துயில் எழுந்து காலை கடன் முடித்து,அடுத்து நீராடல்
இரண்டு தாதி பெண்கள் அழைத்து செல்ல
வெது வெதுப்பான வெந்நீரில் தாதியர் நீராட்டிவிட
நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி,
முத்துமாலை,முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து,
அறுசுவையுடன் கூடிய
காலை உணவு.
அரசவை!
இளவரசர் வாழ்க!!! இளவரசர் வாழ்க!!!
என்ற கோஷங்கள் முழங்க! அரசவை விஜயம்!!
மக்கள் குறை கேட்டல்,புலவர் பாடி செல்லல்
எல்லாம் முடிகிறது.
நண்பகல்!
அரண்மனையின் மேல்தளம் !!
குளிர்ந்த வெயில்!! வயல் வெளியால் நெய்யப்பட்ட
என் சோழ தேசம். நிறைந்த எங்கள் காவிரித்தாய்!!
தூரத்தில் மக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன்
விவசாய பணிகளில்! ஆங்காங்கே குதிரை வீரர்கள்!
இரண்டு வீரர்கள் புழுதியை கிளப்பியபடி குதிரையில்
வேகமாக சென்றுகொண்டு இருக்க! மன நிறைவுடன்
என் தேசத்தை ரசிகின்றேன் !! போரடிக்கும் வேலைக்கு
சேர நாட்டில் இருந்து பதினைந்து யானைகள்
வாங்க பட்டு உள்ளன.அவை இன்னும் வந்து
சேரவில்லை இன்னும் இரண்டு தினங்களில்
அவை வந்துவிடும் அவற்றை பழக்க கூடவே
பாகன்களும் வருகிறார்கள்.
கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர்,
நம் இளவரசருக்கு பெண் தேட துவங்கியது
முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.
மதிய உணவு மெல்லிய போதை தரும் சுவையான
பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன்.
தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..
ஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,
ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும்
தூங்க வேண்டியது? எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!
என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன்
என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல
அப்புறம் என்ன இலக்கண தமிழு )
ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!
.................................................
>
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
Me the First?
\\ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!\\
ஹா ஹா ஹா
அண்ணா கொஞ்சம் ஓவர்தான் ...
// ஏங்க! எந்திரிங்க சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது, //
அதானே... சனிக்கிழமை என்றாலே ஓவர்தானோ..
ம் ஆகட்டும் அப்பு... கொண்டாடுங்க
Yes ... I am the first...
After L.....O....N.....G.....
T.....I.....M....E...
ஆனாலும் கனவு நல்லாத்தான்கீது ...
// என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன்
என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல
அப்புறம் என்ன இலக்கண தமிழு )//
சிங்கமணிங்களா....
அய்யோ பாவம் நீங்க
ஆஹா... தேவா... மருத்துவரே...
லைன்லதான் இருக்கீங்கள....
கமெண்ட் மாடரேஷன் இருந்தும் போட்ட உடனே வருதுங்களே...
சூப்பர்
// நட்புடன் ஜமால் said...
\\ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!\\
ஹா ஹா ஹா
அண்ணா கொஞ்சம் ஓவர்தான் ...//
ரொம்ப ஓவர்ங்க...
\ஏங்க! எந்திரிங்க சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,\\
இரசித்து சிரித்தேன்
ஹா ஹா ஹா
\\இராகவன் நைஜிரியா said...
கமெண்ட் மாடரேஷன் இருந்தும் போட்ட உடனே வருதுங்களே...
சூப்பர்\\
அண்ணா ‘ஜீவன்’ உள்ள பதிவு ...
வாங்க!!! இராகவன் சார்!!!
வாங்க!! ஜமால்!!!!!
\\ஜீவன் said...
வாங்க!!! இராகவன் சார்!!!
வாங்க!! ஜமால்!!!!!\\
வந்தோம் இளவரசரே ...
\\இராகவன் நைஜிரியா said...
கமெண்ட் மாடரேஷன் இருந்தும் போட்ட உடனே வருதுங்களே...
சூப்பர்\\
;;)))
அண்ணா ‘ஜீவன்’ உள்ள பதிவு ...
ஆமா!! ஜமால்!! ;;))
நீங்க இளவரசரா? சரி சரி கனவுதானே வயச கொறச்சிக்கிறதுல தப்பில்ல:)
ஆஹா ஜீவாண்ணே என்னா இது? சரிதான் கனவுலேயாவது சந்தோசமா இருக்க விட மாட்டாங்களே
//துயில் எழுந்து காலை கடன் முடித்து,அடுத்து நீராடல்
இரண்டு தாதி பெண்கள் அழைத்து செல்ல
வெது வெதுப்பான வெந்நீரில் தாதியர் நீராட்டிவிட
நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி,
முத்துமாலை,முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து,
அறுசுவையுடன் கூடிய
காலை உணவு.
