இளமை..! இதோ ..இதோ..! பதின்மம்

இளம்பிராய நிகழ்வுகள் என்றவுடன் பருவ வயதில் ஆர்வகோளாறில் சேட்டைகளை எழுதவேண்டுமோ என் எண்ணத்தை சில நண்பர்களின் பதிவுகளை பார்த்து மாற்றி கொண்டேன்..! அட இப்படிக்கூட ழுதலாமே என்று ..!பதிவிட அழைத்த அமித்து அம்மாவிற்கு நன்றி....!


அந்தமான் நினைவுகள்

நான் பிறந்து நான்காம் வகுப்பு பாதி வரை படித்தது அங்கேதான்..! குருதுவாரா எனப்படும் சீக்கியர் கோயில் எதிரில் இருந்தது எங்கள் வீடு. பாக்கு மரங்கள் ,மா மரங்கள் முந்திரி மரங்கள் ல்லாம் வீட்டருகே இருந்தன. நடந்து போகும் தொலைவில் அபர்டீன் ஸ்கூல் அங்கேதான் படித்தேன். எல்லா மக்களும் கலந்து வாழும் இடம் அது தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,சீக்கியம் என எல்லோரும் உண்டு ஹிந்தி தான் பொதுவான மொழி.எனக்கு தமிழ் நண்பர்கள் பள்ளியில் மட்டுமே..! வீட்டருகே தெலுங்கு, ஹிந்தி நண்பர்கள்தான் பம்பரம்,கிட்டிபுல் கோலி என இங்குள்ளதைபோலவே அங்கும் எல்லா விளையாட்டுகளும் உண்டு விளையாட்டு ரூல்ஸ்தான் மாறும். ஹோலி பண்டிகையை பாகுபாடு இல்லாமல் எல்லோரும் கொண்டாடுவார்கள் . கலர் சாயங்களை நாங்களே தயாரிப்போம் பழைய பேட்டரி கட்டையை உடைத்து அதில் உள்ள கருப்பான பொருளை எடுத்து சாயமாக பயன்படுத்துவோம்.


அந்தமானில் பாதிவரை நான்காம் வகுப்பு படித்து மீதி இங்கேதான் தஞ்சை மாவட்டம் -பட்டுக்கோட்டை -மதுக்கூர் - புதுகுளத்து பள்ளி கூடம் எனப்படும் இடையகாடு பள்ளி இங்கே நாலாவதும் அஞ்சாவதும் படித்தேன் .

























ஆறாவது முதல் +2 வரை மல்லுகட்டி படிச்சது அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி. நான் வந்து ஒரு சரியான மாணவன் கிடையாது என் அப்பா ஊர்ல இல்லாததால இஷ்டம்போல சுத்தி இருக்கேன். ஆறாவது படிக்கும்போதே கட் அடிச்சுட்டு ஊர் சுத்துவேன்.ப்போவே ஒரு வாட்டி ஒரு பிரண்ட் கூட சேர்ந்து சிகரெட் குடிச்சு இருக்கேன் இருமல் வரவே சிகரெட் புடிக்கல. எட்டாவது படிக்கும்போது வீட்ட விட்டு ஓடி போக கூட முயற்சி பண்ணி இருக்கேன்.

அதுபத்தி ஒரு பதிவு கூட போட்டு இருக்கேன் ''வீட் விட்டு ஓடி போய்''

எப்படியோ தட்டுத் தடுமாறி பத்தாவது வந்துட்டேன் அப்போதான் எனக்கு கதை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வந்தது. அது பத்தி அப்புறம் சொல்லுறேன்.பத்தாவது ரிசல்ட் ருது எனக்கு பாஸ் பண்ணிடுவேன்னு சுத்தமா நம்பிக்கை இல்ல பேப்பர் வருது நம்பர் பாக்குறேன் என் ஆச்சர்யம் என் நம்பர் இருந்தது அப்படின்னு சொன்னா அது பொய் நான் எதிர் பார்த்த மாதிரியே என் நம்பர் வரல பத்தாவது நான் பெயில்! அன்னிக்கு எங்க ஊர் ஐயப்பா தியேட்டர்ல தர்மத்தின் தலைவன் படம் போட்டு இருந்தாங்க அத நைட் ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு போயிட்டேன் வீட்டுல திட்டல...!

கிரிக்கெட்

என் வாழ்க்கையில் கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு..! பத்தாவது பெயில் ஆனவுடன் அட்டெம்ப்ட் அடிக்குற இடைவெளி கிரிக்கெட் விளையாட போனேன் எங்க ஊரு கிரிக்கெட் டீம் ஒரு பெரிய டீம். முதல்ல அவுட் பால் பொறுக்கி போட்டுக்கிட்டு விளையடுரவங்களுக்கு சிகரெட் வாங்கி கொடுக்குறதுதான் என் வேலை அப்புறம் கொஞ்ச கொஞ்சமா டீம் குள்ள போயிட்டேன் அங்க விளையடினவங்க எல்லாரும் கல்லூரில படிக்கிறவங்கஅவங்க பேச்சு நடை உடை எல்லாம் பார்த்து எனக்கும் படிக்கணும்னு ஆசை வந்துட்டு.

வாரவாரம் வெளியூர் டீம் கூட கிரிக்கெட் போட்டி நடக்கும் என்னையும் ஒரு கட்டத்துல மேட்ச் சேர்த்து கிட்டாங்க அந்த டீம்ல ரொம்ப சின்ன பையன் நாந்தான். வெளியூர் டீம் கூட விளையாடும்போது நான் சின்ன பையனா இருக்குறதல எல்லாரும் என்கிட்டே வந்து பேசுவாங்க நல்லா பிராக்டீஸ் பண்ணுங்க தம்பி கிரிக்கெட்ல பெரிய ஆளா ரலாம் அப்படின்னு.நான் வந்து ஒரு பாஸ்ட் பவுலர். இந்திய கிரிக்கெட் அணி நான் விளையாடனும்னு ஒரு லட்சம் தடவ கனவு கண்டு இருப்பேன்னு சொன்னா அது கம்மி. எப்படியும் கிரிக்கெட்ல பெரிய ஆளா ஆகணும்னா படிக்கணும் அதுனாலே நான் படிக்க முடிவு பண்ணினேன்.


