அம்மாவையும் பிள்ளையையும் பிரிக்கலாமா?

சமீபத்தில் சகோதரி ஒருவர் ஒரு பதிவு எழுதி இருந்தார்.அதாவது அவருக்கு பேறுகால விடுமுறை முடிகிறது.கைகுழந்தையை யாரிடம் விட்டு செல்வது? அவருக்கு குழந்தையை விட்டு பிரிய மனமில்லை வேலையும் முக்கியம் என்ன செய்வது?

இது அவருக்கு மட்டும் நேர்கிற தனிப்பட்ட பிரச்சனையாக எடுத்து கொள்ள முடியாது. வேலைக்கு செல்கிற அனைத்து பெண்களுக்கும் நேர்கிற பிரச்சனைதான்.

ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு குறைந்த பட்சம் மூன்று வயது வரையாவது தேவைப்படும். இந்த நிலையில் என்ன செய்வது? இந்த சிக்கலுக்கு அரசு கண்டிப்பாய் பதில் சொல்லி ஆக வேண்டும்!!

சரி ஒரு கற்பனை! ''மகளிர் மட்டும்'' அப்படிங்குற படத்துல வருமே? பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அந்த இடத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள தனி இடம்.

அப்படி இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது பத்துக்கு மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் குழந்தைகளை வைத்து கொள்ள ஒரு இடம்
குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு ஆயா! எப்படி ? கேக்கவே நல்லா இருக்குல்ல! தாய்மார்களும் குழந்தைகளை அடிக்கடி பார்த்து கொள்ளலாம் வேலையும் நன்றாக நடக்கும் ..


சரி அது ஒரு கற்பனைதான் அந்த கற்பனையை உண்மையாக்க முடியுமா?
உண்மையாக்க என்ன செய்யலாம்?அந்த கற்பனை உண்மையாக அரசு சட்டம் பிறப்பிக்கவேண்டும்! அரசு அலுவலகத்திலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ?பத்துக்கு மேற்பட்ட பெண்கள் பணி புரிந்தால் அங்கே குழந்தை வைத்துக்கொள்ள தனி இடமும் ஒரு ஆயாவும் இருக்க வேண்டும் என!


இது நடக்குமா? அரசினை இயக்குபவர்கள் யார் ? அரசியல்வாதிகள், இன்னும் சொல்ல போனால் கட்சிகாரர்கள் அவர்களுக்கு என்ன தேவை!
ஓட்டு!........................ஓட்டு!........................ஓட்டு!

இந்த ஓட்டு மட்டும்தான் அவர்கள் தேவை! நமது கையில் இருக்கும் பெரிய ஆயுதமும் ஓட்டுதான்!

ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டில் எத்தனை ஓட்டுக்கள் ஆட்சியை நிர்ணயம் செய்கிறது தெரியுமா ?

வெறும் முப்பது லட்சம் ஓட்டுகள்தான்

கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற மொத்த ஓட்டுக்கள் கூட்டணி எல்லாம் சேர்த்து ஒரு கோடியே முப்பது லட்சம்
(கிட்டதட்ட)

அதிமுக பெற்ற ஓட்டுக்கள் ஒரு கோடி (கிட்டதட்ட)
வெறும் முப்பது லட்சம் ஓட்டுக்கள் மட்டும்தான் இந்த ஆட்சியை நிறுவி இருக்கிறது.

மேலும் சில கட்சிகளின் வாக்கு பலம்...

வேகமாக வளர்ந்து வருவதாக கருதப்படும் விஜய காந்தின் தேமுதிக தனியே நின்று பெற்ற ஓட்டுக்கள் இருபத்தி எட்டு லட்சம்.

மதிமுக இருநூற்று பதிமூன்று தனியே நின்று மொத்தம் பெற்ற ஓட்டுக்கள் சுமார் பதி மூன்று லட்சம்.

பாட்டாளி மக்கள் கட்சி யும் கிட்டத்தட்ட இந்த நிலைதான்
சற்று கூடலாம்.

அதுபோல காங்கிரஸ் எனக்கு தெரிந்த வரை தனியே நின்றது இல்லை.சமீப காலம் வரை. அப்படி தனியே நின்றாலும் பதினைந்து லட்சம் ஓட்டுக்கள் பெற்றால் பெரிய விஷயம்.

இதைவிட சொற்பஅளவில் ஓட்டு எண்ணிக்கையை வைத்து கொண்டு அரசியல் நடத்துகின்றன கட்சிகள்.

சரி இதெல்லாம் எதற்கு?

தமிழ் நாட்டில் அரசு வேலையில் இருப்பவர்கள் சங்கம் அமைத்துள்ளனர். அவர்கள் ஓட்டு முழு அளவில் ஒரு கட்சிக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
சரி தனியார் துறையில் தமிழகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? எனக்கு சரியாக கணிக்க தெரியவில்லை!குறைந்த பட்சம் ஒரு ஐந்து லட்சம் பேர் இருப்பார்களா? அப்படி இருந்தாலே போதும் ஒவ்வொருவரும் நான்கு வாக்குகளுக்கு சமம்.
அவர்கள் குடும்பம் எல்லாம் சேர்த்து.

