இரவு 8.30 மணி அளவில் சென்னையில் இருந்து கிளம்பினோம்.டிரைவருடன் சேர்த்து மொத்தம் ஐவர். அதிகாலையில் ஒகனேக்கல் சென்று அடைந்தோம்.ஒரு அறை எடுத்து சின்னதாக ஒரு குட்டித்தூக்கம் போட்டு அருவிக்கு புறப்பட்டோம்.! எனக்கு இங்கு வருவது முதல் முறை.இதுவரை திரைப்படங்களிலும்,புகைப்படத்திலும் பார்த்த இடத்தை நேரே பார்க்க போவதால் ஒரு பரவசமான ஆர்வம்.! மெயின் பால்ஸ்சுக்கு செல்லும் வழி என்ற தகவல் பலகையை பார்த்தவுடன் நம்மை அறியாமல் கால்கள் வேகம் எடுக்க.....! குற்றாலம் போல குளுமை இல்லை ஆனால் ..! சுற்றிலும் தெள்ள தெளிவான சல சல நீரோட்டம்..! உயர்ந்து வளர்ந்த மரங்கள் மரத்தின் வேர்களை நனைத்து கொண்டே செல்லும் நீரோட்டம் எந்த திசையில் இருந்து வருகின்றது எங்கு செல்கிறது என சரியாக புரியவில்லை..! ஆழம் குறைந்த இடங்களில் ஆண்களும்,பெண்களும் குழந்தைகளுமாக உற்சாகமாக தண்ணீரில் இறங்கி ஆட்டம் போட்டு கொண்டு இருக்க ....! ஒன்றிரண்டு குரங்குகளும் கண்ணில் பட்டன..! இன்னும் சற்று தொலைவு சென்றவுடன் மசாஜ் செய்யும் ஆட்கள் நம்மை சுற்றிக்கொள்ள முக்கிய அருவியை நெருங்கி விட்ட படியால் அவர்களுடன் நின்று பேச முடியாத அளவு ஆர்வம் ..! முதலில் அருவியை பார்க்க வேண்டும் ..! தூரத்தில் இருந்து பார்த்தால் அருவி தெரியவில்லை அருகில்சென்று படிகட்டு வழியே இறங்கி சென்றோம்..!
அருவியை கண்டால் மட்டும் காந்தத்தை கண்ட இரும்பு துண்டைப்போல மனம் ஒட்டி கொள்கின்றது..! திரும்ப மேலே வந்து மசாஜ் செய்தோம் துணியை துவைத்து பிழிவதை போல ஒரு வழி செய்து விட்டார்கள்..! அடுத்து அருவியில் ஆட்டம் .. எவ்வளவு நேரம் குளித்தோம் என தெரியாத அளவுக்கு...குளித்து கரையேறி தொங்கு பாலத்தை நோக்கி சென்றோம்..!
![]() | ||||||||||||||||||||||
தொங்கு பாலத்தில் இருந்து
தொங்குபாலத்தை கடந்து சென்றால் அங்கே சில கடைகள் ..மேலும் அருவி பின்னனியில் மக்கள் சந்தோசமாக படம் எடுத்து தள்ளி கொண்டுஇருந்தனர்..! திரும்பிய திசை எங்கும் சிரிப்பும்,கும்மாளமுமாக.....இது போன்ற ஒரு சூழலை சுற்றுலா ஸ்தலங்களில் மட்டுமே காணமுடியும்..!
நாங்களும் சில படங்கள் பிடித்து திரும்பினோம் ..
அடுத்து நாங்கள் சென்றது மீன் வாங்க..!
மேட்டூர் அணையில் பிடிக்கபட்டு இங்கே விற்பனைக்கு வருகின்றனவாம் ..! எங்களுக்கு உணவு ஆகுவதற்காகவே பிறவி எடுத்த மீன்களை வாங்கி கொண்டோம்..! சில வகை மீன்கள் உயிருடன் காணப்பட்டன..!
