தேவதையின் வரங்கள்


பொதுவா எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கிடையாது ..! கடவுள் உண்டா இல்லையான்னு குழப்பம் ..! அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டும் ..!இல்லாட்டியும் பரவாயில்ல ...!அத பத்தி பெரிய ஆராய்ச்சி பண்ணுறது இல்ல ..!இப்போ இந்த தேவதைய என்கிட்ட அனுப்பி பத்து வரம் கொடுக்க சொல்லி இருக்காங்க ..! அனுப்பி வைச்சது நம்ம ''பாஸ்'' நவாசுதீனும் ,சகோதரி ஜெஸ்வந்தியும் . வரம் அப்படி இல்லாம என் ஆசைகள சொல்லி இருக்கேன்..!

முதல் வரம்


கவிஞர்களையும்,கலைஞர்களையும் அல்ப ஆயுசுல அழைச்சுக்க கூடாது..!
அவங்கள எல்லாம் தீர்காயுசா வாழ விடனும்...!

இரண்டாம் வரம்


பாரதி,கண்ணதாசன்,பட்டுக்கோட்டை இவங்கள எல்லாம் எந்த ரூபத்திலயாவது திருப்பி கொடுக்கணும்..!

மூன்றாம் வரம்


ஊர்ல இருக்குற பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் போய் பாரு அங்க குழந்தைகள் முதல் பெரியவங்க எவ்ளோ பேர் நோய் வாய்ப்பட்டு அவதி படுறாங்க..!அவங்க நோய் எல்லாம் தீர்த்து வை..! முடியாட்டி நீ செத்துடு....!

நாலாம் வரம்


கடவுளை அதிகம் நம்புகிறவர்களிடமும்,அடுத்தவர்களை நம்புகிறவர்களிடமும்
ஒன்றை உணர்த்து ...! தனித்து நின்று போராடுதலே பலம் ,அதுவே உன்னை உனக்கு உணர்த்தும் என்று சொல் ..!

ஐந்தாம் வரம்


இயற்கை சீற்றங்கள் ,விபத்துகள் போன்றவற்றில் இருந்து மக்களை காக்க முடியாத உன் கையாலாகாத நிலையை அவர்களுக்கு உணர்த்து..!


தனி பட்ட முறையில சில பர்சனல் வரங்கள்....


முதல் வரம்


அடர்ந்த காட்டுக்குள் மிருகங்களோடு மிருகங்களாக சில நாள்கள் இருக்க வேண்டும்..!

இரண்டாம் வரம்

மீனவர்களுடன் சென்று ஓர் இரவை நடுக்கடலில் கழிக்க வேண்டும் ..!

மூன்றாம் வரம்


சரக்கு போதையாவும் இருக்கணும் அதேசமயம் பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் போல ஆரோக்கிய பானமாகவும் இருக்கணும்!

போதும் இதுக்கு மேல ஒன்னும் தோணல ..............!

கிட்ட தட்ட எல்லோருமே சொல்லிட்டாங்க யார அழைக்க ..?................................................................................
>