பாசமிகு தோழமைகளுக்கு வணக்கம் ....!
மதிப்பிற்குரிய, சீனா அய்யா அவர்கள்அழைப்பினை ஏற்று அடுத்த ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியராகபொறுப்பேற்கிறேன்.
அங்கே..!
நான் ரசித்த,நான் பெரிதும் மதிக்கின்ற பதிவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு தொடர்ந்து ஊக்கம்அளித்துவரும் நண்பர்களே....!அங்கேயும் வருகை தந்து தங்கள் கருத்துகளைதெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....! நன்றி ..!
>
எப்படி இருந்த நான் ???
அதை ஒரு நந்தவனமாக நினைத்தேன்! ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது!அதன் வாயில் கதவு அடைக்கப்பட்ட பிறகுதான் அது என்ன என்று புரிந்தது!இங்கே ஆனந்தமும் இருந்தது! ஆனால், இதன் எல்லைதான் பிடிக்கவில்லை! எல்லையற்று இருந்த என்னை எல்லைக்குள் கட்டுப்படுத்தியது வெறுப்பை தந்தது! முப்பதும்,அறுபதும் முடிந்துபோக ஐயோ என்றிருந்தது ..! வெளியே உள்ள நட்புகளும்,உறவுகளும் அன்னியப்பட்டு விடுமே என்ற கவலை வந்தது !
என்னைவிட உனக்கு யாரும் முக்கியமில்லை! என உடனிருந்த ''அது'' தர்க்கம் செய்தது! கோபம் வந்தது! ச்சே!! இதையா விரும்பினோம்? இந்த கட்டுப்பாடு பிடிக்கவில்லை! வெறுப்பிலும்,இறுக்கத்திலும் நாட்கள் கழிந்தது!
பிறகு...! எனக்கும் அதற்கும் பரிசாக வந்த அந்த ஒன்றுதான் என்னை முற்றிலும் மாற்றியது. ஆனந்தம் அள்ளியது .
எனக்கு சிறையாய் பட்ட இந்த இடம் வந்த ஒன்றிற்கு பேருலகமாய் இருந்தது.தன் உலகை அந்த ''ஒன்று'' என் கையை பிடித்து சுற்றி காட்டியது.நானும் அந்த ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிபோனேன்.
எனக்கும் இப்போது இதுவே உலகமானது...!
இதையெல்லாம் கண்ட என்னுடன் தர்க்கம் செய்த ''அது'' மவுனமாக புன்னகைத்து கொண்டது. கால போக்கில் அந்த ஒன்றுடன் இன்னொன்றும் கூடி போக குதூகலத்தில் துள்ள வைத்தது. இந்த பேருலகம் இப்போது எனக்கு பிரபஞ்சமானது. சந்தோஷமும் , உற்சாகமுமாய் நாள்கள் கழிகிறது. இப்போது எனக்கு எந்த தடைகளுமில்லை..! ஆனால் நான் இந்த உலகை விட்டு எங்கும் செல்வதில்லை...!
எனக்கும் இப்போது இதுவே உலகமானது...!
இதையெல்லாம் கண்ட என்னுடன் தர்க்கம் செய்த ''அது'' மவுனமாக புன்னகைத்து கொண்டது. கால போக்கில் அந்த ஒன்றுடன் இன்னொன்றும் கூடி போக குதூகலத்தில் துள்ள வைத்தது. இந்த பேருலகம் இப்போது எனக்கு பிரபஞ்சமானது. சந்தோஷமும் , உற்சாகமுமாய் நாள்கள் கழிகிறது. இப்போது எனக்கு எந்த தடைகளுமில்லை..! ஆனால் நான் இந்த உலகை விட்டு எங்கும் செல்வதில்லை...!


