>
'தை' ஒன்றே தமிழ் புத்தாண்டு ..! மு, சரவணக்குமார் அவர்களின் ஆதார விளக்க கட்டுரை
>
என் உயிரினும் மேலான மரணத்திற்கு ...!

>
பிரபல நடிகர்கள் பதிவர்களாக இருந்தால்? அவர்களிடம் ஒரு பேட்டி..!
கேப்டன் விஜய காந்த்..!
கேள்வி.- உங்க பதிவுலக வாழ்க்கை எப்படி இருக்கு..?
கேப்டன் – நான் மாசத்துக்கு 40 பதிவு எழுதுறேன். அதுக்கு மொத்தம் 840 கமெண்ட் வருது அதுல ஆண்வாசகர் கமெண்ட் 415 பெண் வாசகர் கமெண்ட் 425 ..! ஃபேஸ் புக் மூலமா வரும் பார்வையாளர்கள் 300 பேர்.கூகுள் மூலமா 225,மீதிபேர் எப்படி வராங்கன்னு எனக்கே தெரியல..
என்னை மொத்தம் 1244 ஃபாலோ பண்ணுறாங்க ம்ம்ம்.!
கேள்வி- அப்புறம்..?
கேப்டன்;- நிறுத்தாம சொல்லிகிட்டே போக நான் என்ன உண்மைத்தமிழனா.? அடுத்த கேள்விய கேளுங்க தம்பி..!
கேள்வி;- உங்க பதிவுகளுக்கு நேரா கமெண்ட் சொன்னா அடிக்கிறீங்களாமே..!
கேப்டன்-ம்ம் அடுத்த கேள்விய கேளு..
அவ்ளோதான் கேப்டன் பேட்டி முடிஞ்சது..நான் கிளம்புறேன்..!
யோவ் சோடா கம்மியா ஒரு கட்டிங் சொல்லுய்யா..!
*******************************************************************************
கமலஹாசன்..!
கேள்வி;- உங்களுக்கு ஹிட்ஸ்,கமெண்ஸ் எதும் அதிகம் வராட்டி கூட தொடர்ச்சியா நல்ல பல பதிவுகளை தொடர்ந்து கொடுக்குறீங்களே எப்படி முடியுது..?
கமல்;- பதிவுலக தாயின் ஆசிர்வதிக்கப்பட்ட பதிவு ஞானின்னு என்னை பலர் சொல்லலாம் ஆனால்.? மற்ற பதிவுகளுக்கு பின்னூட்ட்டமிடும் ஒரு சராசரி வாசகன் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன் என்று சொன்னால் அது மிகையாகாது.எனது பதிவு தாகமே என்னை தொடர்ந்து இயக்குகின்றது.
கேள்வி;- உங்களது தசவதாரம் பதிவு பற்றி சொல்லுங்களேன் அந்த பதிவுக்கு யார் தூண்டுகோள்..!
பதில்;- நிச்சயம் தசவதாரம் பதிவுக்கு ஒருவர் தூண்டுகோளாய் இருந்திருக்கின்றார்..! அவர்தான் நாமக்கல் சிபி.! ஒரு தனி மனிதராக இருந்து கொண்டு எத்தனை வலைத்தளங்கள் எவ்வளவு முகங்கள் அவருக்கு அவர்தான் எனது தசவதாரத்துக்கு மூல காரணம்.
கேள்வி;- உங்கள் அடுத்த பதிவு..?
பதில்;- காத்திருங்கள் இந்த வருடத்தில் எனது விஸ்வரூபம் உங்களுக்கு தெரிய வரும்.
***********************************************************************************
ரஜினி காந்த்..!
கேள்வி;- எப்படி வந்தீங்க இந்த பதிவுலகத்துக்கு..?
பதில்;-மத்தவங்க எல்லாம் பிளாக்ல இருந்து பஸ்சுக்கு போய் இருப்பாங்க ஆனா நான் ஆரம்பிச்ச இடமே பஸ் தான். பஸ்சுல என் செய்கைகளை பார்த்துட்டு என் நண்பர்கள் பிலாக்குக்கு போ நல்லா வருவேன்னு சொன்னாங்க வந்தேன் இப்போ நிறைய ஹிட்ஸ்,கமெண்ட்ஸ் ந்னு போய்ட்டு இருக்கு..!
