திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .
ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!
ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.
கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.
புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!
எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!
எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .
ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.
அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!
இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?
எதுக்கு வாங்குனீங்க..?
இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?
எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!
(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )
யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!
இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?
ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!
உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!
அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?
சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?
யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?
எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!
என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .
ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான் இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .
கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!
நானும் அவளிடம் கேட்கிறேன்
உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.
மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா
நானும் அவளிடம் கேட்கிறேன்
உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல
முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.
இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?
ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.
அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது. அந்த பிரசவம் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு.
நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .
நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.
இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.
பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.
குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .
தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .
வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!
சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .
இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!
ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!
எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..!;;))
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை . இப்போ இதை சொன்னா உதை விழும்
...................................................................................................................................................................
>
57 comments:
nice :)
அருமையா எழுதியிருக்கீங்க. கண்ணாடின்னு பெயர் வைத்ததற்கு ஏற்றமாதிரி உணர்வுகளை அழகாக பிரதிபலித்திருக்கிறீர்கள்.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
குட்..வாழ்க வளமுடன்
Excellent... No word to describe... Same feeling here... ;-)
Wishes for the century!
அருமை.
//எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..!;;)) //
முதலில் இதற்கு வாழ்த்துக்கள்:)!
அடுத்து நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!
இவ்ளோவ் ஃபீல் ஆன நீங்க, சந்தோசத்துல கடைசில நான் கொடுத்து வச்சவன்னு ஒரு வார்த்தை போட்ருக்கலாம்.
ஏன் அப்படி போடலைன்னு என்னை மாதிரி ஆளுங்களுக்குத்தான் தெரியும்...
ஏன்னா !
சேம் ப்ளட்....ஹி....ஹி....
வாழ்க வளமுடன்!
தொடர்ந்து நூறு பதிவு எழுத அனுமதிச்சதுக்கு இதை நன்றி தெரிவிக்கும் பதிவுன்னு எடுத்துக்கலாமா!
ஹா...ஹா...ஹா...
சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .//
மிக உணர்ந்து எழுதியுள்ளீர்கள்.
//ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!//
இதுவும் மிக சரி.
//எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..!;;)) //
மிக ரசித்தேன்.... 100வது பதிவுக்கே கூட உங்க இல்லத்தரசியாலத்தான் பெருமை!
வாழ்த்துக்கள்.... நால்வருக்கும்!
மிக அற்புதம் ஜீவன்.
எல்லாப் பெண்களும் படிக்கவேண்டிய பதிவு.
அருமை ஜீவன்
வாழ்த்துகள்
100வது இடுகைக்கு வாழ்த்துக்கள் தமிழ்....
நம்பினாலும் நம்பாவிட்டாலும் கண்கலங்கிட்டேன்...உங்க மனைவி அதிர்ஷடசாலி தாங்க...மனைவி என்ற பெண்ணின் பரிமானங்களை எவ்வளவு ஆழ்ந்து கூர்ந்து கவனிச்சியிருக்கீங்க...அந்த நேர்த்தி உங்க வார்த்தைகளை மேலும் அழகாக்கியது..பாலகுமாரன் என்ன ஜானகி என்ன இவள் அன்புக்கும் குடும்பத்தில் காட்டும் அக்கறைக்கும் இவை எதுவும் நிகரில்லை என நீங்க உணர்ந்தது தான் கண்கலங்க வைத்தமைக்கும் காரணம்...ஆண்களின் மேல் இருக்கும் கெளரவம் மேலும் அதிகரிக்கிறது தமிழ்....உங்களை நினைக்கையில் பெருமையாகவும் இருக்கு.................கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இதுவும் நல்லாத்தான் இருக்கு...
ஐயோ! முதல்ல படிச்சப்போ சிரிச்சு முடியல.கடைசியா படிச்சப்போ இவ்ள அழகா உணர்வுகள பிரதிபலிக்கும் உங்க பதிவு.கொடுத்துவச்சவுங்க உங்க தங்க மணி.வாழ்க! வளர்க!
ம்ம்ம்... உள்ளேன் ஐயா!
இப்போதைக்கு உள்ளேன் மட்டும் அலசல் அப்புறம் தொடங்கும்... :)
நூறாவது பதிவுற்கு வாழ்த்துக்கள் ஜீவன்!
மேலே மேலே இதே போல் பல ஆயிரம் பதிவுகள் கொடுக்க வாழ்த்துக்கள்!
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஜீவன்...
இதுவும் நல்ல ஒரு ஜீவனுள்ள கதை தான்...
இதே தலைப்பில் நான் எழுதிய ஒரு கதை இங்கே பாருங்கள்...
மனைவி அமைவதெல்லாம் – (சிறுகதை)
http://jokkiri.blogspot.com/2010/02/blog-post.html
அட... இப்போத்தான் பாலகுமாரனை நீங்கள் படித்ததை உண்மையாக வாழ்வில் அனுபவிக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்....
