சோழ நாட்டு இளவரசன்

துயில் எழுந்து காலை கடன் முடித்து, நீராடல்..! இரண்டு தாதி பெண்கள் அழைத்து சென்று வெது வெதுப்பான வெந்நீரில் நீராட்டிவிட நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி, முத்துமாலை,முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து, அறுசுவையுடன் கூடிய காலை உணவு.

அரசவை!

இளவரசர் வாழ்க!!! இளவரசர் வாழ்க!!!
என்ற ஜெய கோஷங்கள் முழங்க அரசவை விஜயம்!!

மக்களின் குறை கேட்டல், புலவர்கள்,பாடி பரிசில் பெற்றுச் செல்ல அவை கலைகிறது .!

நண்பகல்!

அரண்மனையின் மேல்தளம் !!

குளிர்ந்த வெயில்!! வயல் வெளியால் நெய்யப்பட்ட என் சோழ தேசம். நிறைந்த எங்கள் காவிரித்தாய்!!தூரத்தில் மக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் விவசாய பணிகளில்! ஆங்காங்கே குதிரை வீரர்கள்! இரண்டு வீரர்கள் புழுதியை கிளப்பியபடி குதிரையில் வேகமாக சென்றுகொண்டு இருக்க! மன நிறைவுடன் என் தேசத்தை ரசிக்கின்றேன் !!போரடிக்கும் வேலைக்கு சேர நாட்டில் இருந்து பதினைந்து யானைகள் வாங்க பட்டு உள்ளன.அவை இன்னும் வந்து சேரவில்லை இன்னும் இரண்டு தினங்களில் அவை வந்துவிடும் அவற்றை பழக்க கூடவே பாகன்களும் வருகிறார்கள்.
கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர், இளவரசருக்கு பெண் தேட துவங்கியது முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.
மதிய உணவு

மெல்லிய போதை தரும் சுவையான பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன். தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
vஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்றமணிவரைக்கும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும் தூங்க வேண்டியது? எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன் என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல அப்புறம் என்ன இலக்கண தமிழு ) ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!

..
>