இந்த தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு தனி அமைப்பு ஏற்பட வேண்டும்! இப்படி அமைப்பை ஏற்படுத்தி கொடி பிடித்து போராட்டம் நடத்த வேண்டியது இல்லை.

இவர்களிடம் இருபத்து லட்சம் ஓட்டு இருக்கிறது இவர்கள் வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவர்கள் ஓட்டு அப்படியே அவர்களுக்கு தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்படி நிலை ஏற்ப்பட்டால் போதும்!

அரசியல்வாதிகள் சரணாகதி அடைந்து விடுவார்கள்.

அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்த கோரிக்கைகளை அரசு வேலையில் இருப்பவர்கள் முன்னின்று வைத்தால் மிக நன்றாக இருக்கும் !

சரி இது வேலை செய்பவர்களை நிலையில் இருந்து யோசித்தது!

இப்போ நான் முதலமைச்சர் கனவில் இருக்கும் ஒரு கட்சி தலைவர், சுமார் இருபது லட்சம் ஓட்டுகளை வைத்து இருக்கும் ஒரு அமைப்பு! சில கோரிக்கைகளை வைக்கிறார்கள், அதாவது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும் இடத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயாவும் இடமும் வேண்டும் என்ற கோரிக்கை உட்பட,

இந்த கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு என்ன வலிக்க போகிறது ஓட்டுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் எனக்கு பிள்ளையையும், தாயையும் ஒன்றாக இருக்க செய்யும் இந்த கோரிக்கையை சந்தோசமாய் நிறைவேற்ற போகிறேன் .

..................................

இது ஒரு மீள் பதிவு 12/10/2008 அன்று பதிவிடபட்டது ...

>

8 comments:

Sriakila said...

ஓட்டுக்காக என்பதை எல்லாம் தாண்டி பிள்ளைகளை கவனித்துக் கொள்வதற்காக இது போன்ற முயற்சியை அலுவலகங்கள் செய்து கொடுக்க முன்வர வேண்டும். பிரசவத்துக்குப் பின் குழந்தையைப் பிரிந்து வருவது எவ்வளவு கொடுமையான விஷயம். ஆபீஸூக்குப் போனாலும் எந்த தாயாலும் நிம்மதியாக வேலை செய்ய முடியாது.

நல்ல பதிவு! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

பொன் மாலை பொழுது said...

அம்மா பிள்ளை கதையை விடுங்க.......அதெல்லாம் அவர்களாலேயே நேர்கொள்ள இயலாது அரசு மட்டும் என்ன செய்துவிடும்?கல்யாணம் ஆன வுடன் தனி குடித்தனமும் போக வேண்டும். கூட யாரும் இருக்கவும் கூடாது.பிள்ளை பெற்ற வுடன் பிள்ளையுடன் இருக்கவும் வேண்டும், வேலைக்கு சென்று பணமும் பார்க்கவேண்டும் என்றால் ஏதாவது ஒன்றை இழந்துதான் மற்றதை பெறவேண்டும். இங்கு எதுவும் சும்மா கிடைபதில்லை அரசு டி. வி. பெட்டிகளிபோல. இதற்கும் கூட ரேஷன் கார்ட் வேண்டுமய்யா!

என்ன ரொம்ப நாள் ஆளையே காணோம்?

Anonymous said...

கண்ணாடியில் புது முகமென பார்க்க வந்தேன்..அறிமுகமான ஒரு முகமே...இருப்பினும் எனக்கு இப்பதிவு புதுமுகம்.. நல்ல அலசல்..

ரெண்டு பேருக்கு வேலைக்கு போனால் தான் என்பது அவசியமாய் இருந்தாலும் குழந்தைகளுக்கு நீங்கல் சொன்னது போல் முதல் மூன்றாண்டாவது தாயின் அரவணைப்பு தேவை. பணம் சம்பாதிக்கும் நோக்குக்கே நம்மில் பெரும் பாலோருக்கு அன்பு இருந்தாலும் மழலைக்கு முன்னிரிமை கொடுத்து யாரும் வேலையை இழக்க முன்வருவதில்லை..கேட்டுப்பாருங்க எதிர்காலமுன்னு சொல்வாங்க,குழந்தையின் நிகழ்காலம் மறந்தவராய்.இதனால் அரசாங்கம் கம்பெனி ஏற்பாடு இதற்கெல்லாம் முன் பெற்றோர் சிந்திக்கனும்ம்ம்ம்ம்ம்

அன்புடன் நான் said...

நல்ல சிந்தனைதான்.... அது நிறைவேற இதுதான் சரியான நேரங்கூட...

Chitra said...

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் உள்ள பதிவு...

ஹேமா said...

நானும் இதுபற்றி யோசிப்பதுண்டு ஜீவன்.இங்கு உழைத்து அங்கு கொடுக்கிறார்கள்.ஏன் ?குழந்தைக்கும் முழுமையான அம்மா அன்பு கிடைப்பதில்லை.என்ன இலாபம் ?

நட்புடன் ஜமால் said...

right time - good post

sakthi said...

வித்தியாசமான சிந்திக்க வைக்கும் பதிவு அமுதன் தொடருங்கள்