''தமிழ் பிரியன்'' கதை (ஆளில்லாத தீவினிலே)படித்து எனக்கு தோன்றிய கதை !

சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் தமிழ் பிரியன் ஆளில்லா தீவினிலே என்ற ஒரு முழு நீளசிறுகதை கதை வடித்து இருந்தார்! மூன்று பாகங்களாக வந்த அந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது!! அந்த கதையை படிக்கும் போது அந்த கதையின் அடிப்படையில் எனக்கும் ஒரு கதை தோன்றியது!

நண்பர் தமிழ் பிரியனின் கதை!!

ஆளில்லாத தீவினிலே.....- முதல் பாகம்

சோழ நாடு --பூம்புகார் துறைமுகம்


நாடு முழுவதும் பதற்றம் சேர மன்னனின் திடீர் படையெடுப்பால்! போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில், பர்மா போன்ற நாடுகளில் இருந்து வரவேண்டிய கப்பல்கள் வரவில்லை வெள்ளி காசுகளுக்கு கிடைத்த பொருட்களை பொற்காசுகள் கொடுத்து வாங்கும் நிலை வருமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவியது !

இரண்டு நாட்களாக துறை முகத்தில் பெரிய பாய்மர கப்பல் ஒன்று பயணம் துவங்க ஆயத்தமாகி கொண்டு இருந்தது! போரில் சேர மன்னனின் கை ஓங்கி கொண்டே இருக்க சோழ மன்னன் முழு பலத்தையும் பிரயோகம் செய்ய வேண்டிய நிலை! நாடு சேர மன்னன் வசம் சென்று விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவியது!

சற்று நேரத்தில் புகார் துறைமுகம் பரபரப்படைந்தது... குதிரை வீரர்களும்,குதிரை வண்டிகளும் பல்லக்குகளுமாக வந்து துறை முகத்தில் ஒரு அரச களையை உருவாக்கியது!

வீரர்கள் அணிவகுக்க ஒரு குதிரை வண்டியில் இருந்து மன்னன் இறங்குகிறார் ! பல்லக்குகளில் இருந்து சில தாதி பெண்கள் இறங்குகிறார்கள் ! ஒரு பல்லக்கில் இருந்து சோழ ராணி இறங்குகிறார் ஓரிரு மாதங்களில் ஜனிக்க இருக்கும் சோழ வாரிசை வயிற்றில் சுமந்தபடி!மிகுந்த மன கவலையில் சோழ ராணி ! போர் சூழ்ந்த நிலையில் கர்பவதியான அரசியை அரண்மனையிலோ நாட்டின் பிற பகுதியிலோ வைத்துக்கொள்ள மன்னருக்கு விருப்பமில்லை.

சோழ வாரிசை சுமந்திருந்தஅரசியின் உயிருக்கு சேர மன்னனால் ஆபத்து ஏற்படும் என மன்னர் நினைத்தார் எனவே அரசியை பாதுகாக்கும் பொருட்டு அரசியை இலங்கைக்கு பாதுகாப்பாக கப்பலில் அனுப்ப நினைத்து இந்த ஏற்பாடு!



கப்பல் புறப்பட தயாராகிறது வீரர்கள் சிலர், மருத்துவம் பார்க்கும் பெண்மணி ,தாதி பெண்கள் ,ராணியின் பெற்றோர் என ஒரு குழுவினர் புறப்பட ஆயத்தமாகின்றனர் பிரிய மனமின்றி ராணி கண்ணீருடன் ! மன்னர் ஆறுதல் சொல்கிறார் இன்னும் சில தினங்களில் எப்படியும் போரில் வென்று விடுவோம்! கப்பல் ஈழ தேசத்திற்குதான் செல்கிறது அங்கே நம் தமிழ் மக்கள் உங்கள் அனைவரையும் தங்களில் ஒருவராக கவனித்து கொள்வார்கள் கவலை வேண்டாம் வெகு விரைவில் நான் அங்கு வந்து அழைத்து கொள்கிறேன் என கூறி பிரியா விடை கொடுத்து அனுப்பிவைக்கிறான் கப்பல் புறப்படுகிறது.





ஓரிரு நாட்கள் செல்கிறது .வானிலையில் பெரும் மாற்றம்! கடலில் கடும் சூறாவளியும் ஆழி பேரலைகளும் உருவாகி கப்பலை கட்டுப்பாடு இழக்க செய்து திசை மாற்றுகிறது!!



சில மாதங்கள் செல்கிறது ....

போரில் ............ சோழ வீரர்களின் நவீன வியூகம் ,முழுபல தாக்குதலில் சேர படைகள் பின்வாங்குகிறது.தொடர் தாக்குதலில் முழு வெற்றி கிடைக்கிறது
சோழ நாட்டிற்க்கு!

