2005-2006 களில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் டெல்லி அருகே உள்ள நொய்டாவின் நிதாரி கிராமத்தை சேர்ந்த தொழில் அதிபர் மொனிந்தர் சிங்கும் அவனது உதவியாளன் சுரேந்திர கோலி இருவரும் சேர்ந்து ஒரு இளம்பெண் மற்றும் 19 பள்ளி சிறுமிகளை கடத்தி பாலியல் வன்முறை செய்து கொலை செய்து வீட்டின் பின்புறம் உள்ள சாக்கடையில் வீசினர் . சாக்கடையில் இருந்து குவியல் குவியலாக எலும்பு கூடுகள் கண்டெடுக்க பட்டன.
நாட்டையே குலுக்கிய சம்பவம் இது இந்த வழக்கில் சுரேந்திர கோலி க்கு மரணதண்டனை விதிக்க பட்டது ஆனால் ..? அந்த மொனிந்தர் சிங்கை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது அலகபாத் உயர்நீதி மன்றம்.
இந்த மொனிந்தர் சிங் ஒரு கொடும் கொலை குற்றவாளி என்பது ஊரறிந்த ரகசியம். நமது சட்டமும் அதன் நடைமுறைகளும் தரும் சலுகையில் இந்த கொடூர கொலைகாரர்கள் சர்வ சுதந்திரமாய் சட்டத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இன்னும் பல வருடங்களுக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல் இவர்களால் பாதுகாப்பாய் வாழ்ந்திட நமது நீதித்துறை
ஏராளமான ஓட்டைகளை வைத்திருக்கிறது. இதுதான் நமது சட்டத்தின் சிறப்பு...
ஏராளமான ஓட்டைகளை வைத்திருக்கிறது. இதுதான் நமது சட்டத்தின் சிறப்பு...
நீதி மன்றங்களைத் தாண்டினால் நாட்டின் நலனுக்காக தனது உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்து இருபத்தி நாலுமணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் நாட்டின் முதல் குடிமகனுக்கு கருணை மனுக் கொடுத்து விட்டு மேலும் பல வருடங்கள் தண்டனை ஏதுமில்லாமல் விசாரணை கைதி என்ற பெயரில் சுகவாழ்வு வாழலாம்.
யாருக்கோ நடக்கிறது,அதனால் எனக்கென்ன? என்கிற நம்முடைய மனப்போக்கில் மாறுதல் வராதவரையில் இந்த மாதிரி கயவர்களை எதுவும் செய்ய முடியாது. நாளைக்கே சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து இந்த மொனிந்தர்சிங் குற்ற்றமற்றவனாக அறிவிக்கப் பட்டு வெளி வரமாட்டான் என்பது என்ன நிச்சயம்..
நேற்று கோவையில் நடந்த என்கவுண்டரை எதிர்க்கும் அதிபுத்திசாலிகள் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார்கள். வலிக்கு வலி,அதுவும் உடனுக்கு உடன் என்பதாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
மோகன் ராஜை போட்டு தள்ளிய கோவை போலீசாருக்கு ராயல் சல்யுட்..!
மோகன் ராஜை போட்டு தள்ளிய கோவை போலீசாருக்கு ராயல் சல்யுட்..!
>
13 comments:
இந்த என்கவுண்டர்கள் நல்லது தான் .. ஆனால் இதனால் நல்லவர்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் நல்லது ..வாழ்த்துக்கள்
இம்மாதிரியான ஆதங்கங்களை(ஆவேசங்களை) அடுத்த சில நாட்களில் நாம் மறந்து போய்விடுவோம். அதுதான் நம்மிடம் இருக்கும் குறை.
என்கவுண்டர் ஒரு துருவம் என்றால், நமது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கட்டமைப்பு இன்னொரு துருவம்...என்னைக் கேட்டால் துருவங்கள் வேண்டும், இரண்டுக்கும் நடுவில் இன்னமும் விரைவான,இன்னமும் உருப்படியான ஒரு நீதி பரிபாலன முறையை உருவாக்கிட வேண்டும்.
மரணம், அது தரும் வலி எல்லோருக்கும் பொதுவானதே...நடந்த சம்பவங்கள் வருத்தத்தையே தருகிறது.
இந்த என்கவுன்டரை எதிர்ப்பது
2 குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு பதறிபோய் காவல்நிலையம் கூட வராத குழந்தைகளின் பெற்றோருக்காகவோ,
கணவனை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்ற செய்தி தெரிவிக்கப்படாத நிறைமாத கர்ப்பிணிக்காகவோ அல்ல.
இனி என்கவுன்டர் என்றபெயரில் காவல்நிலைய கட்டப்பஞ்சாத்துகளில் மிரட்டப்படும் அப்பாவிகளுக்காக தான்.
அரசியல், சமுதாயம், மதம், சாதி, பணம், குற்றப்பின்னனி இப்படி எதுவுமே இல்லாத ஒருவனை எளிமையாக என்கவுன்டர் செய்து விட்டீர்கள்.
