பொற்கொல்லரும்,கலால் வரியும்..!!

ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு..!! ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு...!!! பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற     செய்திகளும் அதிகரிப்பு..!! ஏன்  இந்த முரண்..? என்ன காரணம்..? பொற்கொல்லரிடம் இருந்து நகைத்தொழில் கை மாறிப்போக யார் காரணம்.?? பொற்கொல்லரை கொத்தனாராகவும்,பிளம்பராகவும்,வாட்ச் மேனாகவும் தொழில் மாறச்செய்தது யார்?

மாபெரும்  கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய அளவிலான தொழில் கூடங்களை அமைத்து குறைந்த கூலிக்கு ஆட்களை அமர்த்தி  பொற்கொல்லர் அல்லாதவர்களுக்கும் பயிற்சி அளித்து தங்கள் உற்பத்தியினை துவங்கியதாலேயே பொற்கொல்லரின் முதல் பின்னடைவு துவங்கியது..!!

நகர் புறங்களை பொருத்தவரையில் மொத்த உற்பத்தியாளர் எனப்படும்  இடைதரகர்களின் பிடியில் சிக்கி அழிந்த பொற்கொல்லரும் அனேகம்..!  ஒரு பொற்கொல்லர் ஒரு மொத்த  உற்பத்தியாளரிடம் 6% கூலிக்கு நகை செய்துகொடுத்தவண்ணம் இருப்பார். அவருக்கென குடும்பம் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். அந்த மொத்த உற்பத்தியாளரை நம்பியே  அவர் குடும்பம் இருக்கும். இந்த நிலையில் வேறு ஒரு பொற்கொல்லர் அந்த மொத்த உற்பத்தியாளரிடம் வேலை கேட்டால் 5%  செய்து தருவதானால் வேலை தருகின்றேன்  என்பார் இவர் சம்மதிக்கும் பட்சத்தில் முதலாமானவரை அம்போ என விட்டுவிட்டு அடுத்தவருக்கு வேலையை கொடுப்பார்  முதலாமானவர் கதி..??    பல ஆண்டுகளாக ஒரு மொத்த உற்பத்தியாளரிடம் வேலை செய்து விட்டு அவர் வேலையை மாற்றி கொடுத்த காரணத்தால் நடுத்தெருவுக்கு  வந்த பொற்கொல்லர்களும் ஏராளம்...! இப்படியாக கூலியினை 6% லிருந்து  படிப்படியாக 3%,2%  என குறைத்து  பொற்கொல்லரை திண்டாட வைத்த  புண்ணியம் வடநாட்டு மொத்த உற்பத்தியாளருக்கு நிறையவே  உண்டு..!!

இப்போது இந்த தங்கத்தின் மீதான 1% கலால் வரியினை எதிர்த்து முன்நின்று  போராட்டம் நடத்துபவர்கள்  பெரும் கார்பரேட் நிறுவனத்தாரும்,மொத்த உற்பத்தியாளரும்தான்..!! எந்த ஒரு பொற்கொல்லரும்,பொற்கொல்லர் அமைப்பும் இந்த கலால் வரியை எதிர்க்கவில்லை..!!
 இதில் என்ன வேடிக்கை என்னவென்றால்  இந்த கலால் வரி எதிர்ப்பு போராட்டத்தில் பொற்கொல்லர்களும் இணைந்து உள்ளதாக  அவர்களே  செய்தியினை வெளியிடுகின்றனர்.! பொற்கொல்லரின் எதிர்காலத்தை கேள்விக்குறிஆக்கிவிட்டு  அவர்கள்  உடன்பாடு எதுவும் இல்லாமல் அவர்களும் போராட்டத்தில்  உள்ளதாக சொல்வதை கேட்டால் ஒவ்வொரு பொற்கொல்லருக்கும் அடி வயிறு  எரியத்தான் செய்கின்றது..!

பொற்கொல்லர் இந்த போராட்டத்தில் இருந்தால் மட்டுமே போராட்டம் வெல்லும் என்ற ஒரு நிலையில் மட்டுமே  இவர்கள்  பொற்கொல்லரை போலியாக இணைத்து கொள்கின்றனர். பொற்கொல்லர்களில்  கிட்ட  தட்ட அனைவரும் தங்கத்தின் மீதான 1% கலால் வரியினை ஆதரிக்கவே செய்கின்றனர். தமிழ் நாட்டில்  உள்ள பெரும்பான்மை நகைத்தொழிலாளர் அமைப்பும் கலால் வரியினை ஆதரிக்கின்றது..!

எங்கள் வாழ்வினை கேள்விக்குறி ஆக்கிவிட்ட உங்களுக்கு ஏன் இந்த போராட்டத்தில் உதவ வேண்டும் என்ற மனப்பாங்கு பொற்கொல்லருக்கு இல்லை...!  வேறு என்ன காரணம்...? இங்கே  சற்று கவனியுங்கள் நண்பர்களே ஆண்டுக்கு 1500  டன்   தங்கம் இறக்குமதி செய்ய படுகின்றது ஆனால் வெறும் 300,400 டன் தங்கம் மட்டுமே அரசிடம் கணக்கு காட்டப்படுகின்றது...கிட்ட தட்ட ஆண்டுக்கு 1000 டன்னுக்கு  மேற்பட்ட தங்கம் பதுக்க காரணமாக இந்த கார்பரேட் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தங்கள் முதுகில் ஏறி போராட்டம் நடத்த எந்த ஒரு பொற்கொல்லனும் அனுமதிக்க மாட்டான்...!  இதுவே  உண்மை நிலை..! பதுக்கப்படும் தங்கத்தினை வெளிக்கொணரும் தீர்வு கலால் வரியென சொல்லிவிட முடியாதுதான் ஆனால் பதுக்கல் தங்கத்தை மீட்க்கும் முயற்சியின் ஆரம்பம் இது..!

நாட்டில்    உள்ள தங்கத்தின் இருப்பினை வைத்தே பொருளாதாரம் நிர்ணயம் செய்யப்படுகின்றது.இந்த நிலையில் தங்கத்தின் மீதான கலால் வரியினால் நிச்சயம் தேசத்தின் பொருளாதாரம் மேம்படும். கலால் வரியினை ஆதரிப்பது ஒவ்வொரு  இந்தியனின் கடமையாக நினைக்க வேண்டும்.


பின் குறிப்பு;-  நண்பர்களே தங்கத்தின் மீதான  1% கலால்  வரியினை பொற்கொல்லர்கள் எதிர்க்கவில்லை  மாறாக ஆதரிக்கின்றார்கள் என்ற செய்தி எந்த ஊடகங்களிலும் வரவில்லை..!! அல்லது அந்த செய்தி மறைக்கப்படுகின்றது .   இந்த பதிவு அனைவரையும் சென்றடைய வேண்டும் எனவே இந்த பதிவினை  அதிக அளவில் பகிருங்கள்....தமிழ் மணத்திலும் உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள்  நன்றி...!!

>

0 comments: