இந்த மான் குட்டி,முயல் குட்டி ,சிங்க குட்டியெல்லாம் பிறந்த உடனே துள்ளி குதிச்சு ஓடுதுல்ல ? அதேபோல நம்ம மனுஷ புள்ளங்க பிறந்த உடனே துள்ளி குதிச்சு ஓடினா எப்படி இருக்கும்? இது சும்மா வெளையாட்டுக்கு ஒரு கற்பனை தான் ! யாரும் தப்பா நினைக்க கூடாது!!
பிரசவம் ஆகி குழந்தை பிறந்தாச்சு அம்மா கேக்குறாங்க எங்க என் குழந்தை
காட்டுங்கன்னு!
காட்டுங்கன்னு!
டாக்டர்; சிஸ்டர் எங்கம்மா குழந்தை ?
நர்ஸ்; இங்கதான் டாக்டர் எறக்கி விட்டேன் வெளில ஓடிபோச்சு போல!
டாக்டர் ; உன்கிட்ட எத்தினிவாட்டி சொல்லுறது பிரசவ நேரத்துல கதவ தொறந்து வைக்காதன்னு ! குழந்தை பிறந்து அவங்க அம்மா பேர குழந்தை முதுகுல எழுதி ஒட்டுற வரைக்குமாவது ஜாக்கிரதயா இருக்க கூடாதா? வெளில போயி பாரு கேட்டுகிட்ட போய்ட போகுது
நர்ஸ் வெளில போயி பாக்குறாங்க அப்போ குழந்தை மொசைக் தரைல படுத்து உருண்டு வெளையாடிக்கிட்டு இருக்கு!உள்ள துக்கிக்கிட்டு போய்டுறாங்க!
அப்போ வார்டு பாய் ரெண்டு குழந்தைகள துக்கிக்கிட்டு வராரு..
ஏங்க யாரு குழந்தைங்க இவங்க??
முதுகுல பேர பாக்குறாரு தங்கம்மா யாருங்க ??
அப்போ அங்க ஒரு பாட்டி வராங்க! தங்கம்மா குழந்தை என்னுதுதாங்க
குடுங்க!
குடுங்க!
ஏம்மா ? உங்க குழந்தையா இது ? உங்கள பார்த்தா வயசான மாதிரி
இருக்கு?
இருக்கு?
இல்லங்க தங்கம்மா என் பொண்ணு ! பொண்ணுக்கு ஆபரேசன்
பண்ணி இருக்கு! குழந்தை அங்கதான் இருந்துச்சி பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள வெளிய ஓடி வந்துடுச்சி!
பண்ணி இருக்கு! குழந்தை அங்கதான் இருந்துச்சி பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள வெளிய ஓடி வந்துடுச்சி!
சரி இந்தாங்க பத்திரமா பார்த்துக்கங்க இந்த ரெண்டு குழந்தைகளும் கேட்டுகிட்ட வந்துட்டாங்க!
இன்னொரு குழந்தை முதுகுல பேர பாக்குறாரு
சின்ன பொண்ணு யாரும்மா ?
சின்ன பொண்ணு யாரும்மா ?
அப்போ ஏய் புள்ளைய புடி... புள்ளைய புடின்னு... ரெண்டு பேர் ஒரு குழந்தைய தொரத்திகிட்டு ஓடுறாங்க!
வார்டு பாய் அந்த குழந்தைய புடிக்க போறாரு அந்த குழந்தை அவருக்கு டிமிக்கி கொடுத்துட்டு ஓடிடுது.... கேட்டு தொறந்து இருக்கு சீக்கிரமா போயி
புடிங்கன்னு சொல்லிட்டு வார்டு பாய் சின்ன பொண்ண தேடி போறாரு!
யாரும்மா சின்ன பொண்ணு?
அந்த லாஸ்ட் பெட்ல இருக்காங்க அவங்கதான் சின்ன பொண்ணுன்னு யாரோ சொல்ல! கிட்ட போயி பார்த்தா அந்த அம்மா நல்லா துங்குறாங்க!
ஏம்மா எந்திரிம்மா! வார்டுபாய் போட்ட சத்தத்துல அந்தம்மா அலறி எந்திருச்சி ஐயோ என் குழந்தை!ன்னு சொல்ல!
குழந்தை எந்திரிச்சு கேட்டுகிட்ட வந்துடுச்சி நீ என்னமோ மகா ராணியாட்டம் துங்குற? உன் கூட யாரும் இல்லையா?
இல்லங்க நாங்க லவ் மேரேஜ் யாரும் இல்லன்னு சொல்லுறாங்க
புள்ளைய பத்திரமா பார்த்துக்கமா தூங்குற புள்ளயயே திருடுற காலம் இது! இப்படி அலட்சியமா இருக்கியே ?
போனவாரம் இப்படித்தான் ஒரு புள்ள கேட்டுக்கு வெளிலையே போய்டுச்சி
அப்புறம் ரொம்ப நேரம் தேடி புடிச்சாங்க!