அன்பு நண்பருக்கு, முதலில் வாழ்த்துக்கள் நூறு பதிவு கண்டமைக்கு!!
அதிலும் இந்த இடுகை மிகச் சிறப்பாய் அமைந்துள்ளது!! வரிக்கு வரி அருமை!! பலர்தம் வாழ்கையில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை இந்த ஒரு பதிவு தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றது!! புதுமணத் தம்பதிகளுக்கு இந்த பதிவை பரிசாகக் கொடுக்கலாம்.
தொடர்ந்து எழுதுங்க...தொய்வின்றி எழுதுங்க....வாழ்த்துக்கள்--சஞ்சீவி
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் உடன் கெமிஸ்ட்ரி, பயாலஜி, ஹிஸ்டரி,ஜ்யாக்ரபி எல்லாமே வொர்க் அவுட் ஆனதுக்கும் ;)))))
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க ஜீவன்.
வாழ்க வளமுடன்
குடும்பம் என்றால் என்ன.அதை எப்படி அழகாக நகர்த்துவது.உங்களை வைத்தே அட்டகாசமாகச் சொல்லிவிட்டீர்கள் ஜீவன்.
நூறுக்கு வாழ்த்து.
இன்னும் இன்னும் நூறு வரணும்.
நூறுக்கு வாழ்த்துக்கள். இப்ப எல்லாம் ஒர்கவுட் ஆனதுக்கும்.
/*ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!
*/
கணவன் மனைவிக்கிடையே இந்த புரிதல் தேவை என்று அழகாகக் கூறி உள்ளீர்கள்.
100ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்
-------------
அண்ணே மிக மிக நெகிழ்வாய் உணர்ந்தேன்.
நாம் நமது இப்படியே வாழ்ந்து பல பேர் இருக்காங்க - புரிதல் என்பது இரு புறமும் வரணுமுன்னு புரிஞ்சி இருக்கீங்க
வாழ்த்துகள்
100வது பதிவு அருமை....
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...
100 வது பதிவுக்கு வாழ்த்துகள் ஜீவன்.
//ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!//
இதை எப்போ உணர்ந்த்திர்களோ அப்போதே உங்கள் வாழ்க்கை மலர்ந்திருக்கும். எப்போதும் கணவர்கள் தங்கள் பார்வையிலே மனைவியைப் பார்த்தால் பிரச்சனை இருவருக்கும் தான்.
இனிய வாழ்வுக்கு வாழ்த்துகள் ஜீவன்.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
புரிந்து கொண்டு வாழ்தலே இனிய வாழ்க்கை என்பதை அழகாகக் கூறிவிட்டீர்கள்.
பதிவுகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்..
நல்ல விசயத்தை எழுத்தாக்கியுள்ளீர்கள்!
ஒரே மாதிரியான குணம் இருவருக்கும் இருந்தால் சீக்கிரமே சலிப்பு ஏற்பட்டு விடும் நண்பரே!
நீங்கள் தான் சரியான ஜோடி!
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
/மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான்//
ரொம்ப உணர்வுபூர்ணமாக இருந்தது, இது போல் சொல்லும் ஆண்கள் குறைவு. புரிந்து நடத்தலே பெரிய வரம்
இவ்வளவு அருமையா எடுத்து எழுதி இருக்க்கீங்க, அதே போல் கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்...
அப்படியே நேரில் பார்ப்பதைப்போல் எழுதி இருக்கின்றீர்கள்."இதுதான் வாழ்க்கை"
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
ரொம்ப சந்தோஷம்... வாழ்த்துக்கள்...
நல்லா இருக்கு. வாழ்த்துகள். நூறுக்கும் பிற பாடங்களுக்கும் :-)
எல்லாவற்றிலும் சென்சுரி அடித்துவிட்டீர்கள்!!! வாழ்த்துக்கள்!!
படித்தேன் ரசித்தேன். உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்.
அருமை
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
இது போன்ற மனைவி அமைய கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
வாழ்த்துகள் நண்பரே
100 வது இடுகைக்கும் சேர்த்து..
கலக்கல்....இது வரை போட்ட பதிவுகளிலேயே இது தான் சூப்பர்.. என்ன பிடிக்கும் னு கேட்காதது தப்புன்னு ஒத்துடீங்க பாருங்க... அது அது தான் சூப்பர்..:)))
நூறுக்கு வாழ்த்துக்கள்
neengalum balakumaran padipingala?
nanum nanum nanum
கல்யாணம் ஆன முத வருஷம் இப்படித்தான் நிறைய ஏமாற்றங்கள் வரும். அதை பக்குவமா தாண்டி வந்துட்டா அதுக்கப்புறம் சந்தோஷம்தான்.
