ஒரு ஊருல ஒரு குருவி இருந்துச்சாம் அந்த குருவிக்கு பெரியவங்க கல்யாணம் பண்ணி வைச்சாங்களாம். ஜோடி குருவி வந்ததும் இந்த குருவி ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம் கொஞ்ச நாள்ல இந்த குருவிங்களுக்கு குழந்தைகளா மூணு குஞ்சுகள் பொறந்தது. எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க...
ஆனா..! இவங்களுக்கு நல்ல கூடு இல்லையாம் மழை காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டாங்க அதனால அப்பா குருவி நல்ல கூடு கட்டணும்னு நினைச்சு நெறைய குச்சிகள்,நார்கள் எல்லாம் தேடிச்சாம் ஆனா அந்த ஊருல நல்ல குச்சி ,நார் ஏதும் கிடைக்கல . அப்போ அங்க இருக்குற சில குருவிகள் சொன்னது கடல் கடந்து பறந்து போய் தேடினா நெறைய குச்சிகளும் நார்களும் கிடைக்கும் நல்ல கூடா கட்டிக்கலாம் அப்படின்னு.
கடல் கடந்து போய் வெய்யில்லயும் ,மழைலயும் அலைஞ்சு திரிஞ்சு நெறைய குசிகளையும் நார்களையும் எடுத்து வந்து கொஞ்ச கொஞ்சமா கூடு கட்டிச்சாம்.கடல் கடந்து போனதுல நெறைய இரையும் கிடைச்சதாம் அதயெல்லாம் கொண்டுவந்து தன்னோட ஜோடி குருவிக்கும்,புள்ளைங்களுக்கும் கொடுத்ததாம் அந்த அப்பா குருவி.
அப்பா குருவி பறந்து போனதும் அப்பா குருவி எப்ப திரும்ப வரும்னு ஜோடி குருவியும், குஞ்சுகளும் ஏக்கமா காத்துகிட்டு இருப்பாங்களாம்.
நல்ல கூடா கட்டியாச்சு..! இப்போ அந்த கூட நிரந்தரமா பாதுகாக்கனுமே அதுக்கு இன்னும் நெறைய குச்சிகளும் நார்களும் தேவை பட்டுச்சாம்.
தன்னோட ஜோடி குருவியும் , புள்ளைங்களும் பாதுகாப்பா,நல்லபடியா இருக்காங்க அப்படிங்குற ஒரேஒரு சந்தோசத்தமட்டும் மனசுல வைச்சிக்கிட்டு மழைலயும் ,வெய்யில்லயும் அலைஞ்சு திரிஞ்சு சரியா இரை கூட திங்காம இன்னமும் குச்சிகளையும், நார்களையும் தேடிகிட்டே இருக்குதாம் அந்த அப்பா குருவி.
>
17 comments:
அது தான் தந்தை.
சிறப்பு.
கடல் தாண்டி திரவியம் தேடும் மானிடருக்கும் கூட பொருந்தும் இது..
நன்றாக இருக்கிறது.
குழந்தைகளின் நினைவு வருகின்றது.
திரைகடலோடியும் திரவியம் தேடுன்னு பெரியவங்க சொன்னது நினைவிற்கு வந்தது.
தந்தை குருவியின் உழைப்பிற்கு அளவே இல்லாமல் போனது.
அப்பா குருவியை நினைக்கையிலும், குஞ்சு குருவிகளையும் நினைக்கையில் ஏனோ மனம் கனத்துவிட்டது..
கதையும் படங்களும் மிகவும் அருமை ஜீவன்!!
என்னென்னமோ நினைக்க தோனுது
நல்லாயிருக்கு
கதை மிக அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ஒரு தந்தையின் பார்வையில் எழுதப்பட்ட பதிவு..பொருப்பும் கடமையும் தெரிகிறது... குடும்பத்தை விட்டு கடல் கடந்து சென்று அவர்களுக்காக உழைக்கும் ஆண்களின் இந்த பணியை தியாகம் என சொல்வதா? கடமை எனக் கொள்வதா? குருவியாக இருந்தால் வெறும் கூட்டுக்காக மட்டும்....மனிதனாகி விட்டால் இன்ன பிற கடமைகளுக்காகவும் அன்றோ பொருள் ஈட்டனும்...உணர்வுகளை தொடுகிறது தந்தை என்ற அழைப்பிற்கு பொருள்...
இதுக்கு முன்னாடி பதிவில் மனைவிக்கு மரியாதை செஞ்சதால, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்தக் கதையா ஜீவன் :)))))
நல்லா குழந்தைகளுக்கு கதை சொல்றா மாதிரியே எழுதியிருக்கீங்க.
நல்லா இருந்துச்சு ஜீவன்.
இன்னொன்னு, என்னதான் அம்மா குருவிங்க வீக், வீக்குன்னு கத்தி விழுந்து விழுந்து செய்தாலும், இந்த குட்டி பெண் குருவிகள் இருக்குப் பாருங்க, அதுங்களுக்கு அப்பா பாசம் தான் ஜாஸ்தி. :)))))
arumai
கதை நல்லாயிருக்கு..... கடையில் கூடுதல் உணர்வை எதிர்பார்த்தேன்.
மனதை தொடுகிறது கதை, இந்த சிறிய குருவிக்கு சின்னப் பொருப்பு, பெரிய குருவிங்க நாம பல பெரும் பொருப்புகள்.
கடைசியில்.... கூடுதலாய் எதிர்பார்த்தேன்.
போதும்னு அப்பா குருவி எப்ப நினைக்கிறது,அம்மா குருவியும்,குழந்தைக் குருவிகளும் எப்ப சந்தோசமா,ஒண்ணா இருக்குறது?சிலரோட வாழ்க்கை இப்புடித்தான்,பாவம்!
நல்லாயிருக்கு இன்னும் நிறைய எழுதுங்கள்
//தேடிகிட்டே இருக்குதாம் அந்த அப்பா குருவி. //
அப்பப்பா...!
நிறைய “அப்பா”க்கள் இப்பிடித்தான்.
இதான் பாஸ் லைஃப்..
வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரின் நிலையம் இதுவே ..அற்புதமாக சொல்லி விட்டீர்கள் அன்பு நண்பரே ..அருமை நல்ல பகிர்வு ..
அன்புடன்
விஷ்ணு
Post a Comment