நானும் போயிட்டு வந்துட்டேன்...!

வேற எங்க..? புத்தக கண்காட்சிக்குதான் இன்னிக்கு சனி கிழமை நாளைக்கு கடைசிநாள் அதனால நல்ல கூட்டம் ..!

ஒருபதிவ போட்டுட்டு படிக்கலாம்னு நெனச்சேன்..!ராஜீவ் கொலை வழக்கு

படிக்க ஆரம்பிச்சு ஒரே மூச்சுல முடிச்சுட்டேன்

படிச்சு முடிச்சதும் மனசுல நிக்குறது

அந்த நூறு ரூவா சலவை நோட்டும்


புத்தகத்தில் இடம் பெற்ற கீழ் கண்ட வரிகளும்

ஷாப்பிங் போன சமயம் தி நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார் .அதுவரை சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார் .அவரது உடம்பு உதற தொடங்கியது . நளினியின் கையை பிடித்து கொண்டிருந்தவர் , மேலும் அழுத்தமாக பற்றிகொண்டார் . வியர்த்துவிட்டது.

நளினிக்கு ஒன்றும் புரியவில்லை .என்ன.. என்ன . என்று பதற எனக்கு அவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கிறது சர்தார்ஜியை பார்த்தாலே வயிறு எரிகிறது .என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதி படையில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.


மேலும் நான் வாங்கிய புத்தகங்கள்

எர்னஸ்டோ சேகுவேரா

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

அய்யனார் கம்மா

கருவேல நிழல்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன

பெருவெளிச்சலனங்கள்

மரப்பாச்சியின் சில ஆடைகள்


குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்து இருக்கிறது

சிறந்த பேச்சாளராக

அதிஷ்ட ஜோதிட சாஸ்திரம்

ஸ்ரீ மத் பகவத் கீதா


>