எதிரெதிர் குணாதிசயம் உள்ளவங்க வாய்ச்சாதான் சுவாரசியமா இருக்கும் வாழ்க்கை!!
வாழ்த்துக்கள் தொடர்ந்த நிறைவான வாழ்வுக்கு!!
தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிபோட்டடீங்க.
thamizh anna,,, nega romba pavam anna,,, irundalum annni janaki ya pathu kelavi solirkakudadhu :-(
but really, ya smart ad sweet post,,, this ll be the everlasting mark n ur posts,, live long , hold this happiness through out,,
congrats for ur 100
100க்கு வாழ்த்துகள்:))
இந்த இடுகை அற்புதமான இடுகை. பொதுவாக எல்லா ஆண்களும் உங்களைப்போலவே தங்கள் மனைவியை புரிந்துகொண்டால் அனைவரின் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும். உங்கள் மேல் தனி மரியாதை வருகிறது.
அருமையாக உணர்ந்து எழுதி உள்ளீர்கள் .
வாழ்த்துக்கள்
பதிவு நூறு தொட்டதற்கும் தாம்பத்யத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியதற்கும்
யதார்த்தமாக ஒளிவு மறைவின்றி எழுதப்பட்ட பதிவு
மீண்டும் வாழ்த்துகிறேன்
விஜய்
//சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான்//* பிரமாதம் 100 இல் ஒரு வார்த்தை ..........(மணமான)அனுபவம் இல்லத்தினால் இத்துடன் முடித்துகொள்கிறேன்
குட் போஸ்ட்!
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
//தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .//
சரியாக சொன்னீர்கள் ஜீவன், அவர்க்ள் படும் அவஸ்தையில் மனதளவில்நானும் சேந்தே அனுபவத்திருக்கிறேன்.
//
(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )//
ஜீவன்,
சிரிக்க மட்டும் மேலே குறிப்பிட்டுள்ள சொற்கள்.
பதிவு முற்றிலும் என்னை ஒருமுறை ஜீவனுள்ள எழுத்துக்களால் படித்துப் பார்த்தேன்.
அன்பான குடும்பத்திற்கு வாழ்த்துகள்.
உங்களின் சிறு பிராயம் முதல் திருமணப் பருவம் வரை அழகாக விவரித்து இருக்கீங்க ஜீவன்.
இருவரின் பழக்க வழக்கங்களும் நல்லா அலசி இருக்கீங்க :)
புடிக்காமல் போன சிலவைகள் பின்னால் மிகவும் பிடிக்க வைத்துக் கொண்ட உங்களின் மன முதிர்ச்சியின் வலிமை என் கருத்துக்கு மிகவும் அபாரமாகத் தோன்றின.
உங்களின் எதார்த்தமான எழுத்தும் கடந்து வந்த வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளும் வாவ் சூப்பர் ஜீவன்!
வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருக்க, தம்பதியர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
இன்னும் பல நூறு காண வாழ்த்துகிறேன்
குடும்பம் என்ற வண்டி சீராக ஓட எது முக்கியம் என்பதை அழகாக உணர்த்தியிருக்கும் பாணி அருமை.
super......
என்னை மிகவும் கவர்ந்த பதிவு இதுவரையில் இதுதான்...மிகவும் எதார்த்தம்..
எனக்கு இப்பதான் பொண்ணு பார்தாங்க..இதே மாதிரி வைரமுத்து,பாலகுமாரன்,சுஜாதா, மணிரத்னம்..இவர்களின் தீவிர ரசிகன் நான்...
நீங்க கேட்ட மாதிரியே நானும் சில கேள்விகள் கேட்டேன்..எனக்கும் இந்த மாதிரிதான் பதில் வந்தது...
இருந்தாலும் நான் அவுங்கள ஓகே பண்ணிட்டேன்...
உங்கள் பதிவு எனக்கு ஆறுதலாகவும் இருந்த்து..மிகவும் எதார்த்தமாகவும் இருந்தது..
இந்த கமெண்ட் கூட என்னால் எழுத முடியல..அப்படியே நெகிழ்ந்து போயிட்டேன் இந்த பதிவை படிச்சிட்டு...
ஆங்கிலத்தில் சொல்லனும்னா..
AWESOME
வாழ்த்துக்கள். முகவும் நெகிழ வைத்த பதிவு. அன்பு என்ற ஒன்று எதனை எதிரிகளையும் நிர்மூலமாக்கும். அந்த அன்புக்கு அடிமையானவர்களைத்தான் கொச்சைப்படுத்தி "பொண்டாட்டி முந்தானையை பிடித்துகொண்டு" . என்று விளிக்கிறோம்.
Really awesome writing, that too when your really experiences it. while reading i felt i was just crossing all through that..
There is working they say WIFE IS A MYSTERY IF A MAN DOESN'T FIND HER.IS SHE IS FOUND, SHE 'S THE HISTORY FOR HIM.
Post a Comment