மக்கள் வெற்றியை கொண்டாட! மன்னன் ராணியை அழைத்துவர இலங்கைக்கு தானே புறப்படுகிறான்! இலங்கையின் மேற்கு கரையோரம் உள்ள எந்த ஒரு துறை முகத்திலும் கப்பல் கரை சேரவில்லை! கடந்த சில மாதங்களில் எந்த ஒரு கப்பலும் அங்கு செல்ல வில்லை என கேள்விப்பட்டு மன்னன் மனம் உடைகிறான். அந்த பகுதியில் எந்த ஒரு தீவிலும் கப்பல் கரை ஒதுங்கவில்லை! கப்பல் கண்டிப்பாக புயலில் சிக்கி முழ்கி இருக்கும் என அனைவரும் முடிவுக்கு வர மன்னன் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை .

நாடு திரும்பிய மன்னன் ராணியை பிரிந்த கவலையில் நோய்வாய் படுகிறான் ஆனால் தன் கப்பல் படையினரை அனுப்பி ராணியை தேடுவதை மட்டும் நிறுத்தவில்லை!

சில ஆண்டுகள் செல்கிறது .................

கப்பல் படைவீரன் ஒருவன் அவசரமாக மன்னனை காண வருகிறான்!

மன்னா ....! இலங்கைக்கு தென் கிழக்கில் பல காத துரத்தில் ஒரு தீவினை கண்டேன்! ஆள் அரவமற்ற அந்த தீவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் மன்னா!!!

என்ன விரைவாக சொல் என மன்னர் துடிக்க!!

அந்த தீவில் உட்புறம் சென்று நான் தேடி கொண்டு இருக்கையில் அங்கே ஒரு சிறுமியை கண்டேன் மன்னா!!

என்ன???

அந்த சிறுமியை பக்கத்தில் அழைத்தேன் ஆனால் என்னை கண்ட அவள் வேகமாக ஓடிவிட்டாள் நானும் விடாமல் துரத்தி கொண்டே ஓடினேன் ஆனால்! வேகமாக ஓடி ஒரு பாறை இடையில் சென்று மறைந்து விட்டாள் மன்னா! நானும் நம் கப்பலுக்கு திரும்பி அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்த தீவு முழுவதும் அலசி தேடிப்பார்த்து விட்டோம் ஆனால் ? அங்கே மக்கள் யாரும் வசிப்பதர்க்கான எந்த சுவடும் தெரியவில்லை என்னுடன் வந்தவர்கள் யாரும் நான் சொல்வதை நம்பவில்லை! ஆனால் இறைவன் ஆணையாக நான் கண்டது உண்மை!!

மன்னா ஒரு முக்கிய விஷயம்!

நான் கண்ட அந்த சிறுமி அச்சு அசலாய் நம் மகராணியாரை போலவேஇருந்தாள்!



(தமிழ் பிரியன் கதையில் வந்த தீவில் கண்ட அந்த பெண் இந்த வம்ச வழியில் வந்தவளாக இருக்குமோ)




>

''மரணப்படுக்கை''

நீ எந்த ஒரு காரியம் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்து கொள்!


கொஞ்ச காலம் முன்னர் ஒரு பள்ளியின் சுவற்றில் இதை படித்தேன். என்ன சொல்லுகிறது இந்த வாசகம்? ''சாகப்போறே சரியா நடந்துக்கோ'' இப்படித்தானே ?
வாழ்க்கை குறித்து சிலர் சொல்லும் விசயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

வாழ்க்கை ஒரு நெடிய பயணம் ,வாழ்க்கை ஒரு சரித்திரம் ,இப்படியெல்லாம் சொல்வது சரிதானா என்ற கேள்வியும் வருகிறது!

எனக்கு பிறகு என் பிள்ளைக்கு என் பெயர் தெரியும்,என் பேர பிள்ளைக்கு என் பெயர் தெரியும் அவன் பிள்ளைக்கு என் பெயர் தெரிய போவது இல்லை ! அவ்வளவுதான்! ஒரு பூ கருகுவதை போல,ஒரு கனி உதிர்வதை போல சர்வ சாதாரணமாய் முடிய போகிறது என் வாழ்க்கை! இதற்க்காக ஏன் பெரிதாக அலட்டி கொள்ள வேண்டும்?

MGR வாழ்ந்து விடாத வாழ்க்கையா,சிவாஜி கணேசன் வாழ்ந்து விடாத வாழ்க்கையா ? அவர்களும் சிம்பிளாக செத்துத்தானே போனார்கள் ? பெரிய பிரபலங்களே கால வெள்ளத்தில் காணாமல் போகும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் ?