அப்போ அங்க ஒரு மொரட்டு ஆயா வருது! அதுபாட்டுக்கும் கத்திகிட்டே போகுது! புள்ளைய பெத்தவங்க எல்லாம் அளச்சியமா இருக்காங்க புள்ளைங்க எல்லாம் அது இஷ்டத்துக்கு கண்ட எடத்துல ஆய் போய் வைக்குதுங்க!யாரு சுத்தம் பண்ணுறது? பெரிய டாக்டர் வந்தா? என்னையதான் திட்டுறாரு!..
>
19 comments:
haiyooo
செம கற்பனைங்க இது.
நினைச்சு பார்த்தாலே சிரிப்பு வருது, இந்தப்புள்ளைங்க ஒன்னு, ரெண்டு வயசுல போடுற ஆட்டத்தையே தாங்க முடியல, இன்னும் பொறந்தவுடனே இதுமாதிரி ஆச்சு, அய்யோ கடவுளே........
ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வெச்சிருக்கான் கடவுள் அப்படின்னு சொல்ற ஒரு பழமொழி தான் ஞாபகம் வருது...
ஹா ஹா ஹா. சூப்பர் கற்பனை அண்ணா. பிரசவ (நர்சரி )ஆஸ்பத்திரியா மாறிடும்.
அப்புறம் குழந்தையை பார்க்கப் போறவங்க குழந்தை இடுப்பில் கட்ட அரணா கயிறும் அதை கட்டிலில் கட்டிவைக்க ரெண்டு மீட்டர் எக்ஸ்ட்ரா கயிறும்தான் வாங்கிட்டு போகணும்.
எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க?
முதல் பத்தி படித்தவுடனே சிரிக்க ஆரம்பித்து விட்டேன்
அதற்கு மேல் படிக்கவே முடியலை
(அதுக்கு மேலே தலைப்பு தானே ...)
ஆனாலும்! அண்ணே உங்களுக்கும் குசும்புக்கீதுன்னு ருசுவாயிருச்சு
எப்படியெல்லாம் யோசனை வர்துபா
எதுனா டிஜ்கவரி ஜேனல் பாத்தியளோ
உலகம் போற போக்கப் பாத்தா இது மாதிரியெல்லாம் நடந்தாக் கூட ஆச்சிரியப்படவதற்கில்லை..
இருந்தாலும் நல்ல கற்பனை
ha..ha..haaaaaaaaaa
ஜீவன் சார், உங்கள் மூளையை இன்சுஎர் (insure)பண்ணிக் கொள்ளுங்கோ.
அண்ணே...கலக்கல் கற்பனை...
நல்ல கற்பனை:)!
Nalla karpanai
pora pokkule nadanthaalum nadakkalam
ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பீங்களோ
ஒரு வருஷம் கழிச்சு பண்ற சேட்டையே தாங்க முடியலை..இதுல் பிறந்த உடனேவா.. அப்பாமார்களைத்தான் பார்த்துக்க விடனும்...:-))
கற்பனை குதிரை சாரி குழந்தை எப்படியெல்லாம் துள்ளி குதிக்குது உங்களுக்கு..
ரசித்தேன் ஜீவன்.
super :)
படிக்க படிக்க கற்பனை பண்ணி பார்த்திட்டே சி்ரித்தேன்:)))
நல்ல கற்பனை வளம்.
:-)
எங்கம்மா சொல்லுவாங்க, பிறந்த குழந்தைக்கு கண்ணும் காதும் திறந்திருக்காது. 15 நாள் கழிச்சு ஒரு காதும் கண்ணும், இன்னும் 15 நாள் கழிச்சு ரெண்டும் கேட்கும் பார்க்கும்னு. என் பொண்ணெல்லாம் பொறந்த உடனே "ஏ" -னு அரட்டினாள். நாங்க சொல்லுவோம், இப்ப பிறக்கிற குழந்தைகள் சுறுசுறுப்பையும் துறுதுறுப்பையும் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாள்ல பிறந்த உடனே "அம்மா பை" அப்படீனு கைகாட்டிட்டு போகும்னு.
அருமையான கற்பனை. ஆனாலும் இவ்வளவு குறும்பு?
ஆனா ஒன்னு ஜீவன் இதுபோல் நடந்தாலும் நடக்கலாம். காலம்தான் வேகமா போகுதே.
அதுக்கு ஏத்தமாதிரி எல்லா மாற்றங்களும் நிகழ வாய்ப்பு உண்டு.
நல்ல நகைச்சுவையோடு எழுதி இருக்கீங்க. தீவிரமான யோசனை, அதன் விளைவுதான் இந்த குறும்பான இடுகை. சரிதானே.
ஒவ்வொரு வரிகளுக்கு அருமை.
நல்லா படிச்சி சிரிச்சிகிட்டே இருந்தேன்.
நல்ல கற்பனை ...
ரசித்தேன்
Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System
Post a Comment