வசந்த காலம்

பிளஸ் ஒன் ,பிளஸ் டு படிச்ச காலம்தான் எனக்கு வசந்த காலம் எங்க ஸ்கூல் ஆண்கள் பள்ளிதான் ஆனா பிளஸ் ஒன் ,பிளஸ் டு மட்டும் பொம்பள புள்ளைங்க கூட. இப்போதான் டவுசர்ல இருந்து பேண்டுக்கு மாறினது ,புது லுங்கி வாங்கினது சட்டைய அயன்பண்ணி போட்டது,மீசைய கவனிச்சது ,பேர் அண்ட் லவ்லி போட்டுகிட்டது,தலைய தூக்கி வாரினது இன்னும் நெறைய சொல்லலாம்.
அப்போ புள்ளைங்க கூட வாங்க ,போங்கன்னுதான் பேசிக்குவோம் சில புள்ளைங்க பசங்க கூட பேசவே பேசாது..! ஏங்க, இங்கேருங்க இப்படித்தான் புள்ளைங்க கூப்பிடும் அதுவே நம்மளுக்கு சொகமா இருக்கும். நல்லா படிக்கணும்னு வீட்டுல சொல்லி பொம்பள புள்ளைங்களுகாகவே ட்யூசன் போனேன்.

அண்ணன் ராசி

அது என்னமோ தெரியல இப்போன்னு இல்ல நான் +2 படிக்கும்போதே கூட படிச்ச சில புள்ளைங்க அண்ணன்னுதான் என்னைய கூப்பிடுவாங்க. அப்போ ஒருத்தன் சொன்னான் ஆளு பர்சனாலிட்டியா இல்லாட்டி இப்படித்தான் புள்ளைங்க அண்ணன்னு சொல்லி கழட்டி விடுவாங்கன்னு. எனக்கு என்னமோ அப்படி தோணல சேச்சே அப்படி இருக்காது அது நம்பளுக்கு கிடைக்கிற ரியாதைன்னு நினைச்சுகிட்டேன். இப்போ கூட என்னைவிட வயசான பதிவர்கள் கூட என்னைய அண்ணன்னு சொல்லுறாங்க.

கால போக்குல கிரிக்கெட் கனவு குறைஞ்சு இயல்புக்கு திரும்பிட்டேன்



என் நாயகர்கள்

பாரத தலைவன் நேதாஜி

சின்ன வயசில் படக்கதைகள் படிப்பது எனக்கு புடிக்கும் சிறுவர் மலர்ல தொடரா வந்த நேதாஜி வரலாறு படிச்சது முதல் அவரை என் மனசில நிறுத்திகிட்டேன் .நேதாஜியின் புல்லரிக்கும் வரலாறினை படித்து அவர் வசமானேன்.

தமிழின தலைவன் பிரபாகரன்



இலங்கைல சண்டை நேரம் எங்க ஊரு கடற்கரை பக்கம் இருந்ததால தமிழ் போராளிகள் நிறைய பேர் எங்க ஊருல தங்கி இருந்தாங்க. எல்லார் கூடவும் நல்லா பேசுவாங்க நல்லா அன்போட பழகுவாங்க.ஸ்கூல் முடிஞ்சு வந்தா நாங்க அவங்க கூடத்தான் இருப்போம் கைத்துப்பாக்கி எல்லாம் வைச்சு இருப்பாங்க எனக்கு துப்பாக்கியை கையில் எடுத்து பார்க்கணும்னு அப்போ ரொம்ப ஆசை ஆனா கொடுக்க மாட்டாங்க.அப்போ இலங்கைல நடக்குற கொடுமைகள தெருவுக்கு தெரு படம் போட்டு காட்டுவாங்க. பிரபாகரன் கைல புலிக்குட்டி வைச்சு இருக்குரதுபோல காலண்டர் எங்க ஊருல அப்போ எல்லார் கடை லயும் மாட்டி இருக்கும். அப்போதிருந்தே அவரை நான் தலைவனாக துதிக்க ஆரம்பித்தேன்.


இசை ஞானி இளைய ராஜா



என் சின்ன வயசு முதலே சையால் நாடி நரம்பெல்லாம் ஆக்கிரமிச்ச இந்த மனுஷன் என் முக்கியமான நாயகன்.




பால குமாரன்

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் கதை புத்தகங்கள் படிக்க துவங்கினேன் சுபா,ராஜேஷ் குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்கள்தான் என் அபிமான எழுத்தாளர்கள். எதோ ஒரு தீபாவளி மலரில் பாலகுமாரன் கதை வர அப்படியே அவர் எழுத்தில் ஊறிப்போனேன் வெறித்தனமாக அவர் புத்தகங்களை படித்தேன் ஒழுங்கற்று இருந்த நான் ஒரு வடிவம் அடைந்தது இவரால்தான் என் மானசீக குருவும் இவர்தான் நான் மனதளவில் எப்போதும் திடமாக இருக்க இவரே காரணம்.



இன்னும் நெறைய எழுதலாம் அப்புறம் அது வாழ்க்கை வரலாறு போல ஆயிடும் அதனால போதும் நிறுத்திக்குவோம்...!

நான் தொடர அழைப்பது

டவுசர் பாண்டி

ரம்யா

தமிழரசி



>