மதிமுக தொண்டன் மனசு...!

கடந்த சட்டமன்ற தேர்தலில்  இருந்து ஆரம்பிக்கலாம்...! எந்த ஒரு தேர்தலிலும் மதிமுகவுக்கு கூட்டணி பேச்சு வார்த்தை  திருப்தியாக அமைந்ததில்லை...!கடந்த பாராளுமன்ற தேர்தல் அதிமுக பொது கூட்டங்களில்  ஜெயலலிதா மதிமுகவை   கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அடுத்த படியாகவே கூறி வந்தார். இதுவே  ஒரு மனகசப்பு அவனுக்கு. அதன் பின்னர் சட்ட மன்ற தேர்தல் கூட்டணி சம்பந்தமாக ஜெயலலிதா  ஒரு  கதை சொன்னார்  பாலம்,லாரி,புறாக்கள்,எரிபொருள்  என.. அப்போதே  அவனுக்கு  ஒரு எச்சரிக்கை  ஒலி  கேட்டது....!

சட்டமன்ற கூட்டணி  பேச்சு வார்த்தை..

தேமுதிக கூட்டணியில்  வந்துவிட்டது  அவர்களும் தனியே நின்று கணிசமான வாக்குகளை வாங்கி காட்டிவிட்டார்கள்...! எனவே  போன தேர்தலில் 35  இடங்களை ஒதுக்கிய  ஜெயலலிதா இந்த முறை ஒரு 25 இடங்கள் ஒதுக்குவார்  என எதிர்பார்த்தான்...! ஆனால்.....பேச்சுவார்த்தையில் ஒற்றை  இலக்கில் ஆரம்பிக்க  பட்டதாக கேட்ட  தகவலினால் மிகவும்  நொந்து போனான்...! மதிமுக வரலாற்றில்  அவன் மிகவும் பாதிக்கபட்டது  இந்த  சட்ட  மன்றதேர்தல் பேச்சு  வார்த்தையில்தான்..! தம்மை  விட வாக்கு சதவீதத்தில்  குறைந்த கம்யூனிஸ்ட்களுக்கு  10,12  இடங்கள் ஒதுக்கி தமக்கு அதை விட குறைவாக ஒதுக்கியதால்.அதிமுகவின் திட்டம் புரிய ஆரம்பித்தது. பிறகு  16 இடங்கள்  ஒரு ராஜ்ய சபா எம்பி என இணையங்களில்  தகவல்  கசியவே ஓரளவு ஆறுதல்...! ஆனால்  அதிலும் உண்மையில்லை இறுதியாக 12 இடங்கள் என தகவல். அடக்கும் அவன் மனம்  ஒப்பவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேற்றபடவே  அவன் அல்லாடிப்போனான்...!

தேர்தல்  குறித்து  தாயகத்தில் ஆலோசனை கூட்டம் விடிய விடிய நடக்கின்றது...! அவனும் என்ன செய்தி  வரும் என தொலைகாட்சி பெட்டியிலேயே கண் வைத்து காத்து கிடக்கின்றான்...! நல்லிரவு  வரை எந்த  தகவலும்  வரவில்லை  எப்போது தூங்கினான்  என்றே  தெரியாமல் தூங்கி போனான்...! அதிகாலை .. மதிமுக  தேர்தல் புறக்கணிப்பு  என  செய்தி....!
ஒரு கனத்த  மவுனம்..!வேறு என்ன செய்வது உணர்ச்சி   பெருக்கில் தனித்து நிற்க்கும் முடிவு  எடுக்க பட்டு இருந்தால் ...? திமுக மீது  கடும் அதிருப்தியில் மக்கள் இருந்த நேரம்  எப்படியும்   அதிமுக வெற்றி அடையும்...! தனித்து  நின்றால்  நிச்சயம் அது சாதகமாக இராது...தலைவரின் முடிவின்  நியாயம் அவனுக்கு  மிக  தெளிவாக புரிந்தது...!

திமுக  மீது  மக்கள் அதிருப்தி ஆனால்  மதிமுக காரனுக்கு அதிமுக மீது கடும் அதிருப்தி...! அதிமுகமீது  இருந்த வெறுப்பு எல்லாவற்றையும்  திமுக வுக்கு ஓட்டு போட்டு  தீர்த்துகொண்டான்...! இந்த தேர்தலில் மதிமுக வாக்குகள்  திமுகவுக்கு கிடைக்காமல் போய் இருந்தால்  மேலும் பல தொகுதிகளை திமுக இழந்திருக்கும்..!