எங்கள் மீன்களை அங்கேயே வெட்டி ஓரளவு சுத்தம் செய்து வாங்கி கொண்டோம்.! நாங்கள் தங்கி இருந்த விடுதி அருகிலேயே சமைத்து கொடுக்க ஆள் இருந்தார்கள் ..! எனவே வெட்டிய மீனுடன் கிளம்பினோம் விடுதியை நோக்கி...! பொரியலுக்கு மீன் ரெடி... குழம்புக்கு...? ஒரு நாட்டு கோழிக்கடைக்கு சென்று உயிருடன் இருந்த ஒரு கோழியை போட்டு தள்ளினோம்..!
சமைக்க செய்ய கொடுக்கவே இரண்டு மணி ஆகிவிட்டது . சாதம்,கோழிகுழம்பு,மீன் பொரியல்,ரசம் இதுதான் மெனு..! சாப்பாடு தயார் ஆகும் வரை அனைவரும் சற்று ”உற்சாகத்துடன்’’காத்திருந்தோம்..!
சாப்பிட்டு முடித்தோம் .
அடுத்து அவசரமாக கிளம்பியது பரிசல் சவாரிக்கு..!
5 மணி வாக்கில் பரிசல் பயணம் துவங்கியது ..!அழகிய அனுபவம் ஆங்காங்கே அருவிகள்... அருகில் சென்றால் சாரல் என அருமையாக இருந்தது..! ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் லைஃப் ஜாக்கெட் அணிவது முக்கியம்..! சிலர் குழந்தைகளுடன் லைஃப் ஜாக்கெட் அணியாமல் 60, 70 அடி ஆழம் இருக்கும் என சொல்ல படும் இடங்களில் பயணிப்பதை பார்த்தால் ’பக்’ கென இருந்தது..!
பரிசலில் மிதக்கும் கடை..! குளிர் பானங்கள் நொறுக்கு தீனிகள் கிடைக்கும்..! இதற்கும் மேலாக ஒருவர் பரிசலியேலே கேமரா மற்றும் பிரிண்ட்டர் சகிதமாக படம் பிடித்து உடனேயே பிரிண்ட் போட்டு தருகின்றார்..!
பரிசல் சவாரி முடிந்து மீண்டும் முக்கிய அருவியில் இரவு 7.30 வரை
குளியல்...! குளியல் முடித்து விடுதிக்கு வந்து பிரிய மனமின்றி திரும்பினோம் சென்னைக்கு..!
........................................................................................................................................................
எச்சரிக்கை;-
ஒகனேக்கலில் எந்த அளவுக்கு அழகு நிரம்பி வழிகின்றதோ அதே அளவும் இங்கு ஆபத்துகளும் அதிகம் உள்ளனவாம்...! வருடந்தோறும் கவன குறைவால் சுற்றுலா பயனிகள் பலர் உயிரிழப்பதாக கூறுகின்றனர் இங்குள்ளவர்கள்..!
கவனத்தில் கொள்ள வேண்டியவை..!
ஆழம் குறைவென எண்ணி குளிக்க நினைக்கும் பல இடங்களில் கிடு கிடு பள்ளங்கள் உள்ளனவாம் ஒன்றுக்கு பல தடவை அங்கு உள்ளர்களிடம் கேட்டுவிட்டு தண்ணீரில் இறங்க வேண்டும்..!
பாறைகள் அதிகம் வழுக்குகின்றன கவனமாக இருக்க வேண்டும்.. ஹீல்ஸ் செருப்புகளை தவிர்ப்பது நல்லது.!
பரிசல் சவாரியில் செல்லும் போது நீச்சல் தெரியாதவர்கள் கண்டிப்பாக லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும் ..! பரிசல் ஒன்றும் பெரிய பாதுகாப்பானது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். லைஃப் ஜாக்கெட் அங்கே கட்டாயமாக்க படவில்லை தேவைப்படுவோர் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்ற நிலையே உள்ளது..! பரிசல் பல இடங்களில் 60,70 அடி ஆழத்திற்கு மேல் மிதந்து செல்வதை நினைத்து கொள்ளவும்..!
>