முப்பத்தைந்து வருடம் போய்விட்டது எப்படி போனது...? சட்டென போய்விட்டதுபோல இருக்கிறது ! ஐம்பது வயதிலும் இப்படித்தான் தோணும்! அறுபத்தைந்து வயதிலும் இப்படித்தான் தோண போகிறது!


கடந்த காலத்தை இப்போது அசை போட்டால் சில தவறுகள்செய்திருப்பது புரிகிறது! இன்னும் கொஞ்சம் படித்து இருக்கலாமோ? இங்கிலீஷ் மீடியம் படித்து இருக்கலாமோ ? ஊதாரி தன செலவுகளை குறைத்து இருக்கலாமோ ? இப்படியெல்லாம் தோன்றுகிறது ?


ஐம்பது வயதில் வாழ்க்கையை அசை போட்டால் இப்போது செய்வது தவறென தோன்றுமா?

இப்போது ஒரு எண்ணம்!!!!!

நான் அறுபத்தைந்து வயது வயோதிகனாக மாறி மரண படுக்கையில் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்! முப்பத்தைந்து வயது மனிதனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன் இரண்டுமே நான்தான்!!!

அறுபத்தைந்து வயது வயோதிகனாக வாழ்க்கையை அசை போடுகிறேன் அதே அசை போடும் வாழ்க்கையை முப்பத்தைந்து வயதில் லைவ் ஆக வாழ்கிறேன்!!!



அறுபத்தைந்து வயது என்னிடம் முப்பத்தைந்து வயது நான் ஆலோசனை கேட்டு நடந்து கொண்டால் இனியும் தவறு ஏதும் செய்யாமல் இருக்கலாம் அல்லவா ?

அப்படி ஆலோசனை சொன்னால் என்ன சொல்வேன்?

கடமைகளை மீதம் வைக்காமல் நிறைவேற்றிவிடு!

யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே! மரண படுக்கையில் குற்ற உணர்ச்சியுடன் இருப்பது மிகப்பெரிய கொடுமை! மன்னிப்பும் கேட்க முடியாது ! பரிகாரமும் தேட முடியாது!

வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!

மேலே சொன்ன வாக்கியம்;-

நீ எந்த ஒரு காரியம் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்து கொள் !


( முப்பத்தைந்து வயது நான் அறுபத்தைந்து வயது என்னை நோக்கி வெகு வேகமாக சென்று கொண்டு இருக்கிறேன்)






>

''ஆசைப்பட்டது''


ஆசைப்பட்டது
ஆசைப்பட்ட நேரத்தில்
ஆசைப்பட்ட விதத்தில் அமையாது!
அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!!


.............................................. பாலகுமாரன்







.

>

நம் இனிய இளையராஜா

இளைய ராஜா எனும் வற்றாத தேன் அருவியிலிருந்து சில
தேன் துளிகள் !


(பாடல் மேல் வைத்து கிளிக்கினால் அந்த பாட்டு வரும் )

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ! மனதோடு ஊஞ்சல் ஆடுதோ!

படம் ; ஆனந்த ராகம்


தலையை குனியும் தாமரையே! உன்னை எதிர் பார்த்து... வந்த பின்பு வேர்த்து...

படம் ; ஒரு ஓடை நதியாகிறது


நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்....

படம் ;காதல் ஓவியம்


சங்கத்தில் பாடாத கவிதை ..அங்கத்தில் யார் தந்தது

படம் ;ஆட்டோ ராஜா

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட...

படம் ;மெட்டி

ஆயிரம்... மலர்களே... மலருங்கள்

படம் ; நிறம் மாறாத பூக்கள்

வான் மேகங்களே...... வாழ்த்துங்கள்...! பாடுங்கள்..!

படம் ; புதிய வார்ப்புகள்


குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்

படம் ; அழகே உன்னை ஆராதிக்கிறேன்


கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

படம் ; கிழக்கே போகும் ரயில்

பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு ...பூத்திருச்சி வெக்கத்தை விட்டு

படம் ; மண் வாசனை

சின்ன பொண்ணு சேல.... ! செண்பகப்பூ போல....!

படம் ; மலையூர் மம்பட்டியான்

ஒரே நாள்...! உனை நான் நிலாவில் பார்த்தது...!

படம் ; இளமை ஊஞ்சலாடுகிறது


கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

படம் ; அன்புள்ள ரஜினி காந்த்

நதியோரம்........! நாணல் வந்து ..நாணம் கொண்டு... நாட்டியம் ஆடுது மெல்ல..!


படம் ; அன்னை ஓர் ஆலயம்
>