///
ஆஹா ரொம்ப ஓவராதான் போரோமோ?
//மதிய உணவு மெல்லிய போதை தரும் சுவையான
பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன்.
தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..//
இதைதான் சொர்க்கம் என்பார்களோ
//ஏங்க! எந்திரிங்க சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,
ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும்
தூங்க வேண்டியது?//
ஓவர் ஃபுல்லா?
ரசித்தேன் உங்கள் எழுத்தை, வர்ணனை அருமை
//இராகவன் நைஜிரியா said...
// ஏங்க! எந்திரிங்க சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது, //
அதானே... சனிக்கிழமை என்றாலே ஓவர்தானோ..
ம் ஆகட்டும் அப்பு... கொண்டாடுங்க
//
அந்த கொண்டாட்டதுலே வந்த எதிர்மறை விளைவுதான் இந்த கனவு
//நம் இளவரசருக்கு பெண் தேட துவங்கியது//
ஏனுங்க கனவுல கூட ஃபிராடு தனம்... கொஞ்சம் இல்ல..ரொம்ப ஓவர் தான்..
ஏதோ கதை சொல்லபோரீகலோனு பாத்தா
(மன நிறைவுடன்
என் தேசத்தை ரசிகின்றேன் !)னூ வந்ததுமே ஒரு டவுட்டு வந்துஷுயா
எது உங்க வேலையாதன் இருக்கும்னு
(என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன்
என்னை எழுப்ப ) :)))))))))))
வாழ்க இளவரசர்
நீங்க இளவரசரா? சரி சரி கனவுதானே வயச கொறச்சிக்கிறதுல தப்பில்ல:)
:)))))))))))))))))
நல்லா இருக்கு அப்பு
//கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர்,
நம் இளவரசருக்கு பெண் தேட துவங்கியது
முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.//
அழகிய காவியக் கனவு...அடுத்த கனவுல சுயம் வரம் நடக்குமா...?...பார்க்கலாம்...
//
துயில் எழுந்து காலை கடன் முடித்து,அடுத்து நீராடல் இரண்டு தாதி பெண்கள் அழைத்து செல்ல வெது வெதுப்பான வெந்நீரில் தாதியர் நீராட்டிவிட நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி, முத்துமாலை, முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து,
அறுசுவையுடன் கூடிய காலை உணவு.
//
முதலில் படித்த உடன் நீங்க எதோ
சரித்திர காட்ச்சிகள் படம் பிடித்து
காட்டப் போகின்றீர்கள் என்று நினைத்தேன்.
அட ஜீவன் எப்படி இப்படி?? சூப்பர்!!!
//
கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர்,
நம் இளவரசருக்கு பெண் தேட துவங்கியது
முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.
மதிய உணவு மெல்லிய போதை தரும் சுவையான
பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன்.
தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..
//
நல்லா இருக்கு.
இருக்கட்டும் இருக்கட்டும்.
இந்த உறக்கம் இளவரசருக்கு மட்டும் இல்லை நம்ம ஜீவனுக்கும்தானாம்.
//
ஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா
சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்ற மணிவரைக்கும் சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,
ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும்
தூங்க வேண்டியது? எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!
//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!
சிங்கமணி சிங்கமணிதான்.
நல்ல வேலை காபி குடிக்க எந்திரிங்க
என்று அன்பா எழுப்பினாங்களே!!
நான் கூட தக்காளி சாம்பார் மாதிரி
ஆகிடுமோன்னு ரொம்ப பயந்து
போயிட்டேன் ஜீவன்.
அப்படி என்னா ஓவரா சாப்பிட்டீங்க??
ஜீவன் இட்லி(12) With தக்காளி சாம்பார்தானே ???
// என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன்
என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல
அப்புறம் என்ன இலக்கண தமிழு )
//
இது சூப்பர், ஜீவன் சரித்திரம், நாட்டுபற்று, நகைச்சுவை
மூன்றையும் கலந்து அளித்துள்ளீர்கள்.
தினம் தினமொரு அசத்தல் அதுதான் ஜீவனோ??
அட்டகாசமாக அசத்தி இருக்கீங்க!!
ச்சே நான் கூட மொதல்ல உடையார் நாவல் படிச்ச தாக்கமோன்னு நெனச்சேன்
கடைசியில இப்படி போட்டு கவுத்துட்டீங்களே.
உங்களுக்கு காப்பி கொடுத்துருக்ககூடாது.
:-))
நன்றி திரு இராகவன்
நன்றி திரு ஜமால்
நன்றி வித்யா
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி மங்கை மேடம்
நன்றி முருகன்
நன்றி புதியவன்
நன்றி ரம்யா (ரொம்பதான் புகழ்றீங்க ;;;))))
நன்றி அமிர்த வர்ஷினி அம்மா
நன்றி பப்பு அம்மா
Post a Comment