காலம் பயணிக்கின்றது உள்ளாட்சி  தேர்தல் அறிவிப்பு..உள்ளாட்சி  தேர்தலில்  மதிமுக  தனித்து போட்டி  என கட்சி அறிவிக்க ஒரு உற்சாகம்  ..! மதிமுக  தொண்டனுக்கு தன் பலம்  தெரியும்...! இது ஒரு சரியான வாய்ப்பு..! மேலும் அனைத்து கட்சிகளும் தனித்தனியே போட்டியிடவே மேலும் உற்சாகம்..!
 12  சீட்டுகளுக்கு மேல் உனக்கு  தகுதியில்லை  என கூறி தங்களை விட பலம் குறைந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு 10,12  இடங்கள்  வழங்கிய அதிமுகவுக்கு பலத்தை  புரியவைக்க வேண்டும் தனக்கும் சுய பரிசோதனை...! 
12 சீட்டுக்கு மேல் தகுதியில்லை என அதிமுகவால் வெளியேற்ற பட்ட கட்சி 

திமுகவை  மிரட்டி 65 இடங்களை பெற்ற காங்கிரசுடனும்,திமுக கூட்டணியில் 26 இடங்களை வாங்கி போட்டியிட்ட பாமக  வுடனும்,42 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவுடனும்  பல பரீட்சையில் களம் இறங்குகின்றது...!

தேர்தல்  முடிவு நாள்
சமீபத்திய காலங்களில் இந்த  உள்ளாட்சி  தேர்தல் முடிவு நாள்தான் அவனுக்கு மிகவும் அற்புதமான நாள்...!
முடிவுகள் வரவிருக்கின்றன. காத்து  கிடக்கின்றான் . தொலைக்காட்சிகளில் கட்சி பட்டியலில் மதிமுக  என்ற அந்த நான்கெழுத்து அவனுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கின்றது..! வருகின்றன  முடிவுகள்.. முதல் முடிவு தூத்துகுடி மாநகராட்சியில் மூன்றாவது  இடம்..! உற்சாகம்..! மேலும் பல முடிவுகள்  எல்லாவற்றிலும் 3 வது,4 வது 5வது  இடங்களில்  மதிமுக....! குளித்தலை  நகராட்சியை வெல்கின்றது...! 4 மாநகராட்சியில் தேமுதிகவை முந்தி 3 இடம்..! பல ஊராட்சிகளை,பல கவுன்சிலர்களை,மாநகராட்சி கவுன்சிலர்களை வென்று காட்டுகின்றது..!

அதிமுக,திமுகவை போல பணக்கார கட்சியில்லை மதிமுக..!
தேமுதிக போல சினிமா கட்சியில்லை மதிமுக..!
பாமக போல ஜாதிகட்சி இல்லை  மதிமுக...!
காங்கிரஸ்போல தேசிய பணக்கார கட்சியில்லை மதிமுக...!

உணர்வுள்ள  தொண்டர்களை,நிரந்தர வாக்குகளை கொண்ட ஒரு ஏழை கட்சி..!
12  தொகுதிகளுக்கும்  அதிக  மான இடங்களில் போட்டியிட்ட  பாமகவை காணோம்...! கன்யூனிஸ்ட்டுகளை கானோம்..!65 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் சற்றே  முந்தியது  மொத்த வாக்குபதிவில்..! அதிலும் மதிமுக போட்டியிட்ட  இடங்களும்  குறைவு..!

மதிமுகவை  பாராட்டி  தினமலரே செய்து கொடுக்கின்றது..! 
புது தெம்பு கொள்கிறான் மதிமுக  தொண்டன்..!

இவ்விடத்தில்  ஒன்றை சொல்ல வேண்டும் தேர்தல் முடிவுகளை அறிவித்த போது மாநகராட்சி,நகராட்சி  கட்சிகள் பட்டியலில் மதிமுகவின் பெயரே புதிய தலைமுறை தொலைகாட்சியில்  இல்லை புதிய தலைமுறை தொலைகாட்சியை மதிமுக காரனுக்கு  பிடிக்காமல் போனது...!பின் நாட்களில் சாஞ்சி போராட்டத்தை ஒளிபரப்பி மதிமுக  அபிமானத்தை பெற்று கொண்டது அந்த தொலைக்காட்சி..!

நிற்க....!  வரும்  தேர்தலில் மதிமுக  தொண்டனின் எதிர்பார்ப்பு  என்ன...?

தலைவரின்  உழைப்பு அவனை சோர்வடையாமல் இருக்க செய்கின்றது..! தற்போது மதிமுகவின் வாக்கு சதவீதத்தை தலைவர் உயர்த்தி இருப்பதாக அவன் கருதுகின்றான்..! நமது  செல்வாக்கை வேறு கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட கூடாது..! அம்மாவே  இறங்கி  வந்து  விட்டார்  என ஒரு 5 சீட்டுகளுக்குள்  நம்மை  அடக்கி கொள்ள கூடாது...! திமுக தேமுதிக கூட்டனி அமையும் என எதிர்பார்ப்பு..!அதிமுக தனியே...! மதிமுக தனியே போட்டியிட வேண்டும் இந்த நேரத்தில் 3 வது பெரிய கட்சியாக நிச்சயம் எழுச்சி பெற முடியும்....!  தனியே  நின்று  ஒருசில தொகுதிகளை  வெல்லவும் கூடும். குறைந்த பட்சம்  தலைவர் வெற்றி அடைவார்   இப்போதைக்கு  அதுபோதும்..! மேலும் அனைத்து  தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கிகாட்ட முடியும் இது வரை இல்லாத அளவு  வாக்குகள் மதிமுக பெற்றுகாட்டும்...!  அடுத்த  சட்ட மன்றதேர்தலில் கூட்டணி பற்றி பார்த்துகொள்ளலாம்..! இப்போது கிடைக்கும் வாக்குகள் அடுத்த சட்ட மன்ற தேர்தலில்  நமக்கு ஒரு பிரகாச வாய்ப்பை கொடுக்கும்...!  

வரும் பாராளுமன்றதேர்தலில் மதிமுக  தனித்து போட்டி இதுவே மதிமுக தொண்டனின் கனவு...!>

காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு அவசர கடிதம்....!

நீங்கள்  இப்படி ஆட்சிசெய்வீர்கள் என தெரிந்து இருந்தால் ரத்தம் சிந்தி உயிர்த்தியாகம்  செய்து நாட்டின்  சுதந்திரத்துக்காக போராடிய என் மூத்தோர்கள் ...! கடுமையாக போராடி இருக்க மாட்டார்கள்...!  அவர்கள்  விரும்பியது என்ன...? தன்மானமும்  சுயகவுரவமும் கூடிய ஒரு சுய ஆட்சியைத்தானே...! ஆனால்  நீங்கள்  என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள்...?  கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை  அன்னியர்வசமாக்கி கொண்டூள்ளீர்கள்..! இதைத்தானா  நம் முன்னோர்  விரும்பினார்கள்...?

மிளகு விளையும் தேசத்துக்கு,அன்னியநாட்டில் இருந்து மிளகு இறக்குமதி..! உள்ளூர் தேயிலைக்கு விலை இல்லையாம் வெளிநாட்டில் இருந்து தேயிலை இறக்குமதி....! இந்தியாவில் விளையும் பொருளை இந்திய மக்களிடம் விற்று  லாபம் மட்டும்  அன்னிய வால்மார்ட்டுக்கு....என்ன கொடுமை இது....! இப்படியாக  பொருட்களை  வெளிநாட்டிலிருந்து  இறக்குமதி  செய்து தேசப்பற்றை  மட்டும்  ஒட்டு மொத்தமாக ஏற்றுமதி செய்கின்றீகள்..!

இலங்கை பிரச்சனையை,தமிழக மீனவர்கள்  பிரச்சனையை  நீங்கள் கையாண்ட விதத்தில் ஒட்டு மொத்த  தமிழர்களுக்கு  உங்களை பிடிக்கவில்லை. காஷ்மீர் பிரச்சனையை நீங்கள் கையாளும் விதத்தில் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு  உங்களை  பிடிக்கவில்லை.தேசபற்றினை உங்களால்காக்க முடியவில்லை...! 

                                                அன்னை  இந்திரா காந்தி...!


இந்தியாவின் இரும்பு பெண்மணியாக விளங்கிய அன்னை இந்திராவின் வழி வந்தவர்கள் என சொல்லிகொள்ள  தற்கால காங்கிரஸார்  வெட்கப்பட வேண்டும்...! அந்த மரியாதைக்குரிய பெண்மணி  தேசம் என்னும் கோவிலுக்கு கும்பாபிஷேகம்  செய்து விழா  நடத்தினார்...! ஆனால்  நீங்கள்  அந்த திருவிழாவில்  கடை போட்டு காசள்ளி கொண்டூள்ளீர்கள்...! அந்த கூட்டத்திலே ஒருவர்  ராட்டினம் சுற்றுகின்றார்.! ஒருவர் சூதாட்டகடை நடத்துகின்றார் அவரவர் வசதிகேற்ப பணம் பார்க்கின்றீகள்.அங்குவருபவர்களை அந்த பெண்மணி பக்தர்களாக பார்த்தார் நீங்கள்  வாடிக்கையாளர்களாக பார்க்கின்றீர்கள்...! பெரும்பான்மை கடைகளில் தேசப்பற்றை  விற்று கல்லா கட்டுகின்றீகள்...!

                                                         கர்ம வீரர் காமராஜர்..!


முதலில்  மீண்டும் இவர் வரலாற்றை புரட்டி பாருங்கள்  தற்கால காங்கிரஸார்களே...!  இவர் எத்தனை  தொழிற்சாலைகளை  உருவாக்கினார்...! எத்தனை  எத்தனை அணைகட்டுகளை கட்டினார்..! இவர் கட்டிய அணைகட்டுகளால் பாசனம் அடைந்து  விளைந்த ஒவ்வொரு நெல்மணிகளிலும்  காமராஜர் உயிர்த்து  இருக்கின்றாரே..அதை கவனியுங்களேன்....! அந்த அணைகட்டுகளில் இருந்து சீறிப்பாய்ந்து புறப்பட்ட நீர்  உருவாக்கிய குளங்களிலும், குட்டைகளிலும்  பூத்துகுலுங்கும்  தாமரை,அல்லி,குவளை மலர்களில் காமராஜர் முகம் ஜொலித்து கொண்டுள்ளதே அது  தெரியவில்லையா...!

 
அவர் அணைகட்டுகளை  விட்டு  சென்று இன்னும் வாழ்ந்துகொண்டுள்ளார்..! ஆனால் நீங்களோ அணுஉலையை உருவாக்கி இருக்கும் மக்களுக்கும் கேடு செய்கின்றீர்கள்..!

பல முன்னேறிய  நாடுகளே அணு உலைகளை மூடி  வரும்போது நீங்கள்  அதனை  உருவாக்க நினைப்பது என்ன நியாயம். அதுமட்டுமா..!  அணு உலையை   எதிர்த்து போராடும்  இந்திய தேசதிருமகன் மீது துப்பாக்கி சூடு நடத்துகின்றீர்கள் ..!  

கடைசியாக ஒன்று அதுவும்  தமிழக காங்கிரசாருக்கு...!

சனி பகவான் என்னும் ஒரு கிரகம் அதை நீதிமான் என சொல்வார்கள்.  அதன் பார்வை பட்டால் அதோகதிதான்...! இன்று  சனி பகவானாக அவதாரம் எடுத்து இருப்பவர்கள் தமிழக மாணவர்கள்....!  அவர்கள் பார்வை இப்போது நேருக்கு நேராக உங்கள்  மீதுதான்....!

என்னதான் காங்கிரசாராக இருந்தாலும் தமிழ் நாட்டில் வேறு சில காரணங்களுக்குக்காக மரியாதைக்கு உரிய சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்...! அவர்களுக்கு.....!
 நீங்கள்  இந்தனை நாள் உழைத்ததெல்லாம்  வீணாக போகின்றது.
உங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகபோகின்றது..!
நீங்கள் மேலும் காங்கிரசில் நீடித்தால் நாசமாய் போய்விடுவீர்கள்..!

எனவே  எவ்வளவு  சீக்கிரம் வேறு கட்சிக்கு போகமுடியுமோ,உடனே கட்சி மாறிவிடுங்கள்...! யாரும் தப்பாக  நினைக்க மாட்டார்கள் ..! உங்கள்  அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளுங்கள்...!  >