இந்த பின்னனிகள் உள்ள ஒருவனை என்கவுன்டர் செய்யும் தைரியம் இல்லாத போலீசாருக்கு நீங்கள் போடும் சல்யூட் கேவலமானது என்பது உங்களுக்கு எப்படி புரியவைப்பது?
இன்று நடந்த ஒரு சம்பவம் :
காவல் நிலைய கட்டப்பஞ்சாத்தில் ஒரு அப்பாவி மிரட்டப்பட்டிருக்கிறான்
போலிசு வேனில் ஏறுகிறாயா?
சமுதாயம் இதற்கு என்ன பதில்சொல்ல காத்திருக்கிறது.
தயவு செய்து உணர்ச்சிவசப்படாமல் யோசித்துபாருங்கள்...
என்னைக் கேட்டால் துருவங்களும் வேண்டாம், இரண்டுக்கும் நடுவில் இன்னமும் விரைவான,இன்னமும் உருப்படியான ஒரு நீதி பரிபாலன முறையை உருவாக்கிட வேண்டும்.
(எழுத்துப் பிழை காரணமாய் மீண்டும் பின்னூட்டுகிறேன்)
தமிழ் மலர் நிருபருக்காக நான் இதே கருத்துடைய பதிவை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் தகவல்கள் திரட்டும் முன் நீங்கள் அருமையாக சொல்லிட்டிங்க.
♫வாழ்த்துக்கள்♫
கொலை குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டியவர்கள் தான்... ஆனா இன்னொருத்தர் உயிரை எடுக்குற உரிமை யாருக்குமே இல்ல... அப்படி செஞ்சா காவல்துறைக்கும் ரவுடிகளுக்கும் வித்தியாசம் இருக்காது...
இது எவ்ளோ பெரிய விஷயம். எத்தன காவல்துறை அதிகாரிகளை நம்பி உயிரை எடுக்குற உரிமையை கொடுக்க முடியும்?... அவங்க கொல்றவங்க எல்லாருமே கெட்டவங்கனு எப்படி தெரியும்?...
என்கவுண்டர் நடக்கறப்ப, உங்க வீட்ல இருக்குறவங்க யாரவது பாதிக்கப்பட்டா, உங்க நிலைப்பாடு என்னவா இருக்கும்?... என்கவுண்டர ஆதரிச்சி, பெருந்தன்மையா மரணத்த ஏத்துக்குவீகளா?...
பக்கத்து வீட்ல, ரோட்ல நடந்தா எல்லா வன்முறையும் சாதாரணம் தான்... எல்லா உயிரும் ஒன்னு தாங்க...ஒரு குற்றம் நடகுதுனா, அது ஒரு தனி மனுஷன் சம்பந்தப்பட்டது மட்டும் இல்ல... மொத்த சமுதாயமும் காரணம்...
குற்றங்களுக்கான மூலக்கூறு கலையபடனும்... அதுதான் முன்னேற்றத்துக்கான வழி... தண்டனைகள் கடுமையானா பெரிய வித்தியாசம் இருக்காது... இது மிகசாதாரனமான உண்மை... மக்களுக்கு இது புரியணும்...
An eye for an eye, will make the world blind.
100 குழந்தைகளை கும்பகோண பள்ளியில் சாவடித்தவர்களுக்கு, எப்போது என்கவுண்டர் ?
//100 குழந்தைகளை கும்பகோண பள்ளியில் சாவடித்தவர்களுக்கு, எப்போது என்கவுண்டர் ?//
சரியான கேள்வி...
இந்த மோகன்ராஜ்க்கும் செல்வாக்கு இருந்திருந்தால் விடுதலை செய்யப்பட்டு இருப்பானோ என்னவோ? ஆனால் இவனை சுட்டு பொசுக்குவது தான் சரி என்று தோன்றிய காவல் அதிகாரிகளும் அந்த சிறுவர்களை போன்ற குழந்தைகளுக்கு பெற்றோர் தானே....
எதிர்ப்பாளர்களை இழுத்து வச்சி பிளேடால் ரெண்டு இழு இழுத்தால் கத்துவான் பாருங்க அப்ப சொல்லனும் இது தாண்டா வலி இதுக்கே கத்தறயே அந்த சம்பவத்தை சந்தித்த உயிருக்கு எப்படி இருக்குமுன்னு..இன்னைக்கு எதிர்ப்பவன் அன்னைக்கு எங்க போயிருந்தானோ வேணாங்க ரொம்ப கோவமா வருது..இங்க திட்டக்கூடாதுன்னு பார்க்கிறேன்..
//இம்மாதிரியான ஆதங்கங்களை(ஆவேசங்களை) அடுத்த சில நாட்களில் நாம் மறந்து போய்விடுவோம். அதுதான் நம்மிடம் இருக்கும் குறை//
இது எல்லாருக்கும் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறோம். என்ன கொடும சார் இது...
நேற்று "நடந்தது என்ன" நிகழ்வில் பார்த்து அதிர்ந்துபோனேன்.என்ன கொடுமையான மனிதர்கள்.ச்சீ...!
நல்ல பதிவு
Post a Comment