
மரணம் நேரும் அந்த கடைசி நொடி எப்படி இருக்கும் ..? உயிர் பிரியும்போது வலிக்குமா ..? முச்சு திணறுமா .? சாக போகின்றோமே என்ற பயம் ,வேதனை ஏற்படுமா..? உடலை விட்டு உயிர் பிரியும்போது ஒரு மாபெரும் சுகம் உண்டாகும் என்றே தோன்றுகின்றது ..! மரணத்துக்கு பின் வயோதிகமில்லா அற்புத ஆனந்த பெருவாழ்வு ஒன்று இருக்கும் என்பது உண்மையா ..? பால் வெளியில் சுதந்திரமாய் சுற்றி திரியலாமாமே..! மரணம் நம் அனுமதியுடன் வரவேண்டும் மெல்ல மெல்ல சுகமாய் நம்மை மரணம் தழுவ வேண்டும் ..! இதமாய் உயிர் பிரிய வேண்டும் ..! மரணத்தை அனுபவித்து களிக்க ஆசை ஆர்வம் பிறக்கும் அதே நேரத்தில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதே என்ற கவலையும் பிறக்கின்றது ..!
>
8 comments:
ஒவ்வொரு வினாடியும் மரணத்தை நோக்கி வழுக்கி செல்லும் இவ்வழ்கையில் ,தனியா மரணமுன்னு ஏதாவது இருக்கா, இப்போ அனுபவிக்கிறதே வாழ்கையா மரணமானு குழப்பமா இருக்கு !
அதே நேரத்தில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதே என்ற கவலையும் பிறக்கின்றது ..!\\
இதுதான் மனதின் தன்மை., மரணத்தின் போது மரணிக்காமல் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பது.,
ஆசை அதற்குரிய காலத்தில் நிறைவேறுமாக...:)
மரணம் தான் பதில் சொல்லனும் யாருக்கும் புரியாத மொழியில்....
விடை இல்லா தேடல்
வித்தியாசமான சிந்தனை
வித்திய்சமான கவலை
மனம் கவர்ந்த படைப்பு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
Tha.ma 2
மரணம் பற்றி இப்பொழுதே என்ன?
அது வரும்போது வந்துவிட்டுப்போகிறது.
வாழ்வின் ரசனைமிகுந்த கலர் பக்கங்கள் நிறையவே உள்ளது.அதை ரசிக்கலாமே/
????????
Post a Comment