நிறைவடைகிறது 21-10-2009 அன்றுடன் ஏழு வருடங்கள்....!!!!!!!
>
அம்புட்டுதான் தீபாவளி
அதிகாலை
வெந்நீர்
நல்லெண்ணெய்
சீயக்காய்
குளியல்
இட்லி
கறி குழம்பு
புதுத்துணி
குழந்தைகள்
விளையாட்டு
பட்டாசு
மதியம்
ஒயின் ஷாப்
குவாட்டர்
சாப்பாடு
தூக்கம்
மாலை
மத்தாப்பு
குழந்தைகள்
கொண்டாட்டம்
இரவு
தீபாவளி ஸ்பெசல் குவாட்டர்
சண்டையுடன் சாப்பாடு
தூக்கம்
மறுநாள்
வழக்கம் போல்...!
>
வெந்நீர்
நல்லெண்ணெய்
சீயக்காய்
குளியல்
இட்லி
கறி குழம்பு
புதுத்துணி
குழந்தைகள்
விளையாட்டு
பட்டாசு
மதியம்
ஒயின் ஷாப்
குவாட்டர்
சாப்பாடு
தூக்கம்
மாலை
மத்தாப்பு
குழந்தைகள்
கொண்டாட்டம்
இரவு
தீபாவளி ஸ்பெசல் குவாட்டர்
சண்டையுடன் சாப்பாடு
தூக்கம்
மறுநாள்
வழக்கம் போல்...!
>
மிளகாய்ச் செடி
அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்.எங்க வீடும் எங்க சித்தப்பா வீடும் பக்கத்து பக்கத்து வீடு. ரெண்டு வீட்டுக்குமா சேர்த்து வேலி போட்டு இருந்தாங்க. கிலுவை முள்ளு வேலி.(கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம் ).
எங்க வீடு முதல்ல இருக்கும், எங்க சித்தப்பா வீடு அடுத்து இருக்கும். நாலு பக்கமும் வேலி. ஆனா வெளில போறதுக்கு கேட் வந்து எங்க சித்தப்பா வீட்டு வாசல் கிட்ட இருக்கும்.எங்க வீட்டு வாசல் வேலிய பார்த்த மாதிரி இருக்கும்.
ஒருவாட்டி நான் ஒரு மிளகாய்செடிய பாத்தேன்.அத அப்படியே புடிங்கி கொண்டாந்து, வீட்டு வாசல்ல வேலி ஓரமா ஒரு அருவாள எடுத்து குழி பறிச்சு நட்டு வச்சுட்டேன்.
காலைல எந்திரிச்சதும் முதல் வேல, மிளகாய் செடிக்கு தண்ணி ஊத்துரதுதான்.ரெண்டுநாள்ல செடி நல்லா துளிர்த்துக்குச்சி.அதே போல ஸ்கூல் விட்டு வந்தா உடனே செடிக்கு தண்ணிதான்.நெறைய தண்ணி ஊத்தினா செடி அழுகிடும்னு எங்கம்மா திட்டும்.நான் கேக்காம நெறைய தண்ணி ஊத்துவேன். செடிக்கு உரம் எல்லாம் போட்டு வளர்த்தேன்.மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.
ஒருநாள் காலைல வாசல் கூட்ட போன எங்கம்மா,டேய், உன் மிளகாய் செடில மொட்டு விட்டுருக்குடா!ன்னாங்க, அடிச்சு,புடிச்சுகிட்டு எந்திரிச்சு ஓடிபோய் பார்க்குறேன் கடுகு சைஸ்ல மொட்டு விட்டுருந்தது.எனக்கு சந்தோசம் தாங்கல!
மொட்டு விட்டத பார்க்க கூடவே என் தம்பியும்,தங்கச்சியும் வந்துட்டாங்க!
நான் உடனே ரெண்டுபேர் கிட்டயும் சொல்லுறேன் யாராவது செடிய தொட்டிங்க?அவ்ளோதான் யாரும் செடிய தொடக்கூடாது சரியா ? ரெண்டும் சரின்னு தலைய ஆட்டுதுங்க.
மொட்டு விட்டதுல அதுங்களுக்கும் சந்தோசம். அவங்கள தொட கூடாதுன்னு சொல்லிட்டு ஆர்வ கோளாறுல மொட்ட தொட்டு தொட்டு பார்க்குறேன்.அன்னிக்கு ஸ்கூல் போகவே மனசுஇல்ல.ஸ்கூல் ல அதே நெனைப்புதான்.ஸ்கூல் விட்டதும் நேரா செடி கிட்டதான். மொட்டு கொஞ்சம் பெருசானது போல இருக்கு இப்போதும் மெதுவா தொட்டு பார்க்குறேன்.எங்கம்மா திட்டுறாங்க,மொட்ட தொட்டின்னா கருகி கீழ விழுந்துடும் ஆமா சொல்லிட்டேன் . மறுநாள் காலைல சீக்கிரமே எந்திரிச்சுட்டேன்,மொட்டு இன்னும் கொஞ்சம் பெருசனதுபோல இருக்கு தண்ணி ஊத்திட்டு ஆசைல மொட்ட தொட்டு பார்க்குறேன்.
சாயங்காலம் ஸ்கூல் ல இருந்து வந்து பார்க்குறேன் செடில மொட்ட காணூம் எனக்கு அழுகாத குறைதான் எங்கம்மா கிட்ட கேட்டா மொட்ட தொடாதேன்னு சொன்னேனே கேட்டியா ? கீழ விழுந்துடிச்சு அப்படின்னாங்க.
என்'' மூஞ்சிய பார்த்து'' வேற மொட்டு வரும் அத தொடாதன்னு சொன்னாங்க!
என்'' மூஞ்சிய பார்த்து'' வேற மொட்டு வரும் அத தொடாதன்னு சொன்னாங்க!
அப்போதான் என் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெரிய சண்டை. சண்டைக்கு சொத்து பிரச்சினையாம் காரணம்.சண்டை பெருசாகி பஞ்சாயத்து வரை போய்டுச்சி. அப்புறம் எங்கப்பா இனிமே நாம இங்க இருக்க வேணாம்னு சொல்லிட்டு வேற வீடு வாங்கிட்டாரு நானும் என் மிளகாய் செடிய விட்டுட்டு வந்துட்டேன்.சித்தப்பா வீட்டோட சுத்தமா பேச்சு வார்த்தை கூட இல்ல.வேற வீட்டுக்கு வந்தோன நானும் எல்லாம் மறந்துட்டேன் .கொஞ்ச நாள் கழிச்சு எங்க சித்தப்பா வீட்டுக்கு எதிர் வீட்டு பாட்டி செத்து போய்ட்டாங்க! சாவுக்கு எல்லாரும் போகணும், எங்கப்பா யாரும் அவன்வீட்டுக்கு (சித்தப்பா) போக்குடாது அப்படின்னு கண்டிசன் போட்டு கூட்டிகிட்டு போறாரு!
சாவுக்கு போயிட்டு திரும்பும்போது! பார்க்குறேன் !
அந்த கிலுவை வேலி ஓரமா! ஆசையா ,நான் வச்ச! என் மிளகாய் செடில!
அழகா நாலைஞ்சு மிளகாய் காய்ச்சு இருக்கு!
அத வேலிக்கு வெளிய நின்னு பார்க்குறேன்! அங்க ஏன்டா நிக்குற வாடா எங்கப்பா அதட்டவே ஓடிட்டேன் !
(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )
-மீள் பதிவு-
>
பெண்கள் எங்கு அழகு...!

பெண் சிங்கம்
ஆண் சிங்கம்
பெண் யானை
ஆண் யானை
கோழி
சேவல்
பெண் மயிலும் ,ஆண் மயிலும்
ஆண்கள் என்னதான் மேக்கப் போட்டாலும் மனித இனத்தில் மட்டும் பெண்களே அழகாய் தெரிகிறார்கள் ...! (இல்ல எனக்குதான் அப்படி தோணுதா ???)





எங்கு பார்த்தாலும் ஆண் இனமே அழகாய் தெரிகிறது ஆனால் ..? இந்த மனித இனத்தில் மட்டும் ...????


***************************************************************************
>
இங்கிருந்து எடுத்ததுதான் அந்த படம் ..! (இந்த படத்தை பாருங்கள் ..!!!)
நாளை அல்லது அதன் பிறகு இந்த பதிவை போடலாம்னு இருந்தேன் ..! ஆனா ..!வரும் கமெண்டுகளை பார்த்த உடனே இப்போவே போட்டுடலாம்னு ஒரு ஆர்வம்..!

இன்னும் கொஞ்சம் லாங் ஷாட் ..!
//குழந்தையை ஏந்தி இருக்கும் தாய்.//ஊருக்கு போய் இருந்தப்போ தங்கை வீட்டுசமையலறை சுவற்றில் புகை கறையில் இதை பார்த்தேன் என் கண்ணுக்கு ஒரு தாயும் குழந்தையுமாக தெரிந்தார்கள். சிலரிடம் காட்டி தாயும் குழந்தையும் போல தெரிகிறார்களா என கேட்டேன் .! அட ஆமான்னு சிலர் சொல்லவே ஒரு ஆர்வத்துல பதிவா போட்டுட்டேன் .;;)) பெரும்பாலும் இரண்டு உருவங்கள் தெரிவதாக கமெண்டுகள்.
வானம்பாடிகள்
வானம்பாடிகள்
என சொல்லி இருந்தார் எனக்கும் அப்படித்தான் தோன்றியது ..!
ஆயில்யன்
//புகை விடும் அடுக்களை சுவரின் ஒரு பகுதியோ??//
அப்படின்னு மிக சரியா சொல்லிடாரு...!
அவரு மாயவரம் வரும்போது தக்க பரிசு வழங்கப்படும் ...!;;))
>
இந்த படத்தை பாருங்கள் ..!!!

இந்த படத்தை நன்றாக பாருங்கள் என்ன உருவம் அல்லது என்ன வடிவம் தெரிகிறது என்பதை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.!
இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதில் சிறிய சுவாரஸ்யம் இருக்கிறது ..!
அதை பின்னர் சொல்லுகிறேன்....!
இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதில் சிறிய சுவாரஸ்யம் இருக்கிறது ..!
அதை பின்னர் சொல்லுகிறேன்....!
>
Subscribe to:
Posts (Atom)