ஒரு ஊருல ஒரு குருவி இருந்துச்சாம் அந்த குருவிக்கு பெரியவங்க கல்யாணம் பண்ணி வைச்சாங்களாம். ஜோடி குருவி வந்ததும் இந்த குருவி ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம் கொஞ்ச நாள்ல இந்த குருவிங்களுக்கு குழந்தைகளா மூணு குஞ்சுகள் பொறந்தது. எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க...
ஆனா..! இவங்களுக்கு நல்ல கூடு இல்லையாம் மழை காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டாங்க அதனால அப்பா குருவி நல்ல கூடு கட்டணும்னு நினைச்சு நெறைய குச்சிகள்,நார்கள் எல்லாம் தேடிச்சாம் ஆனா அந்த ஊருல நல்ல குச்சி ,நார் ஏதும் கிடைக்கல . அப்போ அங்க இருக்குற சில குருவிகள் சொன்னது கடல் கடந்து பறந்து போய் தேடினா நெறைய குச்சிகளும் நார்களும் கிடைக்கும் நல்ல கூடா கட்டிக்கலாம் அப்படின்னு.
கடல் கடந்து போய் வெய்யில்லயும் ,மழைலயும் அலைஞ்சு திரிஞ்சு நெறைய குசிகளையும் நார்களையும் எடுத்து வந்து கொஞ்ச கொஞ்சமா கூடு கட்டிச்சாம்.கடல் கடந்து போனதுல நெறைய இரையும் கிடைச்சதாம் அதயெல்லாம் கொண்டுவந்து தன்னோட ஜோடி குருவிக்கும்,புள்ளைங்களுக்கும் கொடுத்ததாம் அந்த அப்பா குருவி.
அப்பா குருவி பறந்து போனதும் அப்பா குருவி எப்ப திரும்ப வரும்னு ஜோடி குருவியும், குஞ்சுகளும் ஏக்கமா காத்துகிட்டு இருப்பாங்களாம்.
நல்ல கூடா கட்டியாச்சு..! இப்போ அந்த கூட நிரந்தரமா பாதுகாக்கனுமே அதுக்கு இன்னும் நெறைய குச்சிகளும் நார்களும் தேவை பட்டுச்சாம்.
தன்னோட ஜோடி குருவியும் , புள்ளைங்களும் பாதுகாப்பா,நல்லபடியா இருக்காங்க அப்படிங்குற ஒரேஒரு சந்தோசத்தமட்டும் மனசுல வைச்சிக்கிட்டு மழைலயும் ,வெய்யில்லயும் அலைஞ்சு திரிஞ்சு சரியா இரை கூட திங்காம இன்னமும் குச்சிகளையும், நார்களையும் தேடிகிட்டே இருக்குதாம் அந்த அப்பா குருவி.
>