எங்க ஊர் கோயில்

சித்திரை ஒண்ணாம் தேதி எப்போதும் எங் ஊருக்கு போய்டுவோம். எங்க பூர்வீக கிராமத்துல ஒரு பெருமாள் கோயில் இருக்கு அந்த கோயில் சித்திரை ஒன்னு அன்னிக்கு எங்க குடும்பத்து மண்டகப்படி. இப்போ என் பொண்ணுக்கு சித்திரை க்கு முன்னாடியே லீவ் விட்டது வசதியா போச்சு!
அந்த ஊர் மற்றும் கோயில் பத்தி கொஞ்சம்....

காரப்பங்காடு

முன் காலத்தில் அதிக மக்கள் வசித்த கிராமம் . கோயில் வாசலில் அக்ரகாரம். நகை தொழில் செய்பவர்கள் வசிக்கும் ஒரு தெரு, மற்றும் விவசாய மக்கள் நெறைய பேர் இருந்தாங்களாம். இப்போ சுமார் ஆயிரம் பேருக்கும் குறைவான மக்களே அங்க வசிக்குறாங்க! ஒரு நாளைக்கு ரெண்டு தடவ ஒரு பஸ் வந்துட்டு போகுது!

அபீஷ்ட வரத ராஜ பெருமாள் திருகோயில்


மக்கள் தொகை குறைவா இருந்தாலும் சுத்தி வயல் வெளியால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் கம்பீரமா இருக்குது இந்த கோயில் மட்டும் தான் . நல்ல பராமரிப்புடன் நேர்த்தியா வைச்சு இருக்காங்க!
108 வைணவ திருதலங்கள்ள இதுவும் ஒன்னு!

ஸ்தல விருட்சம்

இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் பாதிரிபூ மரம். சிவப்பு பாதிரிபூமரம்,வெள்ளை பாதிரி பூமரம் அப்படின்னு ரெண்டு மரமும் அங்க இருக்கு !பாதிரி பூமரம் ஸ்தல விருட்சமா இருக்குறது இந்த கோயில் ல மட்டும்தானாம் இந்த தகவல அங்க அர்ச்சகரா வேலை பார்குற ஐயர் சொன்னாரு !

ரொம்ப சின்ன கிராமத்துல இருந்தாலும் நகரத்துல இருக்குதுபோல இந்த கோயில நல்லா பராமரிசுக்கிட்டு வராங்க!
கோயில் இருப்பிடம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்து மதுக்கூர் இருந்து காரப்பங்காடு சரியா எட்டு கிலோ மீட்டர். ராஜ மன்னார்குடி இருந்து மதுக்கூர் வழியா முப்பது கிலோ மீட்டர்.

கீழ் கண்ட சுட்டிகளில் இந்த கோயில் பத்தின சில விஷயங்கள்......


http://www.hindu.com/fr/2004/02/27/stories/2004022701720400.htm

http://www.hindu.com/thehindu/nic/vishnu/index.htm

http://www.youtube.com/watch?v=ஸ்கஃஹ்த௬வ்க்


----------------------------------------------------------------------------------

>