செத்துட்டோம்ல....!


நச நச என தூறல் ...! இன்னும் சற்று நேரத்தில் முழுதாக இருள் கவ்விவிடும்
நான் இருப்பது கும்மிருட்டான ஒரு திடல் . ஆங்காங்கே சில மரங்கள் . வெகு தூரத்தில் சில குண்டுபல்புகள்..! அடர்ந்த பனிபொழிவில் பல்பின் வெளிச்சம் எடுபடவில்லை.ஏதேதோ காட்டு பூச்சிகள் விதவிதமான ஓசை எழுப்பியபடி!
நான்மட்டும் தனியே அந்த இருளில் ..! பக்கத்தில் ஒரு பெருநெல்லிமரம் .. சில நெல்லிக்காய்கள் உதிர்ந்து கிடக்கிறது ...!

அந்த அடர் இருளில் யாரோ ஒரு உருவம் யாரது ...? நம் இனமா ...? உருவம் என்னை நோக்கி வர அருகில் சென்று பார்க்கிறேன் அது ஒரு பெண் ...! முகமெல்லாம் மஞ்சள் பூசி நெற்றியில் பெரிய குங்கும பொட்டு தலை முழுவதும் செவ்வந்தி பூ ...! எனக்கு சட்டென எதோ தோன்ற ஒரு உந்து உந்தி பறந்து செல்கிறேன் ...! அந்த உருவம் தன் வழியே செல்கிறது ..!

பறந்து வரும் வழியில் ஒரு குளம் ..! இந்த குளத்தில் நான் குளித்ததுண்டு குளத்தின் ஒரு மூலையில் மயானம் . மயானம் அருகில் செல்கிறேன் பச்சை தென்னை ஓலைகள் , மூங்கில்கள் வெட்டப்பட்ட நிலையில் ..! இன்று யாரோ நம் உலகிற்கு வருகை போல...! என்னை புதைத்ததும் இந்த மயானத்தில் தான் ..!
இரவு அங்கேயே கழிகிறது ..! காலை நல்ல வெய்யில் நேற்றைய மழை குளிரவும் இல்லை,இன்றைய வெய்யில் சுடவும் இல்லை .

மதியம் நெருங்குகிறது ..! நம்மால் எல்லாம் பார்க்க முடிகிறது ...? நம்மள யாரும் கண்டுகலையே ...! பேய் அடிச்சுட்டு பிசாசு அடிசுட்டுன்னு சொல்லுறாங்களே அது எப்படி ...? நாம யாரயாச்சும் பயமுறுத்தி பார்க்கலாம் ...! வயல் காட்டுப்பக்கம் போகலாம் ...! அதோ ஒருத்தன் தனியா வரான் அவன் எதிர்ல போய் ஒரு சவுண்டு
விடலாமா ..? அதான் சரி .. அவன் முன்னாடி போய் ஊஊஉய்ய்ய ன்னு ஒரு சத்தம் போடுறேன் ...! ச்சை என்ன இது.. சத்தமே வரல வெறும் காத்து கூட வரல அவன்பாட்டுக்கு போய்கிட்டே இருக்கான் ..? நம்மால சத்தம் போட முடியாது போல இருக்கே ...! சரி அவன் கிட்ட போய் ஒரு ஊது ஊதி பார்க்கலாம் அவன் காதுகிட்ட போய் வேகமா ஒரு ஊது ஊதுறேன் டக்குன்னு திரும்பி பார்க்குறான் ஆஹா வொர்க் அவுட் ஆயிடுச்சு
சுத்தி பார்த்துட்டு ஒரு பீடிய எடுத்து பத்த வைச்சுகிட்டு கொஞ்சம் கூட சலனமே இல்லாம போறான் ..!தண்ணி ஏதும் அடிச்சு இருப்பான் போல ..! ம்ம்ஹும் இவனை ஒன்னும் பண்ண முடியாது ...!

