மதிமுகவின் வாக்குகள் யாருக்கு ...? தொண்டனின் பார்வையில் ..!


திமுக ஆட்சி அகற்றபட வேண்டும்...! காங்கிரஸை துரத்த வேண்டும்...! என்ற எண்ணங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இப்போதைய அதிமுக எதிர்ப்பு.

மதிமுக தொண்டனின் முதல் எதிரியாக இருப்பவர் இப்போது ஜெயலலிதாதான்.!
அப்படியானால் மதிமுகவின் மொத்த ஓட்டும் திமுக அணிக்கு செல்லுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..!

மதிமுக தொண்டனை பொறுத்தவரையில் அதிமுக தான் எதிரி..! அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அல்ல..!

மதிமுக ஓட்டுக்கள் எங்கு ..எப்படியெல்லாம் பிரியும்..!

திமுக - அதிமுக நேரடியாக மோதும் இடங்களில்..!

இங்கே நிச்சயமாக மதிமுக ஓட்டுகள் திமுகவிற்குதான்..! வரிப்புலி வரிசையை கலைஞர் அழைக்க வேண்டிய அவசியமே இல்லை...!

திமுக- தேமுதிக மோதும் இடங்களில்

இங்கே முழுமையாக திமுக விற்கு மதிமுக ஓட்டுகள் விழாது கணிசமான அளவில் தேமுதிகவிற்க்கும் மதிமுக ஓட்டுகள் பிரியும். கம்யூனிஸ்டுகள் மோதும் இடங்களிலும் இதே நிலைதான்.

பாட்டாளி மக்கள் கட்சி- அதிமுக மோதும் இடங்களில்

இங்கே மதிமுக ஓட்டுகள் பாமக விற்க்கு கிடைக்கும்.தேமுதிக போட்டியிடும் இடங்களில் அவர்களுக்கும் பிரியும்.

அதிமுக - காங்கிரஸ் மோதும் இடங்களில்..!

மதிமுக அதிமுக வை எதிர்த்தாலும் இந்த இடங்களில் மதிமுக ஓட்டுகள் காங்கிரஸுக்கு கிடைக்காது. இந்த இடங்களில் மதிமுக ஓட்டுகள் அதிக அளவில் பிஜேபிக்கு கிடைக்கும்.

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளில் மதிமுக ஓட்டுகள் திருமாவுக்குதான்.


மொத்ததில் மதிமுக ஓட்டுகள் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக தவிர தேமுதிக விற்கு அதிக அளவிலும்,மற்ற கட்சிகளுக்கு ஓரளவிற்க்கும் பிரியும்.

>

5 comments:

சக்தி கல்வி மையம் said...

மிகச் சரியான அலசல்.

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல அலசல்

மு.சரவணக்குமார் said...

அதிமுக வின் வெற்றி வாய்ப்பில் கணிசமான பாதிப்பினை மதிமுக நிச்சயம் உண்டாக்கும். கடந்த ஐந்தாண்டுகளாய் வைக்கோவுடன் தோளுக்குத் தோளாய் நின்ற தன்மானமுள்ள அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூட மாறி வாக்களிக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

தேர்தலுக்குப் பிறகு அம்மா தனது அரசியல் ஆலோசகர்களை செருப்பாலடிக்கும் வைபவம் நடந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. :)

VJR said...

a perfect view.

அன்புடன் நான் said...

பார்வை கனக்கச்சிதம்