எங்க குருவுக்கு பிறந்தநாள் (பங்கு வணிகம் திரு .எம் .சரவணகுமார்)


தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளம் உருவாக்கி
அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எங்கள் குரு திரு .எம் .சரவண குமார் அவர்கள் 04 .07 .2009 இல் பிறந்தநாள் காண்கிறார்.அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

தமிழில் பங்கு வணிகம் - 800




இன்றைய தினம் தமிழில் பங்கு வணிகம் சரியாக 800 பதிவுகளை நிறைவு செய்து இருப்பது கூடுதல் சிறப்பு. தினசரி அவர் வழங்கும் அன்றைய தினத்திற்கான சந்தை நிலவரம் குறித்த கணிப்பு வர்த்தகம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. ஒரு பதிவினை படித்துவிட்டு பின்னுட்டம் இடவே சோம்பல் படும் நிலையில், மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு தினமும் சந்தை நிலவரத்தை அசராமல் அளித்துவரும் எங்கள் ''குரு'' விற்கு நன்றி செலுத்த அவரால் பயனடையும் அனைவருமே கடமை பட்டுள்ளோம்!



மேலும் , தனது வலைத்தளம் மூலம் தினசரி குறிப்பு வழங்குவதோடு மட்டுமின்றி paisa power என்னும் சாட் ரூம் உருவாக்கி பங்கு வணிகத்தின் நுணுக்கங்களையும், தொழில் நுட்ப பகுப்பாய்வினையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பொறுமையுடனும் அக்கறையுடனும் விளங்கியவர்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் உள்ளன.ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை உருவாக்கியவர்.

இத்தனைக்கும் தனக்கு சொந்தமான திரை அரங்கம் ,மற்றும் கல்வி நிறுவனங்கள் சிலவற்றையும் நிர்வகித்து வருபவர். பல அலுவல்களுகிடையே மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு சேவை மனப்பான்மையுடன் தினசரி பதிவெழுதும் எங்கள் குருவை என்ன சொல்லி பாராட்டுவது!!

இவர் கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்,இதே கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் மன்னர் ராஜ ராஜ சோழன்! ஒருவேளை இந்த ராசி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன்னர் குணம் இயல்பாகவே இருக்குமோ?





பங்கு வணிகத்தில்
ஈடு
பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு
உதவி வரும் எங்கள் குரு எம் .சரவண குமார் அவர்கள் மேலும் பல ஆயிர கணக்கான பதிவுகள் எழுதவேண்டும்,மேலும் எல்லா வளங்களும் பெற்று
எவ்வித நோய் நொடியுமின்றி பல்லாண்டுகள் வாழவேண்டுமென உளமார வாழ்த்துகிறோம்!



நீங்களும் வாழ்த்து சொல்லுங்க!!






>

''குடித்ததில் பிடித்தது''

குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது!!

எனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும்.ஒருநாள் அப்படி கிளம்பியாச்சு அப்போ மழைக்காலம் தான் ! இங்க பெரம்பூர்ல நச நச ன்னு தூறல் போட்டுக்கிட்டு இருக்கு கிழக்கு பக்கமா வானத்த பார்த்தா நல்லா மழை அடிச்சிகிட்டு பெய்யும் போல இருந்தது! மதிய நேரம் அது!! சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு சீரணி அரங்கம் இருந்ததே அதுக்கு பின்னாடி கார் கொஞ்சதூரம் கடல் வரை போகும் அங்க போய் கார நிறுத்துறதா திட்டம்.

ஆனா ? யாரு கண்ணு வைச்சாங்களோ தெரியல பீச் நெருங்க ,நெருங்க மழை குறைந்து லேசா வெயில் அடிக்க ஆரம்பிச்சது! பீச் போனதும் பார்த்தா நல்லா சுள்ளுன்னு வெய்யில்! என்ன இது வீணாப்போன வானிலை?

வெறுப்பா போச்சு அப்புறம் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வண்டிய நிப்பாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்தோம்! அப்புறம் அதுபோல தண்ணி அடிக்க முயற்சி பண்ணல.


போன வருஷம் கொடைக்கானல் போனோம் அப்போ தண்ணி அடிச்ச சம்பவத்த
மறக்கவே முடியாது! வேன் எடுத்துகிட்டு போய் இருந்தோம் முணு ,நாலு குடும்பங்களா போய் இருந்தோம். ஒரு நாள் காலைல கிளம்பி வெளில சுத்தி பார்த்துட்டு மதிய சாப்பாட்டுக்கு தங்கி இருந்த எடத்துக்கு வந்துட்டோம் அங்க சமையல் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தோம்.எல்லாரையும் எறக்கி விட்டுட்டு தண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க ஒரு அஞ்சு பேரு வேன்ல கிளம்பிட்டோம்!

சரக்கு வாங்கிகிட்டு வேன ஒரு ஓரமா நிறுத்தினோம்!அப்போ
அடிச்சுது பாருங்க மழை!!! மழைனா ..மழை அப்படி ஒரு அடை மழை! சுத்தி உயர உயரமா மரங்கள்! மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குது ! ஒரு வேனுக்குள்ள இருந்துகிட்டு பெய்யென பெய்ஞ்சுகிட்டு இருக்குற அடை மழையை ரசிக்கிறதே
ஒரு போதைதான் கூடவே சரக்கும் இருந்தா அடடா சொல்லவே வேணாம்!

அப்போ எனக்கு பள்ளி கூடத்துல படிச்ச நெடுநல் வாடையில் நக்கீரர் கூறும் மழைக்கால வர்ணனையை எழுது அப்படிங்குற கொஸ்டீன் தான் நெனைப்பு
வந்தது! சமீபத்துல ஒரு பதிவர் இதை பத்தி எழுதி இருந்தாங்க!

அதுல!
மழையில் நனைந்த கமுக மரங்கள் காற்றின் வேகத்தில் அசைந்து உருண்டு ,திரண்டு அழகாக காட்சி அளித்தன, நீரின் வேகத்தை எதிர்த்து மீன்கள் நீந்திவர அதெற்கென காத்திருந்த கொக்குகள் அந்த மீன்களை பிடித்து உன்னலாயின, சிறு மழைக்கு அஞ்சாத கள்ளுண்ட மாந்தர்கள் சத்தமாக இரைந்த படி சென்றனர் இப்படியாக போகும் அந்த வர்ணனை !

மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது! நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்
வயிற்றில்
இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை.


.......................................................................................................
>