பல வருட ஆசை கங்கைகொண்டசோழபுரம் கோவிலுக்கு செல்ல..!
பகல்
நேரங்களில் கும்பகோணம் வழியே ஊருக்கு போகும் போது இந்த கோவிலை
பார்த்துக்கொண்டே செல்வேன் ஜெயம்கொண்டம் சாலையில் சற்று தூரத்தில்
தெரியும்..! பஸ்ஸில் செல்வது அவ்வளவு சவுகரிய படாது காரில்
குடும்பத்துடன் ஊருக்கு போகும் சமயங்களில் ஒருதடவை இங்கே போக வேண்டுமென்ற
ஆசை இனிதே நிறைவேறியது..!
தஞ்சை கோவிலை போல தோற்றம்
தந்தாலும் மனதிற்க்கு மிகவும் நெருக்கம் தந்தது இந்த கோவில்.! பரந்த
பசும்புல்வெளிக்கு மத்தியில் இருக்கும் கோவிலின் அந்த கம்பீர கோபுரத்தை
எந்த திசையில் இருந்து பார்த்தாலும் வெவ்வேறு வித அழகை காட்டியது..!
ஆங்காங்கே சில மரங்களும் அழகை கூட்டியது..! குழந்தைகளுடன் குதூகலமாய்
கழிந்தது ஒருநாள் பொழுது..!

>