தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசு ...! (ஆதாரங்களுடன்)

குறிப்பு ;- இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் தொன்னூரு சதவீதத்திற்க்கும் மேற்பட்ட காலங்கள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி செய்துள்ளது அந்த வகையில் மத்திய அரசு என சொன்னால் அது முழுக்க முழுக்க காங்கிரஸ் அரசுதான்..!


சமீபத்தில் ஒரு நண்பருடன் உரையாடி கொண்டிருந்த போது சொன்ன ஒருகருத்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது!

அதாவது பஞ்சாப் மாநிலம் நிறைவான நீர் வளத்தையும்,அதீதமான விவசாய உற்பத்தியையும் பெற்றுஇருந்த காரணத்தாலேயே அங்கே தனிநாடு கேட்டு போராட்டம் வெடித்ததாகவும், அதேபோல தமிழ் நாட்டில் நிறைவான நீர்வளம் இருந்தால் தமிழ்நாடும் விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கும் என்றும் அப்படி
ஆகிவிட்டால் தமிழ் நாட்டிலும் தனிநாடு கேட்டு போராட்டம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,ஏற்கனவே தமிழ் நாட்டில் தனிநாடு கோரும் சக்திகள் இருப்பதாலும், தமிழ் நாட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைக்க விடாமல் மத்திய காங்கிரஸ் அரசு சதி செய்வதாக கூறினார்.

அவர் சொன்னதை முழுமையாக ஏற்று கொள் முடியவில்லை ..!

ஆனால் ..? அவர் சொன்னது மத்திய அரசுமேல் சந்தேகத்தை ஏற்படுத்தியது உண்மை!

தமிழகத்தில் பாசன வசதிக்காக சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு புதிய முயற்சியையும் அரசு செய்ததாக தெரியவில்லை.

கல்லணை

கரிகால் சோழன் கட்டிய இந்த கல்லனையாலேயே தஞ்சை மாவட்டம் நெற் களஞ்சியம் ஆயிற்று.!

வீராணம் ஏரி

இதுவும் சோழ மன்னர் காலத்திலேயே உருவாக்க பட்டது. கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்திய பெருமையும் சோழ மன்னரையே சாரும் .

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வருடமும் கடலில் சென்று கலக்கும் மழை நீரின் அளவானது அந்த வருடத்திற்கு தேவைப்படும் விவசாய பாசன நீரின் அளவை விட அதிகம் என கணிப்புகள் கூறுகின்றன. அந்த மழை நீரை சேமித்து வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பொன் விளையும் தஞ்சை

நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் சில விசயங்களை கூற முடியும் .கடற்கரையில் நின்று பார்த்தால் அடுத்த கரை தெரியாதே அதேபோல பச்சை பசேல் என்ற அடுத்த கரையே தெரியாத அளவிற்கு வயல் வெளிகளை எங்கள் மாவட்டத்தில் பல இடங்களில் காணலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை ஆற்றில் நிறைவாக நீரும் வந்து மழையும் பொய்க்காமல் பெய்யவே ..! மிக மிக அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்தது. மன்னார்குடி,பெருக வாழ்ந்தான் போன்ற இடங்களில் விளைந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க இடமில்லாமல் ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் திண்ணைகளிலும் தெருக்களிலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
தெருக்களில் அடுக்கிவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாய் போனது . ஒரு போகம் விளைச்சலுக்கே இப்படி ..!
நீர் வளம் நிறைவாக இருந்து மூன்று போகம் விளைந்தால் விளைச்சலை நினைத்து பார்க்கவே முடியவில்லை.



மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்க்க....! தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் !

பாலாறு

வட ஆற்காடு செங்கல்பட்டு மாவட்டங்களின் விவசாயிகளின் உரிமையான பாலாற்று நீரை தடுத்து, பல ஒப்பந்தங்களையும் மீறி செயல்பட்டது கர்நாடக அரசு. இதனால் பாலாற்று நீரினால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 3,75,000 ஏக்கரில் இருந்து 2,45,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது.

முல்லை பெரியாறு

இந்த அணை, மாநிலப் பிரிவினையின்போது கேரளாவின் வசம் போனது. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. இதற்குப் பிறகும் 1979ல் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க கேரள அரசு வற்புறுத்தியது. எனவே அணையின் மட்டம் 136 அடியாகக் குறைந்தது. இதனால் வருடத்திற்கு 13.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழந்தது. இதனால் மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்தன.

காவிரி பிரச்சனை

இன்று வரை காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் சட்டத்தை மீறியும் அனுமதியின்றியும் 19 நீர்த் தேக்கங்களை ரூ.156906 இலட்சங்களில் கர்நாடக அரசு கட்டியுள்ளது. இவைகளில் 175 ஆயிரம் மிலியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.

கர்நாடகம் 1968இல் இருந்தே தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட மறுத்து வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களிலும் பலன் கிட்டாது கர்நாடகம் தொடர்ந்து சண்டித்தனம் செய்யவே, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, அதன் ஆணைப்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது 1991 ஜூன் 25இல் தன் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. இந்த இடைக்காலத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு மாதவாரியாகக் கணக்கிட்டு ஆண்டுதோறும் 205 .மி.. அடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகம் அதைத் திறந்து விடாததோடு, காங்கிரஸ் அரசும் அதைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதும் இதன் பின் 15 ஆண்டுகள் கழித்து 05-02-07 அன்றுவெளிவந்த இறுதித் தீர்ப்பும் தமிழகத்திற்கு நயவஞ்சகம் செய்து விட்டது என்பதும் பலரும் அறிந்த ஒன்று.

(தகவல்கள் திண்ணை ,கீற்று இணைய தளங்களில் சுடப்பட்டது )

முழுமையாக நீர் வளம் பெற்றுவிட்டால் தமிழ் நாட்டில் உற்பத்தி பெருகி தனிநாடு போராட்டம் வெடிக்குமோ என்ற பயத்தில் மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் சதி செய்கிறதா ...???


அப்புறம் ஒரு முக்கிய செய்தி ...!

இந்த காங்கிரஸ் கட்சியின் சின்னம்


கை சின்னம் அதை மறக்க வேண்டாம்...!



.......சில சேர்க்கைகளுடன் கூடிய மீள் பதிவு


>

6 comments:

Chitra said...

எந்த கட்சியாக இருந்தாலும், சிந்தித்து வாக்களிப்போம்.

பொன் மாலை பொழுது said...

சரி, என்ன ரொம்ப நாளாவே காணோம்?

நட்புடன் ஜமால் said...

யார் யார்
எப்படி எப்படி
எல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று PHD செய்யலாம் போல

புதிதாக ஒரு கட்சி வரவேண்டும்

கழகம் என்ற பெயரே இருக்கக்கூடாது

ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே ...

லஞ்சம் ஒழிப்போம் ...

நாமாவது செய்யனும்ண்ணே

(விளையாட்டல்ல)

அருள் said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

சி.பி.செந்தில்குமார் said...

இந்த எலக்‌ஷன்ல கை 63க்கு 5 வந்தாலே அதிகம்

போளூர் தயாநிதி said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.இந்த எலக்‌ஷன்ல கை 63க்கு 5 வந்தாலே அதிகம்