ஒரு நகை பட்டறை
தடியாய் இரண்டு போலீஸ் காரர்கள் அந்த நகை பட்டறைக்கு புல்லட்டில் வந்து இறங்குகிறார்கள் .
யாருப்பா கடைல ?
சற்று வயதான அந்த நகை பட்டறைகாரர் பயத்துடன் வெளியே வருகிறார்
வணக்கம் சார்.!
ஆங்...! எவ்ளோ வருசமா இங்க கடை வைச்சு இருக்கே ? (சற்று மிரட்டல் தொனியில்)
எட்டு வருசமா வைச்சு இருக்கேன் சார்..!
மேலும் சில கேள்விகள் கேட்டு அவரை குடைகிறார்கள்
சுற்றி ஒரு பார்வை பார்த்த போலீஸ் காரர்கள் கடைக்குள் வருகிறார்கள் .!
செயின் பத்தவைக்க தெரியுமா ?
தெரியும் சார்..!
பையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகளை எடுத்து கொடுக்கிறார் ஒரு போலீஸ்காரர்..!
புதிதாகவும் இல்லாமல் பழையதாகவும் இல்லாமல் நல்ல கனத்த சங்கிலிகள் அவை மூன்றும் அறுந்த நிலையில்...!
சாதாரணமாக பழைய சங்கிலிகள் மட்டுமே அறுந்து போகும் அல்லது மெல்லிய சங்கிலிகள் அறுந்து போகும் ஆனால் இந்த சங்கிலிகள் அறுக்க பட்டு இருந்தன..!
பத்த வைச்சா அந்த எடத்துல பத்த வைச்சது தெரியுமாப்பா ?
ஆமா சார் அந்த எடம் கருப்பா ஆயிடும்..!
அது தெரியாம இருக்க என்ன செய்யணும் ?
பாலிஷ் போட்டா தெரியாது சார் புதுசு போல ஆயிடும்.
சரி மூணு செயினையும் பத்தவைச்சு பாலிஷ் போட்டு கொடு .!
சரி சார்.!
மூன்று சங்கிலிகளையும் பற்றவைத்து பாலிஷ் போட்டு வாங்கி கொண்டு கடைக்காரர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு புல்லட்டில் பறந்து செல்கிறார்கள்.அந்த ''காவலர்கள்''
எதாச்சும் புரியுதா....!!!!
>
17 comments:
தலைப்புதான் விடையே...!
புரியுது தமிழ் புரியுது.... இப்படி எந்த ஒரு சின்ன மேட்டர் கிடைச்சாலும் அதை நீங்க பதிவா போட்டுடுவீங்கன்னு புரியுது...
நல்லாவே:))
உங்க கடைதானா?
ஹைக்கூ க(வி)தை !
நல்ல முயற்சி!
நல்ல போலீசு !! ஒரு வேல பத்த வெச்சி அப்பால நல்ல படியா , எட்துக்குனு போய் தொலைச்சவங்க கிட்ட குடுப்பாங்கோ போல கீது !! நல்ல போலீசு தான் !! அதானே
நட்துது , ? ? ?
கொஞ்சம் கட் பண்ணிட்டு நீங்களும் போலீஸ் திருடன் ஆயிருக்கலாமே!
சத்தியமா புரியலை.
அவங்க போலீஸ்காரங்களே இல்லையா?
போலீசும் திருடனும் கூட்டுக் களவானிகள்னு நல்லாவே புரியுது.
//கடைக்காரர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு//
இதைத்தான் ஒத்துக்க முடியல..
நல்லா புரியுதுங்க திருட்டு காவல் காரன் என்று .
உண்மைய சொல்லுங்க, கடை உங்களோடது தானே.. :)))
/*எதாச்சும் புரியுதா....!!!!*/
ஏதோ புரியுது :-))
காசு கொடுத்துட்டு போனாய்ங்களே
அதுக்காகவாவது சந்தோஷ-பட்டுக்கனும்
நகை திருடியவனின் கூட்டாளி தான் வந்தவன் ......................
பாலா
போலி..ஸ்
//கடைக்காரர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு//
:)))))
இதைத்தான் ஒத்துக்க முடியல.
சூப்பர்
:))))))))))
நல்லாவே பிரிஞ்சது ஜீவன்.
Post a Comment