplyDelete
  4. // மங்கை said...

    நல்ல தகவல்

    உங்களுக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகமோ?...:)///

    வரலாறு படைக்கிறோமோ இல்லையோ
    படிச்சாவது வைப்போமே...!;)

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. நன்றிங்க

    ReplyDelete
  7. இப்போது நடக்கும் 2G ஊழல் பற்றிய செய்திகளை தமிழ் பத்திரிக்கைகள் selective -ஆக வெளியிடுவதை பார்த்தால் இது போன்ற வரலாறுகள் தமிழ் நியூஸ் பேப்பர் தொகுப்புகளில் எவ்வளவு தூரம் முழுமையானது என்று தெரியவில்லை!

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. செய்திக்கு நன்றி.புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தகவலுக்கு மிக்க நன்றி.... தமிழமுதன்.

    ReplyDelete

123