கொஞ்ச தூரத்துல ஒரு அம்மா தலைல ஒரு கூடயும் இடுப்புல ஒரு குழந்தையும் தூக்கிகிட்டு வராங்க அவங்ககிட்ட சேட்டை பண்ணி பார்க்கலாம் ..! இப்போ அந்த அம்மாகிட்ட போயி பலமா ஊதுறேன் ...! எதோ பயங்கர யோசனைல இருக்கு அந்த அம்மா ..! கொஞ்சம்கூட கண்டுக்கல ..! சரி அந்த குழந்தையையாவது பயமுறுத்தி பார்க்கலாம் ..! குழந்தை பின்னடிபோய் ஒரு ஊது ஊதுறேன் குழந்தைக்கு எதோ உணர்வு வெடுக்குன்னு திரும்பி பார்க்குது ..! திரும்பி பார்த்து ஈஈஈஈ ந்னு ஒரு சிரிப்பு சிரிக்குது என்னப்பா இது உயிரோட இருந்தப்போதான் யாரும் மதிக்கல இப்போ ஒரு குழந்தை கூட மதிக்கல..!

இனிமே யாரையும் பயமுறுத்த முயற்சி பண்ண வேணாம்...!

பக்கத்துல ஒரு கோயில் இருக்கு கோயில் பக்கம் எல்லாம் போக முடியாதுன்னு சொல்லுவாங்களே...! அதையும் முயற்சி பண்ணி பார்த்துடலாம். கோயில் கிட்ட நெருங்குறேன் எந்த தடையும் இல்ல..! சாமி சிலை வரை போக முடியுதே..!
ஆவிங்கல்லாம் கோயில் பக்கம் போக முடியாதுன்னு கதை கட்டி வைச்சு இருக்காங்க.

இந்த ஊருல பேய் ஓட்டுற பூசாரி ஒருத்தர் இருக்கார் அவர்கிட்ட போய் பார்க்கலாம் நம்மல தெரியுதான்னு...! பூசாரி வீடு நெருங்க நெருங்க பலமா உடுக்கை சத்தம் கேக்குது. அங்க ஒரு பத்து பன்னெண்டு பேர் இருக்காங்க ஒரு பொண்ணு தலைவிரி கோலமா ஆடிட்டு இருக்கு அந்த பொண்ண சாட்டையால அடிச்சுகிட்டு இருக்கார் பூசாரி..! மனசுல நெறய ஆசையோட அல்பாயுசுல செத்துபோன ஒருத்தன் ஆவி ஆசை அடங்காம இந்த பொண்ணு ஒடம்புல இருக்கு அத வெரட்டாமவிட மாட்டேன்னு சொல்லிகிட்டே பூசாரி அந்த பொண்ண போட்டு அடிக்கிறார். நான் நேரா போய் அந்த பூசாரி பக்கத்துல நிக்குறேன் சுத்தமா அவருக்கு நான் இருக்குறது தெரியல. அந்த பொண்ணு கிட்ட போறேன் அந்த பொண்ணுக்கும் தெரியல ..! நிஜமான ஆவி நான் இங்க இருக்கேன் என்னை கண்டு புடிக்க முடியல இவர் பேய் ஓட்டுராராம் பாவம் அந்த பொண்ணு. சரி உண்மையிலேயே ஒரு ஆவி அந்த பொண்ணு ஒடம்புல இருந்தா கூட சாட்டையால அடிச்சா வலிக்கவா போகுது...?


மெதுவா வந்து கொளத்துகரைல உக்காந்து யோசிக்கிறேன்..! நெறய ஆசையோட செத்தா ஆசை அடங்காம ஆவியா அலைவாங்கலாம்..! நினைச்சா சிரிப்பாதான் வருது..! நான் கூட நெறய ஆசையோடதான் செத்தேன் அப்படி ஒன்னும் அலையலையே..! எவ்ளோ சுகமா இருக்கு இந்த இடம் பசியில்ல,வெய்யில் இல்ல, குளிர் இல்ல, மரத்துல இருக்கலாம், மலைமேல இருக்கலாம்,மேகத்தோடு பயணம் செய்ய்லாம் , காத்தோடு காத்தா எங்க வேணும்னாலும் போகலாம் . சாவுக்கு பின்னாடி இப்படி ஒரு சுகம் கிடைக்கும்னு
எல்லோருக்கும் தெரிஞ்சா யாரும் சாவுக்கு பயப்பட மாட்டாங்க..! மனுசனா இருந்தப்போ என்னதான் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் இப்படி ஒரு சுகம் கிடைக்க போறது இல்ல..! இதயெல்லாம் நான் எப்படி மத்தவங்களுக்கு சொல்ல முடியும் ..? அவங்கவங்க செத்தாதான் புரியும்..!