கேள்வி;- எப்படி உங்களுக்கு இவ்ளோ கமெண்ட்ஸ் வருது பதிவு போட்டுட்டு மத்தவங்கள் கூப்பிட்டு,கூப்பிட்டு படிக்க சொல்வீங்களா..?
பதில்;- ஒரு பதிவ போட்டுட்டு எல்லாருக்கும் போன் பண்ணி எனக்கு கமெண்ட் போடுங்கன்னு கேக்க என்னை என்ன எழுத்தோசை தமிழரசி ன்னு நினச்சீங்களா எல்லாம் தானே சேந்த கூட்டம். அன்பால சேந்த கூட்டம்.
கேள்வி;-உங்க அடுத்த திட்டம்
பதில்;- நேத்து பஸ்ஸர்,இன்னிக்கு பதிவர் நாளைக்கு ஹா..ஹா.ஹா..அந்த கடவுளுக்கு தான் தெரியும்..!
கேள்வி;- கடவுள் எங்க இருக்கார்..?
பதில்;- கண்ணா கடவுள் எங்கேயும் இல்ல உனக்குள்ளதான் இருக்கார் உனக்குள்ள கடவுள தேடு..!
கேள்வி;- அப்படின்னா அடுத்து நீங்க என்ன ஆவீங்கன்னு உள்ள கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..!
ரஜினி;- பேட்டி முடிஞ்சது நீங்க கிளம்பலாம்..!
>
கெஞ்சலும்..! மிஞ்சலும்..!
மணி 10.30
வரும் நேரம்தான் வரட்டும் ..!
10.45 ...!
11.00 ... !
இன்னும் வரவில்லை போன் பண்ணலாமா ..?
வேண்டாம் ..வேண்டாம் வரட்டும் ...!
இன்னும் கோபம் தணியவில்லை ..!
11.20 ..!
லேசான பயம்.... என்ன இன்னும் காணும் ..!
11.40..!
இன்னும் வரவில்லை பயம் அதிகரித்தது ..!
சரி போன் பண்ணிடலாம் போன் பண்ணினால் ரிங் போனது ஆனால் எடுக்கவில்லை ..!
12.05 ..!
பட பட வென கதவு தட்டும் சத்தம் ..! வேகமாய் ஓடிப்போய் கதவை திறக்கின்றாள் அவன்தான்....! அப்பாடா...! வந்துவிட்டான்.
ஏன் போன் எடுக்கல ...?
எதோ டென்சன் எடுக்கல ..!
சுள்ளென எரிந்து விழுந்துவிட்டு போய் படுத்து கொண்டான் ..!
ஏதும் பிரச்சனையாய் இருக்குமோ ..!
என்னங்க ஏதும் பிரச்சனையா என்ன ஆச்சு ..?
அதெல்லாம் ஒன்னுமில விடு ..!
அலுவலகத்தில் ஏதும் பிரச்சனையாய் இருக்குமோ ..?
சாப்டீங்களா..?
இல்ல .!
மாவு தான் இருக்கு தோசை ஊத்தி தரவா ..!
வேணாம் ..!
உடம்பு ஏதும் சரியில்லையா ..?
இல்ல நல்லாத்தான் இருக்கேன் ..!
பின்ன ஏன் டல்லா இருக்கீங்க ..!
ஒண்ணுமில்ல பேக்ல சாப்பாடு வாங்கி வந்துருக்கேன் நீ சாப்டுக்கோ ..!
பேக்கில் இரண்டு பொட்டலம் பிரியாணி இருந்தது
உங்களுக்கு ..?
எனக்கு பசிக்கல நீ மட்டும் சாப்பிடு ..!
இல்ல நீங்களும் வாங்க ..!
மல்லு கட்டி சாப்பிட வைத்து அவளும் சாப்பிட்டாள்..!
எப்படியும் ஒரு நாலைந்து நாட்கள் பேச்சு வார்த்தை இல்லாமல் போயிருக்கும்
ஒரு பெரும் சண்டையை வராமல் செய்துவிட்ட நிம்மதியோடு தூங்கி போனான்..!
அவளோ ..! தான் தொலைத்துவிட்ட கோபத்தை சுத்தமாக மறந்து போயிருந்தாள்.!
>