வேண்டாத குணங்கள் ??

ஒரு மனிதனின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க சில குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என சொல்ல படுகிறது. ஆசை, கோபம், எதிர்ப்பு உணர்வு, பழி வாங்கும் செயல், போன்ற குணங்கள் கொண்டவர்கள் நிம்மதி இழந்து தவிப்பார்களாம். ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கையா? வெற்றி கரமான வாழ்க்கையா? நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. நல்லவன் நிம்மதியாக இருக்கிறான், வல்லவன் வெற்றி அடைகிறான். நல்லவன் நல்லவன் என்றால்? வல்லவன் தீயவனா? அப்படி அல்ல! நல்லவன் ஒருவன் தீய குணங்கள் கொண்ட வல்லவனிடம் தோற்று போய்விட கூடாது.நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.


ஆசை வேண்டும்!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொன்னார் அவர் சொன்னது நிம்மதியான வாழ்க்கைக்கு! ஆனால் வெற்றிகரமான வாழ்க்கைக்கு? ஆசையே எல்லாவிதமான இன்பத்திற்கும் அடிப்படை காரணம். ஆசை இல்லாதவன் அரை மனிதன்.ஆசையே வெற்றி தரும்.


கோபம் வேண்டும்!

கோபம் என்பது ஒரு சக்தி! கோபம் என்பது ஒரு ஆற்றல்! ரவுத்திரம் பழகு எனஏன் சொன்னார்கள்? கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


எதிரி வேண்டும்!

உனக்கு நூறு நண்பர்கள் இருக்கிறார்களா அது குறைவு! உனக்கு ஒரு எதிரி இருக்கிறானா? அது அதிகம்! இது பழைய பழமொழி! ஆனால்? வெற்றிகரமான வாழ்க்கைக்கு? எதிரிகள் வேண்டும்! கவிஞர் வைரமுத்து சொன்னது போல, எதிர்ப்புகள் வாழ்க்கையின் பிடிமானங்கள்! எதிரி என்று உனக்கு யாரும் இல்லையெனில் எதிரியை ஏற்படுத்திகொள். உன்னை உனக்கு உணர்த்துவது. உன் எதிரிதான்.

நண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால்? எதிரி இல்லாமல் வளர முடியாது!

பழி வாங்கும் உணர்வு வேண்டும்!

எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயம் அவன் வறுமை காரணமாகவோ அவன் இயலாமை காரணமாகவோ அவமான பட்டு இருப்பான்அல்லது உதாசீனபடுத்த பட்டு இருப்பான். அப்படி அவன் இகழ படும்போது அவன் தன்னை இகழ்ந்தவர்களை பழிவாங்கும் உணர்வோடு எதிர் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்.


வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு சவால் இருந்து கொண்டேஇருக்க வேண்டும் .
>