>

20 comments:

சங்கர் said...

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
http://ta.indli.com/user/vaduvursomu

sathishsangkavi.blogspot.com said...

/மனுசனா இருந்தப்போ என்னதான் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் இப்படி ஒரு சுகம் கிடைக்க போறது இல்ல..!//

உண்மைதான்...

எம்.எம்.அப்துல்லா said...

:)

பொன் மாலை பொழுது said...

என்ன ஆச்சி தமிழ் ? அதுக்குள்ளே ஏன் இந்த ஆசை? பால குமாரன் நாவல் ஒன்று படித்தீர்களா என்ன? பெயர் மறந்து போச்சே!!அதில்தான் செத்துப்போன அப்பா வந்து இப்படி சுற்றி சுற்றி தன் பிள்ளையிடம் வருவார்/
--

Chitra said...

இதயெல்லாம் நான் எப்படி மதவங்களுக்கு சொல்ல முடியும் ..? அவங்கவங்க செத்தாதான் புரியும்..!

....ஏன் இந்த "கொலை" வெறி? ஆஆஆ.....

அன்பரசன் said...

நடத்துங்க சார்.

Vidhya Chandrasekaran said...

படிச்ச நாங்களும்:)))

sakthi said...

அபாரம்::)))

அமுதா said...

என்ன ஆச்சு ஜீவன்? சித்ரா கேட்ட மாதிரி ”ஏன் இந்த கொலை வெறி?”

“கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை”

ப்ரியமுடன் வசந்த் said...

ஆவ்வ்வ்வ் ஏன் இப்படி பயமுறுத்துறீங்கண்ணா? எழுத்துல

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தலைப்பைப் பார்த்து வந்தேன். நல்லாத்தான் இருக்கு தமிழ். ஏன் இப்படி ஒரு கற்பனை? தப்பு என்று சொல்ல முன்பு இறந்த அனுபவம் இல்லையே!

ஹேமா said...

ஜீவன்...நீங்களுமா.....அசத்துறீங்க !

மங்கை said...

நல்லா தானே இருந்தீங்க...மழைன்னா இப்படியெல்லாம் கூட ஆகுமா

//labels: மப்பு மழை கனவு //

இதுல கடைசி ரெண்டு கணக்குல இல்லை

மோகன்ஜி said...

மெறட்டுறீங்க சார்! ரசித்தேன்!

Thamira said...

:-))

வித்தியாசமா ஜாலியா இருந்தது.

மாணவன் said...

//மனுசனா இருந்தப்போ என்னதான் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் இப்படி ஒரு சுகம் கிடைக்க போறது இல்ல..! இதயெல்லாம் நான் எப்படி மத்தவங்களுக்கு சொல்ல முடியும் ..? அவங்கவங்க செத்தாதான் புரியும்..!//

ஏன் இப்படி மிரட்டுறீங்க...

செம கலக்கல்.....

தொடருங்கள்.....

Anonymous said...

பாதி பதிவை படிக்கும் வரை பயம் தொரத்திக்கிட்டேயிருந்து..ஆனாலும் கதை நல்லாவே இருந்தது திகில் படம் பார்த்தமாதிரி சஸ்பென்ஸ் பாதி கதையில் தெரிந்திட்டாலும் ஆவின்னா பயம் தானே..யப்பா நா வரலை விடு ஜீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

தினேஷ்குமார் said...

சார் முதல் முறை வருகிறேன் தங்கள் பக்கம்
அருமையா இருக்கு சார் செத்துட்டோம்ல

நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க சார் http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_10.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

செத்து செத்து வெளாடுவோமா :))))))))))))))))

கனவு மெய்ப்படவேண்டாம்

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

ஏன் இந்த "கொலை" வெறி